Wednesday, May 15, 2024

    Thatchanin Thirumgal

    *18* வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சனின் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள். ராஜராஜன் என்று ஒருவன் தங்களுக்கு...
    “உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது....
    “நியாயமா ஒன்னு சொல்லவா… இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு நீ சொல்லாம இருக்குறது நல்லது. சொன்னா எனக்கு கோபம் தான் வரும். என் பையனை திட்டுறதை என்கிட்டையே சொல்ற உன்னோட நேர்மைக்கு முன்னாடி என்னோட பாசம் தான் நிக்கும். என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம். அவன் மனசு நோகுறபடி நடந்துக்காத. அவன் கூட...
    *17* போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை. ஏற்கனவே குந்தவை...
    “தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான். மிதமான வேகத்தில் சென்றாலும் பார்வையில் தெளிவின்றி, உடலும் கட்டுப்பாட்டில் இல்லாத போது எங்கிருந்து பத்திரமாய் செல்ல முடியும்… தோப்பிலிருந்து பிரதான சாலைக்கு...
    “ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது. “லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில் காய்க்கல. ஏற்கனவே இந்த வருடம் ஏகப்பட்ட செலவு. இதுல நீ வேற விவசாயம் பண்றேன்னு லாபம் கொடுக்குற நிலத்தில் நஷ்டம்...
    அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே அன்பசரனுக்கு அவள் கடத்த நினைக்கும் விஷயமும், அதன் அவசியமும் புரிந்ததுவிட்டது. “எப்போமா போகணும்?” “சீக்கிரம் வேலையில் சேர்ந்துடுறது நல்லது மாமா…” குந்தவையிடம் வெளிப்படும் திடம்,...
    *16* நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே வண்டி நிறுத்தியவனை திட்ட வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, தச்சனைக் கண்டதும் முறைப்போடு நிறுத்திக்கொண்டாள் குந்தவை. அவளை திடமாய் பார்த்தவன் அழுத்தமாய், “ஏறு...
    “இட்லி மாவு கொஞ்சம் தான் இருக்கு. உளுந்தும், அரிசியும் ஊற வைச்சு மாவு அரச்சிடவா அத்தை?” “நானே ஊற வைக்கணும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்ட... பெரிய பித்தளை குவளையில் அரிசி இருக்கு, உளுந்தும் பக்கத்திலேயே இருக்கு.” “தெரியும் அத்தை... நான் பார்த்துக்குறேன். அப்புறம் நேத்து தான் சிலிண்டர் மாத்துனேன், நீங்க மறக்காம புது சிலிண்டர் புக் பண்ணிடுங்க.”...
    *15* “குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள். கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த தேர்வுக்கான விடுப்பும் மூன்று நாட்களுக்கு மேலிருந்தது. அதனால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் இன்று பரீட்சை முடிந்ததும் தோழிகளுக்குள் சிறிய பார்ட்டி....
    *14* “எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள், “நீ என்கிட்ட சொல்லிட்டு வானதியை கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று அடுத்ததை துவங்கினாள். சாவுகாசமாய் மெத்தையில்...
    “நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க, “நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால் நீ செஞ்சதை பார்த்து தான் இவள் செய்யுறா?” என்று தன் கரத்தில் பவ்யமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியை காண்பிக்க,...
    குந்தவை வானதியை அழைத்து வர, தயங்கித் தயங்கி குந்தவையை ஒண்டியே வந்தாள் வானதி. தச்சனுடன் வரும் போது குந்தவையை பார்க்கப்போகிறோம் அவளிடம் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பு உணர்வே தலைதூக்கி இருந்திருக்க, இப்போது குந்தவையின் புகுந்த வீட்டினரிடம் பதில் சொல்லும் நிலை வந்ததும் தயக்கமும் சேர்ந்து வந்துவிட்டது. பிரச்சனைக்கு பயந்து சொந்தமே என்றாலும் பழக்கமே ஏற்படாத...
    *13* உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க, வானதியிடம் எந்த பதட்டமும் இல்லை.  “என்னாச்சு? என்கிட்ட கூட சொல்லாம அம்மா எப்படி உன்னை அனுப்புனாங்க? நீயும் அப்படியே கிளம்பி வந்திருக்க?”...
    “இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?” “ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே... உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்? உன்னோட போட்டோ, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ், கல்யாண பத்திரிக்கை, கோவிலில் உங்க திருமணத்தை பதிந்ததற்கான சான்றும் கொடுத்தாங்க. அதையும் விண்ணப்பத்தோடு...
    *12* தன்னருகில் அமைதியாய் கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் மருமகளைப் பார்த்தவர் விழியை கூர்மையாக்கி கேள்வியாய் என்னவென்று பார்வையாலே வேண்ட, குந்தவை ஒருநொடி தயங்கிப் பின், “என் மேல உங்களுக்கு வருத்தம் இருக்குமுன்னு புரியுது… ஒரே வீட்டில் இருந்துகிட்டு உங்களை நெருங்க நான் தயங்குறதும், என்னை பார்த்து நீங்க ஒதுங்கிப் போறதும் சரியாப்படல. நாம இப்படி இருக்குறதால...
    “சித்தி மாதிரியே முழிக்குறதை பாரு… அடுத்த குந்தவையாக வர இப்போவே இந்த ராட்சசி ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டா போலிருக்கு...” என்று இதழ்களுக்குள் முணுமுணுக்கொண்டவன் அவளுக்கு வாங்கி வந்த பொம்மையை எடுத்து நீட்ட, ஓரிரு நொடி யோசித்த பின்னேதான் அவனை நெருங்கி அந்த பொம்மையை வாங்கிக்கொண்டாள் அறிவழகி. அவளின் கன்னம் தட்டியவன், குந்தவையிடம் பார்வையை திருப்பி, “கிளம்பலாமா...
    அவனையே குறுகுறுவென பார்த்தவள் தலையை ஒருபுறம் சரித்து விழிகளையும், புருவத்தையும் மேலுயர்த்தி, “நீ சொன்னா நான் கேட்கணுமா… அதெல்லாம் கேட்க முடியாது போ…” என்க, முகத்தை தூக்கினான் தச்சன். “இதெல்லாம் செல்லாது செல்லாது… நீலா இதையே சொல்லும்போது கேட்டுக்குற… நான் சொன்னா மட்டும் சிலுப்பிக்குற.”  “அதெல்லாம் அப்படித்தான்…” வேண்டுமென்றே சீண்டினாள் குந்தவை. “அப்போ வண்டி இங்கிருந்து நகராது… நீ...
    *11* “உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…”  “இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை.  திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி...
    “சரி நான் அவனுங்களை அனுப்பிட்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்… நீ இதெல்லாம் சரி பண்ணி வை… வாடியது போக மீதி எவ்வளவு தேறுதுன்னு பார்த்து அதையாவது காப்பாத்துவோம்.” என்றுவிட்டு குணா சென்றுவிட, வேலை செய்ய ஏதுவாய் சட்டையை கழற்றி மோட்டார் ரூமில் வைத்துவிட்டு பேன்ட்டையும் மாற்றிவிட்டு கழனியில் இறங்கினான் தச்சன். அதன் பிறகு வேலை...
    error: Content is protected !!