Advertisement

மங்களம், அதையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும்.. நாம சொல்லிட்டே இருந்தா, குழந்தை மனசில் ஒரு விரிசல் விழும்.. அதைப் பெருசாக்கி அவளை வெறுக்கிற மாதிரி செய்து, நம்ம கைக்குள்ள போட்டுட்டாப் போதும்” என்றார்
ப்ச்.. கல்யாணமே முடிஞ்சிருச்சுனா, அதுக்கு அப்புறம் அவங்க எக்கேடோ கெட்டுப் போனா நமக்கு என்ன?”
அது எப்படி என்னை மீறி அவங்க சந்தோஷமா வாழறாங்கனு பார்க்கிறேன்..” என்று வஞ்சினத்துடன் சூளுரைத்தார்.
அப்பொழுது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
துருவ் நேகாவைப் பார்த்து, எந்த போதி மரம் தந்த ஞானம்?” என்று சற்று நக்கலாகக் கேட்க,
நேகா முறைப்புடன், தெரிஞ்சு என்ன செய்யப் போற?” என்றாள்.
ஒருமையில் பேசின பல்லை உடைப்பேன்” என்று துருவ் கூற,
அவளோ அசராமல், அப்படி தான் பேசுவேன்” என்றாள்.
ஏய்!” என்றபடி அவன் எழ,
அவனை தடுத்த அத்வைத், விடுடா.. தமிழும் அப்படித் தானே பேசுறா.” என்றான்.
தமிழும் இவளும் ஒன்னாடா!” என்று அவன் அப்பொழுதும் சிலிர்த்துக் கொண்டு நிற்க,
இல்லை தான்.. நான் நானாகத் தான் இருப்பேன்..” என்று முறைப்புடன் கூறியவள், எழுந்து சென்று மங்களம் அறைக் கதவை தட்டினாள்.
சரோஜினி, ஏன்டா இந்த பிள்ளை கிட்ட எப்போதும் சண்டை போட்டுட்டே இருக்க!” என்று கூற, அவன் பதில் கூறவில்லை.
ஆறுமுகம் தான், விடுமா.. சரியாகிடும்” என்றார்.
என்னவோ போங்க” என்றவர், சரி நான் சமைக்கப் போறேன்” என்றபடி சமையல் அறைக்குச் சென்றார்.
அம்பிகா கதவைத் திறந்ததும், நேகா, கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
அம்பிகா முறைக்கவும், அவள் சிறு எரிச்சலும் இறுக்கமுமாக, நான் கிளம்புறேன்.. நீ வரியா வரலையா?” என்று கேட்டாள்.
மங்களம், நீ கிளம்பு அம்பிகா.. போனில் பேசிக்கலாம்.” என்றதும்,
மகளை முறைத்தபடியே, சரிமா” என்று கூறி கிளம்பினார்.
நேகா, அத்தை நாங்க கிளம்புறோம்.” என்று குரல் கொடுக்க,
அவசரமாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்த சரோஜினி, சாப்டுட்டு போகலாம் மச்சினி” என்றார்.
இனி இந்த வீட்டில் ஒரு வாய் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன்” என்ற அம்பிகா, வாடி” என்று மகளின் கையை இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
சரோஜினி தவிப்புடன் கணவரைப் பார்க்க, அவர், விடு பார்த்துக்கலாம்.” என்றார்.
துருவ், இதுக்கு நீ துக்கப் படக் கூடாது.. ஸ்வீட் எடு கொண்டாடுனு அமர்க்களப் படுத்தனும்.” என்றான்.
போடா” என்றுவிட்டு அவர் மீண்டும் சமையல் அறைக்குச் சென்றார்.
ஆறுமுகம் அத்வைத்திடம், மரகதம் கிட்ட நாளைக்குப் போய் அப்பா பேசட்டுமாப்பா?” என்று கேட்க,
இல்லைப்பா.. அத்தை கிட்ட நான் பேசிக்கிறேன்.. அவங்களுக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கொடுப்போம்.” என்றான்.
அப்பொழுது யாதவுடன் வந்த செந்தமிழினி, நான் கிளம்புறேன் மாமா” என்றவள், பைடா தேங்கா.. பை அத்தான்” என்று விட்டு, தேனுமா” என்று குரல் கொடுத்தாள்.
யாதவ், தேங்கா! யூ மீன் கோகோனட்?” என்று கேட்டான்.
பார்டா துரை இங்கிலீஷ்லாம் பேசுது’ என்று மனதினுள் நினைத்த துருவ், செந்தமிழினியைப் பார்த்து முறைத்தான்.
அவளோ சிரிப்புடன், ஓ உங்களுக்குத் தெரியாதா? சித்தாக்கு அம்மா வச்ச நிக் நேம் தான் தேங்கா”
துருவைப் பார்த்து சற்று சத்தமாகச் சிரித்த குழந்தை அவளிடம், எதுக்கும்மா இந்த நேம்?” என்று கேட்டான்.
இருவரும் ‘அம்மா’ என்று அழைத்துப் பேசியதைக் கேட்டு மற்றவர்கள் மனம் நிறைந்தது.
அவள் சிரிப்புடன், அதுவா! சித்தா நேம் என்ன?” என்று கேட்டாள்.
துருவ்”
அதை எப்படி ஷாட்டா கூப்பிடுறது?”
துருவ், ஆத்தா மகமாயி.. நீ ஆணியே பிடுங்க வேணாம்.. கிளம்பு” என்றான்.
செந்தமிழினியோ, இவன் கிடக்கிறான்.. நீங்க சொல்லுங்க தங்கம்” என்று யாதவிடம் சொன்னாள்.
அவன் சிறு யோசனையுடன், துருனு சொல்லலாமா?” என்று கேட்டான்.
“சூப்பர்.. அதே தான்.. தேங்காவை நாம என்ன செய்வோம்? துருவுவோம்.. அதான் சித்தாக்கு தேங்கானு நேம் வச்சேன்”
“ஓ” என்று கிளுக்கிச் சிரித்த குழந்தை, அப்போ ஆச்சி ஸ்வீட்னு தேனுமா சொல்றியா?” என்று கேட்டான்.
அவனுக்கு திருஷ்டி கழிப்பது போல் செய்தவள், அறிவுடா தங்கம் நீங்க.. அதே தான்” என்றாள்.
டாடா தாத்தாக்கு என்ன நேம்?”
டாடாவை அத்து சொல்லுவேன்.. தாத்தாவை சிக்ஸ்-பேஸ் சொல்லுவேன்”
சிக்ஸ்-பேஸ் தாத்தா” என்று கூறி கைதட்டிய குழந்தை, தாத்தா நானும் அப்(ப)டி கூப்(பி)டவா?” என்று கேட்டான்.
பேரனின் முகத்தில் தெரிந்த பேரானந்தத்தை நெகிழ்ச்சியுடன் பார்த்த ஆறுமுகம், கூப்பிடு ராஜா” என்றார்.
தேங்கா சித்தா.. தேனாச்சி.. சிக்ஸ்-பேஸ் தாத்தா.. சூப்பரா இருக்கா டாடா?” என்றான் தந்தையைப் பார்த்து.
அத்வைத் புன்னகையுடன், சூப்பர் கண்ணா” என்றான்.
செந்தமிழினி, ஓகே! அம்மா கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்.
நாளைக்கு வரணும்”
ஓகே கண்ணா.. இப்போ பை சொல்லுங்க”
அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, பை ம்மா” என்றான்.
அத்வைத், நான் விட வரேன்.” என்று கூற,
அவள், லேட் ஆகலையே. நானே போயிக்கிறேன், அத்தான்.” என்றாள்.
மணியை பார்த்தவன் எட்டு தான் ஆகவும், சரி” என்றான்.
நேகா கிளம்பிட்டாளா?” என்று கேட்டாள்.
ஹ்ம்ம்.. இப்போ தான் அத்தையும் அவளும் கிளம்பினாங்க.”
பின் அனைவரிடமும் விடை பெற்றவள் துருவைப் பார்த்து, உன்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லிடுடா.” என்றாள்.
அவன் புரியாமல் பார்க்க, அத்வைத் நமட்டுச் சிரிப்புடன், “ஆச்சியை சொல்றாடா” என்றான்.
துருவ் கொலைவெறியுடன் அவளைப் பார்க்க, அவளோ, பைடா அய்யாசாமி.. நாளைக்கு பார்க்கலாம்” என்று விட்டுக் கிளம்பி இருந்தாள்.
பாதி தூரத்திற்கு மேல் சென்றுதும், ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி, அருள்மொழியை கைபேசியில் அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும், உனக்கு இப்போ ரெண்டு ரெக்கார்டிங் அனுப்புவேன்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
நீயுமா!” என்றான்.
நடுவுல பேசாம சொன்னதை மட்டும் கேளு.. அத்தான் வீட்டில் நான் கிழவி கிட்ட பேசியதை தான் ரெக்கார்ட் செய்து இருக்கிறேன்.. அதை நீ கேட்டுட்டு, அப்பாக்கு அனுப்பி விஷயத்தை சொல்ற.. நான் பத்து பதினைந்து நிமிஷத்தில் நம்ம வீட்டுக்குப் போய்டுவேன்.. அதுக்குள்ள எமரால்டையும் அப்பாவையும் தயார்படுத்தி வச்சிருக்க.” என்றாள்.
அடிப்பாவி, இது தான் கவனிச்சுக்கிறேன்னு நீ சொன்னதா?” என்று அலறினான்.
நான் ஏன் என் எனர்ஜியை வேஸ்ட் செய்யனும்? அதான் எமரல்டு கவனிக்கட்டும்னு, உனக்கு இந்த டாஸ்க்கை கொடுத்தேன்”
பத்து நிமிஷத்தில் எப்படிடி?”
அதெல்லாம் எனக்குத் தெரியாது”
நீ ஓட்டின பேய் படத்தோட இது பயங்கரமா இருக்குமேடி!”
அப்போ அம்மாவை பேய்னு சொல்றியா?”
அடியே இந்த கால் ரெக்கார்டு செய்யலையே!” என்று மீண்டும் அலறினான்.
ச! மிஸ் செய்துட்டேனே!”
ஷப்பா!” என்று ஆசுவாசமானவன், கொஞ்சம் கருணை காட்டேன்” என்று கெஞ்சும் குரலில் கூறினான்.
என் கிட்ட விஷயத்தை சொல்லாம இருந்தல.. அனுபவி” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
அவள் அனுப்பிய இரண்டாவது ஒலித்தத்தில், முக்கியமான குறிப்பு.. அந்த கிழவியை மிரட்ட ஆரம்பிச்சப்ப என்னோட கையில் சின்ன கத்தி இருந்தது.. அப்புறம் நான் மாமா கிட்ட மன்னிப்பு கேட்டேன்.. அதுக்கு மாமா ‘தேவையே இல்லை, நீ சரியாத் தான் பேசின, உனக்கு இருக்கிற தைரியம் எனக்கு இருந்து இருந்தா பிரச்சனையே இல்லை’ னு சொன்னாங்க” என்று பேசி அனுப்பி இருந்தாள்.

Advertisement