Friday, May 24, 2024

    தழலாய் தகிக்கும் நினைவுகள்

    அத்தியாயம் – 20 என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள். “நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ...
    “எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?” இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை வானதிக்கு. “நாந்தான் சொன்னேனே வினோத். நட்புன்ற எல்லைக் கோட்டைத் தாண்டினா என் எதிர்பார்ப்புகள் வேற மாதிரி இருக்கும். அப்ப என்னால...
    அத்தியாயம் – 19 ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது.  வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது. வேர்வையும் களைப்புமாக வந்தவளைக் கண்டு “வானதி”, என்றான். அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்தவள், திகைத்துப் பார்த்தாள்.  “வினோத்… நீங்க எங்க இங்க?” என்று கேட்டபடியே...
    “சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.” அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார். ஒரு ஏழே முக்காலுக்கு இங்க இருக்கா மாதிரி பார்த்துக்கோங்க.”, என்று வைத்துவிட்டார். மணி அப்போதுதான் நாலு. வினோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. காட்டெருமை...
    அத்தியாயம் – 18 கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர். ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு கிளம்புங்க. நைட் நான் பார்த்துக்கறேன்.”, எனவும், சரியென்று கிளம்பிவிட்டார். உணவும் காபியும் உள்ளே செல்ல, மூளை கொஞ்சம் சுறுசுறுப்பாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை....
    “என்னையும் இப்படி ஒரு வாட்டி மிரட்டினா. அவ சீமந்தத்துக்கு லீவ் கிடைக்காது, என்னால வரமுடியாதுன்னு சொன்ன போது…. ப்ளேடால கையை கிழிச்சி ஒரு போட்டோ அனுப்பினா. நீ டிக்கெட் போடற வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி இப்படி செய்வேன்னு மெசேஜோட… அடுத்த நிமிஷம் டிக்கெட்டை எடுத்து அவளுக்கு ஒரு காப்பி அனுப்பினேன்....
    அத்தியாயம் – 17 சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த மாதத்திற்குள் கட்டணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டா அழிந்துவிடும், என்று ஒரு பிரபலமான கணிணி டேட்டா ஸ்டோரேஜ்...
    ‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின?  இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது. ‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி...
    ஸ்வாதி வம்சியின் நினைவு நாள் முடிந்த ஒரு இரண்டு மூன்று நாட்களில் தேறிக்கொண்டான் வினோத். வானதி எந்த விதத்திலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அவள் செய்த ஒரே வேலை, பூஜை அறையின் ஒரு பக்கத்தில் ஸ்வேதா, வம்சியின் போட்டோவை மாட்டிவைத்ததுதான். சுவாமி படங்களுடன் சேர்த்து அதற்கும் பூ வைத்தாள். வினோத் பார்த்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை....
    அத்தியாயம் - 16 திதி  அன்று காலையில் சவரம் செய்து, குளித்து, வேட்டி, சட்டை, மேல் துண்டு சகிதம் எழுந்து வந்தான். சமையலறையில் அதற்குள் தலைக்குக் குளித்து, புடவையில் வானதி எதோ கிண்டிக்கொண்டிருந்தாள், ஏலக்காய் மணம் கமழ்ந்தது. “நான் கோவிலுக்கு கிளம்பறேன் வானதி.”, என்றான். வாசலில் நின்றவனைத் திரும்பிப் பார்த்தவள், முகம் மீசை, தாடி எடுத்து மழமழவென்று இருந்தது...
     “விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “ வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு...
    அத்தியாயம் - 15 சற்று நேரத்திற்கெல்லாம், கையில் போனை பிடித்தபடியே, படியில் தடதடத்து வந்தவனைத்தான் பெண்கள் இருவரும் பார்த்திருந்தனர். கீரீம் கலரில் லினென் சட்டை, அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அவன் உடற்பயிற்சி செய்த உடலை பறைசாற்ற, கையில் அவன் விரும்பிக் கட்டும் டாக்ஹாயர் வாட்ச். கவர்ந்திழுக்கும் புன்னகை மட்டுமே முகத்தின் ஒரே அணிகலன். அதுவே...
    இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான். “வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு பிடித்தம் வரும்னு யோசிச்சயா?” “இல்லை…. “, “ஏன்? அதுவும் ஒரு ஆப்ஷந்தானே?”, வினோத் கேட்கவும், தோளைக் குலுக்கியவள், “உங்களுக்கு என்னைப்...
    அத்தியாயம் – 14 கதவு தட்டப்பட்டது. அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்டது, படுக்கையில் சாய்திருந்த வானதியின் ஓய்ந்து போன தோற்றம். முகம் அழுததில் வீங்கியிருந்தது. சற்றே வெளுத்திருந்தது. கையில் பால் டம்ளருடன் வந்தவன், “டின்னர் சாப்பிட வரலை. இந்தா, பாலையாவது குடிச்சிட்டு படு வானதி. “, அவளிடம் நீட்டினான். வானதி...
    “வீடியோவையும் வாங்கி எனக்கு அனுப்பினாங்க. முதல்ல உங்களை மாதிரிதான் ஷாக். அப்பறம் திரும்ப திரும்ப பார்த்ததுல எப்படின்னு புரிஞ்சுது. சொன்ன பசங்ககிட்டயே உங்க ரெண்டு பேர் சைஸ்ல இருக்க ஸ்டூடெண்ட்ஸ் வெச்சி டெமொ வீடியோ எடுக்க சொன்னேன். ப்யூன் வேலு மகன் ப்ளஸ் டூல கணக்கு பாஸானதுக்கு காரணமே நீங்கதானாமே? அந்த நன்றியை மனுஷன்...
    அத்தியாயம் – 13 “காபியை மேலே கொண்டு வா வானதி ப்ளீஸ். பேசணும். “, வினோத்தின் கோரிக்கைக்கு சம்மதமாக தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவள், ‘கூல் வானதி… அவரை கோவிக்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது.’ என்று நூறாவது முறையாக சொல்லிக்கொண்டாள். அவனுக்கான காபி, சிற்றுண்டியை ட்ரெயில் அடுக்கி எடுத்துக்கொண்டு, அவன் அறை வாசலை தட்டவும், “வா வானதி…”, என்ற...
    “அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு. அதைத் தாண்டி, இப்படி ஒரு குற்றச்சாட்டை வினோத் மேல சொல்றதுக்கும், தன் பேரை தானே கெடுத்துக்கவும் என்ன காரணம்னு எனக்கு...
    அத்தியாயம் – 12 கான்ஃப்ரென்ஸ் அறையின் கதவு ஒரு முறை நாசூக்காக தட்டப்பட்டு திறந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சில்க் காட்டன் புடவை, மேக்கப் என்று சென்ட் மணம் கமழ, அழகாக வாசலருகே நின்றிருந்தாள் வானதி. “வணக்கம் சர். உள்ள வரலாமா?”, வாசலில் அவளைக் கண்டதும் வினோத்திற்கு முகம் இருண்டது. யார் இவளுக்கு சொன்னது? இப்போது இங்கே...
    “அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல ஒரு கண்ணு, அவங்கிட்ட இவளை பேச சொல்லி எதாவது கறக்க முடியுமான்னு பார்க்கறேங்க்கா. காலேஜ் முடியற டைம்… இப்பவே போனாதான்...
    அத்தியாயம் – 11 “ஹலோ… மேடம்… நான் வினோத் சர் ஸ்டூடன்ட் ப்ரியா பேசறேன். அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே…” “அஹ்… சொல்லு ப்ரியா… ஞாபகமிருக்கு.”, இவள் எதற்கு போன் செய்கிறாள் என்ற யோசனையோடே, குரல் சற்று பதற்றமாக இருப்பது போல படவும், தொடர்ந்து வானதியே, “எல்லாம் ஓக்கே தான ?”, என்று கேட்டாள். “ம்ம்.. இல்லை மேம்… இங்க...
    error: Content is protected !!