Advertisement

“வீடியோவையும் வாங்கி எனக்கு அனுப்பினாங்க. முதல்ல உங்களை மாதிரிதான் ஷாக். அப்பறம் திரும்ப திரும்ப பார்த்ததுல எப்படின்னு புரிஞ்சுது. சொன்ன பசங்ககிட்டயே உங்க ரெண்டு பேர் சைஸ்ல இருக்க ஸ்டூடெண்ட்ஸ் வெச்சி டெமொ வீடியோ எடுக்க சொன்னேன். ப்யூன் வேலு மகன் ப்ளஸ் டூல கணக்கு பாஸானதுக்கு காரணமே நீங்கதானாமே? அந்த நன்றியை மனுஷன் மறக்கலை.பசங்களுக்கு முதல்ல ப்ரச்சனையை சொன்னதுலர்ந்து, உங்க டிபார்ட்மெண்ட் பாலிடிக்ஸ் பத்தியும் எனக்கு அவர்தான் சொன்னார். பசங்க வீடியோ எடுக்கவும் நிறைய உதவி செஞ்சிருக்கார். மொத்தத்துல நீங்க உங்களை காப்பாத்திக்க ட்ரை பண்ணலைன்னால்லும் உங்க அபிமானிங்க எல்லாரும் உங்களுக்காக ட்ரை பண்ணாங்க, கரெஸ் உட்பட.
“என்னது? கரெஸ் கூடவா? “, திகைத்துக் கேட்டான்.
“அவர்கிட்ட காலையிலேயே பேசி விளக்கிட்டேன்.அவர் பெர்மிஷனோடதான் டெமொ வீடியோ, அதே cctvல எடுத்தோம். ரிகார்ட் பண்ற ரூம்ல நின்னு எல்லாத்தையும் கேட்டேன். கரெக்டான நேரத்துல உள்ள வந்தேன்.”, தோளைக் குலுக்கினாள்.
“என் பேர்ல எதுவும் ப்ளாக் மார்க் வர விடமாட்டார்னு தெரியும். ஆனாலும் இவ்வளவு எதிர்பார்க்கலை. இருந்தாலும் அவருக்கு சங்கடம் தரக்கூடாதுன்னு எப்படியும் வேலையை விட்டுட்டு ஜெர்மனி போறதாத்தான் இருந்தேன்.”, அவன் பேசவும் கோவம் கொப்பளித்துக்கொண்டு வந்தது வானதிக்கு.
படக்கென்று எழுந்தவள், ஜன்னலோரம் சென்று நின்றாள். “போங்க… நின்னு சண்டை போடாம, ஓடிப்போங்க… உங்களை நம்பி உங்க அம்மா, நான் இருக்கோம்னு கொஞ்சமாவது ஞாபகம் இருந்துச்சா இந்த பிளான்ல?”, இருந்த கோபத்தில் பேசியதின் அர்த்தம் இன்னும் அவள் மண்டையில் ஏறவில்லை. விட்டு செல்லவிருந்தான் என்ற எண்ணம் மட்டுமே வியாபித்திருந்தது.
ஆனால், அவள் கூறியதைக் கேட்டவனுக்கோ நேர் எதிர்ப்பதமாக எல்லாக் கோவமும் விட்டு மனம் அமைதியானது. அவனைப் பேடி என்பதாக அவள் திட்டியதுகூட வலிக்கவில்லை… ஒரே எட்டில் அவளை சென்றடைந்தவன், அதே வேகத்தில் திருப்பி,
“வந்திருப்பியா? நீ என் கூட ஜெர்மனி வருவியான்னுதான் அங்க அந்த ஹால்ல  அத்தனை கலவரத்துலையும் என் யோசனை இருந்துச்சு. அம்மாவும் நீயும் எங்கூட வந்திருப்பீங்க இல்ல?”, குழந்தையாக தவிப்புடன் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்பவனைப் பார்த்து இமை சிமிட்டியவள் ஆமாம் என்பதாக தலை ஆட்டினாள்.
அடுத்த நொடி அவளை சுவரோடு சிறையிட்டிருந்தான் வினோத். பட்டாம்பூச்சியின் சிறகாக உதடுகள் உரச, விழிகள் மூடியது. உணர்வுகள் விழிக்க முத்தம் வேகமெடுத்தது.  அதன் பிடியில் முழுதாகச் சிக்கியிருந்தவன், பெண்ணவளின் தேகம் இறுகி நிற்பதை உணர்ந்து, சற்றே விலகி, விழி திறந்து பார்த்தான் கேள்வியாக.
வானதியும் அவன் கண்களை நேராக சந்தித்தவள், “நான் வானதி….”, என்றாள் கரகரத்தக் குரலில்.
அதிர்ந்து பார்த்தான் வினோத். ‘ஸ்வேதா பேரை சொன்னேனா?’, என்று ஓடியது எண்ணம், ஆனால் மனம் முழுக்க வானதிதான் ஆக்ரமித்திருந்தாள் என்பதை உணர்ந்து, கண்டிப்பாக பேரைக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று நொடியில் புரிந்தது.
“அது எனக்கு தெரியும். ஆனா உனக்கு ஏன் சந்தேகம்?”, அவள் முகத்தை ஆராய்ந்தான். பளபளக்கும் உதடுகளும், சிவப்பேறிய கன்னங்களும், அந்த முத்தம் அவளையும் சென்று தாக்கியிருக்கிறது என்பது புரிந்தது. ஆனால் அவள் பார்வை குற்றம் சாட்டியது. அவள் மறைக்க முயன்றும் ஏமாற்றம் எட்டிப்பார்த்தது.
“அது…. என் கை இரண்டையும் பிடிச்சிருக்கீங்க…”, அவள் இழுக்கவும், கைகளை விட்டு, சற்று இடைவெளி விட்டு நின்றவன், “அதனால….”, இன்னும் புரியவில்லை அவனுக்கு. ‘அது பிடிக்கவில்லை என்றால் சரி, ஆனால் ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்?’
வினோத்திற்கு விளங்கவில்லை என்பது புரிந்தது வானதிக்கு. “ஸ்வேதா சொல்லிருக்கா… நீங்க அவளுக்கு முத்தம் குடுக்கும்போதெல்லாம் அவ கையை மடக்கிப் பிடிச்சிக்குவீங்கன்னு. கம்ப்ளீட்டா அவளை உங்க கன்ட்ரோல்ல வெச்சிருப்பீங்கன்னு. இப்ப என்னையும் அதே மாதிரி….”, மெதுவான குரலில் கூறினாலும் சீராகவே சொல்லி நிறுத்தினாள், பார்வை மட்டுமே தரையைத் தேய்த்தது.
கேட்டவனுக்குத் தான் சரியாகத்தான் கேட்டோமா, புரிந்துகொண்டோமா என்று தெரியாமல், அவளைப் பார்த்து முழித்தான். பலவித எண்ணங்கள் அலைபாய்ந்தது. மெல்ல சென்று நாற்காலியில் அமர்ந்தவன், அதில் முதலில் தோன்றியதையே கேள்வியாய்க் கேட்டான்.
“இதைக்கூடவா உங்கிட்ட சொல்லியிருக்கா? மென் கூட இந்த அளவுக்கு பேசிக்க மாட்டோம்…“, கொஞ்சம் சந்தேகத்தோடே கேட்டான்.
‘நான் என்ன பொய்யா சொல்றேன்.’, என்று எண்ணம் தோன்ற, ‘ உங்க பர்ஸ்ட் நைட்ல சொதப்பினது, சரியானது, ஹனிமூன்ல ஸ்பெஷல் மங்காத்தா…ஏன் உங்க பூ மச்சம் வரை சொல்லிருக்கா….”, யோசிக்காமல் அடுக்கவும்,
“வாட்… வாட் த ப்ளடி… “, என்று கூட ஒரு கெட்ட வார்த்தை சேர்த்து உதிர்த்தவன் எழுந்த வேகத்தில் நாற்காலி கீழே விழுந்தது. வினோத்தின் முகம் ரத்தமாய் சிவந்திருந்தது.
அதைக் கண்டவள் கண்கள் விரிய அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.
“சீ…. புருஷன் பொண்டாட்டின்னு ஒரு ப்ரைவசி கிடையாதா? அவதான் எங்க பெட்ரூம் ஜன்னலை திறந்துவிட்டாள்னா… இது தப்புன்னுன்னு சொல்லாம, நீயும் கூட வாயைப் பிளந்து கேட்டுகிட்டு இருந்தியா…. சை என்ன ஜென்மம்டி… எல்லா குப்பையும் நெட்ல தான் கெடக்குதே… பார்த்துக்க வேண்டியதுதான.. இல்ல எவனையாவது கல்யாணம் பண்ணித் தொலச்சிருக்க வேண்டியதுதான…. “, இரைந்துவிட்டு, அவள் அறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்.
இத்தனை ரௌத்திரம் பார்த்திராத வானதி உறைந்து நின்றிருந்தாள். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஒரு நொடி அமைதியில் தான் கூறியிருந்த விஷயத்தின் வீரியம் அறிவுக்கு உறைத்தது. தளர்ந்து சென்று படுக்கையில் விழுந்தாள்.
சத்தியமாக இதை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவன் சந்தேகமாகக் கேட்கவும், மனம் தாளாமல் அடுக்கிவிட்டாள். தாழியைத் தானே போட்டு உடைத்துவிட்டோம் என்று புரிந்தது.
 “விடு வானதி… அவன் அந்தரங்க மச்சம் அதுக்கு ஸ்வேதா வெச்ச செல்ல பேர் வரை உனக்குத் தெரியும்னா, யாருக்குத்தான் ஜீரணிக்க முடியும்?”, மனது சமாதானப்படுத்த முயல, அறிவோ, அப்போதும் ‘ஆமாமாம்… சொன்ன ஸ்வேதாமேல தப்பில்லை. கேட்ட நீதான் வில்லி. அவளை என்னிக்கு திட்டியிருக்கார், இன்னிக்கு திட்ட? என்னவோ அவ வாயைக் கிளறி, நீ இதெல்லாம் வாங்கின மாதிரி.’, என்று நொடித்தது.
‘இத்தனை நாளா இல்லாம இன்னிக்கு என்ன திடீர்னு கட்டிப்பிடிச்சு முத்தம்? நீ காப்பாத்திவிட்டதுக்கு நன்றியாவா? பாவம் பொண்னு, என்னையே பார்த்து ஏங்கறா… இவ செஞ்ச ஹெல்ப்புக்கு ஒரு நன்றிக் கடனா இருந்துட்டு போகட்டும்னு முத்தம் கொடுத்தார். அதுவே இவ்வளவு சண்டையில கொண்டுவந்து விட்டுருச்சு…’.
‘ அதான் உனக்கு கருணை உணர்ச்சியே இல்லை. கீதாவை பழி வாங்கினன்னு சொல்லாம சொல்லிட்டாரே. அதுலயே தெரிய வேணாமா, நீ அவர் மனசுல எங்க இருக்கன்னு? ‘,மற்றவர்களுக்கே பாயிண்ட் பாயிண்டாக பேசுபவள் தனக்கும் பேசிக்கொள்ளமாட்டாளா என்ன?
சிறப்பாகப் வாதாடி தப்பாக புரிந்துகொண்டாள். இது எதையும் பொருட்படுத்தாத மனது, “ஹ்ம்ம்… ஸ்வேதா முதல் முறை முத்தம் வாங்கிட்டு எவ்வளவு சந்தோஷமா வந்து உங்கிட்ட சொன்னா? நீயும் குடுத்திருக்க பாரு அவருக்கு ஒரு ஃபீல்… இனி உங்கிட்டவே வரமாட்டார் மனுஷன்…”, என்று சரமாரியாக திட்டிக்கொண்டிருந்தது.

Advertisement