Advertisement

அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு, நிறுத்தாமல் திட்டியவள் முடிக்கும் போது,
இப்போ ஒழுங்கு மரியாதையா அந்த சூனியக்கார கிழவி நம்ம அப்பாவை என்ன சொன்னானு சொல்ற” என்று மிரட்டலாக முடித்தாள்.
அருள் மொழி மெல்லிய குரலில், உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க,
கேள்வி கேட்காம விஷயத்தைச் சொல்லு” என்றாள்.
அவன் அப்பொழுதும் சிறு தயக்கத்துடன், தங்கச்சி கிட்ட சொல்ற மாதிரி அது பேசலைடி” என்றான்.
உன் மேல கொலை வெறில இருக்கிறேன்.. என் வாயை கிளராத.. பொண்ணுங்களை சைட் அடிக்கிறது, கரெக்ட் செய்றது பத்தி விலாவரியா பேச முடியுது, இதைச் சொல்ல முடியாதோ! எனக்கு ஓரளவுக்கு அது என்ன பேசுச்சுனு தெரியும்..
ஆனா அது பேசிய எக்ஸாக்ட் வார்த்தைகள் எனக்குத் தெரிஞ்சாகனும்.. அதான் கேட்கிறேன்”
சரி சொல்றேன்” என்றவன் அன்று நடந்ததை அப்படியே கூறி முடித்தான்.
அவள் கோபத்துடன், கிழவியை கவனிச்சுட்டு வந்து உன்னைக் கவனிக்கிறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
என்ன வந்து கவனிக்கிறியா! அப்போ இவ்ளோ நேரம் கிழிச்சது!’ என்று வாய்விட்டே அலறியவன், அத்வைத்தை கைபேசியில் அழைத்தான்.
வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்குள் சென்ற மங்களம், இப்பொழுது வரை வெளியே வரவே இல்லை.
தங்கள் அறைக்குச் சென்ற ஆறுமுகம், கொஞ்ச நேரம் யதுவை கூட்டிட்டு போ அத்வைத்” என்றதும் தந்தை அன்னையுடன் தனிமையில் பேச விரும்புவதை புரிந்து, மகனை அழைத்துக் கொண்டு அத்வைத் தனது அறைக்குச் செல்ல, துருவ் அந்த அறைக் கதவை மூடிவிட்டு, தனது அறைக்குச் சென்றான்.
மனைவியின் கரங்களை தனது இரு கரங்கள் கொண்டு பற்றிய ஆறுமுகம் தனது முகத்தை அதில் பதித்து, “என்னை மன்னிச்சிடு சரோ” என்றபடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
என்னாச்சுங்க? என்ன நடந்துது? எதுக்கு இப்படி அழுறீங்க?” என்று சரோஜினி பதற, ஆறுமுகமோ அழுகையை நிறுத்துவதாக இல்லை.
அழுகையின் நடுவே, எனக்கு மன்னிப்பே கிடையாது…” என்று அரற்றியவர்,
என்னை மன்னிச்சிடு. நான் பாவி! இந்தப் பாவத்தை எங்கே போய் நான் கரைப்பேன்? எனக்கு பாவ மன்னிப்பே கிடையாது. இப்படி இருக்கும்னு நான் சத்தியமா நினைக்கவே இல்லையே! என்னை மன்னிச்சிடு சரோ.” என்று கூறிக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவை எல்லாம் சரோஜினியின் காதை எட்டினாலும், மூளையை எட்டவே இல்லை. அவரது நினைப்பு முழுவதும் கணவரின் அழுகையில் தான் இருந்தது.
வலுகட்டாயமாக கணவரின் முகத்தை நிமிர்த்த முயற்சித்தபடி சரோஜினி, அண்ணி எதுவும் சொல்லிட்டாங்களா? ஆனா, அவங்க எது சொல்லி இருந்தாலும் அதுக்கு நியாயமான காரணம் இருக்குங்க.. அவங்க பேசினது, உங்களைக் காயப்படுத்தி இருந்தாஅவங்களுக்காக நான் மன்னி..” என்றவரின் வாயை சட்டென்று நிமிர்ந்து தனது கரம் கொண்டு மூடி இருந்தார், ஆறுமுகம்.
ஆறுமுகம், நீ மன்னிப்பு கேட்டு என்னை இன்னும் பாவி ஆக்காத.” என்றார்.
சரோஜினி புரியாமல் பார்க்க, ஆறுமுகம் செந்தமிழினி வீட்டில் நடந்ததை சுருக்கமாகக் கூறி, என்னை மன்னிச்சிடு” என்றார் மீண்டும்.
போதும்ங்க.. நீங்க எதுவும் செய்யலையே!”
அதைத் தான் சொல்றேன்.. நான் எதுவுமே செய்யலையே! அம்மா இவ்ளோ தூரம் பேசுவாங்கனு நான் நினைக்கவே இல்லை..  அன்னைக்கு அவங்க கீழ விழுந்ததைப் பார்த்ததும் என்னால வேற யோசிக்கவே முடியலை..
நாளடைவில் அம்மா தான் பிரச்சனையை ஆரம்பிச்சு இருப்பாங்கனு புரிந்தாலும், அதை எப்படி சரி செய்யனு தெரியலை..
தெரியலைனு சொல்றதை விட என்னோட தயக்கமும், ஈகோவும் தான் காரணம்.. மாமா இறந்ததை சொல்றதுக்கு கூட அவங்க பேசாதப்ப, நாம ஏன் போய் பேசணும்னு நினைச்சேன்..
ஆனா, இப்போ தானே தெரியுது.. வேணு தகவல் சொன்னப்பவும் அம்மா திரும்பப் பேசியதோடு நம்ம கிட்டயும் விஷயத்தைச் சொல்லவே இல்லை.. இதை என்னால ஜீரணிக்கவே முடியலை.” என்று அவர் குமுற,
சரோஜினியின் நெஞ்சமும் தந்தையின் நினைவில் குமுறியது தான், இருப்பினும் கணவரை தேற்ற, விடுங்க.. இதெல்லாம் நடக்கணும்னு இருந்து இருக்குது.. இனி ஆகுற காரியத்தை மட்டும் பார்ப்போம்.” என்றார்.
என்னோட மனசு ஆறவே மாட்டேங்குது.” என்ற போது வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
சரோஜினி, முகம் கழுவிட்டு ஹாலுக்கு வாங்க.. நான் போய் யாருனு பார்க்கிறேன்.” என்ற படி வெளியே வந்தார்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனது அறையில் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த அத்வைத், அருள்மொழியின் அழைப்பைப் பார்த்ததும், யது கண்ணா.. டாடா முக்கியமான போன் பேசிட்டு வரேன்.. நீங்க சமத்தா விளையாடிட்டு இருங்க.” என்றான்.
யாதவ், ஓகே டாடா” என்றதும் அறையை விட்டு வெளியே வந்து, முற்றத்தில் நின்று அழைப்பை எடுத்தான்.
அத்வைத் அழைப்பை எடுத்ததும் அருள்மொழி, டேய் நல்லவனே! இப்போ எதுக்குடா தமிழ் கிட்ட விஷயத்தைச் சொன்ன?” என்றான்.
அத்வைத், நீ எல்லாம் ஒரு அண்ணனாடா?” என்றான்.
ரெண்டு பேரும் சொல்லி வச்சு பேசுறீங்களா?”
உன்னை எல்லாம் சொல்லி வச்சு வேற பேசனுமா!”
டேய்!”
பின்ன என்னடா! இன்னைக்கு பொண்ணு கேட்டுப் போறோம்னு சொல்லி இருந்தேன்.. அதைப் பத்தி கேட்க போன் செய்றனு நினைச்சா..” என்றவனின் பேச்சை இடையிட்ட அருள்மொழி,
வேலை டைட்டா போயிட்டு..” என்றவனின் பேச்சை இப்பொழுது இடையிட்ட அத்வைத்,
அந்த டைட்ல தானே இப்போ போன் செஞ்சு இருக்கிற! முதல்ல எதைப் பத்தி கேட்டு இருக்கனும்?”
ரைட்டு இன்னைக்கு நம்ம கிரகம் ரவுண்டு கட்டிருச்சு’ என்று மனதினுள் நினைத்த அருள்மொழி,
இப்போ தான்டா ஒரு மீட்டிங்கில் இருந்து வெளியே வந்தேன்.. உனக்கு போன் செய்றதுக்கு முன்னாடி தமிழ் போன் செஞ்சு உங்க ஆச்சி பேசினதை சொல்லாததுக்கு ஒரே திட்டு.. சரி அதை விடு.. உங்க ஆச்சி பொண்ணு கேட்டாங்களா? அம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.
சொல்ல முடியாது போடா”
நீயும் ஏன்டா படுத்துற?“
உன் லட்சணம் அந்த அழகில் இருக்குது”
தமிழ் கிட்டயும் கேட்க முடியாது.. ஏற்கனவே என்னை நார் நாரா கிழிக்க ரெடியா இருக்கிறா.. நீயே சொல்லிடுடா”
உனக்கு  ஒரு ரெக்கார்டிங்அனுப்பி   இருக்கிறேன்.. அதைக் கேளு, உனக்கே என்ன நடந்ததுனு தெரியும்..” என்றவன், இது வரை எப்படியோ! ஆனா இனி தமிழுக்கு விஷயம் தெரிந்து இருக்கனும்னு தான் உனக்கு அனுப்பின ரெக்கார்டிங்கை அவளுக்கும் அனுப்பினேன்”
என்ன ரெக்கார்டிங்?”
கேட்டுப் பாரு தெரியும்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
உடனே அவனை அழைத்த அருள்மொழி, அழைப்பு எடுக்கப் பட்டதும், டேய்! தமிழ் உங்க வீட்டுக்கு வருவானு நினைக்கிறேன்” என்றான்.
வரட்டும்.”
உனக்கு ஒன்னும் இல்லை ராசா.. அம்மாக்கு தெரிந்தது, என்பாடு தான் திண்டாட்டம்.”
இப்பவும் உன்பாடு திண்டாட்டம் தான்.. முதல்ல போய் ரெக்கார்டிங்கை கேளுடா.” என்று கூறி மீண்டும் அழைப்பைத் துண்டித்தான்.
அப்பொழுது அங்கே வந்த துருவ், டேய் தமிழ் போன் செய்தா.. இருவது நிமிஷம் கழிச்சு யதுவை என்னோட ரூமில் உட்கார வச்சு அன்னைக்கு மாதிரி லேப்டாப்-பில் கார்ட்டூன் போட்டு விடச் சொல்றா.. அரை மணி நேரத்தில் இங்கே வருவாளாம்.. அவ பேச நினைக்கிறதை யது முன்னாடி பேச முடியாதாம், அது போக யதுவைப் பார்த்தா அவ கோபம் குறைஞ்சிடுமாம், அதனால வேலையை முடிச்சுட்டு யதுவை பார்த்துக்கிறதா சொல்றா.. என்னடா பிரச்சனை? எதுக்கு கோபமா வரா?
ரெண்டு பேரும் எப்போதும் அரைகொறையா தான் விஷயத்தை சொல்லுவீங்களா? நீங்க சொல்றதை யோசிச்சே நான் சீக்கிரம் சொட்டை ஆகிடுவேன் போல” என்று பொரிந்தான்.
அத்வைத்தோ சாதரணமாக, “ஒன்றுமில்லைடா.. அத்தை வீட்டில் நடந்ததை அவளுக்கு அனுப்பினேன்.. அப்பாக்கு செய்த கால்(Call) ரெக்கார்ட் செய்து இருந்தேன்..” என்றான்.
வாய்விட்டுச் சிரித்த துருவ், கிழவியை கேப் விடாம அடிக்க முடிவு செய்துட்ட” என்றான்.
அத்வைத்தும் சிரிக்க, அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
மணியை பார்த்த துருவ், அதுக்குள்ள வந்துட்டாளா?” என்று ஆச்சரியத்துடன் கூற,
அத்வைத், தமிழ் இல்லை.. வேற யாரோ.. போய்ப் பாரு” என்றான்.
துருவ் போகும் முன் கதவைத் திறந்த சரோஜினி, வாங்க மச்சினி.. வா மா” என்றார்.
அன்னையின் குரலில் தமையனை திரும்பிப் பார்த்த துருவ், தாய் கிழவி, கமுக்கமா பொண்ணுக்கு போன் செய்து இருக்குது பார்.” என்றவன்,
சரி.. நான் போய் யதுக்கு கார்ட்டூன் போட்டு விடுறேன்” என்றபடி நகர,
அத்வைத், ஆங்கிரி பேர்ட்ஸ் படத்தை போட்டு விடு.. ஒன்னரை மணி நேரம் ஓடும்” என்றான்.
சரி’ என்பது போல் தலையை ஆட்டி துருவ் செல்ல, அத்வைத் கூடத்திற்குச் சென்றான்.
என்னத்த வாங்க! உங்க வரவேற்பு வெறும் வார்த்தையில் தான் இருக்குது..” என்று நொடித்தபடி அம்பிகா உள்ளே வர,
சரோஜினி சிறு பதற்றத்துடன், அப்படி எல்லாம் இல்லை மச்சினி” என்றார்.

Advertisement