Advertisement

மன்னிப்பாயா….18

டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.இரு தினங்கள் முன்பு மூர்த்தி பேசி வைத்தவுடன் ஒரு முடிவுடன் தனது கம்பெனிக்கு இரண்டு மாதம் வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மெயில் செய்துவிட்டான். இனி வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்கிறார்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கபோவதில்லை எனக்கு என் ஶ்ரீ வேண்டும் அவளுடன் வாழ வேண்டும் என்று தெளிவு பிறந்திருந்தது.

இவர்களுக்காக தானே நான் என் வாழ்வை வாழாமல் ஒதுக்கி வைத்தேன் எத்தனை முறை பேசியிருப்பேன் தங்களின் நிலை எடுத்து கூறி ஆனால் அவர்கள் அனைவரும் சுயநலமாக தான் இருந்துள்ளனர் என்பதற்கு நேற்று மூர்த்தி பேசியதே சான்றாக அமைந்துவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்தே ஆரிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு அனுமதி கிடைத்தது உடனே இந்தியா செல்ல புக் செய்துவிட்டான்.கன்யாவும்,ராதிகாவும் தங்கியிருந்த பிளாட்டின் சாவி ராதிகாவிடம் இருக்க அங்கே தான் தங்கி கொள்வதாக ராதிகாவிடம் கூறிவிட்டான்.இனி கன்யா மட்டுமே அவனின் வாழ்வு அவளை எந்த நொடியிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற தெளிவும் காலம் கடந்து தான் வந்திருந்தது.இதோ விமானத்தில் அமர்ந்தவனது நினைவுகளில் முழுவதுமாக ஆக்கரமித்திருந்தாள் கன்யா.

“எங்கடீ போன….திரும்ப வந்துடுடீ….இனி உன்னை விடவேமாட்டேன்டீ….”என்று மனதில் புலம்பியபடி அமர்ந்திருந்தான்.டெல்லி சென்று அதன் பின் பெங்களூர் விமானம் மாற வேண்டும் என்பதால் டெல்லியில் விமானம் தரையிறங்கியவுடன் விமானநிலையத்தில் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆரி தனது பயண பொதிகளை அங்கு உள்ள இருக்கையில் வைத்துவிட்டு அடுத்த இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“ஒன் வாட்டர் பாட்டில் ப்ளீஸ்…..”என்று தனது பேண்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தாள் கன்யா.

“மேம்….”என்று அவன் பாட்டிலை நீட்ட பணத்தை கொடுத்துவிட்டு பாட்டிலை வாங்கியவள் பருகிக் கொண்டே அந்த நடைபாதையில் நடக்க தொடங்கினாள்.வெள்ளை பனியன் ப்ளூ நிற ஜீன்ஸ் அவளிற்கு பொருத்தமாக இருந்தது.மனசஞ்சலங்கள் குறைந்தாலோ என்னவோ அவளின் முகம் பொலிவுடன் இருக்க முகத்தில் வாட புன்னகை அவளை மேலும் அழகியாக்கி காட்டியது.இந்த பத்து மாத காலம் அவளை பழைய கன்யாவாக மாற்றியிருந்தது என்றே கூறலாம்.எங்கே செல்கிறோம் என்று தெரியாத ஒரு பயணம் அதில் மனது சமன்பட்டிருந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பயணிகளுக்கான அறிவுப்பு வர ஆரியநாதன் கண்களை திறந்தான் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்திற்கான முதல் வகுப்பு பயணிகள் ஏறுவதற்கான அறிவிப்பு வர ஆரி எழுந்து தனது பொதிகளை எடுத்துக் கொண்டு விமானத்தின் உள்ளே சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டான்.சற்று நேரத்தில் மற்ற பயணிகளும் ஏற தொடங்கியிருந்தனர்.ஆரி கண்களை மூடி அமரந்திருக்க,

“சாரி சார்….மை மிஸ்டேக்…..”என்ற குரல் கேட்க பட்டென்று கண்களை திறந்தவன் கண்களை சுழலவிட அவனின் பின் பக்கம் பார்க்க அங்கு ஒருவர் நின்று கொண்டிருக்க அவரிடம் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள்.அவர் பருமனாக இருந்ததால் அந்த பெண்ணின் முகம் ஆரிக்கு தெரியவில்லை ஆனால் அந்த குரல் அது கன்யாவினது போலவே இருக்க திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருக்க அந்த நபர் அமரும் போது அந்த பொண்ணும் அமர்ந்திருந்தாள்.

கன்யா தனது பொதிகளை வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்து விண்டோவை பார்த்துக் கொண்டிருக்க அவளின் பக்கத்து இருக்கையில் ஆள் அமரும் அரவம் கேட்டது.யாரோ அமர்கிறார்கள் என்று அவள் கருத்தில் கொள்ளாமல் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டிருக்க,

“ஶ்ரீ……”

“……”

“ஶ்ரீ…..”

“……”

“ஶ்ரீ…..பார்க்கமாட்டியா….ஶ்ரீமா….”என்று உயிர் உருக தன்னவனின் அழைப்பை கேட்ட கன்யாவிற்கு ஏதோ கனவு போல தான் இருந்தது.அதனாலே அவள் திரும்பவில்லை எங்கே திரும்பினால் அந்த உருவமும்,அழைப்பு மறைந்து போகுமே வேண்டாம் திரும்ப வேண்டாம் என்று தனக்குள் கூறிக் கொண்டு கன்யா அமர்ந்திருக்க,

“ஏய் ஶ்ரீ திரும்புடீ….”என்று அவளின் கைகளை பிடித்து தன் புறமாக திருப்பினான் ஆரியநாதன்.அவன் கைகளை பிடிக்கவும் சுயத்திற்கு வந்தவள்,

“சீனியர்….”என்ற அழைப்புடன் திரும்ப அதிர்ந்துவிட்டாள்.பொலிவிழந்த கலங்கிய கண்களுடன் அவளை தவிப்புடன் பார்த்திருந்தான் ஆரியநாதன்.கன்யாவும் இது ஆரி தானா என்று தவிப்புடன் பார்த்திருக்க இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டது.

ஆரி அந்த குரலைக் கேட்டே அது கன்யாவாக இருக்குமோ என்று தான் பார்த்தது அந்த நபரும் போது அந்த பொண்ணும் அமர அந்த ஒரு நிமடத்தில் கண்டு கொண்டான் தன்னவளை.

“ஶ்ரீ….ஶ்ரீ….”என்று மனது கூப்பாடு போட விமான பணிப்பெண்ணிடம் உதவி கேட்டு தனது இருக்கையை மாற்றிக் கொண்டு வந்துவிட்டான்.இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவியபடி இருக்க,

“சார்…சார்….”என்ற பணிப்பெண்ணின் அழைப்பில்,

“ஆங்….எஸ்….”என்று ஆரி திரும்பி கேட்க,கன்யாவோ கலங்கிய தன் கண்களை ஆரிக்கு காட்டாமல் மறுபுறம் திரும்பி மறைத்துக் கொண்டு துடைத்தாள்.

“இப்போ எதுக்கு இங்க வந்தார்…..ஒருவேளை பெங்களூர்ல ஏதாவது வேலையிருக்குமோ….”என்று நினைத்தாளே தவிர ஒருநிமிடம் கூட ஆரி தன்னை தேடியிருக்கக் கூடும் என்று நினைக்கவில்லை.பூனேவில் இருவரின் சந்திப்பிற்கு பின் கன்யாவின் மனது அடியோடு விட்டு போனது என்று தான் கூற வேண்டும்.அதனால் தான் அவள் வேலையைவிட்டுவிட்டு வெளியில் சென்றது புயலில் சிக்கிக் கொண்ட மனதை ஒருநிலைக்கு கொண்டுவரவே சென்றாள் அதில் ஒரளவிற்கு வெற்றியும் பெற்றுவிட்டாள்.இப்போது திடீர் என்று ஆரியை பார்க்கவும் மனது மீண்டும் அலைகழிய தொடங்க,

“ச்சை இந்த மனசுக்கு கொஞ்சம் கூட மான ரோசமே கிடையாது அவனைக் கண்டவுடன் உன் மனதை மீண்டும் பறிக் கொடுக்கிறாயே…..”என்று அவளின் மனசாட்சி அவளை எள்ளி நகையாடியது.

“ஏன் வந்தான் யோசிக்கிறியா ஶ்ரீ…..”என்ற ஆரியின் குரலில் அவள் உடல் குலுங்கி திரும்ப,அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆரி.

“சொல்லு ஶ்ரீ….”என்று அவளின் அதிர்ந்த முகத்தை வைத்தே அறிந்து கொண்டான் அவள் நான் சொன்னதை தான் நினைத்திருக்கிறாள் என்று மனதின் பாரம் மிகவும் அழுத்த குரல் பிசிறியது.

“இ….இல்…இல்லை சீனியர்….அப்படி இல்லை….”என்று கன்யா திக்கி திணறி கூற,ஆரி அவளை கூர்மையாக பார்த்து,

“என் ஶ்ரீக்கு உணர்வுகளை மறைக்க தெரியாது….ஆனா இப்ப அவ வாய் ஒண்ணு சொல்லுது கண்ணு ஒண்ணு சொல்லுது….இதெல்லாம் என்னால என்னோட முட்டாள் தனத்தால….”என்றவன் திரும்பி அமர்ந்து விட்டத்தை வெறிக்க தொடங்கினான்.கன்யாவிற்கு ஆரியின் இந்த பேச்சு ஏதோ செய்ய,

“அப்படியெல்லாம் இல்லை சீனியர்….நானும் தப்பா பேசியிருக்கேன்….”என்றவளின் பேச்சை பாதியில் நிறுத்தியது ஆரியின் குரல்,

“ப்ச்….ஶ்ரீ….இப்ப எதுவும் பேச வேண்டாம்…..வீட்டுக்கு போய் பேசிக்கலாம்….”என்றவன் அவளின் கையை தன் கையுடன் இறுக்கிக் கொண்டு கண்களை மூட,கன்யாவோ ஆரியின் இந்த புதிய பரிமாணத்தில் ஆ வென முழித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க,

“ச்சு உன் குண்டு கண்ணை வச்சுக்கிட்டு அப்படி பார்க்காதடீ…..”என்றவனின் முகத்தில் விரிந்த புன்னகை குடி கொண்டது.கன்யாவோ ஆரியை புரியாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவளின் மனதெல்லாம்,

“என்ன இவரு நம்ம வீட்டுக்கு போய் பேசலாம்னு சொல்லுறாரு….எந்த வீடு….அப்ப இவரு என்னை பார்க்க தான் வந்தாரா….”என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருக்க,

“உன்னை….உன்னை மட்டும் பார்க்க இல்லை தேடி வந்தேன்…..வேறு எந்த வேலையும் இல்லை….”என்றவன் அவளையும் சீட்டில் ஒழுங்கா அமர வைக்க அவளின் தோள்களில் கை வைக்க கன்யா பதறி,

“சீனியர்….”என்று கத்த,

“ஏய் ஒழுங்கா உட்காருடீ….வேற ஒண்ணும் பண்ணுற ஐடியா இப்ப இல்லை….”என்றவன் பின் திடீர் என்று அவளின் புறம் திரும்பி,

“இப்ப இல்லை ஆனா இனி பண்ணுவேன் ரெடியாகிக்க….”என்றுவிட்டு விட்ட  தூக்கத்தை தொடர கன்யாவிற்கு தலையும்,புரியவில்லை காலும் புரியவில்லை ஆனாலும் மனதில் ஒரு அசாத்திய அமைதி அதனால் அமைதியாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.இருவரின் கரங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து தான் இருந்தது.

Advertisement