Advertisement

மரகதம், வீட்டில் ஏன் சொல்லலை?” என்று கேட்டார்.
யதுவை நல்லபடியா பெத்துத் தரத்துக்கு அவ போட்ட கண்டிஷன் டைவர்ஸ் தான்.. அப்போ எனக்கு அவளோட காதலை பத்தி தெரியாததால, அவ மனசை மாத்திரலாம்னு நினைத்து சரி சொன்னேன்.. வீட்டில் யாருக்கும் தெரியாது.. அப்புறம் அவ காதலனோட உதவியில் வீட்டில் யாருக்கும் தெரியாம டைவர்ஸ் அப்ளை செய்து, நோட்டீஷை என்னோட ஆபீஸ்க்கு அனுப்பிட்டா.. ஸோ, அப்பவும் வீட்டில் யாருக்கும் தெரியாது.. அவ ஓடிப் போனதுக்கு அப்புறம் கேஸ் ஹியரிங் முந்தின நாள் போன் செய்து கோர்ட்க்கு வரச் சொன்னா.. அப்புறம் டைவர்ஸ் கிடைச்சுது.. அத்தோட அவளை மொத்தமா தலை முழுகிட்டேன்.. வீட்டில் சொன்னா எங்கே அவளை திரும்ப என் கூட சேர்த்து வைக்க முயற்சிப்பாங்களோனு சொல்லலை” என்று மூன்றாம் மனிதனின் கதையை சொல்வது போல் சொல்லி முடித்தான்.
இப்பொழுது அவனது மனம் முழுவதும் செந்தமிழினியுடன் வாழப் போகும் இனிமையான வாழ்வை பற்றிய கனவு மட்டுமே நிறைந்து இருந்ததாலே இது சாத்தியம் ஆனது. அவனது மன மாற்றத்தில் செந்தமிழினி நிம்மதி அடைந்தாள்.
மரகதம், இப்பவும் சொல்ல வேணாம்னு நினைக்கிறியா?” என்று கேட்க,
அவளைப் பற்றிய பேச்சையே நான் விரும்பலை, அத்தை” என்றான்.
யாதவிற்கு அன்னை பற்றி தெரியுமா என்று கேட்க வந்த மரகதம், வேணுகோபாலின் மறுப்பான கண்ணசைவில் அமைதி ஆனார்.
பின், சரி.. உன் விருப்பம்.” என்று விட்டார்.
யாதவ் வந்ததும், அவனை அழைத்துக் கொண்டு அத்வைத் கிளம்பினான்.
அத்வைத் மற்றும் செந்தமிழினியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் நிம்மதியுற்ற அருள்மொழி தங்கையிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
அதன் பிறகு,  இரு வீட்டுப் பெரியவர்களும் (மங்களம் தவிர்த்து) வேகமாகச் செயல்பட,  வேலைகள் வெகு விரைவாக நடந்தது.
அத்வைத் விரும்பியது போல் அடுத்த மூன்று வாரத்தில் நல்ல முகூர்த்த நாளாக இருக்க, அன்றே கல்யாணம் நிச்சயக்கப்பட்டது.
அதன்  பிறகு, இரு  வீட்டிலும் கல்யாண வேலைகள் இழுத்துக்கொள்ள ஓய்வெடுக்க நேரமின்றி பம்பரமாகச் சுழன்றனர். யாதவ் நாட்களை எண்ணிக் கொண்டே இருக்க, அருள்மொழியும் துருவும் மணமக்களை கிண்டல் செய்ய முயற்சித்து வீட்டை அலங்கரிக்கும் அளவிற்கு எண்ணற்ற குமிழ் விளக்குக்களை(bulb) வாங்கியது தான் நடந்தது.
அலுவலகத்தில் கண்ணன் மற்றும் லட்சுமிக்கும் அதே நிலை    தான். முதலில் தன்னிடம் சொல்ல வில்லை என்று சண்டை போட்ட லட்சுமி, பிறகு எப்பொழுதும் போல் சமாதானமானாள். இன்னமும் அத்வைத்தை கண்டால் அவள் நடுங்கத் தான் செய்கிறாள். அதற்கு வேலை விஷயத்தில் இப்பொழுதும் அத்வைத் நீக்கு போக்கு காட்டாததே காரணம்.
மூகூர்த்தப் புடவையை செந்தமிழினி அடம் பிடித்து பச்சை நிறத்தில் எடுக்க,
அத்வைத், பச்சை நிறமே! பச்சை நிறமே!
இச்சை மூட்டும் பச்சை நிறமே!” என்ற பாடலை ரகசியமாக அவளது காதில் பாடினான்.
அவளோ, இச்சையும் கிடையாது இச்சும் கிடையாது.. ஏழு மாசக் கணக்கு அப்படியே தான் இருக்குது.” என்று கூறி அவனை பழுதான குமிழ் விளக்காக மாற்றினாள்.
நேகா, என்ன அத்தான்.. ஏதோ பல்ப் வாங்கினீங்க போல!” என்று சிரிப்புடன் கூற,
அத்வைத், உனக்கு இங்கே என்ன பார்வை!” என்றான்.
அதுவா கண்ணில் விழுது” என்று அவள் கூற,
விழும் விழும்.. உன் முதுகில் அடி விழும்.. தூர போ” என்றான்.
துருவ் மென்னகையுடன், கல்யாண மாப்பிள்ளை என்ன சொல்றார்?” என்றபடி வந்தான்.
ஆம் துருவே தான். இந்த மாற்றத்திற்கு செந்தமிழினியே முக்கிய காரணம்.
நடுவில் ஒரு நாள் துருவ் செந்தமிழினியிடம், திடீர்னு நீயும் நேகாவும் எப்படி ராசியானீங்க?” என்று கேட்டான்.
அவள், “அன்னைக்கு அவ ஆபீஸ் போய் பார்த்தேன்.. ஒருவேளை அத்தான் மேல அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருந்து இருந்தா, அவ வருந்தக் கூடாதேனு பேசிப் பார்க்கப் போனேன்.. யது கண்ணாக்கு அவளை பிடிக்குமே! ஸோ குழந்தை மனதை வென்றவள், கிழவி மாதிரியோ உன்னோட சொத்தை மாதிரியோ இருக்க மாட்டாங்கிற நம்பிக்கையில் தான் போனேன்..
என்னோட கணிப்பு சரி தான்.. அவ உங்க மாமா மாதிரி நல்லவ.. கிழவியும் உன் சொத்தையும் கட்டாயப் படுத்தியதாலும், யது மேல உள்ள பாசத்தாலும், அவ அக்கா செய்த தப்புக்கு பிராயச்சித்தமாவும் தான், அத்தானை கல்யாணம் செய்ய நினைத்து இருக்கிறா..
அப்புறம் என்ன! கொஞ்ச நேரம் பேசினதுலேயே மேடம் என்னோட விசிறி ஆகிட்டாங்க” என்று சிரிப்புடன் கூற,
அவனும் சிரிப்புடன், உன்னை யாருக்குத் தான் பிடிக்காது?” என்றான்.
கிழவியையும் சொத்தையையும் விட்டுட்டியே!”
நான் சொன்னது மனுஷ பிறவிகளைப் பத்தி”
அது சரி”
அந்த நிகழ்விற்கு பிறகு துருவ் பார்க்கும் நேரம் எல்லாம் நேகாவுடன் சண்டையிடுவது இல்லை. அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள். இருந்தாலும் அவ்வப்பொழுது எலியும் பூனையுமாக சண்டை போடுகின்றனர் தான்.
துருவ் வந்ததும் அருள்மொழியும் அங்கே வந்தான்.
அத்வைத், கொஞ்ச நேரம் தனியா விடுறீங்களாடா!” என்று கூற,
துருவ், இந்த பொடுசை வச்சுகிட்டு அப்படியே ரோமன்ஸ்  செய்திடப்  போற!” என்று கூற, செந்தமிழினி வாய்விட்டு சிரித்தாள்.
அவளது சிரிப்பே ‘இல்லைனா மட்டும்!’ என்று கூற, அத்வைத் அவளை செல்லமாக முறைத்தபடி, உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று பார்வையால் கூறினான்.
அவளும் சளைக்காமல், பார்க்கலாம்.. பார்க்கலாம்’ என்று பார்வையாலேயே கூறினாள்.
அருள்மொழி, என்னோவோ சொன்ன! ரெண்டு கண்ணுலேயே படம் ஓட்டுத்துங்க பாரு” என்றான்.
இவற்றை எல்லாம் வயிற்றெரிச்சலுடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருக்க மட்டுமே மங்களத்தால் முடிந்தது.
கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கல்யாணத்திற்கு வந்த உறவினர்களில் அனேகம் பேர் இருவரின் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டியதோடு, முதல்லேயே இவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கலாம்.’ என்று தான் கூறினர்.
ஒரு சிலர் அதை மங்களத்திடமே கூறிச் செல்ல, இன்னும் சிலர் அம்பிகா காதுபட, அப்படி ஒரு பொண்ணை பெத்துட்டு, எப்படித் தான் கூச்சமே இல்லாம வந்து இருக்களோ!” என்றும்,
மரகதம் கிட்ட சுத்திப் போடச் சொல்லணும்.. இவளோட கொள்ளிகன்னு பட்டு எதுவும் ஆகிடக் கூடாது பாரு!” என்றும் கூறிச் சென்றனர்.
அம்பிகா கோபத்துடன் எழ, அவரது கணவன், உப்பை தின்னா தண்ணி குடிச்சுத் தான் ஆகணும்.. இப்போ நீ கிளம்பிப் போனா அப்படியே போய்டு.. நம்ம வீட்டுக்கு வந்திடாத” என்று கூறிவிட, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்தவர் மேடையில் சிரித்தபடி அமர்ந்திருந்த மணமக்களைப் பார்த்து வயிறு எரிந்து சாபம் விட்டதோடு, செந்தமிழினி அருகே நின்று கொண்டிருந்த நேகாவை, மனதினுள் திட்ட ஆரம்பித்தார்.
மங்களமும் அதே நிலையில் தான் இருந்தார். இருவரையும் கண்டு கொள்வார் தான் யாரும் இல்லை.
மணமக்களை விட யாதவின் மனம் தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. அவன் இருவருக்கும் நடுவில். ஆனால் இடையே இல்லாமல் சற்று பின்னால் இருவரின் தோளையும் பற்றியபடி பட்டு வேட்டி, பச்சை நிற பட்டு சட்டையில் நின்று கொண்டிருந்தான்.
கெட்டிமேளம் முழங்க, உற்றாரும் உறவினர்களும் மணமக்களை வாழ்த்தி அட்சதை தூவ, விரிந்த புன்னகையுடன் அத்வைத், ‘லவ் யூ இதழி’ என்று வாய் அசைத்தபடி  செந்தமிழினியின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்து மூன்று முடிச்சுப் போட, அதை வெட்கம் கலந்த புன்னகையுடன் அவள் பெற்றுக் கொண்டாள்.
அதன் பிறகு மற்ற திருமணச் சடங்குகள் இனிதே நடந்தது.
உணவு வேளையில், புகைப்படம் எடுப்பவர் இருவரையும் ஊட்டிக் கொள்ளக் கூற, இருவரும் அவ்வாறே செய்தனர். கூடவே யாதவிற்கு ஊட்டிய படியும் புகைப்படம் எடுத்தனர்.
கண்ணன், மச்சி இப்பவாச்சும் கொஞ்சம் வெட்கப்படேன்” என்று செந்தமிழினியை கிண்டல் செய்ய,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், நாமலாம் மாத்தி யோசி சங்கத்தைச்  சேர்ந்தவங்க மச்சி.. அதனால இப்போ எனக்கு பதில் அத்தான் வெட்கப் படுவாங்க” என்றவள் அத்வைத்தைப் பார்த்து, அப்படித் தானே அத்தான்!” என்று வேறு கூறினாள்.
அவன் அவளை செல்லமாக முறைக்க, அவள், அத்தான் தலை கோதியபடி ஒரு ஸ்மைல் கொடுப்பீங்களே! அதை செய்யுங்க” என்று கூற, அவன் லேசான வெட்கத்துடன், ஏய்!” என்றான்.
கண்ணன், லட்சுமி, அருள்மொழி மற்றும் துருவ், ஏய்!”, என்றும், ஓஹோ!” என்று கத்தினர்.
கண்ணன், கலக்குற மச்சி!” என்று கூற, செந்தமிழினி புன்னகையுடன் நண்பனிடம் கைதட்டினாள்.
யாதவ் உடனே, அம்மா நானு” என்று கூற, அவள் புன்னகையுடன், யது கண்ணாக்கு இல்லாததா!” என்றபடி அவனுடனும் கை தட்டினாள்.
இப்படியே நண்பர்களின் கலாட்டாவும் ஆராவாரமும் தொடர்ந்தது. அன்று இரவு அத்வைத் வீட்டில் தான் மணமக்களுக்கு முதல் இரவை ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement