Advertisement

இரண்டு ஒலித்தத்தையும் கேட்ட அருள் மொழியின் மனதில் முதலில் தோன்றியது, பிரம்மிப்பும் பெருமையும் தான். அதன் பிறகே ‘இதை எப்படி தாய் தந்தையிடம் புரிய வைக்கப் போகிறோம்.’ என்று மனதினுள் அலறினான்.
ஒருவாறு திடத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டு ஒலித்தத்தையும் புலனம் மூலம் தந்தைக்கு அனுப்பி விட்டு அழைத்தான்.
அப்பொழுது தான் செந்தமிழினி அத்வைத் கல்யாணத்தை பற்றி மரகதமும் வேணுகோபாலும் விவாதித்து முடித்திருந்தனர்.
அழைப்பை எடுத்த வேணுகோபால், சொல்லு அருள்.” என்றதும்,
அவன், அப்பா உங்களுக்கு வாட்ஸ்அப்-பில் ரெண்டு ஆடியோ அனுப்பி இருக்கிறேன்.. அதை நீங்களும் அம்மாவும் கேளுங்க.. நான் அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
ஒலிபெருக்கி மூலம் அவன் பேசியதை கேட்ட மரகதம், “வாட்ஸ்-அப் போய் என்னனு பாருங்க” என்றார்.
அவற்றைக் கேட்டதும் மரகதத்திற்கு பெருமையாக இருந்தாலும் பெரியவர்களிடம் இப்படி நடந்து கொண்டாளே என்ற கோபமும் இருந்தது. அவரது மனசாட்சி, யாரு பெரியவங்க! அதெல்லாம் பெரியவங்க லிஸ்ட்லயே கிடையாது’ என்று எடுத்துக் கூற,
அவரோ, அதுக்காக இவ இப்படி செய்யலாமா? இப்போ எதுவும் சொல்லலைனா, இன்னும் அதிகம் செய்வா.. என்றார்.
வேணுகோபால் அதிர்ச்சியுடன், என்னமா இப்படி செய்து இருக்கா!” என்றார்.
மரகதம், அவ இப்படி செய்யலைனா தான் அதிசயம்.. இதுக்காக தான், நான் இந்த விஷயத்தை அவ கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்.. இப்போ புரியுதா?” என்றார்.
ஹ்ம்ம்” என்றவர், இப்போ யாரு சொல்லி இருப்பா?” என்ற போது அருள்மொழி மீண்டும் அழைத்தான்.
அவர் அழைப்பை எடுத்ததும் அவன், அப்பா அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. அத்வைத் தமிழை கல்யாணம் செய்துக்க விரும்புறதா சொன்னப்ப, அது நடக்காதுனு அவனுக்கு எடுத்துச் சொல்லத் தான் நடந்ததை அவனிடம் சொன்னேன்.. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டப்ப, நடந்ததை ரெக்கார்டு செய்து எனக்கும் தமிழுக்கும் அனுப்பிட்டான்..
அதுக்கு அப்புறம் தமிழ் விஷயத்தை கேட்டப்ப என்னால சொல்லாம இருக்க முடியலை” என்று வேகமாக சொல்லி முடித்தான்.
மரகதம், இதை நீ, எப்போ சொல்லி இருக்கணும்?” என்று கேட்டார்.
சாரிமா”
நீ சாரி சொல்றதால் நடந்ததை மாத்த முடியுமா?”
யாராவது பூனைக்கு மணி கட்டித் தானே ஆகணும்!”
என்ன தேவைக்கு? நமக்கு அது தேவையே இல்லையே!”
இப்போ தேவையா இருக்குதே!”
இப்போ மட்டும் என்ன தேவை?”
அம்மா தமிழ்..” என்ற போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும், கதவைத் திறக்க வேணுகோபால் எழுந்து செல்ல,
மரகதம், சண்டி ராணி வந்துட்டா!” என்றார்.
அவன், சண்டி ராணி இல்லைமா.. அவ வீர மங்கை வேலு நாச்சியார் மாதிரி.” என்றான்.
ஆமா! ப்ரிட்டிஷ் கிட்ட இருந்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தரப் போறா!”
நம்ம மனசில் இத்தனை வருஷம் மண்டிக் கிடந்த வருத்தங்களுக்கு, ஆதங்கத்திற்கு விடுதலை கொடுத்து இருக்கா.” என்ற போது செந்தமிழினி உள்ளே வந்தாள்.
மரகதம் அவளை கடுமையாக முறைக்க,
அவரை நேர்பார்வை பார்த்தபடி, “நீங்க எது நடக்கக் கூடாதுனு நினைச்சீங்களோ, இப்போ அதைத் தான் செஞ்சுட்டு வந்திருக்கிறேன்.” என்றவள்,
ஆனா ஒன்னு.. நான் இந்த வீட்டில் இன்றியமையாதவள்னு நினைச்சுட்டு இருந்தேன்.. அப்படி இல்லைனு நீங்க மூனு பேரும் சேர்ந்து என்னை ஒதுக்கி வச்சு சொல்லாமச் சொல்லிட்டீங்க.. ஒருவேளை வேற வீட்டுக்குப் போற பொண்ணு தானேனு நினைச்சுட்டீங்க போல!” என்று சற்று வருத்தமான குரலில் முடித்தாள்.
மரகதமும் வேணுகோபாலும் அதிர்ச்சியுடன் சற்று கலங்கிய குரலில், தமிழ், அப்படி எல்லாம் இல்லைடா” என்றனர்.
சட்டென்று மென்னகைத்து, ஆல்ரைட்.. அதுவும் சரி தானே..” என்றவள்,  சரி விடுங்க.. எனக்குக் கொஞ்சம் ஆபீஸ் வொர்க் இருக்குது.. நான் போய் அதைப் பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு, தனது அறைக்குச் சென்று கதவடைத்தாள்.
நான் அப்புறம் பேசுறேன்மா” என்று கூறி அழைப்பைத் துண்டித்த அருள்மொழி, தங்கையை அழைத்தான். ஆனால், அவன் எத்தனை முறை அழைத்தும், அவள் அழைப்பை எடுக்கவே இல்லை.
மீண்டும் அன்னையை அழைத்தவன், என்னமா செய்றா? போனை எடுக்கவே மாட்டிக்கிறா.” என்று கலங்கிய குரலில் கூறினான்.
கொஞ்ச நேரம் அவளை தனியா விடு.. அவளே பேசுவா” என்று மரகதம் கூற,
அம்மா!” என்றான்.
நாம ஒன்னு நினைச்சா அவ வேற விதத்தில் யோசிச்சிட்டா..” என்று வருத்தத்துடன் கூறியவர், சாப்பிட்டதுக்கு அப்புறம் கூப்பிடுறேன்.. கவலைப்படாத.. சரியாகிடுவா” என்று தன்னையும் தேற்றியபடி மகனை தேற்றினார்.
நானாவது சொல்லி இருக்கணும்மா”
விடு” என்றவர், நீயும் சாப்டுட்டு வா” என்றார்.
அவன் அமைதியாக இருக்கவும், அருள்” என்று அழைத்தார்.
சரிமா” என்று அமைதியாக கூறியவன் அழைப்பைத் துண்டித்தான்.
மகளின் அறைக் கதவை தட்டியவர் அவள் திறந்ததும், சாப்டுட்டு வந்து வேலையைப் பார்” என்றார் அமைதியான குரலில்.
அவளும் அமைதியாகச் சென்று உணவை உட்கொண்டாள். மூவரும் உண்டு முடிக்கும் வரை, அங்கே மௌனமே ஆட்சி செய்தது.
அவள் மீண்டும் அறைக்குச் செல்லும் பொழுது, “தமிழ்” என்று மரகதமும் வேணுகோபாலும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.
திரும்பியவள் முதலில் தந்தையைப் பார்த்து புன்னகையுடன், அது ஏதோ அந்த நேர வருத்தத்தில் சொல்லிட்டேன்பா.. உங்க ரெண்டு பேரையும் ஹர்ட் செய்ததுக்கு சாரி.. அதை மறந்துடுங்க, ப்ளீஸ்..
இப்போ அம் ஓகே.. உங்களுக்குத் தான் தெரியுமே! கோபமோ வருத்தமோ எதையும் இழுத்துப் பிடிக்க எனக்குத் பிடிக்காது.. வரவும் செய்யாது.. நிஜமாவே இப்போ நான் ஓகே.. கொஞ்சம் ஆபீஸ் வொர்க் இருக்குது.” என்றவள் அடுத்து அன்னையைப் பார்த்து,
அத்தான் இன்னைக்கு கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டப்பவீட்டில் பேசுங்கனு  தான் சொன்னேன். ஆனா, எனக்கு அத்தானை பிடிக்கும்மா.. அத்தானை மட்டும் தான் பிடிக்கும்.” என்றவள்,
முதல்ல இந்தக் கல்யாணத்துக்கு உங்க ரெண்டு பேரையும் கன்வின்ஸ் செய்யனும்னு தான், நினைத்து இருந்தேன்.. ஆனா கிழவி பேசினது தெரிஞ்சதுக்கு அப்புறம், நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்மா.. உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா, இது வேண்டாம்.. ஆனா என்னால் வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது” என்றாள்.
மரகதமும் வேணுகோபாலும் பதில் சொல்வது அறியாது மௌனம் காக்க,
அவள், சரி நான் போய் வேலையைப் பார்க்கிறேன்.” என்று கூறி அறைக்குச் சென்று விட்டாள்.
வேணுகோபால் தவிப்புடன் மனைவியைப் பார்க்க, அவர் தனது தவிப்பை மறைத்து, ரொம்ப யோசிக்காதீங்க.. கொஞ்சம் ஆறப் போடுவோம்.” என்றார்.
மூச்சை இழுத்து வெளியிட்ட வேணுகோபால், நாளைக்கு அத்வைத் கிட்ட பேசி, டைவர்ஸ் பத்தி தெளிவுப்படுத்துறேன்.” என்றார்.
அவசரப்படாதீங்க”
இன்னுமா உனக்குப் புரியலை?”
எனக்கு என் பொண்ணு வாழ்க்கை நிம்மதியா சந்தோஷமா இருக்கனும்.”
அவ தான் தெளிவாச் சொல்றாளே!”
ஆசைப் படுறாளேனு வாங்கிக் கொடுக்க, இது பொம்மை இல்லைங்க”
இந்த பொம்மை தவிர, வேற எதுவும் வேணாம்னு சொல்றாளே!”
அதான் இப்போதைக்கு ஆறப் போடுங்கனு சொல்றேன்.”
அவர், பார்க்கலாம்” என்றுவிட்டு தனது அறைக்குச் செல்ல, மரகதம் மகனை அழைத்து மகள் பேசியதையும் தங்கள் கருத்தையும் கூறினார்.
அமைதியாக கேட்டுக் கொண்டவன் அழைப்பைத் துண்டித்ததும், அத்வைத்தை அழைத்தான்.

Advertisement