Advertisement

மடிக்கணினியை பழுது பார்த்து, முன்தினம் செய்த வேலைகளை மீண்டும் செய்து, என்று அன்றைய நாள் முழுவதுமே வேலைகள், அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, செந்தமிழினி பற்றிய எண்ணம் சிறிதும் அவனது சிந்தனையில் இல்லை.
அன்று அலுவலகம் முடிந்து கிளம்பும் வேளையில் அத்வைத் முன் வந்து நின்ற செந்தமிழினி, பாஸ்” என்று அழைத்தாள்.
வேலை நடுவே அவளை இயந்திரமாக நிமிர்ந்து பார்த்த பொழுது கூட, அவனது சிந்தனையை வேலையே நிறைத்திருந்தது.
அதைப் புரிந்தார் போல் செந்தமிழினி, ஸோ என்னைக் கண்டுபிடிக்கலை, நீங்க” என்றாள்.
அவன் எரிச்சலுடன், இந்த விளையாட்டை எல்லாம் வேலைவெட்டி இல்லாதவன் கிட்ட போய் வச்சிக்கோ!” என்று சற்று எரிந்து விழுந்தான்.
அவளோ அவனது கோபத்தில் சற்றும் பாதிக்கப்படாமல், பதில் தெரிஞ்சுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!” என்று ‘இமான் அண்ணாச்சி’ போல் மென்னகையுடன் கூறினாள்.
தனது கோபத்தை தாங்கி இயல்பான புன்னகை முகத்துடன் பேசுபவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல், அமைதியாக அவளைப் பார்த்தான்.
அவள் விளையாட்டை கைவிட்டவளாக, நாளைக்கு பாமிலி-டே வாங்க பாஸ்.. உங்களை பற்றிய தவறான பேச்சை உடைக்கவே நாளைக்கு நீங்க வரீங்க..” என்று பேசிக் கொண்டிருந்தவள், அவன் ஏதோ கூற வரவும், ப்ளீஸ் பாஸ், நான் பேசி முடிச்சுக்கிறேன்..” என்றாள்.
அவன் மீண்டும் அமைதியானதும், அவள், இப்போ நான் சொல்லப் போறது, உங்களுக்கு  கஷ்டமா இருக்கலாம் ஆனா நிதர்சனத்தை ஏத்துகிட்டு, கடந்த காலத்தை விட்டு நாம வெளியே வந்து தான் ஆகணும்.. அது தான் நமக்கும், நம்மை சார்ந்தவங்களுக்கும் நல்லது..
இதில் எனக்கு என்ன அக்கறைனோ, இதைச் சொல்ல நான் யாருனோ நீங்க கேட்கலாம்.. ஆனா என்னை யாருன்னு கண்டு பிடிச்சு இருந்தா, நீங்க அப்படி கேட்க மாட்டீங்க.. நாளைக்கு நீங்க கண்டிப்பா வரீங்க.. என்னை யாருன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக மட்டும் இல்லை, முக்கியமா உங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உடைக்கவே நாளைக்கு நீங்க வரீங்க.. நான் ஏன் இப்படி சொல்றேனா!” என்று ஒரு நொடி நிறுத்தியவள்,
உங்களுக்கு இந்த கேளிக்கை எல்லாம் பிடிக்காது..  உங்களுக்குச் சிரிக்கவே தெரியாது.. நீங்க ஒரு ரோபோ.. அன்பிட் பார்..” என்று பேச்சை தயக்கத்துடன் நிறுத்தியவள்,மரேஜ்’ என்ற வார்த்தையை தவிர்த்து,இதை எல்லாம் பொய்னு நீங்க நிரூபிக்கிறீங்க.” என்று உறுதியாக முடித்தவளின் குரலில் ‘இதை செய்தே ஆக வேண்டும்’ என்ற உத்வேகம் நூறு சதவிதம் இருந்தது.
அதை உணர்ந்த அத்வைத் ஆச்சரியத்துடன், நம்ம மேல எதுக்கு இவ்ளோ அக்கறை?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
அவள், காலையிலே வரணும் இல்லை, பாஸ்.. லன்ச் அப்புறம் கூட வாங்க போதும்” என்றாள்.
அவன் பதில் ஏதும் கூறாமல் ‘முடிச்சுட்டியா?’ என்பது போல் பார்க்கவும்,
நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது.. ஓகே பாஸ் நாளைக்குப் பார்க்கலாம்.. பை” என்று கூறிக் கிளம்பியவள், இரண்டே எட்டில் திரும்பி வந்து, இப்பவும் சொல்றேன் பாஸ்.. நான் யாருன்னு தெரிஞ்சுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!” என்று கூறிக் கண்ணடித்து விட்டு ஓடி விட்டாள்.
ஒரு நேரம் அறிவாளியா பொறுப்பானவளா பேசுறா.. ஒரு நேரம் விளையாட்டா இருக்கா.. இவ ஒரு வித்யாசமான கலவை’ என்று நினைத்தவன், வேலையை பார்ப்போம்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தான்.
வேலைகளை முடித்துவிட்டு சற்று தாமதமாகக் கிளம்பியவன், மகனிற்கு பாண்டா கரடி பொம்மையை வாங்கிச் செல்ல மறக்கவில்லை.
பொம்மையை பார்த்ததும், ஹே! தேங்க் யூ டாடா..” என்று மகிழ்ச்சியுடன் குதித்த யாதவ், பின் அத்வைத்தை கட்டிக் கொண்டு, லவ் யூ டாடா” என்றான்.
பின், டாடா ஹை-பை” என்று கூறி, மகிழ்ச்சியுடன் கை தட்டிக் கொண்டான்.
மகனின் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியில் அத்வைத்தின் முகத்தில் மட்டுமல்லாது, அகத்திலும் புன்னகை பூ பூத்தது.
அதன் பிறகு, இரவு உணவை முடித்து விட்டு உறங்கும் முன் குளித்துவிட்டு அவன் வந்த போது, யாதவ் அவனது கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
நான் உன்  கிட்ட ஒன்னு  காமிக்கணும்.. நீ எப்போ வருவ? நாளைக்கு வரியா? கண்டிப்பா வரணும்..” என்று யாதவ் பேசிக் கொண்டிருக்கவும்,
அத்வைத், யார் கூடப் பேசுறீங்க கண்ணா?” என்று கேட்டான்.
யாதவ் புன்னகையுடன், சந்து கூட டாடா.. நீயும் பேசுறியா?” என்றபடி கைபேசியை நீட்டினான்.
அந்த பக்கம் இருந்த செந்தமிழினி ஒரு நொடி அதிர்ந்தாள், ஆனால் அடுத்த நொடியே, நம்ம விசுவாமித்திரர் பேசிட்டா மழை பூமியில் இருந்து வானத்துக்குப் பெஞ்சிடப் போகுது’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவளது எண்ணத்தை மெய்பிப்பது போல் அத்வைத், இல்லை கண்ணா.. சீக்கிரம் பேசிட்டு வாங்க.. தூங்கலாம்.. நேரமாச்சு” என்றான்.
யாதவ், ஓகே சந்து. நான் தூங்கப் போறேன்.. நீயும் தூங்கு.. நாளைக்கு கண்டிப்பா வரணும்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.. லவ் யூ சந்து.” என்று கூறி முத்தம் கொடுத்தான்.
இன்பமாக அதிர்ந்த செந்தமிழினி, மீ டூ, லவ் யூ ஸோ மச் யது கண்ணா.” என்று கூறி அழுத்தமாக மூன்று முத்தங்கள் கொடுத்தாள்.
பின், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.. சமத்தா நல்லாத் தூங்குங்க.. ஓகே.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
யாதவ் கைபேசியை நீட்டிய போது ஒலிபெருக்கி பொத்தானை அழுத்தி இருக்க, செந்தமிழினியின் குரல் அத்வைதிற்கும் கேட்டது.
செந்தமிழினியின் நெகிழ்ந்த பாசமான குரலில் அத்வைதே ஒரு நொடி கட்டுண்டு நின்றிருந்தான்.
சில நொடிகளிலேயே தன்னை மீட்டவனின் மூளையில் அவளது ‘யது கண்ணா’ என்ற அழைப்பு சென்றடைய, மகனின் மனதை எப்படி திசை திருப்பப் போகிறோம் என்று கவலை கொண்டான். சந்துவின் கைபேசி எண்ணை, துருவ் தான் கொடுத்து இருக்கணும் என்பதை அறிந்தவன் துருவை மனதினுள் நன்றாகத் திட்டினான். இதைப் பற்றி மீண்டும் துருவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அழைப்பைத் துண்டித்த செந்தமிழினி, துருவை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும், பக்கி.. என் நம்பரை யது கிட்ட குடுத்ததை சொல்ல மாட்டியா?” என்று பொரிந்தாள்.
துருவ் சிரிப்புடன், அத்வைத் கூப்பிட்டான்னு நினைச்சியாக்கும்!” என்றான் கிண்டலான குரலில்.
சிரிக்காத பக்கி.. ஒரு நிமிஷம் என்னைக் கண்டு பிடிச்சிட்டாரோனு நினைச்சேன்.”
கண்டு பிடிச்சா மட்டும் போன் செய்திடுவானா என்ன! அப்புறம் உலகம் அழிஞ்சுடாது?”
அது சரி”
யது குட்டி என்ன சொன்னான்?”
இன்னைக்கு ஏன் அவரை வந்து பார்க்கலைனு கேட்டார்.. நாளைக்கே வீட்டுக்கு கண்டிப்பா   வரணுமாம்” என்றவள் சற்று நெகிழ்ந்த குரலில், யது கண்ணாக்கு என்னை ரொம்பப் பிடிச்சு இருக்குது தெரியுமா! லவ் யூ சந்து சொன்னான்.” என்றாள்.
ஹ்ம்ம்.. நேத்தே எனக்கு தெரியும்..” என்றவன், உனக்கு ஒன்னு தெரியுமா? நேகா அவனை கண்ணானு கூப்பிட்டப்ப அத்வைத் மட்டும் தான் கண்ணானு கூப்பிடணும்னு சொல்லிட்டான், ஆனா உன்னை ஒன்னுமே சொல்லலை” 
“..”
தமிழ்”
ஹ்ம்ம்”
என்னாச்சு?”
ஒன்றுமில்லை”
திடீர்னு ஏன் அமைதியாகிட்ட?”
ப்ச்.. ஒன்றுமில்லை.. விடு.. நாளைக்கு காலையிலேயே வந்திருவ தானே?” என்று பேச்சை மாற்றினாள்.
அவனும் தூண்டித் துருவி கேட்காமல், ஹ்ம்ம்.. வந்திருவேன்.. அத்வைத் வருவான்னு நினைக்கிறியா?” என்று அவளை ஒட்டியே பேசினான்.
ப்ச்.. உறுதியா தெரியலைடா.. அவர் முகத்தில் இருந்து எதையுமே கெஸ் செய்ய முடியலை.. சாயங்காலம் கிளம்புறதுக்கு முன்னாடி அவர் கிட்ட தொண்டத் தண்ணி வத்த பல பிட்டுக்களை போட்டுப் பேசி, கண்டிப்பா வரணும்னு சொன்னேன்.. அதுக்கு எந்த ரியாக்சனும் கொடுக்காம ‘முடிச்சிட்டியா! இடத்தை காலி செய், காத்து வரட்டும்’னு லுக் விடுறார்.”
வாய்விட்டுச் சிரித்த துருவ், உனக்கு தண்ணி காட்டக் கூட ஒரு ஆள் இருக்குது.” என்றான்.
ரொம்ப சிரிக்காதடா, பல்லு சுளுக்கிக்கப் போகுது” என்றவள், நாங்கலாம் தண்ணிக்கே தண்ணி காட்டுற ஆட்கள்.. பார்த்துக்கலாம்.” என்றாள்.
அப்பொழுது, தூங்காம இன்னும் என்ன போன் பேசிட்டு இருக்கிற?” என்ற மரகதத்தின் குரல் கேட்கவும்,
அவள், ஓகேடா நாளைக்குப் பார்க்கலாம்.. பை.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்று கூறி அவனது பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்துப் படுத்தாள்.
உறக்கம் வராமல் அவளது சிந்தனை முழுவதும் யாதவே நிறைந்திருந்தான்.
அதே நேரத்தில், அத்வைத்தின் சிந்தனையிலும் யாதவ் தான் நிறைந்திருந்தான்.
செந்தமிழினி யாதவிற்கு தன்னால் முடிந்த பாசத்தை கொடுக்க நினைக்க, அத்வைத்தோ அவளது பாசத்தை எப்படி தவிர்க்க என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
யாருக்கும் காத்திருக்காமல் சூரியன் உதிக்க, அடுத்த நாளும் அழகாக விடிந்தது. இந்த நாள் தரப் போகும் அதிர்ச்சியைப் பற்றி அறியாமல், அத்வைத்தும் செந்தமிழினியும் எப்பொழுதும் போல் எழுந்தனர்.
அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு செந்தமிழினி லாவெண்டர் நிற டிசைனர் புடவை கட்டி மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றாள். இரவு வீட்டிற்குத் திரும்பும் பொழுது, அவளிடத்தில் இதே மகிழ்ச்சி இருக்குமா!

Advertisement