Advertisement

அத்தியாயம் 10

சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான்.

“கயல் உனக்கு டயடா இருக்கா? வா மேல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்”

“உன் வீட்டுக்கா? நான் நல்லாத்தான் இருக்கேன். வேலைய பார்க்கலாம்” அவனை கண்டு கொள்ளவே இல்லை கயல்விழி.

அவள் தலையைப் பிடித்தால் போதும் “தலை வலிக்கிறதா? மாத்திரை வேண்டுமா?”  என்று பதறுவான்.

துப்பட்டாவை தூக்கி கழுத்தில் போட்டால் போதும் “குளிருதா? ஏசியை குறைக்கவா?” என்று கேட்பான்.

நெற்றியை தடவினால் “வியர்க்குதா? குளிர் பானம் ஏதாவது கொண்டு வருவா?” என்று கேட்பான்.

சாப்பிட போனால் ஊட்டி விடாத குறைதான்.

“ஏன் இப்படி பண்ணுற?” கயல்விழிதான் அவனை முறைக்க ஆரம்பித்திருந்தாள்.

அழகே உன் முகத்தில்

ஏன் முத்தான வேர்வை

அந்த முகிலை எடுத்து

முகத்தை துடைத்து விடவா

அந்த சுகமான நாட்கள்

இனி தினம் தோறும் வேண்டும்

உன் மடியில் இருந்து

இரவை ரசிக்க வரவா

அடி உன்னை காணத்தான்

நான் கண்கள் வாங்கினேன்

உன்னோட சேரத்தான்

என் உயிரை தாங்கினேன்

கண்ணோடு கண்ணும்

ஒரு நெஞ்சோடு நெஞ்சும்

வந்து பழகும் பொழுதில்

இடையில் ஏது வார்த்தை

தொலை தூரம் நீயும்

தொட முடியாமல் நானும்

என்று தவிக்கும் பொழுதில்

இனிக்கவில்லை வாழ்க்கை

என் நெஞ்சின் ஓசைகள்

உன் காதில் கேட்குதா

நான் தூவும் பூவிதை

உன் நெஞ்சில் பூக்குதா

வெண்ணிலவே வெண்ணிலவே

நல்ல நாள் பார்த்து வா

உன்னுடைய கூந்தலிலே

புது பூச்சூடவா

தொலை தூரம் நின்றும் நீ

ஏன் வெட்கம் கொள்கிறாய்

உன் அழகு விழிகளால்

ஏன் என்னை கொல்கிறாய்

“என்னாச்சு இவருக்கு” என்று விக்னேஷும் திருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

ஆனால் விக்னேஷ் கயல்விழியிடம் கேட்டிருந்தான்.

“நாம ரெண்டு பேரும் ஒரே ஊரு இல்லையா அதனால கூட இருக்கலாம்” என்று சொல்லி சமாளிக்க பார்த்தாள்.

“நான் கூடத்தான் கோயம்புத்தூர்காரன் என்ன மட்டும் முறைக்கிறாரு” நீ சொல்லுறது நம்பும்படியாக இல்லையே என்று சந்தேகமாக பார்த்தான் விக்னேஷ்.

“ஆ…  நாம படிச்ச காலேஜ்ல தான் சார் படிச்சாரு என்று ராதா சொன்னா  நம்ம ஜூனியர் என்று ஓவரா பண்ணுறாரோ என்னமோ” வேறு என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை போல் கயல்விழி விக்னேஷை பார்த்த பார்வையில் அப்படித்தான் இருக்கும் என்று அவனே நம்பி விட்டான்.

அன்று காலையிலே கார்த்திகேயன் ஒரு அரசியல்வாதியின் வழக்கை வாதாட நீதிமன்றம் சென்றிருந்தான். இப்பொழுதெல்லாம் கார்த்திகேயன் வழக்குகளை வாதாடாவிட்டாலும் அவர் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் விக்னேஷை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

கயல்விழியை அழைத்து செல்லாமல் தன்னை அழைத்து செல்வதாக விக்னேஷ் கிண்டல் செய்ய, கயல்விழிக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் எதுவும் பேசவில்லை.

காரியாலயத்தில் திருவோடு கயல்விழி வேலைகளை அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியம் சாப்பிடலாம் என்று திரு அழைக்க கைக்கடிகாரத்தை பார்த்தவளுக்கு கார்த்திகேயன் இல்லாமல் பசிக்கக் கூட இல்லை. 

“நீங்க சாப்பிடுங்க திரு” என்று இவள் ஆரம்பிக்க

“வேற வினையே வேணாம். உங்கள சாப்பிட வைக்க சொல்லி சார் சொல்லிட்டு போனதும் இல்லாம விக்னேஷ் சார் வேற சொல்லிட்டு போய் இருக்காரு. வந்த உடனே என்னையைத்தான் கேட்பாங்க” அவள் மேசையை விட்டு நகராது அடம்பிடித்தான் திரு.

கயல்விழிக்கு சிரிப்பாகவும் இருந்தது. கார்த்திகேயனையும், விக்னேஷையும் நினைத்து கோபமாகவும் இருந்தது. வேலை இருந்ததால் அவர்களின் ஞாபகம் வராமல் நேரம் சென்றது என்று எண்ணிக் கொண்டாள்.

கார்த்திகேயனின் தொலைபேசி அடிக்கவே திரு ஓடிச் சென்று எடுத்தான். “என்னமா சொல்லு? அப்படியா? இதோ மேடத்த உடனே அனுப்பி வைக்கிறேன்” என்ற திரு தொலைபேசியை வைத்தவாறே “மேடம் சீக்கிரம் கீழ போங்க. கேஸ் கொடுக்க ஒரு பொண்ணு வந்திருக்கா” என்றான்.

பெண் என்பதால் திரு தன்னை அனுப்புகிறான் என்று விஷயத்தைக் கேட்காமல் கயல்விழியும் கீழ் மாடியை நோக்கி விரைந்தாள்.

கயல்விழி கீழே வரும் பொழுதே வரவேற்பில் நிற்கும் பெண் இவளை மிரட்ச்சியாக பார்த்தாள். அதை கண்டு கொள்ளவோ, ஆராய்ச்சி செய்யவோ நேரமில்லாமல் ஜுனியர் வக்கீல் லதா “இந்த ரூம் மேடம்” என்று அவளை வழி நடாத்திச் செல்ல, அவளை பின் தொடர்ந்தாள் கயல்விழி.

உள்ளே ஒரு பெண் போர்வையால் தன்னை போர்த்தியவாறு அமர்ந்திருந்தாள். உதடு வீங்கின நிலையில் முகத்தில் காயங்களோடு இருந்தாள்.

“என்னாச்சு இந்த பெண்ணுக்கு ஆக்சிடென்ட் ஏதாவது இருக்குமோ? ஹாஸ்பிடல் போகாம நேரா இங்க வந்து இருக்கா?” என்ற எண்ணத்தோடு அவள் அருகே சென்ற கயல்விழி “முதல் ஹாஸ்பிடல் போலாம் வாம்மா” என்றாள்.

“கார்த்திகேயன் சார் எங்கே? அவர வர சொல்லுங்க. அப்புறம் நான் ஹாஸ்பிடல் போக வாரேன்” என்று அழுதவாறு அடம்பிடித்தாள்.

கயல்விழி பேசிப் பார்த்தாள் அவள் மசியவில்லை ஆதலால் “சரி சொல்லு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“என் பெயர் காமினி சினிமால வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தேன் பல போட்டோ சூட் எடுத்து இருக்கேன். ஆனா சரியான வாய்ப்பு கிடைக்கல. சமீப காலமா இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் பண்ணி போடுவேன். 

கிட்டத்தட்ட ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அதனாலேயே என் பிரண்ட்ஸும் பேமிலியும் ஒரு யூட்யூப் சேனல் ரன் பண்ண சொல்லி சொன்னாங்க. நானும் ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது.

ஒரு நாள் இன்ஸ்டாகிராம்ல சண்முகம் என்ற ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவனும் ஒரு டைரக்டராக முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கிறதாகவும், பல கம்பனிகளுக்கு ஏறி இறங்கி சோர்ந்து போய் இருப்பதாகவும் சொன்னவன், அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் சொன்னான். 

ஹீரோ, ஹீரோயின் இன்னும் மத்த ஆர்ட்டிஸ்ட்டுகான ஆடிஷன் மவுண்ட் ரோட்ல இருக்குற அன்பு மேன்ஷன்ல காலை பத்து மணிக்கு நேத்து நடக்கிறதாகவும், விருப்பம் இருந்தா கலந்து கொள்ளுமாறும் மெசேஜ் பண்ணி இருந்தான்.

நேத்து போகும் போது எந்த ரூம்ல ஆடிஷன் நடக்குது என்று கேட்ட போது ரூம் நம்பர் மெசேஜ் பண்ணி இருந்தான். நான் அந்த ரூம் கிட்ட போகும் போது ஒருத்தன் பக்கத்து ரூமில் இருந்து என்ன தடுத்து “ஆடிஷனுக்கா வந்தீங்க இந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க” என்று சொன்னான்.

“ஏன்மா யாரோ ஒருத்தன் சொன்னான்னு சொல்லி நீ போக வேண்டிய ரூமுக்கு போகாம வேறொரு ரூமுக்கு போய் இருக்க, என்ன நடந்தது” சட்டென்று குறுக்கிட்டாள் கயல்விழி. அப்பொழுது கூட காமினிக்கு கூட்டு பலாத்காரம் நடந்திருக்கும் என்று நினைக்கவில்லை.

“இல்ல ரூம் கதவு திறந்தேதான் இருந்தது. அங்க பசங்க பொண்ணுன்னு ஆடிஷனுக்கு வந்தவங்க உட்கார்ந்துகிட்டு தான் இருந்தாங்க” என்றாள் காமினி.

“அப்புறம் என்ன ஆச்சு?” ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் காமினியை அவர்கள் அடித்திருப்பார்கள் என்று தான் கயல்விழி நினைத்தாள்.

“ஆட்களும் குறைஞ்சிகிட்டேவந்தது அப்போ குடிக்க கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்தாங்க நானும் குடிச்சேன் அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல. மயங்கிட்டேன்”

“என்னம்மா சொல்லுற? கயல்விழிக்கு ஏதோ புரிவது போல் இருக்க, அதற்குள் காமினி அவள் போர்த்தியிருந்த துணியை விளக்கினாள். அவள் உடல் முழுவதும் காயங்கள்.  அவள் வேறெந்த ஆடையுமே அணிந்திருக்கவில்லை. போர்வையைக் கொண்டுதான் தன்னை மறைத்திருந்தாள். அதை பார்த்து பழைய ஞாபகங்களால் தாக்கப்பட்ட கயல்விழி அங்கேயே மயங்கி சரிந்தாள்.

“கயல்” என்று கத்தியவாறே மயங்கி சாரியும் கயல்விழியை கைகளில் ஏந்தி இருந்தான் கார்த்திகேயன்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயன் வண்டியை இயக்கியவாறு தனக்கு வந்த அலைபேசி அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் ஒரு செயலியின் மூலம் கேட்கலானான். காதில் ஹெட்போனை மாட்டி இருந்ததால் விக்னேஷுக்கு அவன் என்ன கேட்கிறான் என்று தெரியவில்லை.

திரு அனுப்பிய குறுஞ்செய்தியை கேட்டு உடனே அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து என்ன? ஏது? என்று விசாரித்த கார்த்திகேயன் அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

திருவைச் சென்று காமினியிடம் கயல்விழியை பேசவிடாமல் வெளியே அழைத்து வருமாறு கூற கூட சுயநினைவு இல்லாமல்  வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்த கார்த்திகேயன் அறைக்குள் நுழைய அவன் கைகளிலே மயங்கி சரிந்தாள் கயல்விழி.

அவள் மயங்கியதை பார்த்து வக்கீல் லதாவும் காமினியும் அதிர்ந்து விழிக்க, கூட வந்த விக்னேஷை பார்த்து காமினியின் வழக்கை கவனிக்குமாறு கூறியவாறே கயல்விழியை தூக்கிக் கொண்டு மாடியில் இருக்கும் தனது வீட்டுக்கு விரைந்தான் கார்த்திகேயன்.

என்ன நடந்தது என்று புரியாமல் நின்றிருந்த விக்னேஷ் கயல்விழிக்கு ஒன்றென்றால் சும்மா இருப்பானா? கார்த்திகேயன் சொல்வதை எல்லாம் கேளாமல் அவன் பின்னால் ஓடி வந்தான்.

ஆனால் கார்த்திகேயனோ அவன் வீட்டுக்குள் சென்று மறைய கடவுச்சொல்லை கார்த்திகேயனின் கதவு கேட்க, விக்னேஷால் கார்த்திகேயனின் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

தட்டி தட்டி பார்த்தவன் பொறுமை இழந்து கீழ் தளத்துக்குச் சென்றான்.

வீட்டுக்குள் வந்து கார்த்திகேயன் கயல்விழியை எழுப்ப முயற்சி செய்து தோற்றுப் போனவனாக மருத்துவரை அழைத்தான்.

கண்ணோடும் நெஞ்சோடும்

உயிரால் உன்னை

மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில்

வாழ்ந்தேனே

மதி பறிக்கும் மதி முகமே

உன் ஒலி அலை தன்னில்

நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும்

அங்கே நான் வருவேனே

மனசெல்லாம்

நீதான் நீதானே ஓஹோ

நீ தூங்கும் நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ

கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ

என் உயிரே

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம்

புண்ணாய் போகுமே

ஒரு வக்கீலாக விக்னேஷுக்கும் பொறுப்பு இருக்கிறதே, காமினியை பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டாலும் லதாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன் கயல்விழிக்கு என்ன ஆச்சோ என்று தான் சிந்தித்துக் கொண்டு இருந்தான். மருத்துவர் வரவும் அவரோடு சேர்ந்து கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்தான்.

கார்த்திகேயனுக்கு விக்னேஷின் சிந்தனையெல்லாம் இல்லை கயல்விழியை பரிசோதித்த மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அச்சத்தில் இருந்தான்.

விக்னேஷ் கயல்விழியின் நிலை பற்றி கூறும் முன்பாகவே, கார்த்திகேயன் மருத்துவரிடம் எடுத்துக் கூற, அதிர்ச்சியாக பார்த்திருந்தான் விக்னேஷ்.

“அதிர்ச்சியில் தான் மயங்கி இருக்காங்க பயப்படுறதுக்கு ஒன்னும். இல்ல ஊசி போட்டு இருக்கேன். கண் முழிச்சா இந்த மருந்த கொடுங்க” என்று மருத்துவர் துண்டு சீட்டில் எதையோ எழுதிக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்டு விக்னேஷ் விரைந்திருக்க கார்த்திகேயன் கயல்விழியை விட்டு நகராமல் அமர்ந்திருந்தான்.

“என்ன மன்னிச்சிடு கயல். என்ன மன்னிச்சிடு. உனக்கு என்ன நடந்தது என்று தெரிஞ்சும் நான் எந்த ஆக்ஷனும் எடுக்காம அமைதியா இருந்துட்டேன். என்ன மன்னிச்சிடு. பொலிட்டீசியன் செல்லப்பாவோட கேஸும் இதே கேஸ். அதனாலதான் உன்னை கூட்டிட்டு போகல நான் உன்னை விட்டுட்டு போனதால இங்க இங்க இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” அவளிடம் மன்னிப்பு வேண்டி நின்றான்.

கண்ணுக்குள்ளே

உன்னை வைத்தேன்

கண்ணம்மா

நான் கண்கள் மூட

மாட்டேனடி

செல்லம்மா

நான் கண்கள் மூட

மாட்டேனடி

செல்லம்மா

அடி நீதான்

என் சந்தோசம்

பூவெல்லாம்

உன் வாசம்

நீ பேசும்

பேச்செல்லாம்

நான் கேட்கும்

சங்கீதம்

உன் புன்னகை

நான் சேமிக்கின்ற

செல்வமடி

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

கண்கள் கலங்கி கார்த்திகேயன் கயல்விழியை வெறித்தவாறு அமர்ந்திருக்கையில் ஆஸ்ரேலியாவிலிருந்து ஹமீத் அழைத்தான். 

“சொல்லு ஹமீத்” ஒரு வித பதட்டத்தோடு கார்த்திகேயன் ஹமீத் என்ன சொல்கிறான் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆஸ்ரேலியா வந்து சேர்ந்த கயல்விழியை மகிச்சியோடு வரவேற்றான் சந்தோஷ்.

ஒரு காலனியில் வீடு தான். கீழே வாசல், சமயலறையோடு ஒரு அறையும், மேலே ஒரு அறையும் சின்னதாக லைப்ரரியும் இருந்தது. பின்னாடி சின்ன முற்றம். முன்னாடி வண்டி நிறுத்த இடம் கூட இருந்தது.

கயல்விழி வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு வீடு நல்லா இருக்கு என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது வாட்டசாட்டமாக ஒருவன் வீட்டுக்குள் வந்து நின்றான்.

யார் இது அனுமதியில்லாமல் வந்தது என்று கயல்விழி சந்தோஷை ஏறிட “ஹாய் கயல் ட்ராவல் எல்லாம் எப்படி இருந்தது? அப்பா தவறிட்டார் என்ற கவலை வேண்டாம். நாங்க இருக்கோம் இல்ல” சினேகமாக புன்னகைத்தான்.

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசினான். தமிழ் தெரியவில்லையா? எந்த நாட்டுக்காரனாக இருக்கும் என்ற யோசனையில் யார் என்று சந்தோஷிடம் கண்களால் கேட்டவாறே அவனை பார்த்து புன்னகைத்தாள் கயல்விழி.

“இது என் பிரென்ட். பேரு ஹிமேஷ். நானும் இவனும் சேர்ந்து தான் வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கோம். மூணு வருஷத்துக்கு பணம் கொடுத்துட்டதால ஒன்னும் பண்ண முடியல. வேற வீடும் இப்போதைக்கு பார்க்க முடியாது. இவன அட்ஜர்ஸ்ட் பண்ணிட்டு தான் ஆகணும்” என்றான் சந்தோஷ்.

“உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே. பிரச்சினைனா சொல்லுங்க நான் வேற இடம் பார்க்குறேன்” என்றான் ஹிமேஷ்.

அவன் சொன்னாலும் அது இலகுவான காரியமில்லை. பணமும் இல்லை என்று வரும் வழியில் சந்தோஷ் கூறிய தகவல்களை வைத்து புரிந்து கொண்ட கயல்விழி “ஒன்னும் பிரச்சினை இல்லையென்றாள்”

தங்களுக்கு திடிரென்று திருமணமானத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் கால அவகாசம் தேவை. அதனால் கயல்விழியை கீழே உள்ள அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறிய சந்தோஷ் ஹிமேஷோடு மேலே உள்ள அறையில் தங்கி கொண்டான்.

கயல்விழிக்கும் அது தான் சரி என்று தோன்றியது. அவளும் சட்டென்று கார்த்திகேயனை மறந்து சந்தோஷை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லையே.

மூவரும் ஒன்றாக இருக்கும் பொழுது சந்தோஷ் கயல்விழியிடம் தமிழில் பேசுவதும், ஹிமேஷிடம் ஹிந்தியில் பேசுவதுமாக இருக்க கயல்விழிக்கும் ஹிந்தி தெரியவில்லை ஹிமேஷுக்கு தமிழ் தெரியவில்லை. ஹிமேஷ் குற்றம் சொல்லா விடினும் அவர்கள் சிரிக்கும் பொழுது ஏதோ தன்னைப் பார்த்து சிரிப்பது போலவே கயல்விழிக்கு தோன்றும். இரு ஆண்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பெண் என்பதினால் தனக்கு அவ்வாறு தோன்றுவதாக எண்ணிக் கொள்வாள் கயல்விழி.

மருத்துவனாக சந்தோஷுக்கு காலையில் இருந்து மாலை வரையும் ஹிமேஷுக்கு இரவிலும் தான் மருத்துவமனையில் வேலை. அதனால் சந்தோஷ் காலையில் கிளம்பி சென்று விட,  ஹிமேஷ் மாலையில் தான் செல்வான்.

கணவனான சந்தோஷை அறிந்துகொள்வதை விட கயல்விழி ஹிமேஷை அறிந்துகொள்ளலானாள்.

கயல்விழி கல்லூரி படிப்பை முடித்து விட்டு வந்திருந்தமையால் மேற்படிப்பை இங்கே தொடங்கலாமென்று சந்தோஷை கேட்டிருக்க, அலைபேசியில் இருந்து கண்களை அகற்றாமலையே “நான் தான் காலையிலையே ஹாஸ்பிடல் போறேன். நீ ஹிமேஷ் கூட போயேன்” என்றான்.

அப்பொழுது கூட கயல்விழி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“எனக்கொண்ணும் பிரச்சினை இல்லை கயல். நீங்க என்ன படிக்கணும்னு சொல்லுங்க. எங்க பக்கத்துல எங்க காலேஜ் இருக்குன்னு பார்க்கலாம்” என்றான் ஹிமேஷ்.

தேடிப் பார்த்ததில் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் கயல்விழியால் கல்லூரியில் சேர முடியும் என்பது தெரிய வந்தது. அதனால் அவளது பொழுதுகள் இவனோடு தான் கழியலானது. காலை உணவு, மதிய உணவு சமைப்பது என்று அவன் இவளுக்கு உதவலானான். பன்மையில் பேசியவன் சட்டென்று ஒருமையில் பேசியது கூட கயல்விழி சந்தேகத்தை உண்டு பண்ணவில்லை. தொட்டுப் பேசவும் ஆரம்பித்திருந்தான் ஒரு மருத்துவன் அது அவனுக்கு பழக்கப்பட்டது அதனால் அதை கூட கயல்விழி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சந்தோஷுக்கு கயல்விழியின் மீதோ அல்லது ஹிமேஷின் மீதோ சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சந்தோஷுக்கு இருவர் மீதும் எந்த சந்தேகமும் வரவில்லை.

ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட சந்தோஷ் வீட்டில் இருப்பதில்லை. வெளியே வேலை இருப்பதாக சென்று விடுவான். கயல்விழியை அழைத்து செல்லுமாறு ஹிமேஷும் கூறுவதில்லை. தன்னை அழைத்து செல்லுமாறு கயல்வழியால் கூறவும் முடியவில்லை. அவனோடு செல்லும் அளவிற்கு இவள் நெருங்கி பழகவும் இல்லை. செல்லவும் மனம் இல்லை.

சந்தோஷுக்கு தன்னை பிடிக்கவில்லையா? என்று கயல்விழியால் கூற முடியவில்லை. வீட்டில் இருக்கும் பொழுது இரவில் இருவரும் ஒன்றாகத்தான் உணவு உண்ணுவார்கள். தொலைக்காட்சி பார்ப்பார்கள் பொதுவான விஷயங்களை பேசுவார்கள். என்ன ஒன்று ஹிமேஷை போல் சந்தோஷ் நட்பாக பழகவில்லை ஏதோ ஒரு குறை, இலை மறை காயாக இருந்தது.

பார்க்கிறவர்களுக்கு கயல்விழியின் கணவன் சந்தோஷா? அல்லது ஹிமேஷா? என்று குழப்பம் கூட வரும். பெரிதாக எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் கயல்விழியின் வாழ்க்கை இவ்வாறு தான் சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் மாலை வெளியே சென்றிருந்த நேரம் கயல்விழியின் முன்னால் வந்து நின்றான் விக்னேஷ்.

“ஹேய் நீ கயல் தானே. பார்த்தியா உன்னை பார்த்த உடனே அடையாளம் கண்டு புடிச்சேன்” என்றான்.

யார் இவன் என்று கயல்விழி யோசிக்கையில் “ஹேய் என்ன தெரியலையா நான் தான் விக்னேஷ். வக்கீல் பரசுராமன் பையன்” என்றான்.

“அட நீயா? சின்ன வயசுல பார்த்தது. உங்க அப்பா நீ இங்க தான் இருக்கேன்னு சொன்னாரு. இந்த ஊர்லயா இருக்க. ஆமா நீ எந்த காலேஜ்ல படிக்கிற”  விக்னேஷ் வக்கீலுக்கு தானே படிக்கிறான் இவனிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று தான் விசாரித்தாள்.

“என்ன என் காலேஜ்ல உனக்கு சீட்டு வேணுமா? நான் பார்த்துக்குறேன். நீ வா” என்ற விக்னேஷோ அவளிடம் வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு கிளம்பி இருந்தான்.

அன்று வீடு சென்ற ஹிமேஷ் ஹிந்தியில் சந்தோஷிடம் எதையோ சாதாரணமாக கூறிக் கொண்டிருக்க, சந்தோஷ் பதட்டமாக ஹிமேஷோடு சண்டே போடுவதை பார்த்தாள் கயல்விழி.

“உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் இருவருக்கிடையே வந்து நிற்க

“இல்லை இல்லை ஒன்றும் இல்லை” என்று விட்டு நகர்ந்தான் சந்தோஷ்.

“ஒன்றும் இல்லை. ஒர்க் டென்ஷன்” என்றான் ஹிமேஷ்.

அதன்பின் சந்தோஷ் சாதாரணமாகத்தான் பேசினான் நாட்களும் சாதாரணமாகவே நகர எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

ஒரு நாள் இரவு தந்தையை கனவில் கண்டு விழித்த கயல்விழி தண்ணீர் அருந்தலாம் என்று சமையலறைக்குச் சென்றாள். திரும்பி வரும் பொழுது மாடியில் சந்தோஷின் அறையில் விளக்கு எரிவது போல் இருக்கவே “இன்னும் தூங்காமல் என்ன செய்கிறார்கள்? ஒருவேளை திரைப்படம் ஏதாவது பார்க்கிறார்களோ?” என்று எண்ணியவாறு அறைக்குள் நுழைய முற்படு வித்தியாசமான சத்தம் கேட்டது.

சென்று பார்க்கலாமா? வேண்டாமா? என்று பல கட்ட போராட்டத்திற்கு பின் மடியேறினாள் கயல்விழி.

அறைக்குள் அவள் கண்ட காட்சி அவள் கண்களையே நம்ப முடியவில்லை. சந்தோஷும் ஹிமேஷும் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒருவரை ஒருவரை அணைத்தவாறு முத்தமிட்டுக் கொண்டிருக்க அதை பார்த்து அதிர்ந்தவள், அங்கிருந்து ஓட்டம் பிடித்து அறைக்கு வந்து கதவை சாத்தி இருந்தாள்.

கடவுள் ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் தானே படைத்தான். ஆணுக்கு ஆணையோ, பெண்ணுக்கு பெண்ணையோ படைத்து இருந்தால் இந்த உலகத்தில் ஆணை மட்டும் அல்லது பெண்ணை மட்டுமே படைத்திருப்பானே. கயல்விழிக்கு தான் பார்த்ததை நினைத்து வாந்தியே வரும் போல் இருந்தது.

அது சரி காதல் யாருக்கு யாருமே எப்பொழுது வரும் என்றே தெரியாது. இதில் பாலினம் மாறி வந்தால் என்ன செய்வது? அது அவர்களின் விருப்பம். எனக்கு தவறாக தோன்றுவது அவர்களுக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் சரியா? தவறா? என்று ஆராய்ச்சி எனக்கு வேண்டாத வேலை.

சந்தோஷ் தன்னிடம் ஒட்டாமல் இருந்ததற்கான காரணம் மெல்ல மெல்ல கயல்விழிக்கு புரிய ஆரம்பித்தது. “சொல்லியிருக்கலாமே இதை பற்றி சொல்லியிருந்தால், அவர்களுக்கு நடுவில் தான் இருக்காமல் இங்கிருந்து சென்றிருக்கலாமே. ஏன் சொல்லவில்லை? ஏன்? என்ன காரணம்?” இதுதான் கயல்விழி மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

எதுவாக இருந்தாலும் நாளை சந்தோஷிடம் பேசி அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு, இந்த வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்று நடக்கப் போவது தெரியாமல் முடிவெடுத்திருந்தாள் கயல்விழி.

Advertisement