தழலாய் தகிக்கும் நினைவுகள்
“காப்பி கோப்பையை கையில் எடுத்தவன், நான் ஃப்ரெஷாகிட்டு வரேன். நீங்க பாருங்க.”, என்று மேலே சென்றுவிட்டான்.
என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்த வானதி சம்பூர்ணத்தைப் பார்க்க, அவர் முகமும் வாடித்தான் இருந்தது.
“என்ன அத்த ? என்னாச்சு ?”, என்று கேட்டாள் வானதி.
“ஹ்ம்ம்ம்…. என் வாய் சும்மாயிருக்கறதில்லை. வந்ததும் வராததுமா, என் புள்ள மனசை காயப்படுத்திட்டேன்....
உதட்டைக் கடித்த வினோத்…”சாரி மச்சி… பேசிகிட்டே வந்ததுல தெரியலை. இனி வா… உன் கூடவே நான் வரேன். புனிதாம்மா… நீ வானதிகூட பேசிகிட்டே போ.”
புனிதாவிற்கு ஏற்கனவே கல்லூரியில் மலையேற்றப் பழக்கம் இருந்ததால், அவளுக்காக சங்கர் வந்திருந்தான். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள்.
“சாரி வானதி. அண்ணா கொஞ்சம் கோச்சிகிட்டார் போல? எதுவும் சொன்னாரா?”, புனிதா...
அத்தியாயம் – 5
படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன்,
“உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே.
“வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து,
“அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து...
அத்தியாயம் – 14
கதவு தட்டப்பட்டது. அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்டது, படுக்கையில் சாய்திருந்த வானதியின் ஓய்ந்து போன தோற்றம். முகம் அழுததில் வீங்கியிருந்தது. சற்றே வெளுத்திருந்தது.
கையில் பால் டம்ளருடன் வந்தவன், “டின்னர் சாப்பிட வரலை. இந்தா, பாலையாவது குடிச்சிட்டு படு வானதி. “, அவளிடம் நீட்டினான். வானதி...
அத்தியாயம் – 12
கான்ஃப்ரென்ஸ் அறையின் கதவு ஒரு முறை நாசூக்காக தட்டப்பட்டு திறந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சில்க் காட்டன் புடவை, மேக்கப் என்று சென்ட் மணம் கமழ, அழகாக வாசலருகே நின்றிருந்தாள் வானதி.
“வணக்கம் சர். உள்ள வரலாமா?”, வாசலில் அவளைக் கண்டதும் வினோத்திற்கு முகம் இருண்டது. யார் இவளுக்கு சொன்னது? இப்போது இங்கே...
வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை விழறது தெரிஞ்சப்போ நான் தடுமாற ஆரம்பிச்சேன். அப்பவும் நான் உங்க மனைவிங்கறதால, உங்களுக்கு வந்த ஒரு அபிமானமாத்தான் இருக்கும். அதனாலதான்...
“சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.”
அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார். ஒரு ஏழே முக்காலுக்கு இங்க இருக்கா மாதிரி பார்த்துக்கோங்க.”, என்று வைத்துவிட்டார்.
மணி அப்போதுதான் நாலு. வினோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. காட்டெருமை...
அத்தியாயம் – 20
என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ...
‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின? இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது.
‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி...
அத்தியாயம் – 17
சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த மாதத்திற்குள் கட்டணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டா அழிந்துவிடும், என்று ஒரு பிரபலமான கணிணி டேட்டா ஸ்டோரேஜ்...
காலை ஆறு மணி போல பேச்சுக் குரல் கேட்டு எழுந்தார்கள் நண்பர்கள் இருவரும். வெளியே வரவும், சூர்யோதயம் பார்க்கப் போனவர்கள் திரும்பியிருந்தார்கள்.
“ வென்னீர் இருக்கு. பக்கத்திலேயே, சர்க்கரை, பால்பவுடர், காபி, டீ பாக்கெட் , பிஸ்கெட்ஸ் இருக்கு, உங்க டம்ளர் எடுத்துகிட்டு போய் காபி, டீ எடுத்துக்கங்க. இன்னும் அரை மணி நேரத்துல அருவிக்கு...
ஏர்போர்ட் பார்க்கிங்கில் விட்டிருந்த அவன் காரை எடுத்து, ஒரு வழியாக அவர்கள் வீடு வந்ததும், “வா பையெல்லாம் அப்பறம் எடுத்துக்கலாம்.”, என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“சீக்கிரம் ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம். செம்ம பசில இருக்கேன். .”, என்று அவசரப் படுத்த, வானதியும் வேகமாக அவள் அறைக்கு சென்றதை உறுதி செய்தவன், அவன் அறையைத்...
அத்தியாயம் – 7
வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து சங்கரின் தலையில் கொட்டியவன், “மச்சி… சாரிடா… சங்குப்பய எப்பவும் போல உளர்றான். நீ கண்டுகாதடா…”, என்றான் சமாதானமாய்.
அடி வாங்கிக், தலையைத்...
அத்தியாயம் – 11
“ஹலோ… மேடம்… நான் வினோத் சர் ஸ்டூடன்ட் ப்ரியா பேசறேன். அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே…”
“அஹ்… சொல்லு ப்ரியா… ஞாபகமிருக்கு.”, இவள் எதற்கு போன் செய்கிறாள் என்ற யோசனையோடே, குரல் சற்று பதற்றமாக இருப்பது போல படவும், தொடர்ந்து வானதியே,
“எல்லாம் ஓக்கே தான ?”, என்று கேட்டாள்.
“ம்ம்.. இல்லை மேம்… இங்க...
அத்தியாயம் – 8
வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது. வானதி வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதால் பொறுப்புகளை கைமாற்றிவிடுவதில் மும்மரமாக இருந்தாள். கூடவே அவள் விருப்பப்பட்ட புகைப்பட நிபுணத்துவம் பெற அதற்காக ப்ரத்யேகமான ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தாள். காலையிலும் , இரவிலும் உணவருந்தும் போது மட்டுமே இருவருக்கும் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது.
பொதுவான பேச்சுகள், சம்பூர்ணம் பற்றி, அவளின்...
அத்தியாயம் – 18
கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர்.
ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு கிளம்புங்க. நைட் நான் பார்த்துக்கறேன்.”, எனவும், சரியென்று கிளம்பிவிட்டார்.
உணவும் காபியும் உள்ளே செல்ல, மூளை கொஞ்சம் சுறுசுறுப்பாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை....
“எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?”
இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை வானதிக்கு.
“நாந்தான் சொன்னேனே வினோத். நட்புன்ற எல்லைக் கோட்டைத் தாண்டினா என் எதிர்பார்ப்புகள் வேற மாதிரி இருக்கும். அப்ப என்னால...
அத்தியாயம் - 16
திதி அன்று காலையில் சவரம் செய்து, குளித்து, வேட்டி, சட்டை, மேல் துண்டு சகிதம் எழுந்து வந்தான். சமையலறையில் அதற்குள் தலைக்குக் குளித்து, புடவையில் வானதி எதோ கிண்டிக்கொண்டிருந்தாள், ஏலக்காய் மணம் கமழ்ந்தது.
“நான் கோவிலுக்கு கிளம்பறேன் வானதி.”, என்றான்.
வாசலில் நின்றவனைத் திரும்பிப் பார்த்தவள், முகம் மீசை, தாடி எடுத்து மழமழவென்று இருந்தது...
“உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும் தொடக்கத்துல, ஆனா நம்ம பெத்தவங்களுக்கு இது தர சந்தோஷத்துக்காக, பரவாயில்லை சமாளிக்கலாம்னு தோணுச்சு.”, அவள் மீண்டும் பொறுமையாக...
ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக் குடையின் கீழே, இருவர் சாய்ந்து படுக்கும் வகையில் அமைந்திருந்த இருக்கையில் சாய்ந்திருந்தான் அரவிந்த்.
நீச்சல் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருக்க உடற்பயிற்சியில் வார்த்தெடுத்த...