Advertisement

அடுத்த நாள் அத்வைத் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது, அவனது அறையில் இருந்த மேசை மீது சிறு உணவுப் பெட்டியும், அதன் கீழே ஒரு துண்டு காகிதமும் இருந்தது.
அவன் யோசனையுடன் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான்.
தமிழ்நாட்டு மாநில மரத்திற்கு (பனைமரத்திற்கு) பிடித்த பனைமர நுங்கு’ என்று எழுதி இருந்தது. அந்த உணவுப் பெட்டியை அவன்  திறந்து பார்த்த பொழுது, உள்ளே நல்ல இளசான நுங்குகள் இருந்தது.
 ‘யாரு வேலை இது! அதுவும் நமக்கு நுங்கு பிடிக்கும்னு வேற தெரிந்து வச்சிருக்காங்க’ என்று யோசித்தவன் வெளியே சென்று பார்த்தான்.
எப்பொழுதும் அத்வைத் முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்து விடுவான். அதனால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தனர். நால்வருமே ஆண்கள் தான். அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கவும் இவன் குழப்பத்துடன் அறையினுள்ளே சென்றான்.
அவன் சென்றதும் மறைவில் இருந்து வெளியே வந்து தனது இடத்தில் அமர்ந்த கண்ணன், கைபேசியில் செந்தமிழினியை அழைத்தான்.
அழைப்பை எடுத்தவள், என்னடா! சாப்பிட்டாரா?” என்று கேட்டாள்.
ரூம் உள்ள போன வேகத்தில் வெளியே வந்து ஒவ்வொருத்தரையா பார்த்தார்.. அப்புறம் திரும்ப உள்ள போய்ட்டார்”
ஓ!”
சாப்டாரானு எப்படி பார்க்கிறது?”
ஸோ சிம்பிள்.. சாபிட்டார்னா கை கழுவ வெளியே வருவார்..  அப்போ நீ அவர் ரூம் உள்ள போய் டிஃபன் பாக்ஸ் எடுத்துட்டு வந்துடு”
அவர் ரூம் பக்கத்திலேயே வாஷ் ரூம் இருக்குது.. உடனே வந்திடுவார்”
ஒரு பாக்ஸ் எடுத்துட்டு வர உனக்கு எவ்ளோ நேரம் வேணும்?”
பக்கி.. சாப்பிட்டாரானு தெரிய வேண்டாமா? ஒருவேளை அவர் அதை சாப்பிடாம சும்மா ரெஸ்ட்ரூம் போய், நான் நுங்கு இருக்கிற பாக்ஸ் எடுத்துட்டு வந்துட்டா என்ன செய்றது?”
அடேய் லகுட பாண்டி.. நுங்கு உள்ள இருந்தா பாக்ஸ் வெயிட்டா இருக்கும்..”
ஹி.. ஹி.. ஆமால”
ஆமா தான்.. ஒழுங்கா வேலையைப் பாரு”
எந்த வேலையை?”
நான் கொடுத்த வேலையைத் தான்”
இன்னைக்கு லன்ச் உன்னோட ட்ரீட்”
ஹலோ! சிக்னல் இல்லைனு நினைக்கிறேன்.. வந்து பேசுறேன்” என்று அவள் அழைப்பைத் துண்டிக்கப் போக,
அவன் அவசரமாக, டெம்போலாம் வச்சு கடத்தி இருக்கிறேன் பாஸ்.. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க” என்றான். (‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் வரும் வசனம்)
அப்டிங்கிற!”
பின்ன! அதிகாலை ஏழு மணிக்கு எந்திரிச்சு, அவசர அவசரமா மேகி குளியல் போட்டு, கிளம்பி, நுங்கு வாங்கிட்டு எட்டரை மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்து உட்கார்ந்து இருக்கிறேன்..”   
சரி பொழச்சுப் போ..”
இது நல்ல பிள்ளைக்கு அழகு”
ஆனா லன்ச் வேணாம்.. டின்னர்”
ஏதோ ஒன்னு” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.
உள்ளே சென்ற அத்வைத், இப்போ என்ன செய்ய! இதை சாப்பிடுவோமா வேண்டாமா?’ என்று மனதினுள் சிறு பட்டிமன்றம் நடத்தினான்.
நுங்கு அவனை ‘வா.. வா’ என்று அழைப்பது போல் தோன்ற, ஒன்றை கையில் எடுத்தான்.
நுங்கு நல்ல இளசாக இருக்கவும், தோல் மெலிதாக தான் இருந்தது. தோலை நீக்காமல் வாயில் போட்டுச் சுவைத்தான். அதனை அவன் கடித்ததும் உள்ளே இருந்த சாறு தித்திப்பையும், தோல் பகுதி சிறு துவர்ப்பையும் கொடுக்க, நுங்கு தொண்டையில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது. ஒவ்வொன்றாக எடுத்து ரசித்துச் சுவைத்தான்.
சில வருடங்களாகவே உணவின் மீது நாட்டம் இன்றி வைத்ததை உண்டுவிட்டு வருபவன் இன்று அந்த நுங்கை ரசித்து உண்டான். தன்னுள் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை அவனும் உணரவில்லை, தன்னால் அவன் மாறுவதை அவளும் அறியவில்லை.
உண்டு முடித்தவனின் மனம்,ச.. அதுக்குள்ள காலி ஆகிடுச்சே!’ என்று நினைத்தது.
உண்டு முடித்த பின், யாரு இதை வைத்தது?’ என்ற கேள்வி மீண்டும் அவனுள் எழுந்தது. சிறு தோள் குலுக்கலுடன் எழுந்து சென்று கையைக் கழுவி வந்த பொழுது, அந்த உணவு பெட்டி அவனது அறையில் இல்லை.
அதைக் கவனித்தவன், என்னடா இது! நம்மை சுத்தி என்ன நடக்குது! யாரோட விளையாட்டு இது?’ என்று யோசித்தான்.
பின், கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்! நாம வேலையைப் பார்ப்போம்’ என்று கூறிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தான். அதன் பிறகு அவனது சிந்தனை முழுவதும் வேலை.. வேலை மட்டுமே.
மதிய உணவு இடைவேளையில் செந்தமிழினி, கண்ணன் மற்றும் லட்சுமி உணவறைக்குச் சென்ற பொழுது அத்வைத் ஒரு மேசையில் தனியாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்.
செந்தமிழினி அத்வைத் இருந்த மேசையை சுட்டிக் காட்டி, அங்க இடம் இருக்குது” என்றாள்.
லட்சுமி முறைப்புடன், உனக்கு ஏன்டி இந்தக் கொலைவெறி! சாப்பிடும் போதாவது என்னை நிம்மதியா சாப்பிட விடு” என்றாள்.
அங்கே உட்கார்ந்தாலும் நிம்மதியாச் சாப்பிடலாம்.. வா.. இன்னைக்கு நாம அங்க தான் உட்காரப் போறோம்”
லட்சுமி சட்டென்று நின்றுவிட, அவளது கையைப் பற்றி இழுத்தபடி செந்தமிழினி, ரொம்பச் செய்யாம வாடி” என்றாள்.
யாரு! நான் ரொம்ப செய்றேனா?”
பின்ன இல்லையா?”
இதெல்லாம் நியாயமே இல்லைடி”
அதெல்லாம் நியாயம் தான்.” என்ற போது அத்வைத் அமர்ந்திருந்த மேசை வந்திருக்க,
செந்தமிழினி புன்னகையுடன், ஹாய் பாஸ்.. இங்கே யாரும் உட்கார வராங்களா?” என்று கேட்டாள்.
இல்லை.. ஆனா எனக்கு தனியா..” என்றவனின் பேச்சை கண்டு கொள்ளாத செந்தமிழினி,
நண்பனைப் பார்த்து, ஓகேடா நீ பாஸ் பக்கத்தில் உட்காரு.. நானும் லட்சுவும் இங்கே உட்காருறோம்” என்று கூறி அத்வைத் எதிரில் அமர்ந்து தோழியையும் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள்.
கண்ணன் அத்வைத் அருகே அமர்ந்தான்.
சபை நாகரிகம் கருதி அத்வைத் அதற்கு மேல் அவர்கள் அமர்வதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
செந்தமிழினியும் லட்சுமியும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருக்க, கண்ணன் அலுவலக உணவகத்தில் வாங்கி இருந்தான்.
மூவரும் உணவை பகிர்ந்து உண்ண, அத்வைத் அவர்களை கண்டுக் கொள்ளாமல் என்ன உண்ணுகிறோம் என்றே தெரியாமல் உண்டு கொண்டிருந்தான்.
செந்தமிழினி, பாஸ்.. ஷேர் செய்து சாப்பிடுற பழக்கமெல்லாம் இல்லையா?” என்று பேச்சு கொடுத்தாள்.
அவனோ, சாப்பிடும் போது பேசுறது எனக்குப் பிடிக்காது” என்று பேச்சை கத்தரிக்கப் பார்க்க, நடக்குமா நம்ம செந்தமிழினியிடம்!
பேசத் தானே பிடிக்காது.. சாப்பாட்டை ஷேர் செய்யுங்க.. வாடையே செம தூக்கலா இருக்குது” என்றபடி தனது உணவு பெட்டியின் மூடியை அவன் பக்கம் நகர்த்தினாள்.
லட்சுமி அதிர்ச்சியுடன் தோழியைப் பார்க்க, கண்ணனோ உணவை உண்டு கொண்டிருந்தான்.
அத்வைத், என்னடா இது!’ என்று விழிக்க,
செந்தமிழினி, ஓ! உங்க சாப்பாட்டை நான் கேட்டிருவேன்னு பயந்து தான் பேச பிடிக்காதுனு புருடா விட்டீங்களா?” என்றாள்.
அவன் சிறு முறைப்புடன், எனக்கு ஷேர் செய்து பழக்கம் இல்லை” என்றான்.
இனி பழகிக்கோங்க..” என்றவள் அவனது உணவு பெட்டியின் மூடியில் தனது உணவை கரண்டியினால் சிறிதளவு எடுத்து வைத்தாள்.
ப்ச்” என்று சிறு சத்தத்தை எழுப்பியவன், என்னை தொல்லை செய்யாதே!’ என்ற பார்வை பார்த்தான்.
அதை புரிந்தும் புரியாதது போல் செந்தமிழினி, நான் செய்யலை.. ஸோ, பயப்படாம சாப்பிடுங்க பாஸ்.. நிஜமாவே செம டேஸ்ட்டா இருக்கும்.” என்றாள்.
அவன் வேறு வழி இல்லாமல் அவளது உணவை உண்ணவும்,
அவள் மகிழ்ச்சியுடன், டேஸ்ட் எப்படி? நிஜமாவே செம டேஸ்ட் இல்லையா பாஸ்?” என்று கேட்டாள்.
மெலிதாக, ஹ்ம்ம்” என்றபடி தலை அசைத்தான்.
பாஸ்.. இது போங்கு” என்றாள்.
அவன் புரியாமல் பார்க்கவும், ஷேரிங்னா நீங்களும் தரணும்” என்றாள்.
ஓ மை காட்!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் தனது உணவில் சிறு பகுதியை தனது கரண்டியினால் எடுத்து அவளது மூடியில் வைத்தான்.
கண்ணன், சார்.. எங்களுக்கும் ஷேர் செய்யலாம்.” என்றான்.
அத்வைத் உணவு பெட்டியை கையில் எடுக்க, கண்ணன், “பாக்ஸ்ஸோடலாம் வேண்டாம் சார்” என்றான்.
அத்வைத் முறைப்புடன் தனது கரண்டியினால் சிறிதளவு உணவை கண்ணனின் தட்டில் வைத்தான்.
ஹி.. ஹி” என்று அசடு வழிந்த கண்ணன் அமைதியாக உண்ண ஆர்மபித்தான்.
செந்தமிழினி, வாவ்.. செம டேஸ்ட் பாஸ் உங்க ஃபுட்..” என்றாள்.
அத்வைத் எதுவும் பதில் கூறவில்லை.
என்ன பாஸ்! திடீர் மௌன விரதமா?” என்று கேட்டாள்.
அவன் அப்பொழுதும் அமைதியாக இருக்க, “இப்போ புரிஞ்சுடுச்சு பாஸ்” என்று கூறி நிறுத்தினாள்.
என்ன புரிந்தது?’ என்று அவன் கேட்கவில்லை.
அதை அவளும் எதிர்பார்க்காமல், என்ன புரிந்ததுனு நீங்க கேட்கலைனாலும் நான் சொல்லுவேன்.. எங்கே பதில் பேசினா உங்க சாப்பாட்டை திரும்ப கேட்டிருவேனோனு தானே அமைதியா இருக்கிறீங்க! சரியா பாஸ்!” என்றாள்.
அவனது மௌனத்தை பொருட் படுத்தாமல், சண்டை போட, இல்லை திட்ட மட்டும் தான் வாய் திறப்பீங்களா பாஸ்?” என்று கேட்டாள்.
அவன் முறைப்புடன், கால் மீ அத்வைத்” என்றான்.
சின்ன சிரிப்புடன், எல்லோரையும் மாதிரியே கூப்பிட்டா எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்!” என்றாள்.
எனக்கு எல்லோரும் ஒன்று தான்” என்றான் இறுக்கமான குரலில்.
ஹலோ பாஸ்! உங்களுக்கு நான் தனியா தெரியனும்னு நான் சொல்லலை.. பத்தோட பதினொன்னா இல்லாமல், எங்கேயும் எந்த கூட்டத்திலும் தனியா தெரியனும்னு நினைப்பவள் நான்..” என்றாள் தீர்க்கமான குரலில்.
ஓ’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் அவளிடம், ஆனா இந்த ‘பாஸ்’ கொள்ளைக் கூட்ட தலைவன் மாதிரி இருக்குது” என்றான்.
நீங்களும் தலைவன் தானே! பல குழுக்களின் தலைவன்”
எல்லா பி.எல்-லையும் இப்படி தான் கூப்பிடுவீங்களா?”
அது எப்படி! அப்போ அவங்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லாமப் போய்டுமே!”
அவன் புருவச் சுளிப்புடன் பார்க்க, என்னை பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் உடையவர்கள் தான்..” என்றாள்.
என்ன பெண்டா இவள்!’ என்று சிறு ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டான்.    ஒவ்வொரு முறையும் அவளது வெவ்வேறு பரிமாணங்கள் அவனை அவ்வாறு நினைக்கத் தூண்டியது.
லட்சுமி, என்னடா நடக்குது?’ என்று கண்களால் கண்ணனிடம் வினவ, அவனோ, எனக்கும் தெரியாது’ என்பது போல் உதட்டை பிதுக்கினான்.
அவள் ‘உனக்கு தெரியாமல் இருக்குமா!’ என்பது போல் முறைத்துப் பார்க்க, அவனோ தோள்களைக் குலுக்கினான்.
செந்தமிழினி, பாஸ் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று சிறு பீடிகையுடன் வினவ,
அவளை நேர்பார்வை பார்த்த அத்வைத், எந்த ஒரு விஷயத்தையும் யாரிடமும் கேட்க தயங்குற ஆளா நீங்க தெரியலையே!” என்றான்.

Advertisement