Monday, May 20, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    ஆறுமுகம் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுக்கவும், அவன், “நான் தான்ப்பா.. எடுங்க” என்றான். அவர் யோசனையுடன் அழைப்பை எடுத்ததும், “இப்போ அப்படியே போன் டிஸ்ப்ளே வெளிய தெரியாத மாதிரி உங்க சட்டை பையில் வைங்க.. நீங்க பேசி முடிச்சு வெளியே வர வரைக்கும், இந்த கால் கட் ஆகக் கூடாது.. கைத் தவறி கட்...
    அடுத்த நாள் அத்வைத் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது, அவனது அறையில் இருந்த மேசை மீது சிறு உணவுப் பெட்டியும், அதன் கீழே ஒரு துண்டு காகிதமும் இருந்தது. அவன் யோசனையுடன் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான். ‘தமிழ்நாட்டு மாநில மரத்திற்கு (பனைமரத்திற்கு) பிடித்த பனைமர நுங்கு’ என்று எழுதி இருந்தது. அந்த உணவுப் பெட்டியை அவன்  திறந்து...
    யாதவ் மேல் அவள் கொண்டுள்ள அன்பும் பாசமும் கலந்த உரிமையைக் கண்டு பெரிதும் ஆச்சரியம் கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்தே அவள் எழுந்து சென்றது மூளையில் உரைக்க, அவன் என்ன செய்வது என்று திகைத்தான். துருவின், “என்னாச்சு?” என்ற கேள்வியை கவனிக்காதவள் அத்வைத்தை முறைத்த படி, வேகமாக மேசை மீது இருந்த...
    அடுத்த நாள் காலையில் கைகளை கட்டிக் கொண்டு அத்வைத் துருவை முறைத்துக் கொண்டிருக்க, துருவ் மனதினுள், ‘ஒரே ஒரு மணி நேரத்தில் என்னை இப்படி குற்றவாளிக் கூண்டில் நிக்க வச்சிட்டியே, பிசாசு!’ என்று செந்தமிழினியை பாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான். முன்தினம் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே ‘யாருடா இந்த சந்து!’ என்று அலறும் நிலைக்குத்...
    தங்கையிடம் பேசி முடித்த சிறிது நேரத்தில் கைபேசியில் அத்வைத்தை அழைத்த அருள்மொழி அவன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், துருவை அழைத்தான். துருவ் அழைப்பை எடுத்ததும், அருள்மொழி, “உடனே அத்வைத் கிட்ட போனைக் கொடுடா” என்றான். “அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று துருவ் கேட்க, “தமிழ் எப்போ உனக்கு போன் செய்து அத்வைத் கிட்ட கொடுக்கச்...
    துருவ் சிரிப்புடன், “சைஸ் தான் மாறி இருக்குது.. மத்தபடி அதே பம்கின் தான்.” என்றான். கண்ணன், “கண்ண செக் பண்ணுங்க பாஸ்.. இவளைப் போய் சூப்பர் பிகர்னு சொல்றீங்க!” என்றான். அவள் இப்பொழுது கண்ணனை முறைக்க, துருவ் புன்னகையுடன், “நீங்க?” என்று கேட்டான். “நீ போதும் பாஸ்.. நான் கண்ணன்.. நண்பன் என்ற பெயரில் இருக்கும் இவளோட அடிமை.”...
    “ஹாப்பி மார்னிங், அத்தான்” என்று புன்சிரிப்புடன் கூறியபடி வண்டியில் இருந்து இறங்கியவளைப் பார்த்தவனின் மனம் தாளம் தப்பத் தொடங்கியது. ஒரு நொடி இமைக்க மறந்து அவளையே பார்த்தவன், அவள் அவனது முகத்திற்கு முன் கையை அசைக்கவும் சுதாரித்துக் கொண்டு, “பூ வைச்சிக்கலையா?” என்று கேட்டான். “அப்புறம் நீங்க வாங்கித் தரதை வைக்க இடம் இருக்காதே!” என்று கூறி...
    அத்வைத், “நீங்க இப்படி பேசுறதை பார்த்தா.. எனக்கு என்னவோ அவளை அனுப்பி வச்சதே, நீங்க தானோனு தோனுது.” என்றான். “ராசா!” என்று அவர் அதிர்வுடன் அழைக்க, அவன், “அவ வேற ஒருத்தனை விரும்பினதை தெரிஞ்சும் என் கிட்ட மறைச்சு, அவ கிட்ட நம்ம வீட்டு வசதி வாய்ப்பு, அது இதுன்னு ஏதேதோ சொல்லி, அவளோட மனசை கரைச்சு,...
    அன்று இரவு உணவிற்குப் பிறகு, செந்தமிழினி, “அப்பா,  சரோ அத்தை பாமிலி பத்தி ஏதாவது தெரியுமா? அதாவது.. தேனுமா எப்படி இருக்கிறாங்க? அத்தான், துருவ் எல்லாம் எப்படி இருக்கிறாங்க? அத்தானுக்கு எத்தனை பிள்ளைங்க? இப்படி தெரியுமானு கேட்டேன்.” என்றாள். பதில் கூறாமல் வேணுகோபால் அமைதியாக இருந்தார், ஆனால், அவரது நெஞ்சமோ தங்கையின் நினைவில் ஏக்கத்துடன் கூடிய...
    அத்வைத் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவனது கைபேசிக்கு நேகா அழைத்தாள். ‘இவ எதுக்கு கூப்பிடுறா! ஆச்சி வேலையா தான் இருக்கும்!’ என்று எரிச்சலுடன் நினைத்தவன்,  அவளது அழைப்பை எடுக்கவில்லை. ஆம்! அது மங்களத்தின் வேலை தான். வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் முன் மங்களத்திடம், “நாங்க கிளம்பினதுக்கு அப்புறம் அம்மாவை எதுவும் சொன்னீங்கனு தெரிந்தது!” என்று...
    கதவை திறந்து சரோஜினியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, “யது கண்ணாக்கு பால் கொடுங்க, தேனுமா” என்றவள், எதிரே இருந்த துருவிடம், “கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என்றாள். பின் யாதவிடம் திரும்பி, “யது கண்ணா.. டாடா கிட்ட ஆபீஸ் வொர்க் பத்தி, முக்கியமாப் பேசப் போறேன்.. ஸோ, நீங்க சித்தா கூட போய் விளையாடுங்க.. ஓகே?”...
    அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து...
    மடிக்கணினியை பழுது பார்த்து, முன்தினம் செய்த வேலைகளை மீண்டும் செய்து, என்று அன்றைய நாள் முழுவதுமே வேலைகள், அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, செந்தமிழினி பற்றிய எண்ணம் சிறிதும் அவனது சிந்தனையில் இல்லை. அன்று அலுவலகம் முடிந்து கிளம்பும் வேளையில் அத்வைத் முன் வந்து நின்ற செந்தமிழினி, “பாஸ்” என்று அழைத்தாள். வேலை நடுவே அவளை இயந்திரமாக நிமிர்ந்து...
    அத்வைத், “சொல்லுடா” என்றதும், அமைதியான குரலில் அனைத்தையும் சொல்லி முடித்தவன், “ஒழுங்கு மரியாதையா என்னோட தங்கச்சியை சரி செய்ற!” என்றான். “என்னோட மனைவியை சரி செய்ய நீ சொல்லணும்னு இல்லை, மச்சான்.” என்றவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தான். செந்தமிழினியை கைபேசியில் அழைத்த அத்வைத்,  அவள் அழைப்பை எடுத்தும், “என்னாச்சுடா?” என்றான். “அருள் பேசினானா?” “ஹ்ம்ம்.. ஏன்டா..”...
    அத்வைத்தின் சத்தத்தில் யாதவுடன் வெளியே வந்த தமிழ், “அப்படியே கீழ போடுங்க அத்தான்.. வரப் போற நம்ம கல்யாணத்தை பத்தி சொல்லாம, இந்த தடிமாட்டு தாண்டவராயனுக்கு பொண்ணு பார்க்கணும்னு கவலைப் படுறாங்க” என்றாள். ‘நான் என்னடி செய்தேன்!’ என்பது போல் அருள்மொழி தங்கையை பாவமாகப் பார்க்க, கீழே இறங்கி இருந்த மரகதம், “அண்ணன்னு மரியாதை இல்லாம பேசின!...
    மதிய உணவு இடைவேளைக்கு சற்று நேரம் முன் செந்தமிழினி, “கண்ணா” என்று அழைத்தாள். அவளது குரலில் தெரிந்த சிறு தயக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் இயல்பான குரலிலேயே, “என்ன?” என்று கேட்டான். “ஒரு ஹெல்ப்” “என்ன! சில் பீர் ஒன்னு வாங்கித் தரணுமா?” அவள் தயக்கம் நீங்கி சட்டென்று சிரித்தபடி, “இல்லை லூசு.” என்றாள். “ஓ! நிஜமாவே குவாட்டர்...
    மென்னகையுடன், “அது சரி தான்..” என்றவள், “எல்லோருமே ஃபஸ்ட் பெஞ்ச் டாப்பரா இருந்தா, யாரு தான் லாஸ்ட் பெஞ்சில் இருக்கிறது?” என்று கேட்டாள். “நீங்க பேசுறது புரிய தனி டிக்சனரி தான் போடணும்” என்றான். சன்னச் சிரிப்புடன், “நீங்க மூளை பார்ட்டினா, எல்லோருமே அப்படி தான் இருப்பாங்கனு நினைத்தால் எப்படி பாஸ்!” என்றாள். சற்று யோசித்தவன், ஒரு நொடி...
    முன்தினம் விழாவில் பாடி முடித்து கீழே வந்த செந்தமிழினி லட்சுமியிடம், “அத்தான் எங்கடி?” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த லட்சுமி அத்வைத் இல்லை என்றதும் முறைப்புடன், “எந்த அத்தான்?” என்று கேட்டாள். செந்தமிழினி, “ப்ச்.. விளையாடாமச் சொல்லுடி” என்றாள். லட்சுமி அதற்கும் முறைக்க, கண்ணன், “என்ன லட்சு!” என்றான். அவனையும் முறைத்தபடி, “அப்போ உனக்கு முன்னாடியே தெரியும்.. நான்..” என்றவளின்...
    அறை வாயிலுக்கு முதுகு காட்டி தரையில் ஒற்றை காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த செந்தமிழினி, “யது கண்ணா எப்போதுமே விளையாடி முடிச்சிட்டு, டாய்ஸ் எடுத்து வச்சிரணும்.. வாங்க.. வந்து, எடுத்து வைக்க. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள். யாதவ் அவள் அருகே வரவில்லையே என்ற நினைப்புடன்...
    ‘தமிழ்.. இது நீ தெளிவா யோசிக்க வேண்டிய நேரம்.. யோசி யோசி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டபடி அவள் சற்று இயல்பிற்குத் திரும்பியதும், அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நொடியில் அனைத்து குழப்பங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது உடனடியாக செய்ய வேண்டியது எது என்று யோசித்தாள். பொன் தாலியை...
    error: Content is protected !!