Sunday, June 16, 2024

    தழலாய் தகிக்கும் நினைவுகள்

    “என்னையும் இப்படி ஒரு வாட்டி மிரட்டினா. அவ சீமந்தத்துக்கு லீவ் கிடைக்காது, என்னால வரமுடியாதுன்னு சொன்ன போது…. ப்ளேடால கையை கிழிச்சி ஒரு போட்டோ அனுப்பினா. நீ டிக்கெட் போடற வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி இப்படி செய்வேன்னு மெசேஜோட… அடுத்த நிமிஷம் டிக்கெட்டை எடுத்து அவளுக்கு ஒரு காப்பி அனுப்பினேன்....
    “வீடியோவையும் வாங்கி எனக்கு அனுப்பினாங்க. முதல்ல உங்களை மாதிரிதான் ஷாக். அப்பறம் திரும்ப திரும்ப பார்த்ததுல எப்படின்னு புரிஞ்சுது. சொன்ன பசங்ககிட்டயே உங்க ரெண்டு பேர் சைஸ்ல இருக்க ஸ்டூடெண்ட்ஸ் வெச்சி டெமொ வீடியோ எடுக்க சொன்னேன். ப்யூன் வேலு மகன் ப்ளஸ் டூல கணக்கு பாஸானதுக்கு காரணமே நீங்கதானாமே? அந்த நன்றியை மனுஷன்...
    “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள். இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல அப்போதைக்கு அமைதியானார்கள். “வானதி… வானதி ….சாப்பிட போலாம் வா.”, தோளைப் பிடித்து இழுக்கவும், நினைவுக்கு வந்தவள், “ஹா… ப்ரியா… சாரி..எதோ யோசனை. வா...
    இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான். “வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு பிடித்தம் வரும்னு யோசிச்சயா?” “இல்லை…. “, “ஏன்? அதுவும் ஒரு ஆப்ஷந்தானே?”, வினோத் கேட்கவும், தோளைக் குலுக்கியவள், “உங்களுக்கு என்னைப்...
    “எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?” இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை வானதிக்கு. “நாந்தான் சொன்னேனே வினோத். நட்புன்ற எல்லைக் கோட்டைத் தாண்டினா என் எதிர்பார்ப்புகள் வேற மாதிரி இருக்கும். அப்ப என்னால...
    மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை, தாலி எடுக்கக்கூட வரவில்லை. வானதியிடமும் அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. இவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் வீட்டிற்கு சென்ற...
    “அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு. அதைத் தாண்டி, இப்படி ஒரு குற்றச்சாட்டை வினோத் மேல சொல்றதுக்கும், தன் பேரை தானே கெடுத்துக்கவும் என்ன காரணம்னு எனக்கு...
    பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு  நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.  ஒரு விழாவிற்கு செல்லும் தோற்றம். இவந்தான் விழா நாயகன்...
    “அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல ஒரு கண்ணு, அவங்கிட்ட இவளை பேச சொல்லி எதாவது கறக்க முடியுமான்னு பார்க்கறேங்க்கா. காலேஜ் முடியற டைம்… இப்பவே போனாதான்...
    “உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும் தொடக்கத்துல, ஆனா நம்ம பெத்தவங்களுக்கு இது தர சந்தோஷத்துக்காக, பரவாயில்லை சமாளிக்கலாம்னு தோணுச்சு.”, அவள் மீண்டும் பொறுமையாக...
     “விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “ வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு...
    மகன் சாப்பிடப்போகிறான் என்றதுமே, சம்பூர்ணம் அவளையும் போகச் சொல்லி வைத்துவிட்டார்.  ‘அவரை கிண்டல் பண்ணேன்னு கோவப்படலையே, அதிசயம்தாண்டி வனு…’, என்று உள்ளுக்குள் வியந்தபடியே வானதியும் கிழே இறங்கினாள். அதற்குள் இருவருக்குமாக தட்டை வைத்து, சப்பாத்திகளை ஹாட்பாக்ஸில்லிருந்து எடுத்து வைத்திருந்தான்.  அவள் இடத்தில் வந்து அமர்ந்தவள், அவன் முகத்தை முகத்தைப் பார்க்க, புன் சிரிப்புடன், “என்ன ?...
    அத்தியாயம் – 20 என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள். “நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ...
    உதட்டைக் கடித்த வினோத்…”சாரி மச்சி… பேசிகிட்டே வந்ததுல தெரியலை. இனி வா… உன் கூடவே நான் வரேன். புனிதாம்மா… நீ வானதிகூட பேசிகிட்டே போ.” புனிதாவிற்கு ஏற்கனவே கல்லூரியில் மலையேற்றப் பழக்கம் இருந்ததால், அவளுக்காக சங்கர் வந்திருந்தான். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள். “சாரி வானதி. அண்ணா கொஞ்சம் கோச்சிகிட்டார் போல? எதுவும் சொன்னாரா?”, புனிதா...
    காலை ஆறு மணி போல பேச்சுக் குரல் கேட்டு எழுந்தார்கள் நண்பர்கள் இருவரும். வெளியே வரவும், சூர்யோதயம் பார்க்கப் போனவர்கள் திரும்பியிருந்தார்கள். “ வென்னீர் இருக்கு. பக்கத்திலேயே, சர்க்கரை, பால்பவுடர், காபி, டீ பாக்கெட் , பிஸ்கெட்ஸ் இருக்கு, உங்க டம்ளர் எடுத்துகிட்டு போய் காபி, டீ எடுத்துக்கங்க. இன்னும் அரை மணி நேரத்துல அருவிக்கு...
    “அட நானே சும்மாயிருக்கேன், நீ என்ன இப்படி பாயற ராக்கி? ப்ரியா சொன்ன மாதிரி ப்ரபோஸ் பண்ணி தொலைச்சிடாத…”, வானதி கலாய்க்க கேலியும் சிரிப்புமாக குடித்து முடித்து விடை பெற்றார்கள். வானதி அவள் போனிலிருந்த செல்ஃபியை ப்ரியாவுக்கு அனுப்பினாள். “மேம்… அப்படியே, சாரை ஒரு போட்டோ எடுத்தீங்களே. அதுவும் கிடைக்குமா?”, கிருஷ் கேட்க, ஆச்சரியமாகப் பார்த்தாள்...
    “ஹே…. ஈசி. நான் இல்லைன்னு சொல்லவேயில்லை. அவளைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?  நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். மத்தபடி உங்க மனைவியை குறை சொல்லவேயில்லை. அப்படி சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்க.”, காதைப் பிடித்து வானதி சிரிக்கவும், வினோத் ஒரு லேசான சிரிப்போடு தலையசைத்தான். “இங்க சூர்யோதயம் நல்லா இருக்குமாமே? நாளைக்கு காலையில கூட்டிட்டு போக ஒரு...
    “சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.” அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார். ஒரு ஏழே முக்காலுக்கு இங்க இருக்கா மாதிரி பார்த்துக்கோங்க.”, என்று வைத்துவிட்டார். மணி அப்போதுதான் நாலு. வினோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. காட்டெருமை...
    “காப்பி கோப்பையை கையில் எடுத்தவன், நான் ஃப்ரெஷாகிட்டு வரேன். நீங்க பாருங்க.”, என்று மேலே சென்றுவிட்டான். என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்த வானதி சம்பூர்ணத்தைப் பார்க்க, அவர் முகமும் வாடித்தான் இருந்தது. “என்ன அத்த ? என்னாச்சு ?”, என்று கேட்டாள் வானதி. “ஹ்ம்ம்ம்…. என் வாய் சும்மாயிருக்கறதில்லை. வந்ததும் வராததுமா, என் புள்ள மனசை காயப்படுத்திட்டேன்....
    ‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின?  இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது. ‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி...
    error: Content is protected !!