Tamil Novels
அத்தியாயம் 14
காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது.
பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை சம்பாதித்தானோ, அவன் எதை அவளிடம் ஒப்புவிக்க துடித்தானோ அவள் அந்த கயல்விழியே அவனருகில் இருக்கும் பொழுது புகழின் போதை தெளிந்து...
மன்னிப்பாயா....21
சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர் ஆரியும்,கன்யாவும்.கன்யாவின் நடுங்கும் கைகளை இறுக பற்றிக் கொண்ட ஆரி,
“ஒண்ணும் இருக்காதுடா....நீ டென்ஷன் ஆகாத...”என்று கூற,கன்யாவின் தலை ஆடினாலும் மனதில் இன்னும் நடுக்கம் தான் கேட்ட செய்தியில்.மதியவேளை உணவை உண்டுவிட்டு கன்யா பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.ஆரி தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது கைபேசி அழைக்க...
14..
காதல் கரம் சேர்ந்ததில் சேதாரம் எவருக்கு?...
காதலில் ஜெயித்து
மகிழ்வில் திளைத்தவர்கள்
அதனை அமுதம் என்பர்....
தோற்று...
மனதில் வலியை
உணர்ந்தவர்கள்..
அதனை விஷத்துடன் ஒப்பிடுவர்..
வென்றதாய் எண்ணவும் முடியாமல்...
தோற்றதாய் துவழவும் முடியாமல்...
என்னைப்போல் தவிப்பவர்கள்..
அதனை அமுத விஷம் என்பர்...
அன்னையின் வற்புறுத்தல் காரணமாக உண்மையைக் கூறச் சென்றாலும், சூழ்நிலை காரணமாக உண்மையை கூறாமல் அமுதேவ்வை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய ஆயுதத்தை தனுஜ் கையில் கொடுத்து வந்தவள்,...
அத்தியாயம் 13
"எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?" கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது.
"கேஸ பத்தி டிஸ்கஸ் பண்ண தான். ஏன்?" அவளுடைய பார்வையை வைத்து சந்தேகப்படுகிறாள் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயன் அவளையே சந்தேகமாக...
மன்னிப்பாயா....20
இரண்டு வாரங்கள் கடந்திருந்து கன்யாவும்,ஆரியும் பெங்களூர் வந்து.இடையில் ஒருமுறை ராதிகவும்,வருணும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ஆரிக்கு இரவு நேரம் தான் வேலை என்பதால் காலை நேரங்களில் கன்யாவுடன் தான் கழிப்பான்.முன்பு எவ்வளவு விலகியிருந்தானோ இப்போது அவ்வளவு ஒட்டிக் கொண்டு திரிந்தான்.
“அச்சோ ஆரி....இப்படி என் பின்னாடியே சுத்தாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு....”என்று அவன் பண்ணும் அலும்பில்...
அத்தியாயம் 12
கயல்விழி "விக்னேஷ் விக்னேஷ்" என்று அலறுவதைக் கேட்டு "விழி" என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான். அவனைப் பார்த்ததும் வலி நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி.
அதை பார்த்து கார்த்திகேயனின் இதயம் சில்லுசில்லாய் உடையலானது. "என்ன பத்தி கவலைப்படாத. நிச்சயமாக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது...
அத்தியாயம் 11
சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான் அவனாவது கூறி இருக்கலாமே.
அவர்கள் கூறாமல் நானாக சென்று விசாரிப்பது சரியா? முறையா? புரியாமல் குழம்பியவாறு இருந்தாள் கயல்விழி.
எவ்வாறு சொல்வது என்று...
8..
மறக்க வேண்டுமென்று
மனதில் புதைத்து வைக்க..
மண்ணைக் கீறி
வெளிவரும் விதை போல..
என் மனதைக் கிழித்து..
விருட்சமாய் விரிந்து..
என்னை விழுங்கப் பார்க்கிறது..
உன் நினைவுகள்..
கல் மனதையும் கரைக்கும் வித்தை அறிந்த காதல், பெண்ணியம் பேசும் பெண் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.. அமுதேவ் அன்னையிடம் பேசிவந்ததில் இருந்து… மனம் அவனையே நினைக்க… தன்னை விட்டுக் கடந்து சென்றதாய் எண்ணிய...
அத்தியாயம் 10
சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான்.
"கயல் உனக்கு டயடா இருக்கா? வா மேல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்"
"உன் வீட்டுக்கா? நான் நல்லாத்தான் இருக்கேன். வேலைய பார்க்கலாம்"...
அத்தியாயம் 9
கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.
சிவபாலன் "அவ கெடக்குறா விடு" எனும் பொழுது கயல்விழி வெளியே வந்து விட்டாளே. ஆனால் அவள் தலை மறைந்ததும் "வள்ளி அமைதியா இரு. தப்பு நம்ம பையன் மேல. கோட்டு...
அத்தியாயம் 8
ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர்.
"இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்" என்ற விக்னேஷை
"ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த ஒரு வாரமா எந்த பிரச்சினையும் வரலையே" கொஞ்சம் நக்கலாகத்தான் சொன்னான் கார்த்திகேயன்.
கார்த்திகேயனை முறைத்தவாறே கேஸ் விஷயமாக போவதாக சமாளித்து கிளம்பியிருந்தாள்...
அத்தியாயம் 7
காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக் கொள்வதுமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவன் கொடுக்கும் வாக்குறுதிகள் அநேகமானவை கவிதை வரிகள் போல் கற்பனை கலந்தவையே. நிதர்சனத்தில் யாராலும்...
அத்தியாயம் 6
கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் "பைத்தியமா நீ. செத்து கித்து போய் இருந்தா? என்ன என்னைய கொலை கேஸுல உள்ள தள்ளலாம் என்று பாக்குறியா?" அவள் மீது கோபம் இருந்தாலும், அவளுக்கு ஏதாவது...
மன்னிப்பாயா.....19
பெங்களூர் கன்யாவின் வீட்டில்,
ஆரி அமைதியாக உட்கார்ந்து இருக்க கன்யா அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.அவர்கள் வீடு திரும்பி ஒருமணிநேரம் கடந்திருந்தது.வந்ததிலிருந்து கன்யா ஆரியை பலமுறை கேட்டுவிட்டாள் என்ன விஷயம் எதற்காக வந்தீங்க என்று ஆனால் அவனோ பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கன்யாவிற்கு பொறுமை பறந்துவிட்டது.
“ப்ச்....சீனியர் இப்ப சொல்லபோறீங்களா இல்லையா....”என்று கேட்க,அவளின் கரத்தை பிடித்து...
அத்தியாயம் 5
டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.
"அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு வலை வீசுகிறாளோ?" என்று புலம்பலானாள்.
பார்த்திபனும், சிவபாலனும் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாதவள், திட்டம் போட்டு கார்த்திகேயனை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்கலாம்...
அத்தியாயம் 4
கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான்.
"என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா இப்போவோ, அப்பாவோ என்று ஹாஸ்பிடல்ல படுத்துக் கெடுக்குறாரு. அவர் கண் மூட முன்னாடி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று...
அத்தியாயம் 3
கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ அவனை பார்த்து பார்த்தே, அறிந்து, தெரிந்து கொள்ளும் பொழுதுதான் அவன் மீது காதல் வயப்பட்டாள்.
அதை அவனிடம் கூறமுடியாமல் அவளை தடுத்தது...
அத்தியாயம் 2
"கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால வேற பார்க்கணுமா? இது தேவையா உனக்கு?" தன்னையே நொந்தவாறு சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் நினைவுகள் கயல்விழியை சந்தித்த...
அத்தியாயம் 1
கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது என்றால், கார்த்திகேயனை பேட்டி காண ஒட்டு மொத்த மீடியாவும் அங்கு தான் நின்றிருந்தனர்.
கார்த்திகேயன் நடிகை சுப்ரியாவுக்காக வாதாடப் போகும் வக்கீல்...
மன்னிப்பாயா....18
டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.இரு தினங்கள் முன்பு மூர்த்தி பேசி வைத்தவுடன் ஒரு முடிவுடன் தனது கம்பெனிக்கு இரண்டு மாதம் வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மெயில் செய்துவிட்டான். இனி வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்கிறார்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கபோவதில்லை எனக்கு என் ஶ்ரீ வேண்டும் அவளுடன் வாழ வேண்டும்...