Monday, May 20, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    சில நொடிகள் அணைத்தபடி அமைதியாக இருந்தவள் பின், “யது கண்ணா, அம்மா சொன்னா கேட்பீங்க தானே!” என்றாள். குழந்தை அவளை அணைத்தபடியே, “ஹ்ம்ம்” என்றான். “முகத்தை மட்டும் நிமிர்த்தி, அம்மாவைப் பாருங்க” என்றாள். குழந்தை அவ்வாறே செய்யவும் அவன் நெற்றியில் முத்தமிட்டவள், “நல்லா கவனீங்க.. அம்மாவையும் யது கண்ணாவையும் யாருமே பிரிக்க முடியாது.. அம்மா அதுக்கு விடவே மாட்டேன்.”...
    அன்று மாலை நாலரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்த அத்வைத்தைப் பார்த்த மங்களம், “என்னாச்சு ராசா? சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்க! உடம்பு எதுவும் சரி இல்லையா? பார்த்தியா, அந்தச் சிறுக்கியை பொண்ணு கேட்கப் போகணும்னு சொன்னதுக்கே உனக்கு உடம்பு நோவு வந்திருச்சு” என்று ஒப்பாரி வைத்தார். அத்வைத் சற்று குரலை உயர்த்தி, “கொஞ்சம் நிறுத்துறீங்களா! நான் நல்லா...
    வேணுகோபால் அமைதியாக இருக்க, மரகதம், “இவ தான் பின் விளைவுகளைப் புரியாம பேசுறானா, நீங்களும் சிரிக்கிறீங்க! அவங்களை விட்டு விலகி இருக்கிறதால் தானே நிம்மதியா இருக்கிறோம்.” என்றார். வேணுகோபால் அமைதியான வருத்தம் நிறைந்த குரலில், “நிம்மதியா இருக்கிறோம். ஆனா, முழு மனசோட சந்தோஷமா நிறைவா இருக்கிறோமா? என் தங்கச்சியை நினைத்து நான் வருந்துறதைப் பார்த்து, நீயும்...
    மூன்றாவது முறையாக ‘யாருடா இந்த சந்து?’ என்று அத்வைத் கூறிக் கொண்டான். ஆனால் இந்த முறை ஆச்சரியத்துடன். யாரும் சட்டென்று நெருங்கிவிட முடியாத தனது மகனின் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்த அந்தப் பெண் யார் என்று ஆச்சரியத்துடன் நினைத்தான். இருந்தாலும் அதை மகனிடம் காட்டிக் கொள்ளாமல், “பேட் பீப்பிள் தான் இப்படி செய்வாங்க” என்றான்...
    சமையல் அறையில் செந்தமிழினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, பூனை நடை நடந்து உள்ளே வந்த அத்வைத், அவளைப் பின்னால் இருந்து அணைத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மார்னிங் பொண்டாட்டி.. இங்க என்ன செய்துட்டு இருக்கிற?” என்று கேட்டான். புன்னகையுடன், “இந்த கன்னம்!” என்றபடி மறு கன்னத்தையும் காட்டினாள். விரிந்த புன்னகையுடன் மறு கன்னத்திலும் முத்தமிட்டவன், “என்ன இது!...
    யோசித்துப் பார்த்த அத்வைத் யோசனையுடன், “இல்லை” என்றான். “நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.. எனக்காகக் காத்திருக்கிறீங்க” என்று அழுத்தமான குரலில் கூறி, அழைப்பைத் துண்டித்து இருந்தாள். கைபேசியை துருவிடம் நீட்டியபடி, “நீ போ.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவனின் மனம் யோசனையில் சுழன்றது. துருவ், “அத்வைத்” என்று அழைத்து ஏதோ கேட்க வர, அவனோ, “அப்புறம் பேசலாம்.....
    ‘சந்துமா’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்த குழந்தை, “சந்து-னு கூப்பிடவா?” என்று கேட்டான். “ஓ! கூப்பிடுங்களேன்” அவள் வாங்கிக் கொடுத்த பொம்மையில் பெரிய பாண்டா கரடியை காட்டி, “இது நான்..” என்றவள், குட்டியை காட்டி, “இது யது கண்ணா” என்றாள். யாதவும் மழலை சிரிப்புடன், “இது சந்து.. இது யது” என்றான். “சூப்பர்” என்றவள், “யது கண்ணாக்கு ஐஸ்-கிரீம்...
    வேணுகோபால், “என்னமா! அவங்க போனதில் இருந்து யோசிச்சிட்டே இருக்க? இதுவரை நீ இப்படி இருந்தது இல்லையே!” என்று மரகதத்தைப் பார்த்து கேட்டார். கணவரைப் பார்த்த மரகதம், “இதில் யோசிக்க வேண்டியது நிறைய இருக்குதே!” என்றார். “பொண்ணு கொடுக்கிறதா இருந்தாத் தானே நிறைய யோசிக்கனும்!” என்று அவர் கூற, மரகதம் சிறு ஆச்சரியத்துடன் பார்த்தார். வேணுகோபால், “ஒருமுறை செய்த தப்பை நான்...
    அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏழு வருஷம்! உங்க நினைப்பிலேயே, நான் இங்கே உருகிட்டு இருக்க.. நீங்க ஈசியா என்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டீங்க இல்ல! உங்களை எங்கே தேட, எப்படி தேடனு தெரியாம எவ்ளோ தவிச்சேன் தெரியுமா! உங்களுக்கு கல்யாணம்னு தெரிந்ததும் எவ்ளோ துடி துடிச்சேன் தெரியுமா! அப்போ கூட ‘நான் உங்களை காதலிச்சா நீங்களும்...
    அடுத்த நாள் காலையில் அழகான கிளிப் பச்சை நிற ‘சில்க் காட்டன்’ புடவையில் தயாராகி வந்த மகளைப் பார்த்த மரகதம், “என்ன அதிசயமா இருக்குது! சேலை கட்டச் சொன்னாக் கூட கட்ட மாட்ட! அதுவும் சீக்கிரம் கிளம்பி வந்திருக்க!” என்றார். செந்தமிழினி குறும்புப் புன்னகையுடன் மேடை ரகசிய குரலில், “அலைபாயுதே ஷாலினி மாதிரி திருட்டுத் தனமா...
    மங்களம், “அதையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும்.. நாம சொல்லிட்டே இருந்தா, குழந்தை மனசில் ஒரு விரிசல் விழும்.. அதைப் பெருசாக்கி அவளை வெறுக்கிற மாதிரி செய்து, நம்ம கைக்குள்ள போட்டுட்டாப் போதும்” என்றார் “ப்ச்.. கல்யாணமே முடிஞ்சிருச்சுனா, அதுக்கு அப்புறம் அவங்க எக்கேடோ கெட்டுப் போனா நமக்கு என்ன?” “அது எப்படி என்னை மீறி அவங்க சந்தோஷமா...
    மரகதம், “வீட்டில் ஏன் சொல்லலை?” என்று கேட்டார். “யதுவை நல்லபடியா பெத்துத் தரத்துக்கு அவ போட்ட கண்டிஷன் டைவர்ஸ் தான்.. அப்போ எனக்கு அவளோட காதலை பத்தி தெரியாததால, அவ மனசை மாத்திரலாம்னு நினைத்து சரி சொன்னேன்.. வீட்டில் யாருக்கும் தெரியாது.. அப்புறம் அவ காதலனோட உதவியில் வீட்டில் யாருக்கும் தெரியாம டைவர்ஸ் அப்ளை செய்து,...
    செந்தமிழினியும் துருவும் வீட்டிற்கு சென்ற போது சரோஜினி, யாதவ் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆறுமுகமும் மங்களமும் கல்யாணத்திற்காக ஊருக்குச் சென்றிருக்க, அத்வைத் வேலை முடிந்து வீடு திரும்பி இருக்கவில்லை. கதவைத் திறந்த சரோஜினி, ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியுடன், “ராஜாத்தி” என்று அழைத்தபடி செந்தமிழினியை அணைத்துக் கொண்டார். அவரின் பாச மழையில் நனைந்தபடியே செந்தமிழினி துருவை முறைத்தாள். ‘இன்னைக்கு...
    “ப்ச்.. வீடு இப்போ இருக்கிற நிலைமைக்கு..” என்று அவன் இழுத்து நிறுத்த, அவள், “ஏன்? அப்படி என்ன நிலைமை?” என்று சாதாரணமாகக் கேட்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா?” “எனக்குத் தெரிந்து கப்பல் மூழ்குற நிலைமையில் இல்லை” “அத்வைத்தை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி அம்மாவும் அப்பாவும் போராடிப் பார்த்துட்டாங்க.. நானும் முயற்சி செய்றேன்.. ஒன்னும் வேலைக்கு ஆகலை..” “கிழவி, சும்மா இருக்காதே!” “கிழவி...
    கண்ணன் அத்வைத்திடம் கை குலுக்கியபடி, “கங்க்ராட்ஸ் சார்” என்றான். அத்வைத், “தேங்க்ஸ்” என்றதும், கண்ணன், “உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சார்” என்றான். செந்தமிழினி அவனை முறைக்க, அத்வைத் உதட்டோர மென்னகையுடன், “தேங்க்ஸ் அகேன்” என்றான். இப்பொழுது அவள் அத்வைத்தை முறைத்தாள். துருவ், “தப்பா சொல்றடா.. இந்த நல்லவனை கட்டிக்கிற இவளோட மன தைரியத்தை தான் பாராட்டனும்” என்றான். அத்வைத்தை பார்த்து...
    இரண்டு ஒலித்தத்தையும் கேட்ட அருள் மொழியின் மனதில் முதலில் தோன்றியது, பிரம்மிப்பும் பெருமையும் தான். அதன் பிறகே ‘இதை எப்படி தாய் தந்தையிடம் புரிய வைக்கப் போகிறோம்.’ என்று மனதினுள் அலறினான். ஒருவாறு திடத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டு ஒலித்தத்தையும் புலனம் மூலம் தந்தைக்கு அனுப்பி விட்டு அழைத்தான். அப்பொழுது தான் செந்தமிழினி அத்வைத் கல்யாணத்தை பற்றி...
    அருள்மொழி, “சொத்தை வச்சு தான் பிரச்சனையை ஆரம்பிச்சாங்க.. ஆனா, வேற மாதிரி” என்றான். துருவ், “என்ன தான் நடந்துது?” என்று கேட்க, அத்வைத், “அமைதியா இரு.. அவனை சொல்ல விடு” என்றான். அருள்மொழி, “ஹ்ம்ம்.. அன்னைக்கு எங்க வீட்டுக்கு அத்தை மாமா கூட வந்த உங்க ஆச்சி சாதாரணமா பேசின பேச்சை, வேணும்னே சண்டையா மாத்திட்டாங்க.. அத்தைக்கு பிடிக்குமேனு...
    இதே நேரத்தில் வெளியே வீட்டின் வாயிலில் அருள்மொழி அத்வைத்தைப் பார்த்து, “ரொம்ப முறைக்காதடா.. அம்மாவை சமாதானம் செஞ்சு, நல்ல செய்தியோடு உன்னை வந்து பார்க்கலாம்னு நினைத்தேன்.” என்றான். “நீங்கள்ளாம் பெரிய ஆள்.. எங்களை மாதிரியா!” “டேய்.. நான் தான் சொல்றேனே!” “பேசாதடா.. சென்னை வந்திருக்கிறேன்னு ஒரு போன் கூட செய்ய முடியலை.” என்றவன், “துருவுக்கு போன் போட முடியுது.....
    யாதவ், “நாம பஸ்ட்ல இருந்து சேர்ந்து பார்ப்போமா?” என்று கேட்டான். அவள், “இன்னொரு நாள் முதல்ல இருந்து பார்க்கலாம்.. இப்போ, கிளைமாக்ஸ்  மட்டும் பார்ப்போம்.. ஓகே.” “ஓகே” இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அவள் படத்தின் காட்சிகளை பற்றி சிரித்துப் பேசிய படி  பார்க்க, குழந்தை  அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்தான். இதுவரை யாரும் அவனுடன்  இப்படி...
    error: Content is protected !!