Advertisement

அத்வைத்தின் சத்தத்தில் யாதவுடன் வெளியே வந்த தமிழ், அப்படியே கீழ போடுங்க அத்தான்.. வரப் போற நம்ம கல்யாணத்தை பத்தி சொல்லாம, இந்த தடிமாட்டு தாண்டவராயனுக்கு பொண்ணு பார்க்கணும்னு கவலைப் படுறாங்க” என்றாள்.
நான் என்னடி செய்தேன்!’ என்பது போல் அருள்மொழி தங்கையை பாவமாகப் பார்க்க,
கீழே இறங்கி இருந்த மரகதம், அண்ணன்னு மரியாதை இல்லாம பேசின! வாயிலேயே ரெண்டு போடுவேன்” என்று கூற,
யாதவ் இடுப்பில் கைவைத்தபடி அவர் முன் வந்து நின்று முறைத்தான்.
அதைக் கண்டு சிரிப்பு வந்தாலும், அவர் அமைதியாக அவனைப் பார்க்க,
அவன், அம்மா அடிக்கக் கூடாது” என்று கறார் குரலில் கூறினான்.
அப்படி சொல்லுடா என் சிங்கக்குட்டி” என்றபடி செந்தமிழினி குழந்தையுடன் கை தட்டிக்கொள்ள, அவன் இன்னும் விரைப்புடன் ‘என்ன!’ என்பது போல் மரகதத்தை பார்த்தான்.
புன்னகையுடன் அத்வைத்தைப் பார்த்து, இதிலும் உன்னை மாதிரியே இருக்கிறான்.. தமிழை நான் திட்டும் போது, நீ சண்டைக்கு வர மாதிரியே செய்றான்.” என்றவர் சற்று குனிந்தபடி யாதவைப் பார்த்து, சரீங்க சார்.. உங்க அம்மாவை ஆச்சி ஒன்னும் சொல்லலை.” என்றார்.
உடனே புன்னகைத்த குழந்தை அவர் கன்னத்தில் முத்தமிட்டு, குட் ஆச்சி” என்றான்.
எல்லாம் என் நேரம்’ என்று மனதினுள் நினைத்தபடி மகளைப் பார்த்தவர்,
அவளது பார்வை அத்வைத்திடம் இருக்கவும். குழந்தையிடம், நாம போய் எல்லோருக்கும் காபி கலக்கலாமா?” என்று கேட்டார்.
யாதவ், அம்மா யது ஆச்சி கூட காபி கலக்கப் போறேன்.” என்று கூற,
சட்டென்று சுதாரித்து, அவன் பக்கம் திரும்பியவள் புன்னகையுடன், ஓகே கண்ணா” என்றாள்.
மரகதம், தமிழ் அத்வைத்துக்கு வீட்டை சுத்திக் காமி” என்றார்.
கண்ணசைவில் அவளைத் தன்னருகே அழைத்த அத்வைத், வேணுகோபால் மற்றும் மரகதம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, யாதவும் அவர்களை பின்பற்றி அவ்வாறே செய்தான்.
எப்போதும் இதே சந்தோஷத்துடன் சீரும் சிறப்புமா இருங்க.” என்று இருவரும் மனதார வாழ்த்தினர்.
மூவரும் எழுந்து நின்றதும், வேணுகோபால் மகளின் தலையை பரிவுடன் வருட, லவ் யூப்பா” என்றபடி அவரை அணைத்துக் கொண்டவள், அவரது தோளில் சாய்ந்தபடியே, தேங்க் யூமா” என்றாள் ஆனந்தக் கண்ணீருடன்.
நானும்.. நானும்” என்றபடி யாதவ் வேணுகோபாலின் காலை கட்டிக்கொள்ள, அவர் பூரிப்புடன் அவனைத் தூக்கி, கன்னத்தில் முத்தம் இட்டார். அவனும் அவருக்கு முத்தம் கொடுத்தான்.
செந்தமிழினி கன்னத்தைத் தட்டிய மரகதம் யாதவைப் பார்த்து, வா குட்டிமா.. நாம கிட்சன் போகலாம்.” என்ற படி அவனைத் தூக்கிச் சென்றார்.
இங்கே ஒருத்தன் காதில் இருந்து புகையா வருது, தமிழ்” என்று கிண்டலுடன் அருள்மொழி கூற,
அத்வைத்தைப் பார்த்த செந்தமிழினி வெட்கத்துடன் தந்தையின் தோளில் முகத்தை மறைத்தாள்.
வாவ்.. வாட் அ மெடிக்கல் மிராக்கில்!” என்ற அருள்மொழி, அம்மா சீக்கிரம் இங்க வாயேன்” என்று கத்தினான்.
யாதவை தூக்கியபடி அவசரமாக வந்த மரகதம், என்னடா?” என்று கேட்க,
அவன், உலக வரலாற்றில் முதல் முறையாக தமிழ் வெட்கப்படுறாமா!” என்றான்.
இதுக்கு தான் கூப்பிட்டியா! போடா” என்றவர் மீண்டும் சமையலறைக்குச் சென்றார்.
டேய் வேணாம்.. அப்புறம் பின் விளைவுக்கு நான் பொறுப்பில்லை” என்று செந்தமிழினி ஆள்காட்டி விரலை ஆட்டியபடி மிரட்ட,
இப்போ தான் என் தங்கச்சியை பார்த்த மாதிரி இருக்குது” என்று மீண்டும் கிண்டல் செய்தான்.
பின் அத்வைத் கையை குலுக்கியபடி, கன்க்ராட்ஸ் மச்சான்” என்றவன் தங்கையை தோளோடு அணைத்தபடி, கன்க்ராட்ஸ் தமிழ்” என்றான்.
புன்னகையுடன் அவனது தோளில் சாய்ந்தபடி, தேங்க்ஸ்டா அண்ணா” என்றாள்.
வேணுகோபால், போடா.. அத்வைத் கூட பேசிட்டு இரு” என்றதும், கண்ணால் அவனை அழைத்தபடி தனது அறைக்குச் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் அவள், கேடி அத்தான்.. சின்ன வயசில் நான் சேட்டை செய்றப்ப என்னை திட்டிட்டு, எனக்குத் தெரியாம அம்மா கிட்ட எனக்கு சப்போர்ட்டா பேசி இருக்கிறீங்க!” என்றாள்.
அறை வாயிலில் இருந்து கூடத்தை எட்டிப் பார்த்தவன், அங்கே யாரும் இல்லை என்றதும்,  லேசாக கதவை மூடியவன், அவள் சுதாரிக்கும் முன் அவளது இடையை வளைத்து, தன்னுடன் இறுக்கிப் பிடித்து இருந்தான்.
அவள் கண்களை விரித்து அவனை நோக்க, சின்ன வயசில் இருந்தே உன்னை எனக்குப் பிடிக்கும்” என்றான்.
அவள் சிறு கோபத்துடன், ஆமா ஆமா.. அதான் எஃப்.பி-யில் என்னை ப்ளாக் செய்தீங்க!” என்றபடி அவனைவிட்டு விலகப் பார்த்தாள்.
அவனோ பிடியை இறுக்கியபடி, அது அத்தைக்காக” என்றான்.
அவள் நம்பாமல் பார்க்க, அவன், நிஜமா தான் சொல்றேன்.. ஏழு வருஷத்துக்கு முன்னாடி அத்தையைப் பார்த்து பேசினேன்னு சொன்னேனே! அப்போ அத்தை இனி தேடி வர வேண்டாம்னு சொன்னதோடு ‘தமிழ் வந்தாலும் பிடி கொடுத்துப் பேசாத ப்ளீஸ்’னு கெஞ்சிக் கேட்டாங்க.. அதான் உன்னை ப்ளாக் செய்தேன்.. அவங்களுக்காக விலகினாலும் ரெட்ட ஜடை போட்ட, பம்கின் மாதிரி புஸ்ஸு புஸ்ஸுனு இருந்த அந்த ஸ்கூல் பொண்ணும், அவள் சொன்ன ‘ஐ லவ் யூ’-வும்இப்பவும் என் நெஞ்சில் பசுமையா தான் இருக்குது.” என்றான்.
தன் பலம் கொண்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விலக்கிய செந்தமிழினி, உங்க அத்தையைப் பார்த்து என்னை விட்டுட்டீங்க தானே!” என்றாள் கோபமும் வலியுமாக.
இல்லைடா.. அப்படி இல்லை” என்று சமாதானம் செய்தபடி அவள் கையை பற்ற வர,
அங்கேயே நில்லுங்க அத்தான்.. இனி நானா சொல்றவரை என்னை நீங்க தொடக் கூடாது” என்றாள்.
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க,
அப்போ அன்னைக்கு நான் சொன்ன ‘ஐ லவ் யூ’ நிஜம்னும், என் மனசில் இருந்து தான் சொன்னேன்னும் உங்களுக்கு தெரியும்!” என்றாள்.
அவன் திணறியபடி ‘ஆம்’ என்று தலையை ஆட்டினான்.
அவள் பொத்தென்று மெத்தையில் அமர்ந்தாள். இப்படி ஒரு நிலை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத அத்வைத் துவண்டு போனான்.
அந்த நாளை இருவரும் நினைத்துப் பார்த்தனர்.
அப்போது செந்தமிழினி பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, அத்வைத் முதுகலை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தான்.
அன்று மாலை,  வேணுகோபால் வீட்டில் சமையல் அறையில் காபி கலந்தபடி மரகதம் செந்தமிழினியை திட்டிக் கொண்டிருக்க,
அத்வைத், சும்மா அவளை திட்டிட்டே இருக்காதீங்க அத்தை.. அவளால தான் வீடே உயிர்ப்புடன் இருக்குது..” என்றான்.
நீ தான் அவளை மெச்சிக்கணும்” என்றவர், நீ என்னைக்கு அவளை விட்டுக் கொடுத்து பேசி இருக்க!” என்றார்.
அப்பொழுது வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்க, வந்துட்டா ராணி மங்கம்மா” என்றார்.
புன்னகையுடன் வெளியே சென்றவன், அவளை காணாமல் தோட்டத்திற்கு சென்று தேடினான்.
அங்கேயும் அவளைக் காணாமல் சுற்றி சுற்றி பார்க்க, தொப்’ என்ற சத்தத்துடன் அவன் அருகே மரத்தில் இருந்து குதித்தவள் கையில் கொய்யாப் பழம் இருந்தது.
அவன் அவளை முறைக்க, அவளோ பழத்தை நீட்டியபடி, வேணுமா அத்தான்?” என்று புன்னகையுடன் கேட்டாள்.
அவன், இந்த மாதிரி குரங்கு சேட்டை செய்றதால் தானே, அத்தை உன்னை திட்டுறாங்க!” என்று கண்டிக்கும் குரலில் கூற,
அவளோ, அதை விடுங்க அத்தான்.” என்று கூறி, நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று ரகசியக் குரலில் கூறினாள்.
அவன் புருவம் உயர்த்திப் பார்க்க, அதை ரசித்துப் பார்த்த படி, அவள் தன்னை மறந்து நிற்க, அவன் அவள் முகத்திற்கு முன் சொடக்கிட்டான்.
சட்டென்று சுயம் பெற்றவள் சிறிது அசடு வழிய, அவனோ தீவிர முக பாவத்துடன், என்ன சொல்லனும்?” என்று கேட்டான்.
அவளது மனம் செல்லும் பாதையை புரிந்து கொண்டவன், அவளது வயதை மனதில் கொண்டு கடுமையை கையில்  எடுத்தான். அவனுக்கும் அவளை அதிகம் பிடிக்கும் தான். ஆனால், அவன் மனதில் காதல் அப்பொழுது இல்லை.
புன்னகையுடன் அவனைப் பார்த்து, ஐ லவ் யூ” என்றவள், அவன் கடுமையாக முறைக்கவும்,
சட்டென்று, அப்படி சக்திக்கா உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க” என்றாள்.
அவன் ‘சக்தி யார்’ என்று கூட கேட்காமல் கடுமையான முறைப்புடன், ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு.. இன்னொரு முறை இப்படி வந்து தத்துபித்துன்னு உளறின பல்லைப் பேத்துருவேன்” என்று கண்டிக்கும் குரலில் கூறினான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், நான் அப்பவே சொன்னேன்.. போயும் போயும், அந்த துர்வாசரையா காதலிக்கிறீங்கனு கேட்டேன்.” என்றாள்.
அவன் இன்னும் முறைக்க, அப்போ அந்த அக்கா கிட்ட நோ சொல்லிடவா, அத்தான்?” என்று கேட்டாள்.
அவன், அடிங்க!” என்றபடி ஓரடி முன்னால் வர,
அந்த அக்கா தப்பிச்சுட்டாங்கனு சொல்லிடுறேன் அத்து” என்று கத்தியபடி அவள் ஓடி விட, அவனது முகத்தில் மென்னகை அரும்பியது.
அடுத்து வந்த சில நாட்களில் இரு குடும்பமும் பிரிந்து விட, பிரிவின் பிறகு தான் அத்வைத் பாசத்திற்கும் காதலிற்கும் நடுவே இருக்கும் தனது மனதை உணர்ந்தான். மரகதத்தின் வேண்டுதலுக்காகவும், செந்தமிழினிக்கு தன் மீது இருக்கும் பிடித்தம் அந்த வயதில் வரும் வெறும் ஈர்ப்பு மட்டும் தான், நாளடைவில் தன்னை மறந்துவிடுவாள் என்ற நினைப்பிலும், தனது காதலை மொட்டுவிடும் முன்பே பொசுக்கி இருந்தான்.
இதை சொன்னால் இன்னும் சாமியாடுவாளே என்ற பயத்துடனும் தவிப்புடனும் அவன் அவளை பார்த்தபடி சுவற்றில் சாய்ந்தபடி நின்றான்.

Advertisement