Advertisement

அத்தியாயம் 13

“எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?” கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது.

“கேஸ பத்தி டிஸ்கஸ் பண்ண தான். ஏன்?” அவளுடைய பார்வையை வைத்து சந்தேகப்படுகிறாள் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயன் அவளையே சந்தேகமாக பார்த்து வைத்தான்.

“இங்க நான் மட்டும் தானே இருக்கேன். இங்கயே பேசலாமே. எதுக்கு தனியா போய் பேசணும்?” உள்ளுக்குள் இருந்த அச்சத்தால் தான் அவ்வாறு கேட்டாள்.

அங்கேயே இருந்து பேச அவன் என்ன வழக்கை பற்றியா பேச நினைக்கிறான்? “எத எங்க பேசணும் என்று ஒரு முறை இருக்கு. உன் கூடயும் கேஸ் டிஸ்கஷன் அந்த ரூம்ல தானே பண்ணுவேன். என்ன பிரச்சினை? தனியா இருக்க பயமா இருக்கா?” கிண்டல் செய்வது போல் கார்த்திகேயன் கேட்க,

எனக்கென்ன பயம்? நான் என்ன சந்த்ரமண்டலத்துல தனியா இருக்கேனா? உன் ஆபீஸ்ல தானே இருக்கேன். நான் என் வேலைய பாக்குறேன். நீ போ” என்று அவனை துரத்தினாள் கயல்விழி.

காகிதத்தில் செய்த பூவுக்கும்

என மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ

இரண்டுமே பூஜைக்கு போகாதோ

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்

என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ

இரண்டுமே வெளி வர முடியாதோ

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

செடியை பூ பூக்க வைத்தாலும்

வேர்கள் மண்ணுக்குள் மறையும்

உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்

உள்ளே சறுகாய் கிடக்கிறதே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

“விக்னேஷ் நீங்க வாங்க” என்று அவனை அழைத்துக் கொண்டு கலந்தாலோசிக்கும் அறைக்குள் நுழைந்தான் கார்த்திகேயன்.

பொதுவாக புதிதாக வரும் வழக்குகளை கலந்தாலோசிக்கும் அறையில் வைத்து தான் பேசுவார்கள். யாருக்கு வழக்கு கொடுக்கப்படுகிறதோ அவரோடு கலந்தாலோசிப்பது வழக்கம். கார்த்திகேயன் இப்பொழுதுதான் காரியாலயமே வந்தான். அலைபேசி அழைப்புகள் எதுவும் வராத போது புதிதாக எந்த வழக்கும் வரவில்லை. அதற்கு முன் கயல்விழியும் விக்னேஷும் தானே இருந்தார்கள் எந்த வழக்கும் வரவில்லை. எதற்காக அழைத்திருப்பான் என்று புரியாவிட்டாலும் “சொல்லுங்க சார் என்ன விஷயம்?” சாதாரண குரலில் தான் விக்னேஷ் கேட்டான்.

“உட்காருங்க” என்றவாறு அமர்ந்து கொண்ட கார்த்திகேயன் “எனக்கு கயல்விழியோடு வாழ்க்கையில நடந்த எல்லாமே தெரியும்” என்றான்.

கார்த்திகேயனுக்கு கயல்விழியின் வாழ்க்கையில் நடந்த அனைத்துமே தெரியும் என்பதை அன்று கயல்விழி மயங்கி விழுந்த பொழுது மருத்துவரிடம் கூறும் பொழுது விக்னேஷ் கேட்டுக் கொண்டிருந்தானே. இப்பொழுது அதை தன்னிடம் எதற்காக கூறுகிறான் என்று யோசனையாக அவனைப் பார்த்து விக்னேஷ் “அதுக்கு இப்ப என்ன சார்? அதைப்பற்றி ஏன் என்கிட்ட பேசுறீங்க?” புரியாதவன் போல் கேட்டான்.

“அந்த இன்சிடென்ட்ல இருந்து கயல வெளிய கொண்டு வந்தது நீங்க, அவள அப்படியே விட போறீங்களா?”

“நீங்க இப்ப என்ன சொல்ல வரீங்க?”

“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லது தானே” என்றான் கார்த்திகேயன்.

“நான் இப்படி கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க சார். விழி மேல உங்களுக்கு அப்படி என்ன அக்கறை?” புரியாத பாவனையில் கேட்டான் விக்னேஷ்.

“நானும் அவளும் ஒரே காலேஜ்” அவ்வளவு தான் என்பது போல் விக்னேஷை பார்த்த கார்த்திகேயன் அதற்கு மேல் நீ என்னிடம் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் பதில் வராது என்றவாறு அமர்ந்திருந்தான்.

“நான் எப்படி சார் விழிய கல்யாணம் பண்ணிக்க முடியும்? அவ மேல அனுதாபம் மட்டும் தான் பட முடியும். உதவி பண்ணலாம். கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது சார்” என்றான் விக்னேஷ்.

என்ன சொல்கிறான் இவன்? தான் நினைத்தது தவறோ! இவன் கயல்விழியை காதலிக்கவில்லையா? சந்தேகமாக விக்னேஷை பார்த்தவன் “நீ கயல காதலிக்கிறாய் தானே?” என்று நேரடியாகவே கேட்டான்.

“லவ்வா? நானா? இல்ல சார். நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நான் தான் சொன்னேனே அனுதாபம் மட்டும் தான் படலாம் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது”

இவன் என்ன நோக்கத்தோடு அவளோடு பழகுகிறான். என்ன எதிர்பார்க்கிறான் என்று புரியல. அவனிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று “நீ என்ன சொல்லுற எனக்கு புரியல. கொஞ்சம் தெளிவாக சொல்லுறியா”.என்று கேட்டான்.

“என்ன சார் விழிய பத்தி எல்லாம் தெரியும் என்று சொன்னீங்க” இது தான் நீ விசாரித்த லட்ச்சனமா?என்று கார்த்திகேயனை கிண்டல் செய்த விக்னேஷ் “அவ மாடில இருந்து விழுந்து அவளுக்கு அபோர்ஷன் ஆனது உங்களுக்குத் தெரியுமா?”

“நீயே சொல்லு” என்று கார்த்திகேயன் முறைத்தான்.

“மாடில இருந்து விழுந்ததுல அவளுக்கு இடுப்புல செம்ம அடி இனிமேல் அவளுக்கு குழந்தையே பிறக்காது என்று டாக்டர் சொல்லிட்டாங்க”

ஹமீத் கூறியதில் இந்த தகவல் இருக்கவில்லையே என்ற பகவானையிலேயே “என்ன சொல்லுற நீ” புரியாமல் விக்னேஷை பார்த்தான் கார்த்திகேயன்.

“ஆ சொல்லுறாங்க குலாப்ஜாம் செய்ய சக்கர பாகு செஞ்சா எவனோ பூந்திய போட்டானாம்”

“என்ன உளறுற?”

“விழிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லுகிறேன்”

“குழந்தை பிறக்காதது ஒரு விஷயமா?” கார்த்திகேயன் ஆரம்பிக்கும் பொழுதே குறுக்கிட்டான் விக்னேஷ்

“ஆமா சார் இந்த காலத்துல குழந்தை பிறக்காதது ஒரு விஷயமே இல்ல. காசு இருந்தா வாடகை தாய் மூலம் கூட குழந்தையை ஏற்பாடு பண்ணிக்கலாம். இல்ல குழந்தையை காரணம் காட்டி இரண்டாவதா ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கலாம்” என்று கண் சிமிட்டினான் விக்னேஷ்.

விக்னேஷ் கயல்விழியை காதலிப்பதை மறைக்கிறான் என்று தான் இவ்வளவு நேரமாக கார்த்திகேயன் நினைத்தான் ஆனால் அவன் பேசுவதை வைத்துப் பார்த்தால் அவ்வாறு அவனுக்குத் தோன்றவில்லை.

“என்ன மாதிரியான மனிதன் இவன்? உண்மையிலேயே இவன் கயலை காதலிக்கிறானா?” சந்தேகமாக அவனைப் பார்த்தான் கார்த்திகேயன்.

“ஆனா பாருங்க விழிக்கு இருக்கிற பிரச்சினையே வேற.  அவளால தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. அவளத் தொட்டா அவ செத்துடுவா. அவ ஒரு உசுரோட இருக்குற பொணம் சார்.  ஜவுளி கடை பொம்மையும் அவளும் ஒன்னு” விக்னேஷ் பேசி முடிக்கவில்லை கார்த்திகேயன் அவன் கழுத்தை பிடித்திருந்தான்.

அவன் கையை தட்டி விட்ட விக்னேஷோ “விடுங்க சார் உண்மைய சொன்னா யாரும் ஏத்துக்கிறதில்ல. நீங்க இந்த மாதிரியான பொண்ண கல்யாணம் பண்ணிப்பீங்களா? சொல்லுங்க?” இவரு பண்ண மாட்டாரு. நாங்க மட்டும் உத்தமனா, தியாகியா இருக்கணுமா?” முணுமுணுத்தான் விக்னேஷ்.

கார்த்திகேயனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “நான் பண்ணிப்பேண்டா. நான் என் கயல கல்யாணம் பண்ணிப்பேன். அவளுக்கு நீ பெரிய உதவி செஞ்சிருக்க, நீ அவள காதலிக்கிற, அவ இப்போ இருக்குற நிலைமையை உன்னாலதான் சரியா புரிஞ்சிக்க முடியும், சமாளிக்க முடியும் என்று நினச்சேன் பாரு என்ன சொல்லணும். நீயெல்லாம் என் கயலுக்கு தகுதியானவனே கிடையாது”

“ஏன் சார் வார்த்தைக்கு வார்த்தை என் கயல் என் கயல் என்று சொல்லுறீங்களே நீங்க விழிய லவ் பண்ணுறீங்களா?” புன்சிரிப்போடு கேட்டான் விக்னேஷ்.

“ஆமாடா நான் அவள லவ் பண்ணேன். பண்ணுறேன். பண்ணுவேன். உனக்கு ஏதாவது பிரச்சனையா?”  விக்னேஷை முறைதான் கார்த்திகேயன்.

“எனக்கென்ன சார் பிரச்சினை இருக்க போகுது. நீங்க லவ் பண்றீங்கன்னா நீங்களே அவள கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே, எனக்கு எதுக்கு விட்டுக் கொடுக்குறீங்க” அதே சிரிப்பு மாறவே இல்லை.

கார்த்திகேயனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கயல்விழியிடம் கேட்ட பொழுது அவள் ஏதேதோ காரணங்கள் கூறி சமாளித்து விட்டாள். ஆனால் அவள் மயங்கி விழுந்த அன்று விக்னேஷ் கார்த்திகேயனின் வீட்டுக்கு சென்று இருந்த பொழுது அவனது அறையில் கயல்விழியின் புகைப்படங்களை  பார்த்தான்.

கார்த்திகேயனுக்கும் கயல்விழிக்கும் என்ன உறவு என்றெல்லாம் விக்னேஷ் யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அறை முழுவதும் கயல்விழியின் ஞாபக சின்னங்கள் அங்கங்கே சிதறி கிடக்க கார்த்திகேயன் கயல்விழிக்கு யார் என்பதை தெரிந்து கொண்டான்.

கயல்விழி ஏன் சென்னைக்கு வரமாட்டேன் கார்த்திகேயன் வேலைக்கு சேர மாட்டேன் என்று கூறினாள் என்று என்று விக்னேஷுக்கு இப்பொழுது புரிந்தது. அவளுக்கு நடந்த கொடூரத்தை கார்த்திகேயன் அறிந்துகொள்ள கூடாது என்றும் அவள் நினைக்கிறாள். அது ஏன் என்று விக்னேஷுக்கு புரியவில்லை. ஆனால் அவள் மயக்கத்தில் இருந்து விழித்த பின் தன்னை கட்டிக்கொண்டு அழுதாலும், கார்த்திகேயனை பார்த்த நொடியே சட்டு என்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாள்.

பழைய ஞாபகங்கள் வந்து அவள் அல்லல்படும் பொழுது அவளை மீட்டெடுப்பது எவ்வளவு கடினம் என்று விக்னேஷ் ஒருவனுக்குத் தான் தெரியும். ஆனால் காமினியை நேரில் பார்த்த பின்பும் கார்த்திகேயனை பார்த்தவள் தன்னை சட்டென்று மீட்டுக் கொண்டிருந்தாள். அதுவே அவளுக்குள் வந்திருந்து பெரியதொரு மாற்றம்.

காமினியை பார்த்து மயங்கியவள் பழைய ஞாபகங்களால் தாக்கப்பட்ட இருப்பதினால் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும், விடுமுறை வேண்டும் என்று கார்த்திகேயனை மிரட்டி விட்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததில் கார்த்திகேயன் அலைபேசி அழைப்பு கூட விடுக்கவில்லை என்று புலம்பினாள் “அவனுக்கு கொஞ்சம் கூட என் மீது அக்கறை இல்லை. எனக்கு என்னவாயிற்று என்று தேடிப் பார்க்க மாட்டானா? காதலுக்கும் பொழுது தான் அப்படி இருந்தான். இப்பொழுதும் அப்படியே இருக்கிறான். அவன் கொஞ்சம் கூட மாறவில்லை. என்று புலம்பியவாறு கார்த்திகேயனை திட்டி தீர்த்தாள்.

கார்த்திகேயனும் கயல்விழியும் காதலித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக கயல்விழி சந்தோஷத்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். கயல்விழி மயங்கி விழுந்த பொழுது கார்த்திகேயன் துடித்து துடிப்பு காதலால் இன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? கயல்விழியின் மனதிலும் கார்த்திகேயன் மீது காதல் இருக்கிறது ஆனால் அதை அவள் ஏன் வெளிப்படையாக கூறாமல் இருக்கின்றாள் என்று புரியவில்லை. எல்லாவற்றையும் விக்னேஷ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய எதுவுமே பேசவில்லை.

கார்த்திகேயன் தனக்கு அலைபேசி அழைப்பு விடுக்காமல் விக்னேஷ் அழைத்து பேசியதில் கோபமடைந்த கயல்விழி காரியாலயம் கிளம்பி வந்திருந்தாள்.

வந்தவள் திரு காமினியை பற்றி பேசியதும் விக்னேஷிடம் எவ்வாறு நடந்து கொண்டாள் என்றும் பார்த்தவன், கார்த்திகேயன் வந்த பொழுது எவ்வாறு நடந்து கொண்டாள் என்றும் பார்த்திருந்தால் தானே அவளது நடத்தையில், பேச்சில், செயலில் வந்த மாற்றங்களை கவனித்த பின்பு தான் கயல்விழியை முற்றாக மீட்டெடுக்க முடியும் கார்த்திகேயன் ஒருவனால் மட்டும் என்று விக்னேஷிற்கே புரிந்தது.

என்ன காரணத்துக்காக இருவரும் பிரிந்தார்கள் என்று தெரியாமல் கயல்விழியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறவும் முடியாது. உண்மைகளை அறிந்த பின்னும் கார்த்திகேயன் கயல்விழியை ஏற்க மறுத்து விட்டால், கயல்விழி மேலும் காயப்படுவது உறுதி. கார்த்திகேயனுக்கு உண்மை தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அவன் ஒரே மாதிரியாகத்தான் இருப்பான் என்று கயல்விழி உண்மையை மறைக்கிறாளோ? உண்மையில் கார்த்திகேயன் என்ன நினைக்கிறான் என்று அறியவே விக்னேஷ் அவ்வாறு பேசினான்.

என்ன செய்வது என்று விக்னேஷ் யோசித்துக் கொண்டு இருந்த பொழுது தான் கார்த்திகேயன் விக்னேஷை பேசலாம் என்று அழைத்து தனக்கு கயல்விழியை பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரியும் என்று கூறினான்.

கயல்விழியை பற்றிய உண்மைகளை அறிந்ததால் தானே கார்த்திகேயன் கயல்விழி மயங்கிய பொழுது அவ்வளவு துடித்தான் என்று விக்னேஷ் எண்ணுகையில் தான் கார்த்திகேயன் ஏன் கயல்விழியும் விக்னேஷும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கேட்டிருந்தான்.

விக்னேஷ் கயல்விழியை காதலிக்கிறான் தான். கார்த்திகேயனை போல் அவனும் கயல்விழியின் நலனில் தான் அக்கறை செலுத்துகிறான். அவனோடு கயல்விழி இருப்பதைவிட கார்த்திகேயனோடு இருந்தால் அவள் தன்னை வெகு சீக்கிரத்தில் மீட்டுக் கொள்வதை கண்கூடாக பார்த்ததனால் அதை கார்த்திகேயனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று தான் கண்டபடி பேசினான். கார்த்திகேயனிடம் தான் கயல்விழியை காதலிப்பதாக கூறி விட்டு கயல்விழியை திருமணம் செய்து கொள்ளும்படி காரண காரியங்கள் அவனிடம் கூறினால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். தான் காதலிப்பதை கூறாது இவ்வாறு பேசினால் தான் கார்த்திகேயனின் மனதில் இருப்பது வெளியே வரும் என்று நினைத்தான். அவன் நினைத்த படியே கார்த்திகேயன் கயல்விழியை காதலிப்பதை ஒத்துக் கொண்டிருந்தான்.

விக்னேஷ் சொல்லுவதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயனோ “நீ இப்ப என்ன சொல்ல வர? எனக்கு ஒண்ணுமே புரியல” என்றான்.

என்ன இவன் கயல்விழிக்கு உதவியும் செய்கிறான். காதலிப்பது போலும் இருக்கிறது. ஆனால் கண்டபடியும் பேசுகிறானே என்று கார்த்திகேயன் குழம்பி போய் தான் கேட்டான்.

“நான் விழிய லவ் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும். விழிய லவ் பண்ற நீங்க அவளோட நலத்த பத்தி யோசிக்கும் போது நான் அவளோட நலத்தை பார்த்து யோசிக்க மாட்டேனா?”

தான் கயல்விழியை காதலிப்பதை மறைக்க வேண்டும் என்றெல்லாம் விக்னேஷ் நினைக்கவில்லை. அவன் கயல்விழியை காதலிக்கிறான். அவள் நலனில் அக்கறை செலுத்துகிறான். அதனால் அவளுக்கு எது நல்லதோ அதைத்தான் அவன் செய்வான். அதை கார்த்திகேயனுக்கு உணர்த்தவே அவன் கயல்விழியை காதலிப்பதாக கூறினான்.

“அவ மயக்கம் போட்டு விழுந்தப்ப உங்க வீட்டுக்கு வந்தப்போதான் நீங்க அவள லவ் பண்றத தெரிஞ்சுக்கிட்டேன். அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி இருக்கீங்க. ஏதோ காரணத்துக்காக அவ சந்தோஷ கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கா. நான் அவளுக்கு உதவி பண்ணதால இதெல்லாம் அவளோட கடந்த காலம் நான் அவளோட நிகழ்காலம் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க. உங்க காதல விட்டுக் கொடுக்க முன் வந்தீங்க. அப்ப எதுக்கு சார் குடியிருப்புக்கு வந்து அரை மணித்தியாலத்துக்கும் மேலாக வண்டியில காத்துகிட்டு இருந்தீங்க? மனசுல காதல் இல்லன்னா ஒரு நண்பனா சாதாரணமாக வீட்டுக்கு வர வேண்டியதுதானே. இல்ல பாஸா கூட வந்து பார்த்துட்டு போய் இருக்கலாமே”

தான் வந்தது இவன் பார்த்தானா கொஞ்சம் அதிர்ச்சியாக கார்த்திகேயன் விக்னேஷை நோக்க,

“நான் உங்ககிட்ட வந்து இல்ல நீங்க தான் விழிய கல்யாணம் பண்ணிக்கணும். விழி உங்களைத்தான் லவ் பண்ணுறான்னு சொல்லி ஆகிவ் பண்ணா நீங்க கண்டிப்பா ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டீங்கன்னு. எனக்கு தெரியும் அதனால தான் நான் கண்டபடி பேசினேன். விழிய யாரு லவ் பண்ணுறாங்க எங்குறது முக்கியமில்லை சார். விழி யாரை லவ் பண்ணுறங்குறது தான் முக்கியம். எனக்கு தெரிஞ்சி அவ உங்களைத்தான் லவ் பண்ணுறா. உங்கள மட்டும் தான் லவ் பண்ணுறா. எதோ ஒரு காரணத்துக்காக அத சொல்லாம மறைக்குறா”

“அது யேன்னு எனக்கு தெரியும்” கயல்விழியை நினைத்து கவலையாக சொன்னான் கார்த்திகேயன்.  

“அவளுக்கு உங்க சப்போர்ட் ரொம்ப முக்கியம். பெரிய கிரிமினல் லாயராக வேண்டியவ. பாமிலி லாயராகிட்டா. அவளை உங்களால மட்டும் தான் மாத்த முடியும். உங்க கூட இருந்தா தான் அவ சரியாவா. சீக்கிரம் கல்யாணம் பண்ணி அவளை உங்க கூடயே வச்சிக்கோங்க. அவளுக்கு வேற எந்த பிரச்சினையும் இல்லை” சற்றுமுன் தனக்கு கூறியான் அல்லவா. கடைசி வாக்கியத்தை கூறிவிட்டு கண்சிமிட்டி சிரித்தான் விக்னேஷ்.

“அவள் ஒரு பிடிவாதக்காரி கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டா” என்ற கார்த்திகேயன் எதனால் இருவரும் பிரிந்தார்கள் என்று விக்னேஷிடம் கூறலானான்.

மறக்க தெரியவில்லை எனது காதலை

மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை

சிறகுகள் முளைக்கும் முன்பே

விலங்கினை பூட்டிக்கொண்டேன் என் தேவியே

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்

உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்

உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்

உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்

மௌனங்கள் பரிசாகத் தந்தேன்

சொந்தம் ஆகாது சொல்லாத நேசம்

இதயம் சேராது இல்லாத பாசம்

காதல் மகாராணியே

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை

உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை

உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை

கடல் நீளம் கூட கரிந்தோடிப் போகும்

என் அன்பில் நிறம் மாற்றம் இல்லை

தேகம் தீயோடு வேகும்போதும்

தாகம் என் தாகம் தீர்வதில்லை

ஆசை அழியாதடி

“கூப்பிடறது காதுல விழலையா ரெண்டு பேரும் உள்ள என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றவாறே வந்து கதவை திறந்தாள் கயல்விழி. விக்னேஷும் கார்த்திகேயனும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து “வேலை பார்க்கிறீங்களா? இல்ல அரட்டை அடிக்கிறீங்களா?”

“வேலை தான் பாக்குறோம்” என்று இருவருமே ஒன்று சேர கூற, கார்த்திகேயனை பார்க்க டி.எஸ்.பி வந்திருப்பதாக கூறினாள்.

வெற்றிமாறனின் வருகையால் இருவரின் பேச்சும் தடைப்பட்டது.

வெற்றிமாறன் எனும் மணிமாறன் தன்னை பார்க்க எதற்காக வந்திருப்பான் என் எண்ணியவாறு வெளியே வர வெற்றிமாறன் மாடிக்கு வந்திருந்தான். பொதுவாக அவனை சந்திக்க வருபவர்களை மேல் மாடிக்கு அனுமதிப்பதில்லை. ஆனால் இவனோ ஒரு போலீஸ் வரக்கூடாது என்றும் சொல்ல முடியாது. சைகையாலேயே தனது இருக்கைக்கு எதிரே இருக்கும் இருக்கையில் அமரும்படி கூறியவாறு தனது இருக்கையில் அமர்ந்தான் கார்த்திகேயன்.

“சொல்லுங்க சார் என்ன விஷயமா என்ன பாக்க வந்தீங்க?” வெற்றிமாறனை பார்த்து மிக மிக சாதாரணமாக கேட்டான் கார்த்திகேயன்.

ஆனால் பார்வையோ “என்ன நாம இவன பத்தி விசாரிக்க சொன்னா, இவன் நம்ம இடத்துக்கு வந்திருக்கிறான்?” என்று இருந்தது.

“காமினி கேஸ் விஷயமாகத்தான் வந்தேன்?” என்றவன் கார்த்திகேயன் மீது ஆராய்ச்சி பார்வை வீசினான்.

தினந்தோறும் ஊடகங்களில் வலம் வரும் கார்த்திகேயனை பற்றி வெற்றிமாறனுக்கு தெரியாதா? புகழுக்காக அலைபவன் பணத்திற்காக அலைய மாட்டானா? இவன் எதற்காக காமினியின் வழக்கை எடுத்திருப்பான்? எதிர் தரப்புக்கு சாட்சிகளை விற்று விடுவானா? இவனால் காமினிக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமா என்றெல்லாம் வெற்றிமாறனின் எண்ணங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் அவன் கேள்வியோ “காமினியின் வழக்கை வாதாட போகும் வக்கீல் நீங்கதானே? அந்த மர்ம ஆசாமிய பத்தி ஏதாவது தகவல் கிடைத்ததா? உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சதா என்று விசாரிச்சிட்டு போகலாம் என்று தான் வந்தேன்” என்றான்.

இல்லை இவன் அதற்காக வரவில்லை. காமினியை அறைக்குள் அமர வைத்தவனின் போட்டோவை சீசீடிவியிலிருந்து எடுத்து போலீஸ் டேட்டாவில் போட்டு கண்டுபிடிக்க முடியாதா? போலீஸால் கண்டுபிடிக்க முடியாத ஒருவனை என்னிடம் வந்து விசாரிப்பது என்றால் இவன் அதற்காக வரவில்லை. தன்னை விசாரிக்க வந்திருக்கிறான் என்று கார்த்திகேயன் புரிந்து கொண்டான்.

“அவன் ஒட்டு தாடியும் விக்கும் வச்சிருப்பானோனு எனக்கு டவுட்டா இருக்கு சார். அதனால தான் அவன கண்டுபிடிக்க முடியலன்னு தோணுது. உங்க டேட்டாவில் எதுவும் கிடைக்கலையா?”

அதனால் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. கார்த்திகேயன் எதிராளிக்கு உதவி செய்கிறானா? உண்மையில் காமினிக்கு உதவி செய்கின்றானா? என்று தெரிந்துகொள்ள வேண்டியே இந்த கேள்வியை வெற்றிமாறன் கேட்டிருந்தான். 

“டோன்ட் ஒர்ரி மிஸ்டர் கார்த்திகேயன் அவன கூடிய சீக்கிரம் நான் கண்டு பிடிச்சு கொடுக்கிறேன்” கைகுலுக்க கையை நீட்டினான் வெற்றிமாறன். அவன் தேடி வந்த பதில் தான் கிடைத்துவிட்டதே.

“கூடிய சீக்கிரம் மீண்டும் சந்திக்கலாம்” என்றான் கார்த்திகேயன்.

Advertisement