Thursday, May 9, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    அவளிடம் ஓடி வந்த யாதவ், “நீ என் கூட விளையாடவே இல்லை.” என்று குறை பட்டான். அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்தபடி, “இப்போ சந்துமா ஆபீஸ் போகணும்.. யது கண்ணாவை பார்த்துட்டு டாடா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் வந்தேன்.. இப்போ ஆபீஸ் லேட் ஆகிடுச்சு.. நான்...
    அடுத்த நாள் காலையில் துருவ் தனது அறையில் மடிக்கணினியை இயக்கியபடி யாதவிடம், “யது குட்டி சித்தா லேப்டாப்பில் மாஷா அண்ட் தி பியர்(Bear) பார்ப்பியாம்.. சித்தா கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என்று கூற, யாதவ், “டாடா மார்னிங் எழுந்ததும் நோ டிவி சொல்லியிருக்கா.” “நீ லேப்டாப் தானே பார்க்கிற?” யாதவ் முறைப்புடன், “லேப்டாப் டிவி எல்லாம் ஒன்னு தான்.”...
    பிறகு, “வாங்க பாஸ்.. இப்போ தான் வந்தீங்களா?” என்று கேட்டாள். “அந்த லேடி பேச ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.” என்றான் முறைப்புடன். “அந்த லேடி பேசினதுக்கு என்னை ஏன் பாஸ் முறைக்கிறீங்க?” “நீ சொன்னேன்னு வந்ததால தானே காது குளிர இந்த பேச்சுக்களை கேட்டேன்” என்று முறைப்புடனேயே கூறினான். அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “நீங்க இப்படி பயந்து ஓடிட்டே இருக்கிறதால தான்...
    செந்தமிழினி அங்கே சென்ற போது வாசலிலேயே துருவ் அவளுக்காகக் காத்திருந்தான். இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கண்ணனும் லட்சுமியும் அடுத்தடுத்து வந்தனர். இருக்கும் இடம் அதிரும் அளவிற்கு நால்வரும் கூத்தடித்தனர். ஒரு இடத்தில் சிலர் ஆட்களை அமரச் செய்து அப்படியே வரைந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் செந்தமிழினி துருவிடம், “நீயும் உட்காருடா.. நான் வரையுறேன்” என்றாள். துருவ்,...
    மடிக்கணினியை பழுது பார்த்து, முன்தினம் செய்த வேலைகளை மீண்டும் செய்து, என்று அன்றைய நாள் முழுவதுமே வேலைகள், அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, செந்தமிழினி பற்றிய எண்ணம் சிறிதும் அவனது சிந்தனையில் இல்லை. அன்று அலுவலகம் முடிந்து கிளம்பும் வேளையில் அத்வைத் முன் வந்து நின்ற செந்தமிழினி, “பாஸ்” என்று அழைத்தாள். வேலை நடுவே அவளை இயந்திரமாக நிமிர்ந்து...
    மூன்றாவது முறையாக ‘யாருடா இந்த சந்து?’ என்று அத்வைத் கூறிக் கொண்டான். ஆனால் இந்த முறை ஆச்சரியத்துடன். யாரும் சட்டென்று நெருங்கிவிட முடியாத தனது மகனின் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்த அந்தப் பெண் யார் என்று ஆச்சரியத்துடன் நினைத்தான். இருந்தாலும் அதை மகனிடம் காட்டிக் கொள்ளாமல், “பேட் பீப்பிள் தான் இப்படி செய்வாங்க” என்றான்...
    அடுத்த நாள் காலையில் கைகளை கட்டிக் கொண்டு அத்வைத் துருவை முறைத்துக் கொண்டிருக்க, துருவ் மனதினுள், ‘ஒரே ஒரு மணி நேரத்தில் என்னை இப்படி குற்றவாளிக் கூண்டில் நிக்க வச்சிட்டியே, பிசாசு!’ என்று செந்தமிழினியை பாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான். முன்தினம் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே ‘யாருடா இந்த சந்து!’ என்று அலறும் நிலைக்குத்...
    ‘சந்துமா’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்த குழந்தை, “சந்து-னு கூப்பிடவா?” என்று கேட்டான். “ஓ! கூப்பிடுங்களேன்” அவள் வாங்கிக் கொடுத்த பொம்மையில் பெரிய பாண்டா கரடியை காட்டி, “இது நான்..” என்றவள், குட்டியை காட்டி, “இது யது கண்ணா” என்றாள். யாதவும் மழலை சிரிப்புடன், “இது சந்து.. இது யது” என்றான். “சூப்பர்” என்றவள், “யது கண்ணாக்கு ஐஸ்-கிரீம்...
    செந்தமிழினியும் துருவும் வீட்டிற்கு சென்ற போது சரோஜினி, யாதவ் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆறுமுகமும் மங்களமும் கல்யாணத்திற்காக ஊருக்குச் சென்றிருக்க, அத்வைத் வேலை முடிந்து வீடு திரும்பி இருக்கவில்லை. கதவைத் திறந்த சரோஜினி, ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியுடன், “ராஜாத்தி” என்று அழைத்தபடி செந்தமிழினியை அணைத்துக் கொண்டார். அவரின் பாச மழையில் நனைந்தபடியே செந்தமிழினி துருவை முறைத்தாள். ‘இன்னைக்கு...
    துருவ் சிரிப்புடன், “சைஸ் தான் மாறி இருக்குது.. மத்தபடி அதே பம்கின் தான்.” என்றான். கண்ணன், “கண்ண செக் பண்ணுங்க பாஸ்.. இவளைப் போய் சூப்பர் பிகர்னு சொல்றீங்க!” என்றான். அவள் இப்பொழுது கண்ணனை முறைக்க, துருவ் புன்னகையுடன், “நீங்க?” என்று கேட்டான். “நீ போதும் பாஸ்.. நான் கண்ணன்.. நண்பன் என்ற பெயரில் இருக்கும் இவளோட அடிமை.”...
    மென்னகையுடன், “அது சரி தான்..” என்றவள், “எல்லோருமே ஃபஸ்ட் பெஞ்ச் டாப்பரா இருந்தா, யாரு தான் லாஸ்ட் பெஞ்சில் இருக்கிறது?” என்று கேட்டாள். “நீங்க பேசுறது புரிய தனி டிக்சனரி தான் போடணும்” என்றான். சன்னச் சிரிப்புடன், “நீங்க மூளை பார்ட்டினா, எல்லோருமே அப்படி தான் இருப்பாங்கனு நினைத்தால் எப்படி பாஸ்!” என்றாள். சற்று யோசித்தவன், ஒரு நொடி...
    அடுத்த நாள் அத்வைத் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது, அவனது அறையில் இருந்த மேசை மீது சிறு உணவுப் பெட்டியும், அதன் கீழே ஒரு துண்டு காகிதமும் இருந்தது. அவன் யோசனையுடன் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான். ‘தமிழ்நாட்டு மாநில மரத்திற்கு (பனைமரத்திற்கு) பிடித்த பனைமர நுங்கு’ என்று எழுதி இருந்தது. அந்த உணவுப் பெட்டியை அவன்  திறந்து...
    மெல்லிய மென்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அத்வைத்தின் சிந்தனை முழுவதும், செந்தமிழினியே இருந்தாள். ‘இன்னைக்கு தான் அந்தப் பொண்ணோட முகத்தை நேருக்கு நேர் முழுசா பார்க்கிறேன்.. ஆனா பழக்கப்பட்ட முகமா தோணுதே! ஒருவேளை, முன்னாடியே நாம எங்கேயாவது பார்த்து இருப்போமோ?’ என்று யோசித்தவன், ‘கடந்த மூனு நாலு வருஷத்தில் ஒரு பொண்ணை நாம கவனித்துப் பார்க்கிறது நடக்கிற...
    அன்று காலை தேநீர் இடைவேளையில் செந்தமிழினி லட்சுமியின்  இடத்திற்குச் சென்ற போது, லட்சுமி வேலைப் பழுவைப் பற்றி மீண்டும் புலம்பவும், செந்தமிழினி, “இப்படி புலம்புறதுக்கு அவரிடமே போய் சொல்ல வேண்டியது தானே!” என்றாள். “அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டிக்குதுடி.” “நீயும் இந்தப் பத்து நாளா புலி வருது புலி வருதுனு எப்பெக்ட் கொடுக்கிற.. ஆனா, நான் அந்தப்...
    அன்று காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த செந்தமிழினியை பார்த்த மரகதம், “என்னடி இது! வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு புடவையைக் கட்டினோம்னு இல்லாம, ஜீன்ஸ் பேண்ட் டிஷர்ட்னு வந்து நிக்கிற! முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.” என்றார். “இன்னைக்கு ஆபீஸ்ல, இதைத் தான்   போட்டுட்டு வரச் சொல்லி இருக்கிறாங்கமா” “யாரு காதுல பூ சுத்துற?” “தலையில் வேணா...
    அன்று இரவு அத்வைத் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பொழுது, வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்ததும் மனதினுள் சிறிது ஆயாசமாக உணர்ந்தாலும், வெளியே அதை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. நேகா புன்னகையுடன், “ஹாய் அத்தான்” என்றாள். மெல்லிய உதட்டோர மென்னகையுடன் தலை அசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து விட்டு, தனது அறை நோக்கிச் சென்றான். நேகா அருகே...
    நான்கு மாதங்கள் கடந்திருந்தது... வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, சொற்போரிட்டுக் கொண்டிருந்த மரகதத்தையும் செந்தமிழினியையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், வேணுகோபால். அப்பொழுது அவரது கைபேசி அலற, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “சொல்லுப்பா” என, எதிர்முனையில் இருந்த அருள்மொழி, “இன்னைக்கு சத்தம் அதிகமா இருக்கே! என்னாச்சுபா?” என்று கேட்டான். அப்பொழுது, “நீ என்ன சொன்னாலும் என் முடிவில் இருந்து நான்...
    அதே நேரத்தில், தனது அறையில் உறக்கம் இன்றிப் படுத்திருந்த அத்வைத் தன் மீது படுத்திருந்த தனது இரண்டரை வயது மகன் யாதவை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கை அனிச்சை செயலாக, தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, பார்வையோ விட்டதை வெறித்தபடி இருந்தது. யாதவ், “டாடா யது தூக்கம் வர்ல.. லைட் போடு.. விளையாது” என்றான் தனது மழலையில். சட்டென்று சுயம்...
    நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் குறிப்பிட்ட அறையின் ஜன்னல் கதவு மட்டும் ‘படார்.. படார்’ என்று இருமுறை அடித்துக் கொண்டது. அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்து விழித்த அருள்மொழி, குழப்பத்துடன் ஜன்னலையும் ஓடிக் கொண்டிருந்த காற்பதனியையும்(AC), மூடியிருந்த அறைக் கதவையும் பார்த்தான். ‘ஜன்னலை மூடிட்டு தானே AC போட்டேன்!’ என்று மனதினுள் ஆராய்ந்து கொண்டிருந்த...
    error: Content is protected !!