Thursday, May 16, 2024

    Thatchanin Thirumgal

    *10* “என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான்.  புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு...
    *9.2* “முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று முணுமுணுத்துவிட்டு நகர்ந்தவன் டூத்ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் துலக்க, விரைந்து அவனை நெருங்கி அவன் முதுகிலே ஒரு அடி போட்டாள் குந்தவை. சுள்ளென்று விழுந்த அடியில் துள்ளியவன் விரைவாய் அவள் கை பிடித்துத் தடுத்து அவளை தன் முன்னே இழுத்தான், “என்னடி பிரச்னை உனக்கு? சின்ன பிள்ளை மாதிரி...
    *9.1* குளியறையில் இருந்த போதே சிகரெட்டின் வாடை நாசியை எட்டி குமட்ட, அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் புகைத்துக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணி குளித்து உடைமாற்றி வந்தவளின் பார்வையில் சுருள் சுருளாய் புகைவிடும் தச்சனே எதிர்பட ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை குந்தவைக்கு.  வேலை, பின்புலம், இருப்பிடம் என்று எதுவுமே அவள் விரும்பியது போல அமையாது இருக்க, தந்தையின் இழப்பு...
    திருமணத்தன்று எப்படி இருந்தானோ அதேப்போல கால் மேல் கால்போட்டு காலை ஆட்டிக்கொண்டு மேல்சட்டையின்றி மெத்தையில் படுத்திருந்தான் தச்சன். சிந்தனையுடன் வந்தவள் கருத்தில் அதெல்லாம் பதியாமல் போக, தேமேவென அலைபேசியில் அலார்ம் வைத்தபின், விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் அவனைத் தாண்டி சுவரோரம் படுத்துக்கொண்டாள். தன்னை கவனிப்பாளா என்று பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அவளிடமிருந்து அசைவில்லை என்றவுடன்...
    “அந்த பொண்ணே இப்போ தான் அப்பாவை இழந்து நிக்குது. அதுகிட்ட ஆதரவா நாலு வார்த்தை பேசு, சும்மா தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்காத...” என்று அன்பரசன் சொல்லியிருக்க, “என்னமோ எனக்கு மட்டும் தான் அவங்க செஞ்ச காரியத்தில் விருப்பம் இல்லை என்கிற மாதிரி பேசுறீங்க? உங்களுக்கும் ஈமச் சடங்கில் தச்சனும், குந்தவையும் நடந்துகிட்டது பிடிக்கல தானே?”...
    *8* மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?” “இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது. “எப்படி வந்த...
    “வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” “நான் நினைக்கிறது முக்கியம் இல்லை மச்சான். அங்க அத்தையும், மாமாவும் என்ன நினைக்குறாங்கன்னு தான் முக்கியம். அவங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்னு அவங்க ஆதங்கப்படுவது...
    *7* “அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?” ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை...
    அப்படி அவன் அவளை அடக்கி வீரனாக வேண்டும் என்று உசுப்பிவிட்ட மாயத்தில் தச்சனும் குரலை உயர்த்தி, “என்ன பேசுற நீ? எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க… யார் பேச்சையும் கேட்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?” இதுவே வேறு சூழ்நிலை என்றால் அவனின் ஆதிக்க குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பி இருப்பாள். இப்போதோ மனதால் சோர்ந்திருக்க, தட்டுத்தடுமாறி குழந்தையை கீழே...
    *6* மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி...
    “அங்கேயும் போய் இப்போ பேசின மாதிரி மாப்பிள்ளைகிட்ட அவங்க சொந்தங்கள் முன்னாடி பேசி வச்சிடாத. மாப்பிள்ளை வேண்டுமென்றால் நீ பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவங்க வீட்டில் அதே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க. பிடிக்குதோ பிடிக்கலையோ இது தான் இனி உன் வாழ்க்கை. இதை வெளிச்சமாக்கிக் கொள்வதும் இருளை இழுத்து விட்டுக்கொள்வதும் உன் கையில்...
    அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை இவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியிடம் நீட்ட, அவளும் வேகமாய் தவழ்ந்து வந்து அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனருகிலேயே நின்று கொண்டாள். “தம்பி யாரு?” என்று குணாவை காட்டி கேட்க, “குந்தவை இல்லையா மாமா?” அவரது கேள்வியை நாசூக்காய் தவிர்த்து எதிர் வினா எழுப்பினான் தச்சன். “இங்கே தான் பக்கத்தில் கடை வரைக்கும் போயிருக்கா...
    *4* பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு...
    “ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார். “யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த பையனை பிடிச்சிருக்க மாதிரி தான் தெரியுது.” என்று நந்தன் அசலாய் தனக்குத் தோன்றியதை சொன்னாலும், அவசரம் அவசரமென்று குந்தவை திருமணத்தை...
    *3* தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன்...
    தச்சனின் திருமகள் - 1 *1* “தென்னாடுடைய சிவனே போற்றி!  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”      என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர்,...
    “பளார்…” என்ற ஓசையின் அதிர்வில் அங்கிருந்த அனைவருமே திரும்பப் பார்த்தனர். பள்ளி சீருடையில் இருந்த சிறுமியொருத்தி பயத்தில் சற்று நடுங்கினாலும் அவளது கரம் என்னவோ தன் எதிரில் இருந்தவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது. “இதை முன்னாடியே செய்திருந்தால் இத்தனை நாள் உன் பின்னால் வந்து உனக்கு தொல்லை கொடுக்கும் துணிச்சல் இவனுக்கு வந்திருக்குமா?” அதிகாரமும், ஆளுமையும் போட்டி...
    error: Content is protected !!