Advertisement

இதே நேரத்தில் வெளியே வீட்டின் வாயிலில் அருள்மொழி அத்வைத்தைப் பார்த்து, ரொம்ப முறைக்காதடா.. அம்மாவை சமாதானம் செஞ்சு, நல்ல செய்தியோடு உன்னை வந்து பார்க்கலாம்னு நினைத்தேன்.” என்றான்.
நீங்கள்ளாம் பெரிய ஆள்.. எங்களை மாதிரியா!”
டேய்.. நான் தான் சொல்றேனே!”
பேசாதடா.. சென்னை வந்திருக்கிறேன்னு ஒரு போன் கூட செய்ய முடியலை.” என்றவன், துருவுக்கு போன் போட முடியுது.. எனக்கு செய்ய முடியலை!” என்றான் சிறு கோபத்துடன்.
அப்படி இல்லைடா”
என்ன நொப்படி இல்லை?”
டேய்! நான் சொல்றதைக் கேளு”
அவன் கைகளை கட்டிக் கொண்டு, சரி சொல்லு” என்றான்.
உன் கிட்ட போனில் பேசினா, நேரில் வரச் சொல்லுவ.. அதான்,   அம்மாவை சமாதானம் செஞ்சிட்டு, சர்ப்ரைசா வந்து பார்க்கலாம்னு நினைத்தேன்.”
நல்ல சமாளிக்க கத்துக்கிட்டடா”
டேய்!”
சரி நம்பிட்டேன்”
அருள்மொழி அவனை அணைத்தபடி, உள்ளே வா மச்சான்” என்றான்.
அப்பொழுதும் அத்வைத் அமைதியாக இருக்க, அருள்மொழி, சிரியேன்டா” என்றான்.
இப்போ நீ கட்டிபிடிச்ச மாதிரி, உன் தங்கச்சியை கட்டிபிடிக்கச் சொல்லு, நல்லா பல்லைக் காட்டுறேன்.”
அடேய்! நான் அண்ணன்டா” என்றான்.
இருந்துட்டுப் போ”
துருவ் சொன்னான்டா”
என்னன்னு?”
விசுவாமித்திரர் உடம்புக்குள் மன்மதன் புகுந்துட்டான்னு”
போங்கடா! மிங்கிள் ஆகாத சிங்கிள் பசங்களா.” என்று விட்டு அவன் உள்ளே செல்ல,
நாங்களாடா மிங்கிள் ஆக மாட்டோம்னு சொல்றோம்!” என்ற படி அருள்மொழியும் உள்ளே சென்றான்.
அதுக்கு ஒருத்தியை மட்டும் பார்க்கணும், ஒருத்தியையும் விடாம பார்க்கக் கூடாது.”
அதற்குப் பதில் கூற வாய் திறந்த அருள் மொழியின் கவனம், யாதவிடம் சென்றது.
செந்தமிழினியின் பார்வையை தொடர்ந்த குழந்தை, மரகதம் அருகே சென்று, எம்மு ஆச்சி.. நீங்க ஏன் அம்மா விடலை?” என்று சிறு முறைப்புடனும் சிறிது இறுகிய முகபாவத்துடனும் கேட்டான்.
மரகதத்திற்கு சிறு வயது அத்வைத்தை பார்ப்பது போல் இருக்கவும், அவர் மென்னகையுடன் அவனது கன்னத்தை வருடியபடி,
அப்போ தானே!  யது கண்ணா இங்கே வருவீங்க” என்றார்.
அவரது பதிலில் மகிழ்ந்தாலும், கண்ணா சொல்ல கூடாது.. அம்மா டாடா தான் கண்ணா சொல்லுவா..” என்று சொல்லத் தவறவில்லை.
அத்வைத்தைப் பார்த்த வேணுகோபால் “வா பா அத்வைத்” என்று வரவேற்க,
மரகதமும், வா அத்வைத்.. வந்து உட்கார்” என்றார்.
புன்னகையுடன், எப்படி இருக்கிறீங்க அத்தை மாமா?” என்று கேட்டபடி அவன் சோபாவில் அமர,
சோபாவில் அமர்ந்த மரகதம், யாதவை தனது மடியில் அமர்த்தி கன்னத்தை வருடியபடி, உன்னை சின்ன வயசில் பார்த்த மாதிரியே இருக்குது..” என்றவர் அத்வைத்தை பார்த்து, அதே முறைப்புடனும் விரைப்புடனும் கேள்வி கேட்கிறான்.” என்றார்.
அத்வைத் புன்னகையுடன், இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் மாதிரியே சேட்டை செய்றான்னு சொல்லுவீங்க.” என்றான்.
செந்தமிழினி அவனை செல்லமாக முறைக்க, மரகதம் அமைதியானார்.
யாதவ் மரகதத்தை நிமிர்ந்து பார்த்து, நீங்க அம்மாவோட அம்மா தானே!” என்று கேட்டான்.
அவர், ஆமா குட்டிமா” என்றதும்,
அப்போ நீங்க சொன்னா அம்மா கேட்பா தானே!” என்றான்.
ஆமா! ஆமா கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா!’ என்று மனதினுள் நினைத்தபடி செந்தமிழினியைப் பார்க்க,
அவள் பல்லைக் காட்டி சிரித்தாள்.
குழந்தை தன் பதிலுக்காகக் காத்திருக்கவும், எதுக்கு கேட்கிற?” என்று கேட்டார்.
அவனோ, அம்மாவை என் கூடவே வந்து இருக்கச் சொல்லுங்களேன், ப்ளீஸ்” என்றான் கெஞ்சும் குரலில்.
மரகதம் பதில் சொல்லத் திணற, அத்வைத் செந்தமிழினியிடம் பார்வையால் குழந்தையை அழைத்துச் செல்லக் கூறினான்.
செந்தமிழினி, யது கண்ணா.. அம்மா ரூம் எப்படி இருக்குதுனு போய் பார்க்கலாமா?” என்று கேட்டதும்,
குழந்தை, ஓ!” என்றபடி துள்ளி குதித்துக் கொண்டு அவளிடம் வந்தான்.
இருவரும் அறையினுள் செல்லும் வரை அவர்களை பார்வையால் தொடர்ந்த அத்வைத், மரகதம் பக்கம் திரும்பினான்.
இவ்வளவு நேரம் புன்னகையுடன் இருந்த அவரது முகம், தீவிர முகபாவத்திற்கு மாறி இருக்க,
அவன், உங்க அத்வைத் மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா, அத்தை?” என்று கேட்டான்.
அவர், உன் மேல் நம்பிக்கை இருக்குது. ஆனா கூட்டுக் குடும்பத்தில் நீ மட்டும் இல்லையே!” என்றார்.
என்னை மீறி ஆச்சி பிரச்சனை செய்ய மாட்டாங்க, அத்தை”
எத்தனை நாள் நீ தடுப்ப? சிலரோட பிறவி குணத்தை மாத்தவே முடியாது.. நாம தான் தள்ளி இருந்துக்கனும்.”
வீட்டுக்குத் தலைமகனா என்னால் ஆச்சியை விட  முடியாது அத்தை.. அதே மாதிரி தனிக் குடித்தனமும் வர முடியாது”
அவர் முறைப்புடன், இந்த ரெண்டில் எதையாவது ஒன்னை நீ செய்றதாச் சொன்னா.. மறு பரிசிலனை செய்றதுக்கே இடம் இல்லாம, தமிழை கட்டித் தரமாட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.
புன்னகையுடன், இதுக்காக தான் அத்தை எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.. லவ் யூ அத்தை” என்றான்.
படவா, ஐஸ் வச்சது போதும்.” என்று அவர் கூற,
விரிந்த சிரிப்புடன், இது உண்மை அத்தை..” என்றவன் குரலை தாழ்த்தி, லவ் யூ சொன்னதை உங்க பொண்ணு கிட்ட சொல்லிடாதீங்க.. அவ கிட்ட நான் இன்னும் சொல்லவே இல்லை.” என்றான்.
அருள்மொழி, பின்னுறானே!’ என்று மனதினுள் கூறிக் கொள்ள,
வேணுகோபால் மென்னகையுடன், “விரும்புற பொண்ணு கிட்ட சொல்லாம, அவளோட அம்மா கிட்ட சொன்ன ஆள் நீயா தான் இருப்ப.” என்றார்.
அவனோ, என்ன செய்றது! அத்தையை கரெக்ட் பண்ணாத் தானே, அத்தை பெத்த ரத்தினம் கிடைக்கும்.” என்றான் மென்னகையுடன்.
அருள்மொழி, அடப்பாவி!’ என்பது போல் பார்க்க,
அத்வைத் வேணுகோபாலிடம், உண்மையை சொல்லுங்க மாமா.. இத்தனை வருஷம் ஆகியும் அத்தை கிட்ட நீங்க சொல்லாததை நான் சொல்லிட்டேன்னு தானே இப்படி சொன்னீங்க!” என்று கிண்டல் குரலில் கூற,
அவர், ஏன்டா என் சாப்பாட்டில் கை வைக்கிற! வந்த வேலையை மட்டும் கவனி” என்றார்.
வாய்விட்டுச் சிரித்தவன், அத்தை நான் சொன்னது தானே உண்மை!” என்று மரகதத்திடம் வினவ,
வேணுகோபால், அடேய்! ஏன்டா திரும்ப என் தலையை உருட்டுற! என்னை விட்டுரு. நான் தாங்க மாட்டேன்.” என்றார்.
அனைவர் முகத்திலும் சன்னமான புன்னகை அரும்பி இருக்க,
மரகதத்தைப் பார்த்து, என்னோட முதல் கல்யாணத்தை பற்றி கேள்விப் பட்டு இருப்பீங்க.. கல்யாணம் என்ற பெயரில் எனக்கு நரகத்தை காட்டிட்டுப் போய்ட்டா” என்று இறுகிய குரலில் கூறிக் கொண்டிருந்தவன் சட்டென்று மென்மையான குரலில், என்னை நரகத்தில் இருந்து காப்பாற்ற வந்த தேவதை தான் தமிழ்.. என் வாழ்விலும் நேசம் பூக்க வைத்தவள்.” என்றான்.
பின் இரு கைகளையும் ஏந்தியபடி வைத்து, எனக்கு என்னோட வாழ்க்கையை கொடுத்துடுங்க அத்தை ப்ளீஸ்.. இத்தனை நாட்கள் எப்படியோ.. ஆனா இனி என்னோட தமிழ் இல்லாம என்னால் வாழவே முடியாது, அத்தை.” என்றான் காதலுடன் கூடிய உருக்கமான கெஞ்சல் குரலில்.
அத்வைத்தின் யாசிப்பை சற்றும் எதிர் பார்த்திராத மரகதம், அதிர்ச்சியில் பேச்சற்று இருக்க,
அருள்மொழி தான் சட்டென்று அவன் அருகே வந்து கைகளைப் பற்றியபடி, ஏன்டா இப்படி!” என்றான் வருத்தம் கலந்த கண்டிப்பு குரலில்.
அத்வைத், இல்லைடா.. அத்தையோட மனசு எனக்கு புரியுது.. அது நியாயமும் கூட.. தமிழ் போன்ற அருமையான பெண்ணை இப்படி பிரச்சனையை கூடவே வச்சிருக்கும் எனக்கு ரெண்டாந்தாரமா கொடுக்க அவங்க மனசு ஒப்பாது தான்.. ஆனா அறிவுக்கு புரியுறது, மனசுக்கு புரியலையே! மனசு தமிழ் தமிழ்னு தானே ஏங்குது!” என்றான் கலங்கிய குரலில்.
அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல் மரகதம், நான் மாட்டேன்னு சொல்லவே இல்லையே! டைம் தானே கேட்டேன்.” என்றார்.
சட்டென்று முகம் மலர அவரை நோக்கியவன், அப்போ ஓகே சொல்றீங்களா, அத்தை?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.
அவர் மென்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,
யாஹு!” என்று கத்தியபடி அவரை நெருங்கியவன், தேங்க் யூ அத்தை.. தேங்க் யூ ஸோ.. மச்” என்றபடி அவரை தூக்கிச் சுத்தினான்.
மரகதம், டேய்! என் பையனுக்கு இன்னும் பொண்ணு பார்க்கக் கூட ஆரம்பிக்கலை.. என்னை பத்திரமா இறக்கி விடுடா” என்றார்.

Advertisement