Advertisement

அடுத்த நாள் காலையில் கைகளை கட்டிக் கொண்டு அத்வைத் துருவை முறைத்துக் கொண்டிருக்க, துருவ் மனதினுள், ஒரே ஒரு மணி நேரத்தில் என்னை இப்படி குற்றவாளிக் கூண்டில் நிக்க வச்சிட்டியே, பிசாசு!’ என்று செந்தமிழினியை பாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.
முன்தினம் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே ‘யாருடா இந்த சந்து!’ என்று அலறும் நிலைக்குத் தள்ளப்பட்டான், அத்வைத்.
அத்வைத் வீட்டினுள் நுழைந்தும், யாதவ், டாடா.. ஹை-பை” என்று கையைத் தூக்கிக் காட்ட,
காலணியை கழட்டிக் கொண்டிருந்த அத்வைத், கை கழுவிக்கிறேன் கண்ணா” என்றான்.
காலணிகளை அதன் இடத்தில் வைத்துவிட்டு கையை அலம்ப அவன் செல்ல, அவன் பின்னாலேயே சென்ற யாதவ், அவன் கை அலம்பிய அடுத்த நொடி மீண்டும், டாடா ஹை-பை” என்று குதூகலத்துடன் கூறியபடி கையைத் தூக்கினான்.
அத்வைத் மென்னகையுடன் மகனின் கையை தட்டியபடி, சித்தா, சொல்லிக் கொடுத்தானா?” என்று கேட்டான்.
யாதவ், நோ.. சந்து சொல்லிக் கொடுத்தா” என்றான்.
தனது அறையை நோக்கி சென்று கொண்டு இருந்தவன் நின்று திரும்பி, அது யாரு, புது ஃப்ரெண்ட்? எங்க பார்த்தீங்க? இன்னைக்கு ஆச்சி கூட பார்க் போனீங்களா?” என்று கேள்விகளை அடுக்கினான்.
சந்து உன்ன மாதிரி பிக் கேர்ள்.. யதுக்கு சந்து ரொம்ப பிடிச்சு இருக்குது.. யது பார்க் போகலை.. சந்து நம்ம வீட்டுக்கு வந்தா.. உன்ன மாதிரி ஆபீஸ் போறா.” என்று குழந்தை வரிசையாக பதில் கூறினான்.
அத்வைத் புருவ முடிச்சியுடன், அம்மா” என்று அழைத்தான்.
அவன் அழைப்பான் என்பதை அறிந்தது போல் அங்கேயே இருந்த சரோஜினி, துருவ் கூட்டிட்டு வந்தான்பா.. துருவோட ஃப்ரெண்ட்” என்று செந்தமிழினி சொல்லிக் கொடுத்தது போலவே சொன்னார்.
இது என்ன புதுப் பழக்கம்?” என்று அவன் அழுத்தத்துடன் கேட்கவும்,
அவர், எனக்கு என்னப்பா தெரியும்? துருவைக் கேளு.” என்று கூறி நழுவிக் கொண்டார். இதையும் செந்தமிழினி அவருக்கு சொல்லிக் கொடுத்திருந்தாள்.
துருவ் வண்டி இல்லையே!” என்று அவன் கேள்வியாய் நிறுத்த,
ஏதோ ஃப்ரெண்டோட பர்த்டே பார்ட்டி போறேன்னு சொன்னான்” என்றார்.
அவன் யோசனையுடன் பார்க்க, என்னப்பா?” என்று கேட்டார்.
ஒன்றுமில்லை’ என்பது போல் தலை ஆட்டியவன், அவன் கிட்ட பேசிக்கிறேன்” என்று கூறி மகனை தூக்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.
இவனிடம் இருந்து தப்பிப்பதற்காகவே துருவ் இல்லாத பிறந்தநாள் விழாவிற்கு வெளியே சென்றிருந்தான்.
அறையினுள் சென்றதும் தந்தை கையில் இருந்து வேகமாக கீழே இறங்கிய யாதவ், ஓடிச் சென்று பாண்டா பொம்மையை எடுத்து வந்து, இந்த பிக் பாண்டா சந்துமா.. குட்டி பாண்டா யது” என்றான்.
குழந்தை தன்னை மறந்து ‘சந்துமா’ என்று கூறியதை அத்வைத் கவனிக்கவில்லை. அவனது கவனம் முழுவதும் என்றும் இல்லாத புதுப் பொலிவுடன் இருந்த மகனின் சிரித்த முகத்தில் தான் நிலைத்து இருந்தது.
அத்வைத் மென்னகையுடன், சந்து கொடுத்தாங்களா?”
சந்து நோ ‘ங்க’ சொன்னா”
சரி.. இது நீங்களும் சந்துவும்னா டாடா எங்க?”
ஹ்ம்ம்.. இன்னொரு பிக் பாண்டா வாங்கி சேர்த்து வச்சிடலாமா?”
சரி”
நாளைக்கே வாங்கித் தரியா?”
வீக் எண்டு வாங்கலாம்.”
நோ.. நோ.. நாளைக்கே வேணும்.” என்று முதல் முறையாக யாதவ் அடம் பிடிக்கவும்,
அத்வைத், சரி.. டாடா நாளைக்கு வாங்கிட்டு வரேன்.” என்றான்.
பொம்மை உருவத்திலாவது தாய் தந்தை என்று குடும்பமாக இருக்கலாம் என்று நினைத்ததோ குழந்தை!
ஹே!” என்று குதித்த குழந்தை, டாடா ஹை-பை” என்று மீண்டும் கையைக் காட்டினான்.
இப்போ தானே கொடுத்தீங்க!” என்று கூறினாலும் மகனின் கையை தட்ட மறுக்கவில்லை.
யாதவ், சந்து சொன்னா.. நம்ம ஹாப்பிய ஷேர் செய்ய ஹை-பை கொடுக்கணும்.”
ஓ.. இன்னைக்கு வேற என்னாலம் செய்தீங்க?” என்று கேட்டதும் மடை திறந்த வெள்ளமாக யாதவ் பேசத் தொடங்க, அத்வைத் முதல் முறையாக ‘ஏன்டா இந்தக் கேள்வியை கேட்டோம்!’ என்று நொந்து கொண்டான்.
சந்து ப்ரிட்டி..
யது ஹன்ட்சம் சந்து சொன்னா..
டாடா தெரியுமா! ப்ரிட்டி ஹன்ட்சம் ரெண்டும் அழகு.. கேர்ள்னா ப்ரிட்டி சொல்லணும், பாய்னா ஹன்ட்சம் சொல்லணும்னு சந்து சொன்னா..
ஐஸ்-கிரீம் சாப்டுட்டு கொஞ்சம் சுடு தண்ணி குடிச்சா சளியே பிடிக்காதுனு சந்து சொன்னா.. டாடாக்கு தெரியுமா?
சந்து வண்டில யது கண்ணா ஜாலி ஜாலியா முன்னாடி நின்னுட்டே போனேன்..
சந்து, டாடா மாதிரி சூப்பரா வண்டி ஓட்டினா..
சந்து யது கிட்ட பேசிட்டே சூப்பரா வண்டி ஓட்டினா..
சந்து ஐஸ்-கிரீம் ஷாப் கூட்டிப் போய் ஸ்ட்ராபெரி ஐஸ்-கிரீம் வாங்கித் தந்தா..
டாடா.. தெரியுமா! சந்துக்கும் ஸ்ட்ராபெரி தான் பிடிக்கும்..
அப்புறம்.. சந்து 1,2,3 ட்ரைன், ,பி,சி,டி ட்ரைன் வாங்கி தந்தா..
டெய்லி 1,2,3, ,பி,சி,டி படிக்கணும்னு சந்து சொன்னா..” என்று வாக்கியத்திற்கு வாக்கியம் ‘சந்து’ என்று கூறி அத்வைத்தை மனதினுள் ‘யாருடா இந்த சந்து?’ என்று அலற வைத்தான்.
சந்து ரைம்ஸ் சொல்லித் தந்தா.. பாடி காட்டவா?” என்ற யாதவ் அத்வைத் பதிலை எதிர்பார்க்காமல் செய்கையுடன் பாட ஆரம்பித்தான்.
குழந்தை முதலில் ‘ஏ,பி,சி,டி’ பாட்டை பாடினான்.
அத்வைத் இன்ப அதிர்ச்சியுடன் கைகளை தட்டியபடி, வாவ்.. சூப்பரா பாடுறீங்களே!” என்றான்.
தேங்க்யூ டாடா” என்று மகிழ்ச்சியுடன் கூறிய குழந்தை அடுத்து, “சந்து டெடி பேர் ரைம்ஸ் சொல்லி தந்தா.. அதை பாடுறேன்” என்று கூறி பாட ஆரம்பித்தான்.
 “ ‘டெடி பேர்.. டெடி பேர்..
டர்ன் அரௌந்(ண்)டு.. (ஒரு சுற்று சுற்றினான்)
டெடி பேர்.. டெடி பேர்..
டச் தி கிரௌண்டு.. (குனிந்து தரையை தொட்டான்)
டெடி பேர்.. டெடி பேர்…..’ அப்புறம்.. அப்புறம்..” என்று யோசித்தவன் அத்வைத்தை பார்த்து, அப்புறம் என்ன டாடா வரும்?” என்று கேட்டான்.
தெரிலையே கண்ணா.”
நீ படிக்கலையா?”
என்னோட மேம் இந்த ரைம்ஸ் சொல்லித் தரலையே!”
ஓ!” என்ற குழந்தை, அப்போ சந்துக்கு போன் போட்டு, கேட்டுச் சொல்லு” என்றான்.
எனக்கு நம்பர் தெரியாதே!”
யாதவ் இடுப்பில் கை வைத்தபடி முறைக்க, அந்தக் கொள்ளை அழகை ரசித்த அத்வைத் உதட்டோரச் சின்ன மென்னகையுடன், சந்து உன்னோட ஃப்ரெண்ட் தானே! அப்போ எனக்கு எப்படி நம்பர் தெரியும்?” என்று கேட்டான்.
சற்று யோசித்த குழந்தை, அப்போ சித்தா கிட்ட கேட்டு போன் போடு.” என்றான்.
சித்தா வெளிய போயிருக்கானே!”
போன் செய்து கேளு”
சித்தா வண்டி ஓட்டிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் செய்யக் கூடாது.. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நம்பர் வாங்குறேன்.” என்று அந்த விஷயத்தை மகன் அறியாமல் தவிர்க்கப் பார்க்க,
குழந்தையோ, சித்தா வண்டி ஓட்டிட்டு இருப்பாங்கனு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.
யது கண்ணா அப்பா சொன்னா கேட்பீங்க தானே! நீங்க சமத்து தானே! சித்தா வீட்டுக்கு வந்ததும் உங்க ஃப்ரெண்ட் நம்பர் வாங்கித் தரேன்.. இப்போ டாடாக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குது.. முக்கியமான வேலை.. யது கண்ணா சமத்தா விளையாடுவீங்களாம்.. சரியா?”
யாதவ் பதில் கூறாமல் கைகளை கட்டிக் கொண்டு, மெத்தையில் முதுகு காட்டி அமர்ந்து கொண்டான்.
மகன் முன் மண்டியிட்டு அமர்ந்த அத்வைத், என் செல்ல யது கண்ணா தானே நீங்க! டாடா வேலை பார்க்கிற வரை நீங்க உங்க ஃப்ரெண்ட் சந்து வாங்கிக் கொடுத்த டாய்ஸ் வச்சு விளையாடுங்க.. சரியா?” என்று மகனை சரியாக சமாளிக்க,
கொஞ்ச நேரம் தான்” என்று இறங்கி வந்தான் குழந்தை.
ஓகே.. கொஞ்சம் நேரம் தான் வேலை பார்ப்பேன்..” என்று அவனும் இறங்கி வந்தான்.
அரை மணி நேரம் பொறுத்திருந்த குழந்தை, அதன் பிறகு அத்வைதை அழைக்க ஆரம்பித்தான். அவனும் ‘இதோ வரேன் கண்ணா’, ‘டென் மினிட்ஸ்’, ‘ஃவைவ் மினிட்ஸ்’, ‘டூ மினிட்ஸ்’ என்று அரை மணி நேரமாக சமாளித்தபடி வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
பொறுமை இழந்த யாதவ், அறையில் இருந்த குவளையில் தண்ணீர் பிடித்து வந்து, டாடா” என்று அழைத்தான்.
அத்வைத் நிமிராமல், இதோ முடிச்சுட்டேன் கண்ணா.. லாஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்” என்றான்.
டாடா” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்த குழந்தை,
அவன், ஹ்ம்ம்” என்றதும்,
இன்னும் அழுத்தமான குரலில், என்னை பாரு” என்றான்.
அத்வைத் நிமிர்ந்த நொடி குவளை தண்ணீரை அவன் முகத்தில் ஊற்றியதோடு, மடிக்கணினியையும் குளிப்பாட்டி இருந்தான்.
முதல் முறையாக கோபத்துடன், யது!” என்று குரல் உயர்த்தி அழைத்த அத்வைத், மடிக்கணினி மீது இருந்த நீரை கீழே கொட்டிவிட்டு துணி கொண்டு துடைத்தான்.
யாதவ் பயத்துடன், சித்தா பனிஷ்மென்ட்.. சந்து இப்படி செய்தா.. சித்தா திட்டலை.. அதான் யது பண்ணான்.” என்றான்.
மகனின் குரலில் பயத்தை உணர்ந்த அத்வைத் மடிக்கணினியை கீழே வைத்து விட்டு, மகனின் தோள்களை மென்மையாக பற்றியபடி, யது கண்ணா.. இது தப்பு.. இப்படி செய்யக் கூடாது.” என்று மென்மையாக எடுத்துக் கூறினான்.
தந்தையின் முகம் மற்றும் குரலின் மாற்றத்தில் இயல்பிற்குத் திரும்பிய யாதவ், ஏன் தப்பு?” என்று கேட்டான்.
நீங்க ஊத்தின தண்ணி டாடா லேப்டாப்பில் பட்டு, தண்ணி கொஞ்சம் உள்ளே போய்டுச்சு.. லேப்டாப் வேலை செய்யலைனா, டாடாக்கு கஷ்டம் தானே!”
என்ன கஷ்டம்?”
லேப்டாப் ரிப்பேர் செய்யனும்.. இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு வேலை பார்த்தது வேஸ்ட்.. அதைத் திரும்ப செய்யணும்”
ஏன் திரும்ப செய்யணும்?”
லேப்டாப் வொர்க் ஆகலைனா டாடா வொர்க் செய்தது டெலிட் ஆகிடுமே”
ஓ” என்ற குழந்தை, அப்போ லேப்டாப் ஆஃப் பண்ணிட்டா போய்டுமா?”
எது?”
நீ வொர்க் பண்ணது?”
இல்லை.. அதை ஆஃப் பண்றதுக்கு முன்னாடி சேவ் செய்திடுவேன்.”
இப்போ, நீ சேவ் பண்ணலையா?”
அவன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்ட, குழந்தை, ஏன் சேவ் பண்ணலை?” என்று கேட்டான்.
வொர்க் முடிச்சதும் தான் சேவ் பண்ணுவேன்”
ஓ”
இனி இப்படி செய்யக் கூடாது.. ஓகே?”
ஹ்ம்ம்” என்று அரைகுறையாக தலை ஆட்டிய குழந்தை, “அப்போ லேப்டாப் மேல படாம தண்ணி ஊத்தவா?” என்று கேட்டான்.
யாருடா இந்த சந்து?’ என்று மீண்டும் மனதினுள் கேட்டுக் கொண்ட அத்வைத் மகனிடம் பொறுமையாக,
இல்லை கண்ணா.. ஒருத்தர் மேல தண்ணி ஊத்துறதே தப்பு தான்” என்றான்.
அப்போ சந்து ஏன் அப்படி செய்தா?”
பேட் கேர்ள்.. அதான்”
யாதவ் முறைப்புடன், சந்து பேட் கேர்ள் இல்லை” என்றான்.

Advertisement