Advertisement

மன்னிப்பாயா….20

இரண்டு வாரங்கள் கடந்திருந்து கன்யாவும்,ஆரியும் பெங்களூர் வந்து.இடையில் ஒருமுறை ராதிகவும்,வருணும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ஆரிக்கு இரவு நேரம் தான் வேலை என்பதால் காலை நேரங்களில் கன்யாவுடன் தான் கழிப்பான்.முன்பு எவ்வளவு விலகியிருந்தானோ இப்போது அவ்வளவு ஒட்டிக் கொண்டு திரிந்தான்.

“அச்சோ ஆரி….இப்படி என் பின்னாடியே சுத்தாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு….”என்று அவன் பண்ணும் அலும்பில் கன்யாவும் கூறிவிட்டாள்.ஆனால் அதை அவன் காதில் வாங்கினாலும் கருத்தில் கொள்ள மாட்டான்.இரண்டொருமுறை கூறி பார்த்தவள் பின் விட்டுவிட்டாள்.கன்யாவும் வேலை தேடலாம் என்ற யோசனையில் இருந்தாள்.அதை ஆரியிடமும் பகிர்ந்து கொள்ள அவனோ,

“இப்ப வேணாம் ஶ்ரீ…..நான் இன்னும் ஒரு வருஷம் தான் யூஸ்ல இருப்பேன்….அப்புறம் நாம இங்க தான்…நான் தனியா கம்பெனி தொடங்கலாம்னு இருக்கேன்….அதனால என்கூடவே இரு….”என்று கூறிவிட கன்யாவும் முதலில் யோசிக்க,

“ஓய் பொண்டாட்டி ரொம்ப யோசிக்காத….உதை தான்….”என்று அவளின் தலையில் ஆரி செல்லமாக தட்ட,

“ஆஆஆ….சீனி….”என்றவள் அவன் மீண்டும் கையை ஓங்க,

“இல்ல…இல்ல….ஆரி ஆரி….”

“ம்ம்ம்….அது….இன்னொரு தடவை சொல்லு என்ன பண்ணுறேனு பாரு….”என்று மிரட்ட,

“ரொம்ப தான் மிரட்டுரார்…..”என்று கன்யா முகத்தை தூக்க,

“ஓய் அப்படியெல்லாம் முகத்தை வச்சுக்காத பார்க்க முடியலை….”என்று அதற்கும் அவளை வார,கன்யாவிற்கு முழி பிதுங்கியது அவனின் அழுச்சாட்டியத்தில்.முன்பு பார்க்காததற்கும்,பேசாததற்கும் சேர்த்து வைத்து அவளை பார்த்தான்,பேசினான் அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசிக்க தொடங்கினான்.

ஆரியின் இந்த மாற்றம் கன்யாவிற்கு தான் ஒருமாதிரியாக இருந்தது தான் செல்லும் இடமெல்லாம் தொடரும் அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாதவள்,

“ஏன் இப்படி பார்க்குறீங்க ஆரி….”என்று கேட்க,

“நீ தான என்னை பார்க்கலனு வருத்தப்பட்ட….அதான் இப்ப பார்க்குறேன்…”என்று அதற்கும் அவன் அலட்டாமல் பதில் சொல்ல,கன்யாவிற்கு தான் வெட்கமாகி போனது,

“அச்சோ உங்களோட….”என்று அவள் உதடு கடித்து திரும்பும் அழகை கண்டவன்,

“அழுகுடி பொண்டாட்டி…..”என்று அவளை மேலும் மேலும் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.

கன்யாவிற்கு மனதில் குளுமையும்,வெம்மையும் ஒரு சேர தாக்கிக் கொண்டிருந்தது.இந்த ஒரு வாரத்தில் அவளுக்கும் ஆரிக்குமான உறவில் உடலை விட மனதளவில் இருவருமே நெருங்கியிருந்தனர்.ஆரியின் பார்வை பேச்செல்லாம் அவன் இந்த உறவை அடுத்த கட்டத்திருக்கு எடுத்து செல்ல விரும்புவதாகவே இருக்க கன்யாவிற்கு தான் அத்தனை தயக்கம் அதில் காயம் கண்ட இதயம் அல்லவா மீண்டும் காயம் கண்டு துவண்டு விடுமோ என்ற பயம் இன்றளவும் அவளின் உள் இருந்தது.

கன்யாவின் மனதை அறிந்து தான் ஆரியும் பொறுமையாக இருந்தான்.ஆனால் இரவு நேரங்களில் அவளுடன் இருக்கும் பொழுதுகள் அவனுக்கு இப்போதெல்லாம் சற்று அவஸ்தையாக தான் இருந்தது.அவளை முழுதாக தன்னுடன் பிணைத்துக் கொள்ள அவனின் மனதும்,உடலும் துடித்துக் கொண்டிருந்தது.

தலையணை உறை மாற்றிக் கொண்டிருந்தவளை தான் விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரி.லேப்டேப்பில் அன்றைய தின வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவியை அவ்வபோது கண்களால் பருகிக் கொண்டிருந்தான்.தலையணை உறையை மாற்றிவிட்டு திரும்ப கணவனின் பார்வை தன் மீதே இருப்பதை பார்த்தவள்,

“இங்க என்ன பார்வை உங்க லேப்பை பாருங்க….”என்று கூறிவிட்டு வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறிவிட்டாள்.வேகமாக சமையல் அறைக்குள் வந்தவள் அங்கு பாட்டில் இருந்த குளிர்ந்த நீரை பருகியவளுக்கு இன்னுமே நெஞ்சம் தடதடத்து கொண்டிருந்தது.

“ப்பா எப்படி பார்க்குறாரு….”என்று அவள் கூற,

“ஏன் நான் பார்க்கக் கூடாதா….”என்ற ஆரியின் குரல் கன்யாவின் மிக அருகில் கேட்க,திடுக்கிட்டு அவள் திரும்ப ஆரியின் திண்மையான நெஞ்சின் மீது மோதி நின்றாள்.ஆரி அவளையே பார்த்தபடி அவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்,

“ஓய்…..நிமிரு….என்னை பாரு…..”என்று அவளின் காதருகே கூற அவளோ நிமிருவேனா என்பது போல குனிந்து கொள்ள ஒற்றைக் கையால் அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் முகத்துடன் தன் முகத்தை தேய்க்க,

“ஸ்ஸ்ஸ்….ஆரிஇஇஇ….”என்றவளின் குரலோ அவனிற்கு இனிமையான ரீங்காரமாக ஒலிக்க,

“ம்ம்ம்…..”என்றவனின் அதரங்கள் அவளின் முகத்தில் தனது அச்சாரங்களை பதிக்க தொடங்கின,நெற்றியில் ஆரம்பித்த அவனின் இதழ் ஒற்றல் கன்னம்,கழுத்து என்று இறுதியில் அவளின் அதரங்களில் இளைப்பார கன்யா பிடிமானம் இன்றி அவனையே பிடித்துக் கொள்ள,இருவரின் உடலும் ஒன்றுடன் ஒன்று பிண்ணத் தொடங்கியது.கன்யாவிற்கு மெல்ல மெல்ல தன்னிலை மறக்க தொடங்கினாள்.

எப்பொது அவளை கையில் ஏந்தினான் என்று அவளுக்கு தெரியவில்லை,எப்போது படுக்கையில் கிடத்தினான் என்பதும் தெரியாது.ஆரியின் கைகள் மெல்ல கன்யாவின் இடையில் ஊர்ந்து அவளின் வதனத்தை சிலிர்க்க செய்ய மெல்ல அவனின் தீண்டலில் மேனி சிலிர்த்து கண்விழித்தவள் கண்டது தன் மீது பாதி படர்ந்த நிலையில் இருந்த தன்னவனைத் தான்.

மனதின் இறுக்கங்கள் தளர்ந்ததாலோ என்னவோ கன்யாவின் அகமும்,முகமும் மலர்ச்சியில் மிளிர,அவளையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியநாதன்.அவனின் பார்வையை தாங்க முடியாமல்  அவன் கண்களை மூடியவள்,

“ஆ….ஆரி எதுக்கு இப்படி பார்க்குறீங்க….என…..எனக்கு….”

“ம்ம்ம்….உனக்கு….”

“ப்ச்…தள்ளுங்க….”என்று அவனிடம் இருந்து விடபட முயல அவனின் பிடி இரும்பென இறுகியது,

“எதுவா இருந்தாலும் இங்க இருந்தே சொல்லு….ஶ்ரீ….உனக்கு….”என்று அவன் ஊக்க,கன்யா பதில் கூற முடியாமல் நெளிந்தாள்.ஆரி அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்தபடி இருந்தான்.இந்த இரு வாரத்தில் அவளின் மனதை நன்கு அறிந்து கொண்டான் தன்னை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கிறாள்.ஆனால் முன்பு போல் அவளால் தன்னிடம் இயல்பாக நெருங்க முடியவில்லை மனதில் ஏற்பட்ட காயம் அவளை நெருங்கவிடாமல் தடுக்கிறது என்பது ஆரிக்கு நன்கு புரிந்து போனது.ஆக அவளாக தன்னை நெருங்க மாட்டாள் என்பதும் புரிய அவளை வார்த்தைகளால் முதலில் சீண்டி தன் மனதை உரைத்தவன் இன்று முற்றிலும் அவளிடம் சரண்னடைய வந்துவிட்டான்.

“ஶ்ரீ….என்னை பாரு….கண்ணை திற….”என்று ஆரியின் குரல் கன்யாவின் காதை அடைந்தாலும் அவள் கண்களை திறக்காமல் இருக்க,அவளின் முகத்தை நிமிர்த்தி,

“கண்ணை திற ஶ்ரீ…..என்னை பாரு….எது தடுக்குது உன்னை என்கிட்ட நெருங்க விடாம….”என்றவனின் கேள்வியில் பட் என்று கண்களை திறந்தவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“என்ன உன் குண்டு கண்ணு விரியுது…ம்ம்ம்….எனக்கு தெரியும் நீ என்கிட்ட வந்தா திரும்பியும் பழய மாதிரி ஏதாவது நடந்துடுமோனு பயப்படுற அப்படி தான….”என்று சரியாக கேட்க கன்யா பதில் கூற முடியாமல் தடுமாறினாள்.

“அது….அது….”என்றவளை தடுத்தவன்,

“எனக்கு தெரியும் ஶ்ரீ….இல்லனு பொய் எல்லாம் சொல்லாத….”என்றவன் அவளை விட்டு விலக அவளின் முகம் சற்று சுருங்க,அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டு,

“மூஞ்சை சுருக்காதடீ…..”என்றவன் அவளின் இடையில் கிள்ள,

“ஆஆஆஆ….ஆரி….வலிக்குது விடுங்க…”என்று எந்திரிக்க முயல ஆரியின் உடும்பு பிடியில் இருந்து விலக முடியவில்லை.

“விடுங்க வலிக்கும்….”என்றவளை தன் முகம் நோக்கி இழுத்து,

“அதெல்லாம் எனக்கு வலிக்காது நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம தப்பிக்க பார்க்காத சொல்லு நான் சொன்னது தான….”என்று கேட்க,கன்யாஙவின் தலை ஆம் என்று ஆடியது,அவளின் ஆடிய தலையை பிடித்து தன் முகத்துடன் வைத்து இழைத்தவன்,

“ஶ்ரீ….ஶ்ரீ….முதல் நம்ம சண்டைக்கு முதல் காரணமே நாம இரண்டு பேரும் சரியா பேசினது இல்ல….நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு தெரியலை நான் என்ன நினைக்குறேன்னு உனக்கு தெரியலை….இதனால தான் நாமக்குள்ள சண்டை வந்தது….ஆனா இனி அப்படி நடக்காது நான் எதுவா இருந்தாலும் உன்கிட்ட கலந்து பேசிட்டு தான் முடிவு எடுப்பேன்…அதனால பழசையே நினைக்காதடா….ப்ளீஸ்….”என்று ஆரி கூற,கன்யாவும் அவனின் புரிதலில் மனம் மகிழ சரியென்று தலையாட்ட,

“என்னடீ எதுக்கு எடுத்தாலும் தலையாட்டுற….வாயை திற….”

“புரியுது….போதுமா….இப்ப விடுங்க….”

“விட்டுடவா உன்னை தூக்கிட்டு வந்தேன்….”என்று அவளின் கன்னத்தில் தன் அதரத்தை பதித்து விலக,அவனின் மீசையின் குறுகுறுப்பில் நெளிய,ஆரியின் கைகள் தளர்ந்து அவளை விடுவித்தது.கன்யா என்ன என்று உணரும் முன் அவன் அவளை விட்டு விலக போக,

“அச்சோ இருங்க ஆரி….”என்று அவனை இழுக்க அவளின் மேல விழுந்தவனை கட்டிக் கொண்டவள்,

“இப்ப என்ன எல்லாம் நான் வாய் திறந்து சொன்னா தானா….”என்று கூற ஆரியின் முகத்தில் வெற்றி புன்னகை,

“அப்படி வா வழிக்கு….”என்றவன் அதன் பின் அவளை பேசவே அனுமதிக்கவில்லை.அவனின் இறுகிய அணைப்பும்,அதரங்களின் முற்றுகையிலும் கன்யா முற்றிலுமாக தன்னிலை இழுந்து அவனிடமே சரண்டைய அவளிடம் வன்மையாக,மென்மையாக என்று தன் ஆதிக்கத்தை தொடங்க,கன்யாவிற்கு ஆரியின் இந்த பரிமாணம் சற்று பயத்தை தர அவளின் முகத்தை பார்த்தே அறிந்து கொண்டவன்,

“பயப்படாதடீ….”என்று கூறிக் கொண்டே அவளின் கன்னத்தை கடிக்க,கன்யா அலறி அவனின் நெஞ்சில் சாய,அவனின் அதரங்களின் முற்றுகையும் தொடர்ந்தது கூடவே,

“ஶ்ரீ…இங்க பாருடீ…என்னை பாருடீ….”என்ற ஆரியின் பிதற்றல்கள் தான் அறை முழுவதும் ஒலிக்க,

“அச்சோ ஆரி பேசாதீங்க….”என்று கன்யா அவனின் வாயை மூட,அவளின் கையில் முத்தமிட்டு விலக்கியவன்,

“பேசாம வேலையை பாருடானு சொல்லுறீயா….”என்று அதற்கும் அவன் பேச,கன்யாவிற்கு தான் அய்யோ என்றானது.தன் மனதின் காதல் அனைத்தையும் அவளிடம் ஒரே நாளில் சமர்பித்தவன்

“உன் குண்டு கண்ணை உருட்டி உருட்டி பார்த்தே என்னை மயக்கிட்டடீ நீ…..”என்று அவளின் அந்த பெரிய விழிகளில் தன் அதரத்தை பதித்து விலகினான் ஆரியநாதன்.

கன்யா அவனின் மார்பில் தானாக சாய்ந்து படுத்துக் கொள்ள ஆரியின் கைகள் அவளை அணைத்து கொள்ள வெகு நாட்களுக்கு பிறகு இருவருக்குமே நல்ல உறக்கம் தழுவியது.

காலை கதிரவன் தன் பொன் கரங்களை பூமிக்கு பரப்பிக் கொண்டிருந்த பொழுதில் ஆரி கண்விழிக்க,அவனின் மார்பில் மஞ்சம் கொண்டிருந்தாள் மனையாள்.அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விலகியவன் அவளின் தூக்கம் கலையாமல் அவளை தலையனைக்கு மாற்றிவிட்டு எழுந்து குளியல் அறைக்குள் சென்றான்.ஆரி குளித்து வரும் போது கன்யாவும் எழுந்திருந்தாள்.படுக்கை விரிப்பு எல்லாம் மாற்றப்பட்டு இருந்தது.ஆரி வரவேற்ப்பறைக்கு வர அங்கிருந்த குளியலறையில் இருந்து கன்யா வெளியில் வர வேகமாக அவளை அணைத்து தூக்கியவன் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து,

“ஓய் பொண்டாட்டீ…எழுந்தா சொல்லமாட்ட…ஏன் தனியா குளிக்க போன…நான் உன்னை வந்து தூக்கிட்டு போகலாம்னு இருந்தேன்….”என்று அவளின் கழுத்தில் முகம் புதைக்கொண்டே கூற,

“அச்சோ விடுங்க ஆரி….”என்று அவனின் முகம் பார்க்காமல் அவள் இருக்க,அவளை தன் மீதே திருப்பி போட்டு அவளின் முகத்தை பார்த்தவன்,

“ஓய்…..இன்னைக்கு என்ன இந்த இரண்டு கன்னமும் இப்படி சிவந்து ரோஸா இருக்கு…”என்று அவளின் கன்னகதுப்பை நிமிட்டியவாரே கேட்க,கன்யாவின் முகம் மேலும் செந்தாமரையாக சிவந்து தான் போனது.

“அச்சோ அழுகுடீ….உன்னை….”என்று அவளை மேலும் மேலும் சிவக்க வைத்தான்.காலை நேரம் இருவரின் பொழுதும் கொஞ்சம் ஊடல்,கொஞ்சம் கூடல் என்று இனிமையாக சென்றது.

“விடுங்க ஆரி….எனக்கு பசிக்குது….”என்று கன்யா அவனின் அணைப்பில் இருந்து விடுபட முயல அவனோ அவளை இன்னும் தன்னுள் புதைக்கொண்டு உறங்க,

“விடுங்க….விடுங்க….”என்று அவனின் கைகளை அடிக்க,

“ஆங் அங்க தான் ஶ்ரீ….அப்படியே இந்த கையிலேயும் அடி கை வலி குறையும்….”என்று கண் திறவாமல் கூற,

“நாம இப்படியே எவ்வளவு நேரம் படுக்குறது….”என்றவளின் சிணுங்களில்,

“ஓ….சும்மா ஏன் படுக்கனும்னு கேட்குறீயா….பேபி….”என்றவரே அவளை இடை அழுத்தமாக பற்ற,அவனின் நோக்கம் புரிந்தவள் பதறி போர்வையை இழுத்தபடி எழுந்துவிட,

“ஏன்டீ எழுதந்துட்ட….”என்றவனை தலையணையால் மொத்தினாள்.

“பண்ணுற வேலையை பாரு….எழும்புங்க….”என்று அவனை எழுப்பி இருவரும் குளித்து வரும் போது மதியவேளை வந்திருந்தது.

“ஶ்ரீ…நீ சமைக்க வேண்டாம்….நான் சாப்பாடு ஆடர் பண்ணிடுறேன்….”

“வேற வழி….நீங்க பண்ண வேலைக்கு….”என்றவள் மீண்டும் தலை குளித்து தலையை துவட்டியபடி இருக்க,அவளை இறுக அணைத்த ஆரியின் கைகளை தட்டிவிட்டவள்,

“தள்ளி போங்க….என்னால திரும்பியும் குளிக்க முடியாது….”என்று கூற,ஆரி அடக்க முடியாமல் சிரித்தான்.வாழ்வில் பல கசப்புகளுக்கு பிறகு கிடைத்த இனிப்பு போல அவர்களின் வாழ்க்கை இனிப்பாக தொடங்கியிருந்தது.அதே நேரம் சென்னையில் ஆரியநாதனின் வீட்டின் முன்பு  நின்றிருந்தான் ஶ்ரீராம்.

Advertisement