Advertisement

அடுத்த நாள் காலையில் செந்தமிழினி கண் விழித்ததும் கண்டது, தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழியைத் தான்.
உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்த படி, டேய் அண்ணா!” என்றாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தாலும் வருத்தமான குரலில், சாரிடா..” என்று ஆரம்பிக்க, அவனது பேச்சை இடையிட்டு,
காலையிலேயே வயலின் வாசிக்காதடா” என்றவள், இது பாட்டெடு கொண்டாடு மொமென்ட்” என்றாள்.
எழுந்து சென்று, கைபேசியை ஒலி பெருக்கியுடன் இணைத்து,
ரக்கிட ரக்கிட ரக்கிட… ஓஓஓ… ரக்கிட ரக்கிட ரக்கிட… ஓஓஓ…
ரக்கிட ரக்கிட ரக்கிட… ஓஓஓ… ரக்கிட ரக்கிட ரக்கிட… ஓஓஓ…
ஹே! என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோஷமா இருப்பேன்..
உசுரு இருக்க வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்..” என்ற பாடலை ஒலிக்க விட்டவள். அருள்மொழியின் கைகளைப் பிடித்து இழுத்து ஆட ஆரம்பித்தாள்.
முதலில் அவளுக்காக என்று ஆட ஆரம்பித்தவன், பின் உண்மையிலேயே உற்சாகத்துடன் ஆட ஆரம்பித்தான். நடுவில் வந்த டப்பாங்குத்து இசைக்கு இருவரும் சேர்ந்து வேகாமாக ஆட,
அறை வாயிலில் நின்ற படி வேணுகோபால் மென்னகையுடன் அதை பார்த்துக் கொண்டிருக்க,
மரகதம் தலையில் அடித்த படி, நல்ல அண்ணன் தங்கை, நல்ல அப்பா.” என்று விட்டுச் சென்றார்.
ஆனால் உள்ளுக்குள் சற்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார். நேற்று இரவு மகளின் வருத்தமான பேச்சைக் கேட்டதில் சஞ்சலம் அடைந்திருந்த மனம் இப்பொழுது தான் சற்று நிம்மதியுற்றது. தங்கைக்காக இரவு பயணம் செய்து வந்த அருள்மொழியின் பாசத்திலும், சில காலம் கழித்து அண்ணனும் தங்கையும் ஒன்றாக குத்தாட்டம் போட்டதைக் கண்டதிலும், மனம் சற்றே மகிழ்ச்சி கொண்டது.
உங்களுக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா?” என்ற மரகத்ததின் குரல் சமையல் அறையில் இருந்து வரவும், வேணுகோபால், இதோ” என்ற பதிலுடன் நகர்ந்து குளிக்கச் சென்றார்.
பாடல் முடிந்ததும் இருவரும் மூச்சு வாங்கியபடி மெத்தையில் அமர்ந்தனர்.
செந்தமிழினி, நேத்து ஒரு பிட்டு தானேடா போட்டேன்! இப்படி நைட்டோட நைட்டா ஓடி வந்திருக்க!” என்றாள்.
ஒரு பிட்டு தான்னாலும் நச்சுனு நங்கூரத்தை இறக்கிட்டியே!”
சிரித்தவள், எத்தனை நாள் லீவ்?” என்று கேட்டாள்.
லீவ்லாம் இல்லை.. ஒரு மாசம் வொர்க் பிரம் ஹோம் கேட்டு வந்திருக்கிறேன்.. உன் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் கிளம்புறேன்.”
பார்டா!” என்றவள், எப்படிடா நீ கேட்டதும் கிடைச்சுது? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ!” என்றாள்.
அவன் சட்டைக் காலரை தூக்கி விட்ட படி, ஐயாவோட மௌஸ்ஸை இப்பயாச்சும் தெரிஞ்சுக்கோ!” என்று கூற,
அவளோ, எந்த மௌஸ்! எஸ்.ஜே சூர்யா வேட்டிக்குள்ள போச்சே அந்த மௌஸ்ஸா!” என்றாள். (‘மொன்ஸ்டர்’ திரைபடத்தில் வரும் காட்சி)
அருள்மொழி ‘ஞை’ என்று பாவமாக விழிக்க, அவள் சிரிப்புடன், பிரஷ் செய்துட்டு வரேன்” என்று கூறி குளியல் அறைக்குள் சென்றாள்.
தந்தை பள்ளிக்கும், தங்கை அலுவலத்திற்கும் கிளம்பிச் சென்றதும், அருள்மொழி அன்னையிடம், என்ன முடிவு செய்து இருக்கிறீங்கம்மா?” என்று கேட்டான்.
அவர், இப்போ இதைப் பத்தி பேச வேணாம் அருள்.. கொஞ்ச நாள் ஆகட்டும்.” என்றார்.
தமிழ், வேற யாரையும் கல்யாணம் செஞ்சுப்பானு நினைக்கிறீங்களா?”
அவர் அமைதியாக இருக்க,
அந்தக் கிழவியை நினைச்சு நீங்க கவலைப் படாதீங்கமா..” என்று பேசிக் கொண்டிருந்தவன் அன்னையின் முறைப்பில்,
 துருவே, அப்படி தான்மா கூப்பிடுறான்.. அவனை மாதிரி அவங்க முன்னாடி இப்படி சொல்ல மாட்டேன். ஆனா ஆச்சினு மரியாதையாலாம் பேச முடியாதுமா.” என்றான்.
பின் அவனே தொடர்ந்தான், “தமிழ்   சமாளிப்பானு சொல்றதை விட, அவங்க தான் கஷ்டப்பட்டு நம்ம தமிழை சமாளிக்கணும்.. அப்புறம் யாதவ் பிரச்சனையே இல்லைம்மா.. அவன் தமிழை அம்மாவா தான் பார்க்கிறான்.. அவன் புத்திசாலிக் குழந்தை.. அது போக அத்வைத், தமிழ், துருவ் இருக்கிறப்ப, அவனை மூளை சலவை செய்றது சுலபம் இல்லை.”
முடியவே முடியாதுனு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”
தமிழ் மேல எனக்கு நம்பிக்கை இருக்குதுமா” என்றவன்,எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், தமிழ் அத்வைத் கூட மட்டும் தான் சந்தோஷமா இருப்பா.. அவளோட சந்தோசம் தானே நமக்கு வேணும்.”
நீ போய் வேலையை ஆரம்பி”
அம்மா”
எனக்குக் கொஞ்சம் டைம் கொடு”
சரிமா” என்று கூறி வேலையில் ஆழ்ந்தான்.
அன்று காலை பதினோரு மணி அளவில் அத்வைத் அறையினுள் சென்ற செந்தமிழினி, குட் மார்னிங் அத்து” என்றாள்.
அவன் விரிந்த புன்னகையுடன், வீட்டில் பாசமலர் ரீல் ஓடுச்சு போல!” என்றான்.
லைட்டா” என்றாள் புன்னகையுடன்.
அவன் ஒரு உணவுப் பெட்டியை நீட்ட, அவள், தேனுமா கொடுத்தாங்களா?” என்று கேட்டபடி ஆர்வத்துடன் வாங்கித் திறந்து பார்த்தாள்.
காளான் பிரியாணியின் மனம் அறை முழுவதும் வீசியது.
மூச்சை இழுத்து வாசம் பிடித்தவள், வாவ்.. ஸ்மெல்லே அள்ளுது.” என்ற படி, சிறிது எடுத்து வாயில் போட்டுச் சுவைத்தாள்.
செம டேஸ்ட்.. வேணுமா?” என்று அவள் அவனைப் பார்த்து கேட்க,
அவனோ, தேனைக் கண்ட வண்டின் பார்வையுடன், எனக்கு ஸ்வீட் தான் வேணும்.” என்றான்.
அவனது பார்வையை கவனிக்காமல் உணவுப் பெட்டியை மூடிக் கொண்டிருந்தவள், என்ன ஸ்வீட் வேணும்?” என்று கேட்டபடி அவனைப் பார்த்தாள்.
எனக்கு செரிப் பழம் தான் வேணும்.” என்றவனின் பார்வை அவளின் இதழில் பதிந்து இருந்தது.
வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல் உணர்ந்தவள், நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்றபடி திரும்பினாள்.
அவனோ அவளது படபடப்பை ரசித்தபடி, எத்தனை நாள் தப்பிக்கிறனு பார்க்கிறேன்” என்றான்.
திரும்பி அவனுக்கு அழகு காட்டிவிட்டு ஓடி விட்டாள். அதன் பிறகு வேலைப்பளு இருவரையும் இழுத்துக் கொண்டது.
அதே நேரத்தில் அத்வைத் வீட்டில் யாதவுடன் தனியாக இருந்த மங்களம், யது கண்ணா” என்று பாசமாக அழைத்து, இந்த பெரிய ஆச்சி, நல்லதை மட்டும் தானே சொல்வேன்!” என்றார்.
குழந்தை அமைதியாக இருக்க, அவர் அதே தேனொழுகும் பாசமான குரலில், குழந்தையின் நெஞ்சில் நஞ்சை புகுத்தும் எண்ணத்துடன் பேச ஆரம்பித்தார்.
அவர், செந்தமிழினியை நம்பாத குட்டிமா!” என்று ஆரம்பிக்க, குழந்தை அவரை முறைத்தான்.
அவர், இரு குட்டிமா.. பெரிய ஆச்சி சொல்லி முடிச்சுக்கிறேன்.. அவ உன் கிட்ட பாசமா இருக்கிறதே உன்னோட அப்பாவை கல்யாணம் செய்துக்கத் தான்.. உன்னோட அப்பாவை கல்யாணம் செய்ததும் இந்த பாசம் எல்லாம்  காணாமப் போய்டும்.. இப்போவே, அப்பா கூடப் பேசும் போதுஉன்னை வெளியே அனுப்பி இருப்பாளே.. உன்னோட அப்பாவை..” என்றவரின் பேச்சை இடையிட்ட குழந்தை, டாடாவையும் என்னையும் அம்மா பிரிச்சிடுவா.. அதானே!” என்றான்.
அவனது ‘அம்மா’ என்ற அழைப்பில் அதிர்ந்தவர் அவன் கூறிய விசயத்தில் மகிழ்ந்து, ஆமா குட்டிமா.. அதைத் தான், பெரிய ஆச்சி சொல்ல வந்தேன்.” என்றார்.
முறைப்புடன் எழுந்து நின்ற யாதவ், நீ பேய் ஆச்சி தான்.. நீ இப்படி தான் பேசுவனு, நேத்தே அம்மா சொல்லிட்டா.. உன் பேச்சு கா.. என்ட(என் கூட) பேசாத.” என்று கூறி விட்டு ஓடிவிட்டான்.
மங்களத்தால், சண்டாளி.. கிராதகி.. குழந்தை மனசை கெடுத்து வச்சிருக்கா! என்னோட திட்டத்தை இப்படி கெடுத்துட்டாளே! நல்லா இருப்பாளா அந்த சிறுக்கி!’ என்று மனதினுள் திட்ட மட்டுமே முடிந்தது.
ஆம் முன்தினம் திருமணத்தை பற்றிய விளக்கத்தை குழந்தையிடம் கூறி முடித்ததும், அவள், யது கண்ணா.. பெரிய ஆச்சிக்கு அம்மாவை பிடிக்காது.” என்று ஆரம்பிக்க,
குழந்தை, ஏன் பிடிக்காது? நீ ரொம்ப குட் கேர்ள் ஆச்சே!” என்றான்.
தெரியலையே!” என்று உதட்டை பிதுக்கியவள், டாடா, அம்மாவை கல்யாணம் செய்ய விட மாட்டாங்களாம்.” என்றாள்.
குழந்தை கோபத்துடன், அப்போ, அந்த பேய் ஆச்சி நமக்கு வேணா.” என்றான்.
புன்னகையுடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவள், அது என்ன பேய் ஆச்சி?” என்று கேட்டாள்.
குழந்தை, “சித்தா தான் சொன்னா” என்றான்.
புன்னகையுடன், ஓ!” என்றவள், “ஆனா, பேபீஸ் இப்படி எல்லாம் பேசக் கூடாது.” என்றாள்.
அரை மனதுடன் தலையை ஆட்டிய குழந்தை, பெரிய ஆச்சி பேட்-ஆ(Bad) செய்தா பேய் ஆச்சி சொல்லுவேன்.. ஓகே?” என்று கேட்டான்.
மனதினுள் ‘சமத்து தங்கக்கட்டி’ என்று கொஞ்சியவள், அவனிடம் கண்களை சுருக்கியபடி, டாடா என்ன சொல்லுவாங்க?” என்று கேட்டாள்.
குழந்தை முகத்தைச் சுருக்கியபடி, நீ சொன்னதை தான் சொல்லுவா” என்றான்.
ஹ்ம்ம்..” என்றவள், சரி அதை விட்டிருவோம்.. இப்போ,   அம்மா     சொல்றதை,    கவனமா கேட்டுக்கோங்க” என்றாள்.
ஹ்ம்ம்”
அம்மாவை நீங்க நம்புறீங்க தானே?”
ஹ்ம்ம்” என்றபடி அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
அவள் புன்னகையுடன், இந்த வேர்ல்டுலேயே(world) அம்மாக்கு உங்களைத் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு அப்புறம் டாடாவை பிடிக்கும்.” என்றாள்.
குழந்தை புன்னகையுடன், லவ் யூ அம்மா” என்று கூறியபடி, அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
அவளும் புன்னகையுடன், மீ டூ லவ் யூ ஸோ… மச், யது கண்ணா” என்ற படி குழந்தையை இறுக்கமாக அணைத்து, கன்னத்தில் சற்று அழுத்தமாக முத்தமிட்டாள்.
பிறகு, நல்லா கவனிங்க.. இப்போ நான் சொல்லப் போறது எதுவும் உண்மை இல்லை.. ஆனா பெரிய ஆச்சி அம்மாவை உங்க கிட்ட இருந்து பிரிக்க அப்படி சொல்லுவாங்க.” என்று கூறி, அவன் முகத்தை பார்த்தாள்.
குழந்தையின் முகம் குழம்பி இருக்கவும், அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள், மனதினுள் மங்களத்தை திட்டித் தீர்த்தாள்.
பின் குழந்தையை சற்று விலக்கிப் பிடித்த படி, உங்களை குழப்பலை கண்ணா.. உங்களை அம்மா அலர்ட் செய்றேன்.. இப்போ இல்லைனாலும், பெரிய ஆச்சி பேசுறப்ப உங்களுக்குப் புரியும்..” என்றவள்,
பெரிய ஆச்சி இன்னைக்கோ நாளைக்கோ உங்களை தனியா கூப்பிட்டுப் பேசுவாங்க.. அம்மா வெரி பேட் கேர்ள்.. அம்மா கூடச் சேராத.. அம்மாக்கு உங்க மேல பாசமே கிடையாது.. அம்மா நடிக்கிறேன்.. உங்களையும் டாடாவையும் அம்மா பிரிச்சிடுவேன்.. டாடாவை தனியா கூட்டிட்டுப் போய்டுவேன்.. இப்படி நிறைய சொல்லுவாங்க..” என்றவளின் பேச்சை இடையிட்ட குழந்தை தவிப்புடன்,
ஏன் அப்படி சொல்வாங்க?” என்று கேட்டான்.
அவங்களுக்கு அம்மாவைப் பிடிக்காது.. அம்மாவை உங்க கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைக்கிறாங்க.. அம்மாவை பத்தி தப்பு தப்பா சொல்லி, உங்களை நம்ப வச்சு அம்மாவை யது கண்ணா கிட்ட இருந்து பிரிக்கப் பார்ப்பாங்க.” என்றாள்.
வேகமாக அவளை இறுக்கமாக அணைத்த குழந்தை அழும் குரலில், நோ.. நோ.. எனக்கு அம்மா வேணும்..” என்றான்.
அவள் அவனை சற்றே விலக்கப் பார்க்க, அது அவளால் முடியவில்லை. அவன் மீண்டும் அதையே கூறினான்.
ஒரு நொடி குழந்தையை தேவை இல்லாமல் கலங்க வைத்து விட்டோமோ என்று வருந்தியவள், பின், மங்களத்தின் குள்ளநரித் தனத்தை அறிந்தவளாக மனதை திடப் படுத்திக் கொண்டு, குழந்தையின் மனதை சீர் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.
குழந்தையை தானும் இறுக்கமாக அணைத்து உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டபடி, அம்மாவையும் யது கண்ணாவையும் யாருமே பிரிக்க முடியாது.. அம்மா அதுக்கு விட மாட்டேன்.” என்றாள்.

Advertisement