Advertisement

பிறகு, வாங்க பாஸ்.. இப்போ தான் வந்தீங்களா?” என்று கேட்டாள்.
அந்த லேடி பேச ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.” என்றான் முறைப்புடன்.
அந்த லேடி பேசினதுக்கு என்னை ஏன் பாஸ் முறைக்கிறீங்க?”
நீ சொன்னேன்னு வந்ததால தானே காது குளிர இந்த பேச்சுக்களை கேட்டேன்” என்று முறைப்புடனேயே கூறினான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “நீங்க இப்படி பயந்து ஓடிட்டே இருக்கிறதால தான் பேசிட்டே இருக்காங்க.. ஒரு முறை பதிலடி கொடுத்துப் பாருங்க அப்புறம் கல்லைக் கண்ட நாயா ஓடிடுவாங்க.. இப்போ இந்த லேடி ஓடின மாதிரி”
யாருக்கு பயம்! இவங்கலாம் வெட்டியா பேசுறதுக்கு, பதில் சொல்றது தான் என் வேலையா?” என்றான் கோபத்துடன்.
அவனது கோபத்தைக் கண்டு, லட்சுமி சிறு பயத்துடன் கண்ணன் அருகே சென்று நின்று கொள்ள,
செந்தமிழினியோ அசராமல், இந்த எண்ணம் இருக்கிறவங்க அவங்க பேசினதை கேட்டு ஏன் பொங்குறீங்க? சூரியனை பார்த்து நாய் குரைக்குதுனு நினைச்சு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே!” என்றாள்.
அத்வைத் அவளை முறைத்துக் கொண்டு நிற்க, அவள் அசராமல் அவனது முறைப்பை எதிர் கொண்டாள்.
அப்பொழுது அவர்களுக்கு வலது பக்கம் இருந்த மேடையில், பாட விருப்பம் உள்ளவங்க பாட வரலாம்.” என்று கூறவும்,
செந்தமிழினி புன்னகையுடன், பாஸ் உங்க கேள்விக்கு பதில் சொல்ற நேரம் வந்திருச்சு” என்றாள்.
அத்வைத் மனதில், எப்படி இப்படி எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறா! என் கோபத்தைக் கண்டு கொஞ்சம் கூட முகம் சுணுங்கலையே! துருவ் கூட இப்படி இல்லையே!’ என்று நினைத்தான்.
தம்பியின் ஞாபகம் வந்ததும் அவன் பக்கம் திரும்பி, நீ என்னடா இந்த பக்கம்? உன் கிட்ட பாமிலி-டே பத்தி நான் சொல்லக் கூட இல்லையே!” என்றான்.
துருவ் சிறு திணறலுடன், என் ஃப்ரெண்ட் இங்க வேலை பார்க்கிறான்.. அவன் கூப்பிட்டான்.” என்றான்.
அத்வைத் ஏதோ கேட்க வர, செந்தமிழினி, பாஸ் உங்க விசாரணை கமிஷனை, என் பாட்டு முடிஞ்ச பிறகு வச்சுக்கோங்க” என்றாள்.
பின் நண்பர்கள் பக்கம் திரும்பி, வாங்கடா” என்றாள்.
என்னது!” என்று கண்ணன் மற்றும் துருவ் அலற,
அவளோ, எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச பாட்டு தான்.. வாங்க” என்று கூறியபடி அவர்கள் அலறலை பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றாள்.
போற போக்கில் பின்னால் திரும்பி, பாஸ் முன்னாடி வந்து பாட்டைக் கேளுங்க” என்று கூறிச் சென்றாள்.
லட்சுமி, இருடி, நானும் வரேன்” என்று அலறியபடி அவர்கள் பின்னால் ஓடினாள்.
லட்சுமி மேடை அருகே கீழே நின்று கொள்ள, மற்ற மூவரும் மேடை ஏறினர்.
செந்தமிழினி பற்றி அறிந்தவர்கள், அவள் என்ன பாட்டு பாடப் போகிறாள் என்று சற்று ஆர்வத்துடன் பார்க்க, அத்வைத் கூட சிறு ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தான்.
“1..2..3..” என்று ஒலி வாங்கியில் சொன்னவள், நண்பர்களை ஒரு பார்வை பார்த்தாள்.
அடுத்த நொடி மூவரும் சேர்ந்து,
ஏ அட்ரா அட்ரா நாக்கு மூக்க
நாக்கு மூக்க நாக்கு மூக்க…” என்று பாட ஆரம்பித்தனர்.
முதலில் மட்டுமே மூவரும் சேர்ந்து பாடினர். அதன் பிறகு தம் கட்டி செந்தமிழினி பாட, துருவும் கண்ணனும் விரலை வாயில் விட்டு தொடர்ந்து விசில் அடித்தனர்.
கீழே பாடலை கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் விசில் அடிக்க, சிலர் ஆட ஆரம்பித்தனர்.
நடுத்தர வயதில் இருந்த சிலர் ‘இந்த பாட்டா!’ என்று முகத்தைச் சுளித்தனர்.
அத்வைத் மூவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
பாடி முடித்ததும் செந்தமிழினி, கூட்டத்தில் சிலர் முகம் சுளித்ததை பார்த்தேன்.. அவங்களுக்காக இப்போ ஒரு லேட்டஸ்ட் பாட்டு.” என்றவள் அத்வைத் கிளம்புவது போல் தெரியவும் அவசரமாக,
அதுக்கு முன்னாடி எனக்கு பிடிச்ச பாட்டில் இருந்து ஒரு சில வரிகள்.. என்னமோ இப்போ பாட ஆசையா இருக்குது.. அதனால ஒரு சில வரிகள் மட்டும் பாடுறேன்.” என்றாள்.
பின், இந்த பாட்டு என் மானசீக பாஸுக்காக” என்றவள் துருவை பார்த்தாள். நான்கடி சென்றிருந்த அத்வைத் பழைய இடத்தில் வந்து நின்றான்.
துருவ் சற்று பின்னால் நகர்ந்து, பிறகு பூனை நடை போல் நடந்து வர,
அவனைப் பார்த்து கையை நீட்டியபடி,
வாங்க மச்சான் வாங்க..
வந்த வழியப் பார்த்து போங்க..
ஏங்கி ஏங்கி நீங்க..
ஏன் இப்படி பாக்குறிங்க!”
என்று பாடியவள் கையை இயல்பாக கூட்டத்தில் இருப்பவர்களை பார்த்து திருப்புவது போல் திருப்பி, அத்வைத்தை நோக்கி நிறுத்திய படி கண்ணில் குறும்புப் புன்னகையுடன் ரசித்து பாட ஆரம்பித்தாள்.
அத்தை மகனே அத்தானே!
கெத்து தான் சொத்துன்னு நினைக்கிறீங்க..
அத்தை மகனே அத்தானே!
கெத்து தான் சொத்துன்னு நினைக்கிறீங்க..
அத்தை மகனே அத்து.தானே!”
என்று பாட்டை முடித்துக் கொண்டவள் அத்வைத்தை பார்த்து புருவம் உயர்த்தினாள்.
ஆம் செந்தமிழினி சரோஜினியின் அண்ணன் மகள். சிறு வயதில் இருந்தே அவள் அத்வைத்தை ‘அத்து’ அல்லது ‘அத்தான்’ என்று தான் அழைப்பாள். அதனாலேயே இறுதி வார்த்தையை ‘அத்து.தானே’ என்று பாடினாள்.
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்த அத்வைத் லட்சுமி அருகே சென்று, உன் ஃப்ரெண்ட் பேரு செந்தமிழினியா?” என்று கேட்டான்.
அவன் வந்த வேகத்தைக் கண்டு பயந்த லட்சுமி பேந்த பேந்த விழிக்க, அவன் அந்தக் கேள்வியை நிறுத்தி நிதானமாக மீண்டும் கேட்டான்.
அவள் ஆமாம் என்பது போல் தலையை ஆடினாள்.
தனக்கு ஏன் அவளது முகம் பரிட்சயமாக இருந்தது, அவளுடன் பேசும் பொழுது, மனதினுள் சிறு இதம் பிறப்பது, கூடவே முன்தினம் சிறு வயது தமிழ் ஞாபகம் வந்தது என்று அனைத்திற்குமான காரணம் இப்பொழுது அவனுக்குப் புரிந்தது.
அவன் மனதினுள், உருவம் மட்டும் தான் மாறி இருக்குது.. மத்தபடி நீ மாறவே இல்லை தமிழ்.. இன்னும் நல்லாப் பேச கத்துக்கிட்ட’ என்று கூறிக் கொண்டான். அவன் அதிர்ச்சி விலகி உதட்டோர மென்னகையுடன் கைகளை கட்டிக் கொண்டு, அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
மேடையில் நின்றிருந்த செந்தமிழினியும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வை இவனிடம் இருந்தாலும், இப்போ லேட்டஸ்ட் பாட்டு” என்று அறிவித்தாள்.
அத்வைத் பார்வையாலேயே கூட்டத்தை பார்க்க சொல்லிக் கூறவும், அவள் மென்னகையுடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
பிறகு,
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ்’ட பொய் சொன்னிங்கடா
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ்’ட பொய் சொன்னிங்கடா” என்று பாடி நிறுத்த,
அடுத்து கண்ணன்,
எனக்கு தான் ஜூரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்..” என்று பாடி நிறுத்த,
அடுத்து துருவ்,
ஐய்யா வந்துட்டாருங்க
காஃபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்’ட தொறக்கணுங்க சத்தியம்” என்று பாடி நிறுத்த,
அடுத்து மூவரும் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யா இந்த பாடலில் லேசான நடன அசைவுகளில் ஆடுவது போல் ஆடியபடி தொடர்ந்து பாடி முடித்தனர். (இப்பாடல் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் வரும்)
அடுத்து செந்தமிழினி, லாஸ்ட் பாட்டு” என்று அறிவித்தபடி அத்வைத்தை பார்க்க, அவன் நின்ற இடம் காலியாக இருந்தது.
அவள் யோசனையுடன் அவனை தேட, அவன் அவளது கண்ணில் அகப்படவே இல்லை. அப்பொழுது துருவ் அவளது கையை இடிக்கவும் பாடுவதற்கு தயாரானாள்.
பின் மூவரும் சேர்ந்து,
சிரிக்கலாம் பறக்கலாம்
இறைக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே..” என்ற பாடலை (‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட பாடல்) பாடி முடித்து கீழே இறங்கினர். பாடும் பொழுதே அவளது கண்கள் அத்வைத்தை தேடி அலைபாய்ந்தபடியே தான் இருந்தது. ஆனால் பலன் தான் பூச்சியம்.

Advertisement