Advertisement

ஹாப்பி மார்னிங், அத்தான்” என்று புன்சிரிப்புடன் கூறியபடி வண்டியில் இருந்து இறங்கியவளைப் பார்த்தவனின் மனம் தாளம் தப்பத் தொடங்கியது.
ஒரு நொடி இமைக்க மறந்து அவளையே பார்த்தவன், அவள் அவனது முகத்திற்கு முன் கையை அசைக்கவும் சுதாரித்துக் கொண்டு, பூ வைச்சிக்கலையா?” என்று கேட்டான்.
அப்புறம் நீங்க வாங்கித் தரதை வைக்க இடம் இருக்காதே!” என்று கூறி அவள் கண் சிமிட்ட,
அவன் மென்னகையுடன், பூ வாங்கித் தாங்கனு நேரிடையா கூட சொல்லலாம்” என்றபடி அருகில் இருந்த பூ கடையில், மூனு முழம் மல்லி தாங்க” என்றான்.
பூ கடைக்காரரிடம், அர்ச்சனை பொருளும் தாங்க” என்றவள் அவனிடம், நீங்களும் என்னை பிடிச்சு இருக்கிறதை நேரிடையாவே சொல்லலாம்” என்றாள்.
அழகாகச் சிரித்தபடி தலை முடியை கோதிய அத்வைத், சில விஷயம் சொல்றதை விட உணர்த்துறது இனிமையா இருக்கும்” என்றபடி பூவை வாங்கி அவளிடம் நீட்டினான்.
அவள் பூவை தலையில் வைத்தபடி, அது சரி தான், ஆனா சில விஷயம் உணர்த்துறதை விட சொல்றப்ப இன்னும் இனிமையா இருக்கும்” என்றாள்.
கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு கையை கோவில் புறம் நீட்டி, அவளை நடக்குமாறு செய்கை செய்தவன், அவள் நடக்க ஆரம்பித்ததும் தானும் கூடவே நடந்தபடி சற்று குனித்து அவளது காதோரம் மெல்லிய குரலில், அதுவும் சரி தான். ஆனா, அந்த சில விஷயங்கள் தனிமையில் சொல்ற விதத்தில் சொல்றப்ப, இன்னும் தித்திப்பா இருக்கும்.” என்றான்.
அவனது மூச்சுக் காற்று அவளைத் தீண்டியதில் அவளுள் ஒரு வித சிலிர்ப்பு ஓடியது. அவன் அவளைத் தீண்டாமல் தீண்டிய விதத்தில் அவள் அமைதியானாள்.
அவளது உணர்வை புரிந்துக் கொண்டவன் மென்னகையுடன் அவளது கரத்துடன் தனது கரத்தை கோர்த்தபடி கோவிலினுள் பிரவேசித்தான். அவனது செய்கை அவளுள் காதலுடன் கூடிய நிறைவைத் தந்தது.
உள்ளே சென்றதும் அவள் நினைவு வந்தவளாக, அர்ச்சனை சீட்டு வாங்கணும்” என்று கூற,
அவன், இரு நான் வாங்கிட்டு வரேன்” என்று கூறிச் சென்று வாங்கி வந்தான்.
அதன் பின் பிள்ளையாரை வணங்கிவிட்டு இருவரும் முருகன் சன்னதி முன் நின்று மனமார வேண்டினர்.
கடவுளே! அத்தான் இனி எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.. அத்தான், யது கூட ஒரு நிறைவான மகிழ்ச்சியான வாழ்வைக் கொடு.’ என்று மனதினுள் செந்தமிழினி வேண்ட,
முருகா.. என் உயிர் மூச்சு இருக்கிறவரை தமிழை சந்தோஷமா வச்சிக்கனும்.’ என்று அத்வைத் மனதினுள் வேண்டினான்.
அவள் கண்களை திறந்து மென்னகையுடன் அவனைப் பார்க்க, அவனும் மென்னகைத்தான்.
அய்யர் வரவும்,  அவள் அர்ச்சனைப் பொருட்களை தந்த படி, சாமி பெயரில் அர்ச்சனை செய்துடுங்க.” என்றாள்.
அவன் கேள்வியாகப் பார்க்க, அய்யர் சென்றதும் அவள், நமக்கு முதல் முறை அர்ச்சனை செய்றப்ப யதுவை கூட்டிட்டு வந்து மூனு பேருக்கும் சேர்த்து செய்திடலாம்.” என்றாள்.
ஹ்ம்ம்” என்றவன் முருகனைப் பார்த்து, முருகா இந்த வாழ்க்கை நிரந்தரமா நிறைவா இருக்கணும்.’ என்று மனதினுள் வேண்டி விட்டு, தன் கழுத்தில் இருந்த சிறு துண்டு மஞ்சள் கோர்க்கப்பட்ட தங்கச் சங்கலியை எடுத்தவன்,  செந்தமிழினி கண்களை காதலுடன் நோக்கியபடி, அவளது கழுத்தில் போட்டான். அவளும் அவனைத் தான் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன், ஊறிய தாலி கட்டுறப்ப ரெண்டு மாங்கல்யம் ஆகிடுமேனு மஞ்சள் கோர்த்தேன்.” என்றான்.
அவள் மென்னகையுடன் ‘சரி’ என்பது போல் தலை அசைத்தாள்.
அதன் பின், அவள் தனது கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் சரடை கழட்டி உண்டியலில் போட்டாள்.
அப்பொழுது அய்யர் வந்து அர்ச்சனை செய்த பொருட்களுடன், சாமி பாதத்தில் இருந்த ரோஜா பூவையும் தர, அவற்றை மன நிறைவுடன் வாங்கிக் கொண்டாள்.
அர்ச்சனை செய்த பொருட்களை அவனிடம் கொடுத்தவள், அய்யர் கொடுத்த ரோஜாப் பூவை தலையில் வைத்துக் கொண்டாள்.
இருவரும் அமைதியாக சன்னதியை சுற்றி வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
அவள் தனது கையில் இருந்த குங்குமத்தை அவன் முன் நீட்ட, அதை எடுத்து அவளது நெற்றியில் வைத்து விட்டவன், தேங்க்ஸ்” என்று கூற, அவள் செல்லமாக முறைத்தாள்.
அவனோ, இப்போ, இந்த நொடி மனசு அவ்ளோ லேசா இருக்குது.. தேங்க்ஸ்” என்றான் உணர்ச்சிப்பூர்வமாக.
அவள், பார்த்து அத்தான்.. லேசா இருக்கிறதால மனசு பறந்துறப் போகுது.” என்று கூற, அவன் சட்டென்று சிரித்து விட்டான்.
பின் அவன், அப்படியே பறந்தாலும், உன் கிட்ட தானே வரும்.. கட்டியா பிடிச்சுக்கோ.” என்று கூறி கண்சிமிட்ட,
லேசாக கண்களை விரித்தவள், வர வர நீங்க ரெமோவா மாறிட்டு வரீங்க, அத்து” என்றாள்.
அவன் சிரிப்புடன், நீ நம்ம வீட்டுக்கு வா.. முழுசா மாறின ரெமோவைப் பார்ப்ப” என்றான்.
அப்போ இது ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இல்லைனு சொல்றீங்க!”
ஹ்ம்ம்.”
பார்க்கலாம்”
எதை?”
ஹ்ம்ம்.. நீங்க முழுசா ரெமோவா மாறுவதை” என்றபடி அவள் எழுந்து கொள்ள, அவனும் எழுந்துக் கொண்டான்.
அதே நேரத்தில் அத்வைத் வீட்டில், மங்களம் வீட்டில் நடந்ததை கைபேசி வாயிலாக, மகளிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அவர் கூறியதைக் கேட்ட அம்பிகா, என்னமா சொல்ற! அத்வைத்தா இப்படி பேசினான்?” என்று அதிர்ச்சியுடன் திரும்பத் திரும்பக் கேட்டார்.
நான் என்ன கதையா சொல்லிட்டு  இருக்கிறேன்? இல்லை, உன் கிட்ட பொய்யா சொல்லப் போறேன்” என்று மங்களம் எரிந்து விழ,
அம்பிகா, இப்போ என்னமா செய்றது? இந்த கல்யாணம் நடந்துருமா?” என்று கவலையுடன் கேட்டார்.
மங்களம், ஏன்டி கவலைப்படுற! நான் இருக்கிறவரை இந்தக் கல்யாணம் நடக்காது.” என்றார்.
நீயே பொண்ணு கேட்ட அப்படினா, முன்னாடி நீ சொன்னது இல்லைனு நீயே சொல்ற மாதிரி.. அப்போ அந்த மரகதம் சரி சொல்லிட்டா, கல்யாணம் நடந்துருமே!”
நான் கேட்கப் போற விதத்தில் ஜென்ம பகை தான்டி வரும்.” என்று கொடூரமான சிரிப்புடன் மங்களம் கூற,
அம்பிகா, என்னமா சொல்ற?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.
மங்களம், நான் போய் ‘என்னோட பேரன் தராதரம் தெரியாம ஆசைப் பட்டுட்டான்.. இல்லைனா இந்த கேடுகெட்ட வீட்டை மிதிப்பேனா!  இப்போ கூட என்னோட பேரன் பேசினதால தான் உன்னோட பொண்ணை பெண் கேட்டு வந்திருக்கிறேன்.. இல்லைனா, உன்னை மாதிரி மாமா பயலோட பொண்ணை, எங்க குடும்பத்துக்கு எடுப்பேனா?’னு கேட்பேன்.. அதுக்கு அப்புறம்..” என்று கூறிச் சிரிக்க,
அம்பிக்காவும் சிரிப்புடன், சூப்பர்மா” என்றார்.
இவர்களின் திட்டத்தை அத்வைத் தவிடு பொடி ஆக்கப் போவதை அறியாமல், இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அம்பிகா, அம்மா ஆனா அண்ணா?” என்று கேள்வியாக நிறுத்த,
மங்களம், அவனைப். பார்த்துக்கலாம்” என்று அசால்ட்டாகக் கூறினார்.
இல்லைமா.. இது வரை  நீ பேசியது அண்ணாக்குத் தெரியாது.. இப்போ தெரிந்தா..” என்ற அம்பிகாவின் பேச்சை இடையிட்ட மங்களம்,
தெரிந்தா மகன் பக்கம் போய்டுவான்னு சொல்ல வரியா? இப்பவே அவன் மகன் பக்கம் போய்ட்டான் தான்.. என்ன நான் பேசுறதை அத்வைத் கிட்ட சொல்லாமப் பார்த்துக்கணும்.. அது ஒன்னு தான்.. அதையும் சத்தியம் அது இதுன்னு சொல்லிட்டா அமைதியா இருந்திருவான்.. இல்லைனாலும் நான் பேசினதுக்கு அப்புறம் அந்த மரகதம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டா.. அதனால பிரச்சனை இல்லை.. பார்த்துக்கலாம் விடு” என்றார்.
அங்கே வடபழனி முருகன் கோவில் வெளியே சென்றதும் செந்தமிழினி, ஹொவ் அபௌட் காபி வித் தமிழ்?” என்று கேட்டாள்.
மென்னகையுடன், வொய் நாட்!” என்றான்.
இருவரும் அருகில் இருந்த உணவகத்திற்குச் சென்று காபி அருந்தினர்.
காபிக்கான கட்டணம் வருவதற்காக காத்திருந்த வேளையில், அவன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்க,
என்ன பாட்டு பாடுறீங்க?” என்று கேட்டாள்.
இன்னொரு நாள் சொல்றேன்.” என்றான்.
அவள் முறைக்கவும், அப்புறம் என்னை கண்ட்ரோல் செய்ய எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகிடும்.” என்றான்.
அவள் நம்பாமல் பார்க்க, நிஜமா தான் சொல்றேன்.. இப்போ உன்னை பார்க்கிறப்ப என்னெல்லாமோ தோணுது.” என்றான்.
மீண்டும்  லேசாகக் கண்களை விரித்தவள், அப்படி என்ன தோணுது?” என்று கேட்டாள்.
கண்டிப்பா சொல்லணுமா?” என்று கேட்க, அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அப்பொழுது பணியாளர் வந்து கட்டண இரசீதைத் தர, பணத்தைக் கொடுத்தவன், அவர் அகன்றதும்,
அவளைப் பார்த்து, எனக்கு பிடிச்ச பச்சை நிற புடவையில் இருக்கிற இந்த இதழியோட இதழில், பசக்குன்னு ஒரு இச்சு கொடுக்கணும்னு தோணுது” என்றான்.
பெரிதாக கண்களை விரித்தவள் படபடத்த இதயத்தை மறைத்தபடி, இப்போவே நீங்க முழுசா ரெமோவா மாறிட்டீங்க, அத்து.” என்றபடி எழுந்து கொண்டாள்.
அவன் சிறு வெட்கம் கலந்த வசீகரப் புன்னகையுடன் தலையைக் கோதியபடி, நீ என்னை அதிகம் மாத்துற” என்றான்.
அவனது பாவனையில் மயங்கியவள் தன்னை மீட்டுக் கொண்டு, இதுக்கு மேல உங்க கூட இருந்தா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை” என்றபடி வேகமாக முன்னால் நடக்க, அவன் விரிந்த புன்னகையுடன் அவள் பின்னால் சென்றான்.
வண்டியில் ஏறியவள் சட்டென்று அவன் பக்கம் திரும்பி, இப்போ நீங்க என்னை வேற பேர் சொல்லி கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவன் உதட்டோரப் புன்னகையுடன்  தோள்களைக் குலுக்க,
அவள், இதழினு கூப்பிட்டீங்க தானே?” என்று ஒரு விதப் பரவசத்துடன் கேட்டாள்.
அவன் காதலுடன் பார்த்தபடி, பிடிச்சு இருக்குதா?” என்று கேட்டான்.
அவளும் காதலுடன், இதழினு கூப்பிட்டதும் பிடிச்சு இருக்குது.. அப்படி கூப்பிட்ட அத்துவை, இன்னும் அதிகமாப் பிடிச்சு இருக்குது.” என்றவள் லேசாக இதழ் குவித்து முத்தமிட்டு,
ஆபீஸில் பார்க்கலாம்” என்று கூறி, சிட்டாகப் பறந்தாள்.
அவன் மத்தகாசப் புன்னகையுடன் வண்டியைக் கிளப்பினான். இருவரும் காதல் உலகில் மிதந்தபடி அலுவலகம் நோக்கிப் பயணித்தனர்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement