Advertisement

மன்னிப்பாயா….21

சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர் ஆரியும்,கன்யாவும்.கன்யாவின் நடுங்கும் கைகளை இறுக பற்றிக் கொண்ட ஆரி,

“ஒண்ணும் இருக்காதுடா….நீ டென்ஷன் ஆகாத…”என்று கூற,கன்யாவின் தலை ஆடினாலும் மனதில் இன்னும் நடுக்கம் தான் கேட்ட செய்தியில்.மதியவேளை உணவை உண்டுவிட்டு கன்யா பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.ஆரி தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது கைபேசி அழைக்க எடுத்தவன் முகம் சற்று இறுகி பின் இலகியது.சற்று நேரம் அவன் கைபேசியை வெறித்தபடி இருக்க,

“ப்ச்….ஆரி….போன் அடிக்குது….எடுக்காம என்ன பண்ணுறீங்க….?” என்று கேட்ட படி சமையல் அறையில் கன்யா வர,

“ம்ம்ம்….தன்யா தான் கால் பண்ணுறா….”என்றவன் பேசியை எடுத்து காதில் வைக்கும் முன் தன்யாவின் பதட்டக் குரல் கேட்டது,

“ஹலோ….அண்ணா….ஹலோ….”என்று அவளின் குரல் ஆரியின் பக்கத்தில் நின்ற கன்யாவிற்குமே கேட்க,அவளின் மனதிலும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“சொல்லு தனு….என்னாச்சு….ஏன் பதட்டமா பேசுற….”என்று ஆரி கேட்க,மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ ஆரியின் முகம் பதட்டத்தைக் காண்பிக்க,கன்யா ஆரியின் பக்கத்திலேயே அமர்ந்துவிட்டாள்.அங்கு யாருக்கோ பிரச்சனை என்று அவளுக்கு விளங்கிவிட்டது.

“சரி….நாங்க வரோம்….ராம் பக்கத்தில இருந்தா போனைக் கொடு….”என்று கூற,

“ராமா????”என்று கன்யா அதிர்ந்தாள்.

“ராம்….நான் ஆரி…நீ டென்ஷன் ஆகாம இரு…நாங்க வந்துடுவோம்…..”என்றுவிட்டு அவனிடம் மேலும் சில தகவல்கள் கேட்டு தெரிந்து கொண்டு பின் கைபேசியை வைத்தவன்.சற்று நேரம் ஏதோ யோசனையிலேயே நிற்க,

“ஆரி….ஆரி….என்னாச்சு….ராம் உங்க வீட்டல இருக்கானா….”என்று அவள் கேட்க,அவளின் கைகளை தட்டிக் கொடுத்தவன்,

“ஶ்ரீ…..உங்க அப்பாக்கு அட்டாக்காம்….ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கலாம்….உன்னை பார்க்கனும்னு சொல்லுராங்கனு ராம் சொல்லுறான்….நீ நம்ம இரண்டு பேருக்கும் தேவையானதை எடுத்து வை….நான் நமக்கு பிளைட் டிக்கேட் புக் பண்ணிட்டு…அப்படியே எனக்கு தெரிஞ்ச பிரண்டு ஒருத்தன் டாக்டர் இருக்கான் அவன் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…..”என்று வரிசையாக அடுக்க கன்யாவிற்கு மூளை தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதிலேயே நின்றுவிட்டது.

ஆரி அனைத்தும் கூறிவிட்டு கன்யாவின் முகத்தை பார்க்க,அவளோ முகம் வெளிறி நின்றிருக்க,அவளின் கைகளை அழுத்த,அதில் தன்னிலைக்கு வந்தவள்,

“ஆங்…ஆரி…என்ன என்ன சொல்லுறான் ராம்….எனக்கு பயமா இருக்கு….”என்று பதட்டப்பட,அவளை சோபாவில் அமர செய்தவன்,

“ஶ்ரீ…பயப்படாத….ஒண்ணுமாகாது….நாம முதல்ல கிளம்புவோம்….அப்ப தான் அங்க என்ன நிலைமைனு தெரியும் இப்படி இங்க நின்னே யோசிச்சா சரியா இருக்காது….அதனால தைரியாமா இரு புரியுதா….நீ தான் உங்க அம்மா,தம்பிக்கு ஆறுதல் சொல்லனும்…..”என்று அவன் குழந்தைக்கு சொல்லுவது போல கூற,கன்யாவிற்கும் ஆரி கூறுவது தான் சரியென்றுபட அவளும் தன்னை வெகுவாக தேற்றிக் கொண்டு கிளம்பினாள்.இதோ இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வந்திறங்கிவிட்டனர்.

ஆரியநாதனும்,கன்யாவும் நேராக இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துமனைக்கு வந்தனர்.ஆரி ராமிற்கு பேசியில் அழைத்து பேசியிருந்ததால் ராம் இவர்களுக்காக மருத்துவமனையின் வாயிலில் நின்றிருந்தான்.ஆரியும்,கன்யாவும் காரில் இருந்து இறங்குவதை பார்த்தவன் வேகமாக வந்தான்.

“வாங்க அத்தான்…”என்றவன் கன்யாவின் பக்கம் திரும்ப கூட இல்லை.கன்யாவிற்கு தன் தம்பியின் கோபம் புரிந்தது.இப்போது அவனிடம் பேசும் நிலையில் அவள் இல்லை.ஆனால் ஆரிக்கு அதெல்லாம் இல்லை அவன் இயல்பாக ராமிடம் பேசிக் கொண்டே மனையாளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நடந்தான்.

கன்யாவிற்கு ஆரியின் கையை பிடித்தவுடன் தான் மனதில் சிறு தெம்பு தன்னவன் இருக்கிறான் எனக்கு என்று நினைத்தவள் அவனின் விரல்களுடன் தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.ஆரிக்கும் கன்யாவின் மனது புரிகிறது அதனால் ராமிடம் பேசினாலும் கன்யாவின் கைகளை தட்டிக் கொடுத்து கண்களை மூடி திறந்தான்.அதுவே கன்யாவிற்கு போதுமானதாக இருந்தது.

மூவரும் ஐசியூ இருக்கும் பகுதிக்கு வந்தனர்.அங்கு ஒரு அறையின் முன் அன்பரசி ஓய்ந்து போய் அமர்ந்திருக்க,அவரை பார்த்தவுடன் கன்யா வேகமாக அவரிடம் சென்றாள்.

“ம்மா….”என்று அவரின் தோள் தொட்டு கூப்பிட,அவரோ ஏதோ மனதில் உருபோட்டப்படி இருந்தார்.கணவர்,குழந்தைகள் என்று மட்டுமே வாழ்ந்தவர்.அவருக்கு இளங்கோ தான் எல்லாம் கோபப்பட்டாலும் கணவர் வேண்டும்.எப்போதும் ஒருவித கர்வத்துடன் சுத்தும் மனிதர் இன்று படுத்தநிலையில் பார்க்கமுடியவில்லை அவருக்கு.இதில் பெரிய மகள் பற்றி நினைக்கியிலேயே மனது முழுவதும் கசந்து போனது.தன்னை தேற்றுவோர் யாரும் இல்லாமல் தனியாக அல்லாடிக் கொண்டிருந்தவரின் முன் கேட்ட அம்மா என்ற பெண்ணின் குரலில் மெல்ல கண் திறக்க,அங்கே நின்ற மகளை கண்டவுடன் மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் பீறிட,

“கனி….கனி….ப்பா….ப்பா….”என்று அவர் பிதற்ற,கன்யா வேகமாக கட்டிக் கொண்டாள் அன்னையை,

“ம்மா…..ஒண்ணுமில்ல…நான் வந்துட்டேன்ல….ஒண்ணுமாகாது…..தைரியமா இருங்க….”என்றவளின் ஆறுதல் மொழிகள் அன்னையின் அழுகையை அடக்குவதற்கு பதிலாக மேலும் துண்ட,

“ப்ச்….ம்மா…..இப்ப அழாம இருக்க போறீங்களா….இல்லையா….ஏற்கனவே ஒருத்தர் இழுத்து வச்சது போதாது….இப்ப நீங்களும் அழுது உடம்பை வறுத்தாதீங்க….ப்ளீஸ் என்னால முடியலை….”என்று ராம் சற்று காட்டமாகவே கூறிவிட,

“ராம்….”என்றாள் கன்யா,அவனோ தமக்கையின் முகத்தை பார்க்காமல் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.அவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது.ஆரி தான் ராமின் தோள்களை தட்டிக் கொடுத்து,

“ராம்…இது அழற சமயம் இல்லை….வா என்கூட நாம டாக்டர் கிட்ட பேசிட்டு வருவோம்….ஶ்ரீ….நீ அம்மா கூட இரு….நாங்க பார்த்துட்டு வரோம்….”

“நானும் வரேன் ஆரி….”என்றாள் கன்யா,அவளுக்குமே தந்தையின் உடல்நிலை அறிய வேண்டியிருந்தது.இளங்கோ தன் உடல் நலத்தை அப்படி பேணி காப்பார்.காலை எழுந்ததும் காலை நேர நடை பயிற்சி வந்ததும் சத்துமாவு கஞ்சி,உணவு கூற அளவாக தான் எடுத்துக் கொள்வார் அப்படி இருக்க திடீர் என்று அட்டாக் என்றதும் கன்யா பயந்து தான் விட்டாள்.ஆரிக்கு புரிந்தது கன்யா ஏன் வருகிறேன் என்று கூறுகிறாள் என்று,

“ஶ்ரீ….நான் கேட்டுட்டு வரேன்…..நீ டென்ஷன் ஆகாம இரு….அம்மாவை பாரு….ரொம்ப பயந்து போயிருக்காங்க….”என்று கூறிவிட்டு ராமுடன் சென்றுவிட்டான்.

ஆரியும்,ராமும் சென்றவுடன் கன்யா தாயின் பக்கத்தில் அமர்ந்தாள்.

“ம்மா….என்னமா அப்பா….அவருக்கு எப்படி இப்படி ஆச்சு….நிதி எங்க….”என்று வரிசையாக கேள்வி எழுப்ப,அன்பு முதலில் மகளை வருடியபடியே இருந்தார்.வார்த்தை வரவில்லை தாய்க்கு ஏதோ ஒரு மனதை அழுத்துவதை போல இருந்தது.கன்யாக்கு தாயின் நிலை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை,

“ம்மா….என்னமா….ஏன் இப்படி இருக்க…எதுவா இருந்தாலும் பேசிடுமா…..எனக்கு பயமா இருக்குமா….”என்றாள் மனதை மறையாது.

“ம்ம்….கனிமா….ப்பா வந்துடுவார்ல….அவ….அவருக்கு ஒண்ணுமாகாதுல….”என்று அவர் மகளின் கைகளை பற்றி மன்றாடலாக கேட்க,

“ஒண்ணுமாகாது மா…..நீ முதல்ல பயப்படாம இரு….என்ன அச்சு…எப்படி அப்பாக்கு….”என்று அவள் கேட்க,

“என்னத்த சொல்ல….எல்லாம் நான் பெத்த பெரிய பிசாசு…அதனால வரது தான்…..இப்படி ஒரு பொண்ணை பெத்துட்டேனே….அய்யோ….”என்று ஒரே மூச்சாக அழுது தீர்க்க,கன்யாவிற்கு இப்போது புரிந்தது ஏன் நிதி இங்கு இல்லை என்று ஏதோ பெரிதாக நிகழ்ந்திருக்கிறது என்று புரிந்தது.ஆனால் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கும் அளவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவள் யோசனையில் இருக்க அவளின் எண்ணவோட்டத்தை தடை செய்தது தாயின் குரல்.

“எல்லாம் அந்த பிசாசால வந்தது தான்…..அவளாள தான் கனிமா அப்பா இப்படி படுத்துட்டார்….”என்றவர் கூற தொடங்கினார்.

கன்யா சென்ற பிறகு நிதிக்கு அந்த வீட்டில் ஏதோ அனைத்தும் கிடைத்துவிட்டது போன்றதொரு உணர்வு அதனால் முழுதாகவே அன்னை வீட்டில் தங்கிவிட்டாள்.அவளுக்கு வாய்த்தவனும் மனைவி சொல்லை தட்டாத மனிதன்.இளங்கோ கேட்டதற்கு தனது வருமானத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று பல காரணங்களை கூற தந்தைக்கு மனது தாளவில்லை.அவர் சரி என்று கூறிவிட அவ்வளவு தான் மீண்டும் தனது நாட்டாமையை செய்ய தொடங்க,வீட்டில் அடிக்கடி அவளிற்கு ராமிற்கு பிரச்சனை தொடங்கியது.ராம் படித்து முடித்து மேற்படிப்பிற்கு தந்தையிடம் வந்து நிற்க,நிதி மீண்டும் ஆரம்பித்தாள்.

“ப்பா….இப்ப எதுக்கு மேல் படிப்பு இவனுக்கு…..இங்க ஏற்கனவே பண நெறுக்கடியா இருக்கு…அதனால வேலைக்கு போக சொல்லுங்க….”என்று கூற,

“நான் உன்கிட்ட கேட்கலை…..நான் என் அப்பாகிட்ட தான் கேட்கிறேன்….நீ குறுக்க வராத….”என்று ராம் கூற,

“ஏய் நான் உனக்கு அக்கா….இந்த வீட்டு நிலைமை என்னனு தெரியாம நீ படிக்கனும் சொல்லுற…அதான உனக்கு அவ புத்தி தான இருக்கும்….எது நீயும் அந்த ஓடுகாலி மாதிரி ஏதாவது….என்று மேலும் என்ன கூறியிருப்பாளோ,

“ஏய்ய்ய்ய்….”என்று ராம் கையை ஓங்கிவிட்டான்.அவனின் முகத்தில் தெரிந்த ரௌத்திறத்தில் நிதி இரண்டடி பின் சென்று,

“ப்பா….பார்த்தீங்களா என்னை அடிக்க கை ஓங்குறான்….”என்று அழ தொடங்க,

“ராம்….என்னதிது….அக்கா கிட்ட இப்படி தான் நடந்துப்பியா…”என்றவர் நிதியின் பக்கம் திரும்பி,

“நிதி…..நீ எதுக்கு கன்யா பத்தி பேசுற….இது நல்லாயில்லை….என்ன இருந்தாலும் அவளும் என் பொண்ணு தான்…..அதனால பார்த்து பேசு…..”என்று மகளை எச்சரிக்கையும் செய்தார்.இளங்கோவிற்குமே மகளின் இந்த பேச்சு பிடிக்காமல் அவளின் மேல் கசப்பு உருவானது முதல் முறையாக.

ஶ்ரீநிதிக்கு கோபம் தான் இருந்தும் தந்தை முன்னே எதுவும் காட்டிக் கொள்ளாமல்,

“இல்லப்பா நம்ம நல்லதுக்கு தான் சொன்னேன்…”என்று கூற,அவளின் பேச்சை கையுர்த்தி நிறுத்திய இளங்கோ,

“நான் பார்த்துக்குறேன்….நீ ராமோட படிப்பு விஷயத்துல் எல்லாம் தலையிடாத….”என்றவர் மகனிடம் மற்ற விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

“ப்பா….நான் பார்டைம் ஜாப் பார்த்துட்டு தாம்பா படிக்க போறேன்….அதனால நீங்க கவலை படாதீங்க…”என்று ராம் கூற,மகனின் தலையை ஆதுரமாக தடவியவர்,

“அதெல்லாம் வேண்டாம்ப்பா…நான் படிக்க வைக்குறேன்…”என்று கூறிவிட்டு சென்றார்.இளங்கோவிற்கு கன்யா வீட்டை விட்டு சென்றதில் இருந்தே மனது ஒருநிலையில் இல்லை ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு மகளை விட்டுவிடோமோ என்று மனது தினமும் அடித்துக் கொண்டு தான் இருக்கிறது ஆனால் அனைத்தும் மறந்து மகளிடம் பேச அவரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.

ராமிற்கு தந்தையின் மாற்றம் புரிகிறது தான் இருந்தும் காலம் கடந்து சிந்தித்து என்ன பயன் என்று விட்டுவிட்டான்.நிதிக்கு தந்தை தன்னை திட்டிவிட்டார் என்று மனதாங்கல் இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொண்டால் தான் இங்கு இருக்கமுடியாதே என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஆனால் அதன் பிறகு நிதியின் செயல்கள் யாவும் தன் தந்தையிடம் இருந்து பணத்தை சுரண்டுவதிலேயே இருந்தது.அதற்கு ஏற்றார் போல அவளின் கணவனுக்கும் வேலை சென்றுவிட அது வேறு அவளுக்கு இன்னும் வசதியாக போகிவிட்டது.இளங்கோவும் மகள் கஷ்படுகிறாள் என்று பணத்தை கணக்கு வழக்கு பார்க்காமல் கொடுக்க தொடங்க விளைவு மாத கடைசியில் கையிருப்பு குறைய தொடங்கியது.

ராம் வெளியூரில் படித்தால் அவனுக்கு வீட்டு நிலவரம் அதிகமாக தெரியாது.அவன் வரும் பொழுதுகளில் நிதி கன்யாவை ஏதாவது குறை கூறிக் கொண்டிருக்க அவன் வீட்டிற்கு வரும் பொழுதுகள் குறைந்தது.அதோடு அவனிற்கு பகுதி நேர வேலையும் கிடைத்தால் படிப்பு வேலை என்று பொழுது கழிந்தது.இவ்வாறு இரு வருடங்கள் கழிந்தது ராமிற்கு படிக்கும் போதே நல்ல வேலை கிடைத்துவிட அவன் அதைக் கூற வீடு வரும் போது தான் வீட்டின் நிலையை அறிந்து கொண்டவன் தாயிடம் விசாரிக்க அவரோ மகளை தப்பிக்க வைக்கவே முயன்றார் அதை உணர்ந்தவன் ஒரு முறை இளங்கோ இருக்கும் போதே,

“ப்பா….இந்த வீட்டை பொறுத்தவரை உங்களுக்கு மூணு பிள்ளைங்க இருக்காங்க….அதை நீங்க அடிக்கடி மறந்து போயிடுறீங்க….உங்களுக்கு நானும் கனியும் எப்போதும் கண்ணுக்கு தெரிய மாட்டோம் போல…..நீங்க உங்க பெரிய பொண்ணுக்கு மட்டும் தான் அப்பாவா இருக்கீங்க….உங்க பொண்ணுக்கு பணம் கொடுக்குறது தப்பில்லை ஆனா ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடனும் சொல்லுவாங்க…அதனால பார்த்து செய்ங்க….நான் அவ்வளவு தான் சொல்லுவேன்….”என்று எச்சரித்துவிட்டு சென்றுவிட்டான்.இது அனைத்தும் பேசும் போது நிதி இல்லாதவாரு பார்த்துக் கொண்டான்.

இளங்கோவிற்கு மகனின் இந்த பேச்சு மேலும் மனதை பிசைய செய்தது ஏற்கனவே கன்யாவின் விஷயத்தில் தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தவருக்கு இப்போது மண்டையில் சற்று உரைக்க தொடங்கியது.அதிலிருந்து வீட்டில் நிதியின் நடவடிக்கைகளை கவனித்தவருக்கு அத்தனை வருத்தம் அவள் தங்களிடம் பணம் வாங்கி தனியாக பிளாட் வாங்கியிருக்கிறாள் என்ற வரை தெரிந்து கொண்டார்.அவளின் சுயநலம் குணத்தைக் கண்டு கொண்டவர் அவளிடம் நேரிடையாக கேட்க அதன் விளைவு இதோ மருத்துவமனையில் இருக்கிறார்.

பெற்றவர்கள் குழந்தைகளில் பாரபட்சம் காட்டினால் அதன் விளைவு என்ன என்பதை இப்போது இளங்கோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.அவர் கடைசியாக கன்யாவை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே மயங்கியதாக தாய் கூறியிருந்ததால் தான் ராம் கன்யாவை அழைத்தது.அனைத்தையும் கேட்ட கன்யாவிற்கு மனது வலித்தது ஆனால் அனைத்தும் அவராக தேடி கொண்டது இனி அடுத்து என்ன என்று தான் நாம் யோசிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

Advertisement