Advertisement

அத்வைத் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவனது கைபேசிக்கு நேகா அழைத்தாள்.
இவ எதுக்கு கூப்பிடுறா! ஆச்சி வேலையா தான் இருக்கும்!’ என்று எரிச்சலுடன் நினைத்தவன்,  அவளது அழைப்பை எடுக்கவில்லை.
ஆம்! அது மங்களத்தின் வேலை தான்.
வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் முன் மங்களத்திடம், நாங்க கிளம்பினதுக்கு அப்புறம் அம்மாவை எதுவும் சொன்னீங்கனு தெரிந்தது!” என்று வாக்கியத்தை முடிக்காமல் மிரட்டலாக நிறுத்திய அத்வைத் மகனிடம்,
யது கண்ணா பெரிய ஆச்சி நம்ம ஆச்சியை எதுவும் சொன்னா, உடனே டாடா கிட்ட சொல்றீங்க.. ஓகே?” என்றான்.
குழந்தை தலையை ஆட்டியபடி, ஓகே டாடா”
ஓகே கண்ணா.. டாடா ஆபீஸ் போயிட்டு வரேன்” என்றதும்,
குழந்தை, பை டாடா.. நான் ஆச்சியை பார்த்துக்கிறேன்” என்று பெரிய மனிதனாகக் கூறினான். அவனது பாவனையில் மங்களத்தைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சன்னமான புன்னகை உதித்தது.
மங்களம் முறைத்துக் கொண்டு நிற்க, அவரை கண்டுக்கொள்ளாமல் அன்னை தந்தையிடம் கூறிவிட்டு அத்வைத் அலுவலகம் கிளம்பினான்.
சரோஜினியிடம், பை மா” என்றும், யாதவிடம், பை யது குட்டி” என்றும் கூறிய துருவ்,
மங்களத்தை பார்த்து, ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்குத் தெரியுமா…” என்று பாடியபடி கிளம்பிச் சென்றான்.
மங்களம் சரோஜினியை முறைக்க, யாதவ், பெரிய ஆச்சி, ஆச்சிய முறைக்காதீங்க.. டாடா சொன்னா தானே!” என்றான்.
எல்லாம் என் நேரம்டா” என்ற மங்களம் கோபத்துடன் தனது அறைக்குச் சென்றார்.
சரோஜினி பெருமூச்சை வெளியிட, யாதவ், ஆச்சி ஸ்மைல்” என்றான்.
என் தங்கமே!” என்றபடி உச்சி முகர்ந்த சரோஜினி, மென்னகையுடன் பேரனின் கன்னத்தில் முத்தமிட்டார்.
பின், ஆச்சி சமையல் செஞ்சுட்டு வரேன்.. அதுவரை யது குட்டி, சமத்தா தாத்தா கூட விளையாடிட்டு இரு” என்றபடி சமையல் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரம் பேரனுடன் விளையாடிய ஆறுமுகம், தாத்தாக்கு டயர்டா இருக்குது.. கொஞ்ச நேரம் நியூஸ் பார்த்துட்டு வரேன்” என்று கூறி எழுந்து சென்றார்.
அப்பொழுது அங்கே வந்த மங்களம், யது குட்டி.. பெரிய ஆச்சி ஊரில் இல்லாதப்ப யாரும் நம்ம வீட்டுக்கு புதுசா வந்தாங்களா?” என்று அன்பாக கேட்டார்.
குழந்தை உற்சாகத்துடன், ஆமா பெரிய ஆச்சி.. சந்துமா வந்தா..” என்று கூறிக் கொண்டிருக்க, அவனது பேச்சை இடையிட்ட மங்களம்,
சந்துமா முழு பெயர் என்ன? செந்தமிழினியா?” என்று கேட்டார்.
குழந்தை அதிகரித்த உற்சாகத்துடன், ஆமா.. உங்களுக்கு சந்துமாவை தெரியுமா?” என்று கேட்டபடி சந்துமா புராணத்தை ஆரம்பித்து விட்டான்.
ஒரு நிமிடத்திற்கு மேல் அதை கேட்க முடியாமல் எரிச்சலையும் கோபத்தையும் தன்னுள் மறைத்தபடி இயல்பான குரலில், சந்துமா அவ்ளோ சூப்பரா! யார் கூட வந்தா? எப்போ வந்தா?” என்று கேட்டார்.
சித்தா கூட வந்தா..” என்ற குழந்தை சற்று யோசித்த பின், டூ டேஸ் அப்புறம் வந்தா.. இல்லை இல்லை.. டூ டேஸ் முன்ன வந்தா” என்றான்.
நீ ஏன் சந்துமானு கூப்பிடுற? அவ தான் அப்படி கூப்பிடச் சொன்னாளா?” என்று கேட்டவர் மனதினுள் அவ்வளவு வன்மம் இருந்தது.
எனக்கு அப்படி கூப்பிட தான் பிடிச்சு இருக்குது”
அவ அப்படி கூப்பிட சொன்னாளா?”
இல்லையே!”
யது குட்டி பெரிய ஆச்சி உன் நல்லதுக்குத் தானே சொல்லுவேன்! அந்த செந்தமிழினி கூட சேராத.. அவ ரொம்ப கெட்டவ”
யாதவ் முறைப்புடன், சந்துமா பேட் கேர்ள் சொல்லாதீங்க” என்றான்.
நான் நிஜமா தான் சொல்றேன்.. அவ ரொம்ப மோசமானவ.. அவ..” என்றவரின் பேச்சை இடையிட்ட குழந்தை,
நோ.. நோ.. சந்துமா அப்படி இல்லை” என்று சற்று அழுத்தத்துடன் கூறினான்.
சும்மா சும்மா சந்துமா சொல்லாத.. நேகா சித்தி தான் இனி உனக்கு அம்மா.. நேகாமா உன்னை ரொம்ப நல்லாப் பார்த்துப்பா..” என்றவரின் பேச்சை மீண்டும் இடையிட்ட குழந்தை,
எனக்கு சந்துமா தான் வேணும்” என்றான்.
எப்படி குழந்தையை மயக்கி வச்சிருக்கா.. நல்லா இருப்பாளா அந்தச் சண்டாளி! நாசமாப் போறவ.. கட்டையில போக’ என்று அவர் முணுமுணுப்பாக சாபமிட,
யாதவ் முறைப்புடன், நீங்க பெரிய ஆச்சி இல்லை.. பேய் ஆச்சி தான்” என்று கூறி விட்டுச் சென்று விட்டான். அவனுக்கு அவரது முணுமுணுப்பு கேட்டாலும் அர்த்தம் புரியவில்லை. ஆனால், அவரது முக பாவத்தில் இருந்து செந்தமிழினியை திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது.
யாதவின் இறுதி கூற்றில் செந்தமிழினியை மேலும் வசை பாடியபடி அறைக்குச் சென்றவர் மகளை கைபேசியில் அழைத்தார்.
மங்களத்தின் மகளும், நேகா மற்றும் அத்வைத்தின் முதல் மனைவி மேனகாவின் அன்னையுமான அம்பிகா அழைப்பை எடுத்ததும், மங்களம், போனை எடுக்க இவ்வளவு நேரமா?” என்று எரிந்து விழுந்தார்.
நான் என்ன வெட்டியாவா இருக்கிறேன்?” என்று அம்பிகாவும் சற்று காட்டத்துடன் பேச,
மங்களம், இங்க என்ன நடக்குதுனு தெரிந்தா இப்படி பேச மாட்ட” என்றார்.
என்னாச்சுமா?”
அத்வைத் அந்த எடுபட்ட சிறுக்கி, தமிழைத் தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்..”
என்னமா சொல்ற? அண்ணன் சும்மாவா இருந்தார்?” என்று கோபத்துடன் கேட்டார்.
ஹ்ம்ம்.. அவன் பொண்ணு கேட்க ஒத்துக்கிட்டான்.”
என்னமா சொல்ற?” என்று அதிர்ச்சியுடன் கத்திய அம்பிகா, பின் கோபத்துடன், “நீ என்ன செய்துட்டு இருந்த?” என்று கேட்டார்.
எப்படி பேசினாலும் அத்வைத் அணை போடுறான்..” என்றவரின் பேச்சை இடையிட்ட அம்பிகா,
அவனை சமாளிக்க உன்னால முடியலையா!” என்று எரிச்சலுடன் கூறினார்.
மங்களமும் எரிச்சலுடன், ஏன்டி சொல்ல மாட்ட! அங்க இருந்துட்டு நல்ல வக்கனையா கேள்வி கேளு.. உன்னை என்னைக்கே வந்து பேசச் சொன்னேன்?” என்று பொரிந்தார்.
அத்வைத் என் மேல கோபமா இருக்கானேனு பார்த்தேன்.. அதான் முதல்ல நேகா கூட பழகட்டும்னு நினைச்சேன்.”
நல்லா நினைச்ச! அவன் முகத்தைத் திருப்பினா இவளும் திருப்பிட்டு வந்திடுறா.. கொஞ்சமாச்சும் அவன் மனசை மாத்த முயற்சி செய்றாளா! இல்லை, யது மனசிலாவது இடம் பிடிச்சாளானா, அதுவும் இல்லை!” என்று மங்களம் நொடித்தார்.
நானும் சொல்லிப் பார்த்துட்டேன்.. இப்போ என்னமா செய்ய?”
நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து பேசு”
அவருக்கு  இதில்  பெருசா  விருப்பம்  இல்லைமா.. பேசி கூட்டிட்டு வரேன்.”
யது தான், நம்ம துருப்பு சீட்டு”
நானும் யதுவை வச்சு தான் அந்த மனுஷன் கிட்ட பேசுறேன்..” என்ற அம்பிகா கோபமும் வெறுப்புமாக, அந்தக் குடும்பத்தை அத்வைத் எப்போ எங்க பார்த்தான்?” என்று கேட்டார்.
அத்வைத் ஆபீஸ்ல தான் அந்தச் சிறுக்கி வேலை பார்க்கிறா போல.. ஆனா, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது, சின்னக் கழுதை தான்”
துருவா?”
அந்தக் கழுதை தான்” என்றவர், வந்தவ ஒரே நாளில் யதுவை அம்மானு கூப்பிடுற அளவுக்கு மயக்கி வச்சிருக்கா”
என்னது!” என்று அதிர்ந்தவர், எல்லாம் நீ ஊருக்குப் போனதால் வந்தது.. உன்னை யாரு ஊருக்குப் போகச் சொன்னா?” என்று எரிந்து விழ,
மங்களம், இப்போ ஆக வேண்டியதை பாரு.. நீ நேகாவை அத்வைத் கிட்ட பேசச் சொல்லு” என்றார்.
என்னனு பேசச் சொல்ல?”
என்னடி இவ! கூறு கெட்டவளா இருக்கா! என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே அத்தான்.. அது இதுனு அழற மாதிரி பேசச் சொல்லு”
சரி மா..” என்றவர், அந்த மரகதம் ஒத்துக் கிட்டாளா?” என்று கேட்டார்.
இனி தானே உன் அண்ணன் பேசப் போறான்”
நீ பேசினதை மறந்துட்டு பொண்ணு கொடுப்பா?”
கொடுக்க விட்டிருவேனா என்ன!”
என்ன ஆனாலும், அந்தக் குடும்பம் திரும்ப வந்து ஒட்டிக்காம பார்த்துக்கோமா.”
அதெல்லாம் பார்த்துக்கலாம்.. இந்தக் கல்யாண பேச்சை வச்சே, நிரந்தரமா பிரிச்சிடலாம்.”
சரிமா.. பார்த்துக்கோ” என்று கூறி அழைப்பைத் துண்டித்த அம்பிகா, மகளை அழைத்து விஷயத்தைக் கூறினார். அதன் விளைவே நேகா அத்வைத்தை அழைத்தது.
அனுமதி பெற்றுக் கொண்டு அத்வைத் அறையினுள்ளே வந்த செந்தமிழினி, உங்க கூட கொஞ்சம் பேசணும்.” என்றாள்.
அவன் இருந்த மனநிலையில், ஆபீஸ்ஸில் பெர்சனல் விஷயம் பேசுறது, எனக்குப் பிடிக்காது” என்று சற்று எரிந்து விழுந்தான்,.
அதில் சிறிதும் பாதிக்கப் படாதவளாக அவள் அலட்டிக் கொள்ளாமல், சும்மா ரூல்ஸ் ராமானுஜமா பேசாதீங்க அத்தான்.. இப்போ பிரேக் டைம் தான்.” என்றாள்.
உனக்கு தான் பிரேக் டைம்.. நான் வந்ததே லேட் இன்னைக்கு.. என்னை வேலை செய்ய விடு”
அதான் ஈவ்னிங் ஓவர் டைம் பார்க்கிறீங்களே! இல்லை, வீட்டுக்கு போய் பார்க்கிறீங்களே!”
ப்ச்.. வேலை நேரத்தில் டிஸ்டர்ப் செய்யாத தமிழ்”
அப்போ நைட் டின்னர் ரெஸ்டாரென்ட் கூட்டிட்டுப் போங்க” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் கூற,
அவன் முறைப்புடன் சற்று கோபக் குரலில், என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கிற? உன்னை கல்யாணம் செய்துக்க ஓகே சொன்னா, உன் இஷ்டத்துக்கு ஆடுவேன்னு நினைப்பா?” என்றான்.
அவள் அமைதியான அழுத்தமான பார்வை மற்றும் குரலில், பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன்.. நீங்க என்னை கல்யாணம் செய்துக்க ஓகே சொல்லலை.. என்னை கல்யாணமே செய்துக்கிட்டீங்க.. அதுவும், என் சம்மதத்தை கேட்காமலேயே!” என்றாள்.
அதைக் கேட்டதும் அத்வைத் முகமும் மனமும் இறுகி விட, என்ன தான் அவன் மேல் அவளுக்கு கோபம் இருந்தாலும், அவனை அப்படி பார்க்க பாவமாகத் தான் இருந்தது.
அவள் தனது கோபத்தை ஓரம்கட்டி வைத்து விட்டு, என்னைக் கட்டி மேய்கிறது கஷ்டமான வேலை தான்.. பட் இருந்தாலும் மனசை தளர விடாதீங்க அத்தான்.. விடா முயற்சி விஷ்வரூப வெற்றி.” என்றாள்.
அவள் ஏற்ற இறுக்கத்துடன் கூறிய விதத்தில் அவனது இறுக்கம் தளர்ந்து, உதட்டோரம் மென்னகை அரும்பப் பார்க்க,
அவள், அப்படியே தான்.. அப்படித் தான்.. இன்னும் கொஞ்சம் தான்.. ஹ்ம்ம்.. அப்படியே சிரிச்சிடுங்க..” என்றாள்.
அவனது உதட்டோரம் மென்னகை பூக்கவும், இது நல்ல பிள்ளைக்கு அழகு” என்றாள்.
அவன் மென்னகையுடன், நீ மாறவே இல்லை தமிழ்” என்றான்.
ஆனா நீங்க மாறிட்டீங்களே அத்து! உங்க முகத்தில் உயிர்ப்பே இல்லையே!’ என்று நினைத்தவள், உங்களோட பழைய உயிர்ப்பைக் கொண்டு வருவேன்’ என்று மனதினுள் கூறிக் கொண்டாள்.
நான் உனக்காக தான் யோசிக்கிறேன்.. நீ சின்ன பொண்ணு.. நான் நிதானம் இல்லாம செஞ்ச காரியத்தினால், இப்போ உன் வாழ்க்கை..” என்று குற்ற உணர்ச்சி கலந்த வருத்ததுடன் பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சை இடையிட்டவள்,
முறைப்புடன், முதல்ல இப்படி பேசுறதை நிறுத்துங்க, அத்தான்.. உங்களுக்கு என்ன குறை?” என்றாள்.
அவன் விரக்த்தியாகச் சிரிக்க,
அவள்   சிறு   கோபத்துடன், முதல்ல,   இந்த    வாழ்வே மாயம் ரீலை நிறுத்துங்க.. நீங்க இப்பவும் எப்பவுமே பெஸ்ட் தான்.. கல்லுக்கும் வைரத்துக்கும் வித்யாசம் தெரியாத கூமுட்டை அவ.. அந்தப் பண்ணாடை போனதுக்கு சந்தோஷமா கொண்டாடனும்.. அதை விட்டுட்டு வயலின் வாசிச்சுட்டு இருக்கிறீங்க” என்று பொரிந்தாள்.
முடிச்சிட்டீங்களா?”
அவள் முறைப்புடன், என்ன நக்கலா?” என்று வினவ,
ச ச.. மேடம் முடிச்சிட்டீங்களானு மரியாதையா கேட்டேன்” என்று கூறியவன் குரலோ ‘ஆமா நக்கல் தான்’ என்றது.
இது தான் ஒரிஜினல் அத்து’ என்று மனதினுள் நினைத்தவள், ஓ இது தான் மரியாதையா பேசுறதா!” என்றவளின் குரலில் அவனுக்கு மேல் நக்கல் இருந்தது.
அவளது நக்கலில் அவனுக்கு எரிச்சல் வரவில்லை, மாறாக மனம் அதை ரசித்தது. அவளது கோபமும் எரிச்சலும் தனக்காக என்ற எண்ணமே இனித்தது.
சில நொடிகள் மௌனத்திற்குப் பின், அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், அவளைப் பத்திப் பேசினா ஏன் இப்படி மாறிடுறீங்க?” என்று கேட்டாள்.
எப்படி?”
அவள் அமைதியாகப் பார்க்கவும், அவன், அவளை பத்தி பேசுறப்ப நான் இறுகுறது அவளை நினைத்து இல்லை.. அவளால் நான் அடைந்த, அடைகிற அவமானங்களை நினைத்து.” என்று சொல்லும் போதே மீண்டும் இறுகினான்.
நாம ஒழுங்கா இருந்தாலும், பேசுறவங்க பேசத் தான்   செய்வாங்க.. இப்போ நீங்க பீல் செய்றதால் அவங்க பேசுறதை நிறுத்திடப் போறாங்களா? ஸோ, எப்பவும் நீங்க நீங்களா இருங்க.. உங்களை புரிஞ்சுக்கிட்டவங்க கிட்ட உங்களை நீங்க விளக்க தேவையே இல்லை.. அதே, உங்களை புரிஞ்சுக்காத அவங்களுக்கு நீங்க விளக்கம் கொடுக்க தேவை இல்லை. ஏன்னா அவங்களுக்கு அது புரியாது.. ஸோ அவங்களைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையே இல்லை..”
அப்படிங்களா பாட்டி.. அப்படியே நான் எப்படி இருக்கணும் என்கிறதையும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திடுங்களேன்.”
அவள் அவனைச் செல்லமாக முறைக்க,
சரி என்ன பேசணும்?” என்று கேட்டான். அப்பொழுது நேகா மீண்டும் அழைத்தாள்.
மேசை மீது இருந்த கைபேசியைப் பார்த்தவனின் மனநிலை மீண்டும் எரிச்சலை தத்தெடுத்தது.
எட்டி அவனது கைபேசியை பார்த்தவள், எடுத்து பேசிட வேண்டியது தானே!” என்றாள்.
அவன் அவளை முறைக்க, அந்த முறைப்பு, உன் வேலையை மட்டும் நீ பார்’ என்றது.
அதை புரிந்துக் கொண்டாலும், ஒருமுறை எடுத்துப் பேசி கிளியரா சொல்லிடலாமே! அதான் சொன்னேன்.” என்றாள்.
அவளது குரல், சொல்றதை சொல்லிட்டேன்.. அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்று சொல்லாமல் சொல்லியது.
அழைப்பு மீண்டும் வரவும், இந்த முறை அவன் அழைப்பை எடுக்கப் போக, செந்தமிழினி, ஸ்பீக்கர் போடுங்க.” என்றாள்.
அவள் கூறியது போல் ஒலிபெருக்கியை இயக்கியவன், ஹலோ” என்றான்.
எடுத்ததும் நேகா, நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கவே இல்லை அத்தான்” என்று குறைப்பட,
அத்வைத் எரிச்சலை அடக்கியபடி, என் நேரத்தை வேஸ்ட்டாக்காம விஷயத்தைச் சொல்லு” என்றான்.
இனி என் கூட பேசுறது எல்லாம் உங்களுக்கு அப்படித் தான் இருக்கும்” என்று குத்தலாகப் பேசினாள்.
அவன் வெளிப்படையாகவே எரிச்சலுடன், டிராமா பண்ணாம விஷயத்தைச் சொல்லு.. இல்லை போனை வை” என்றான்.
நான் டிராமா பண்றேனா அத்தான்?” என்று வரவழைத்த உருக்கமான குரலில் அவள் வினவ,
அவனோ அசராமல், சரி, நான் போனை வைக்கிறேன்” என்றான்.
நேகா அவசரமாக, என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே அத்தான்”  என்றாள்.
அவன்     எரிச்சலும்    கோபமுமாக, உன்   குடும்பத்தில் ஒருத்தருக்குக் கூட மனசாட்சியே கிடையாதா? ஆச்சி பேச்சை கேட்டு இப்படி லூசுத்தனமாப் பேசாத.. இன்னொரு முறை இப்படி போன் செய்தோ, நேரில் வந்தோ டிராமா பண்ண முயற்சி செய்த, நடக்கிறதே வேற!” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பின் செந்தமிழினியைப் பார்த்து, இதுக்குத் தான் சொன்னேன்.. கேட்டியா! எனக்கு தேவையா இது?” என்று கத்தினான்.
அவள் அமைதியாக மேசை மீது இருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக் கொடுத்தாள்.
அவன் முறைப்புடனேயே வாங்கி, நீரைப் பருகினான்.
பின் வரவழைத்த அமைதிக் குரலில், என்ன பேச வந்த?” என்று கேட்டான்.
அவள் நேரத்தைப் பார்க்க, அவன், பரவா இல்லை சொல்லு” என்றான்.
இல்லை. லன்ச் பிரேக்கில் பேசுறேன்.. நான் இங்கே வந்து நேரமாச்சு.. நம்ம ஆபீஸ்ஸில் இருக்கிற ஜந்துக்கள் பேச, நாமே இடம் கொடுக்கக் கூடாது”
அப்போ, அட்வைஸ் மத்தவங்களுக்குத் தான்”
அவங்க பேசுறதை நான் பொருட்படுத்த மாட்டேன் தான், அதுக்காக நாமே அவங்க பேச சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கக் கூடாது”
சிறு ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தவன், முன்ன விட நல்லாவே பேசக் கத்துகிட்ட” என்றான்.
அவள் மென்னகையுடன், என்னோட அத்தான் கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்.” என்றாள்.
அவன் இப்பொழுது செல்ல முறைப்புடன், என்ன நக்கலா?” என்று கேட்க,
மறுப்பாகத் தலை அசைத்தவள், நிஜமா தான் சொல்றேன், அத்தான்.. சின்ன வயசில் இருந்து உங்களைப் பார்த்து தானே வளர்ந்தேன்.. நீங்க எப்போதுமே அமைதி தான். ஆனாபேச  வேண்டியதை கரெக்ட்டா பாயிண்ட்டாப் பேசுவீங்க.. எனக்கு அது பிடிக்கும்.. நீங்க அழுத்தமான ஆள் தான் என்றாலும், நீங்களும் ஜாலியான ஆள் தான்னு உங்களைப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றாள் ஆழ்ந்த குரலில்.
இமைக்க மறந்து சில நொடிகள் அவளைப் பார்த்தவன், தேங்க்ஸ்” என்றான் சற்று நெகிழ்ந்த குரலில். அவளது புரிதல் காயப்பட்ட அவனது மனதை மயில் இறகால் வருடுவது போல் இருந்தது.
எப்போதும் அமைதியாவே இருக்கிற நீ ஒரு ஜடம்.. உனக்கு எப்படி ஜாலியா இருக்கிறதுனே தெரியாது’ என்றவை தான் அவனைப் பார்த்து அதிகமாக மேனகா கூறும் வார்த்தைகள்.
அவள் சொல்லிச் சொல்லி ஒரு கட்டத்தில் அவனுக்கே ‘நாம அப்படித் தான் இருக்கிறோமோ!’ என்ற சந்தேகம் கூட வந்தது உண்டு.
செந்தமிழினி வெளியே செல்லும் முன், ஒன்னு மட்டும் நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க அத்தான்.. நீங்க செய்த காரியத்தினால், உங்க மேல எனக்கு கோபம் இருக்குது தான்.. ஆனா வருத்தம் இல்லை.. என்னை நினைத்து நீங்க பீல் ஆக அவசியமே இல்லை.. நீங்க என்னை கல்யாணம் செய்ததால், என் வாழ்க்கை ஒன்னும் சீரழிஞ்சு போகலை.. நிச்சயம் நான் ரொம்ப சந்தோஷமாவே இருப்பேன்.. உங்களை விட உங்க மேல எனக்கு நம்பிக்கை அதிகமாவே இருக்குது..” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
மேனகா,   எதை   எல்லாம்   குறை என்று கூறினாளோ அவற்றை செந்தமிழினி நிறையாகக் கூறியிருக்க, செந்தமிழினி கூறிச் சென்றதே, அவனது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்களில் முதல் முறையாக சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement