Wednesday, May 15, 2024

    Thatchanin Thirumgal

    “வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” “நான் நினைக்கிறது முக்கியம் இல்லை மச்சான். அங்க அத்தையும், மாமாவும் என்ன நினைக்குறாங்கன்னு தான் முக்கியம். அவங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்னு அவங்க ஆதங்கப்படுவது...
    அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை இவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியிடம் நீட்ட, அவளும் வேகமாய் தவழ்ந்து வந்து அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனருகிலேயே நின்று கொண்டாள். “தம்பி யாரு?” என்று குணாவை காட்டி கேட்க, “குந்தவை இல்லையா மாமா?” அவரது கேள்வியை நாசூக்காய் தவிர்த்து எதிர் வினா எழுப்பினான் தச்சன். “இங்கே தான் பக்கத்தில் கடை வரைக்கும் போயிருக்கா...
    அப்படி அவன் அவளை அடக்கி வீரனாக வேண்டும் என்று உசுப்பிவிட்ட மாயத்தில் தச்சனும் குரலை உயர்த்தி, “என்ன பேசுற நீ? எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க… யார் பேச்சையும் கேட்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?” இதுவே வேறு சூழ்நிலை என்றால் அவனின் ஆதிக்க குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பி இருப்பாள். இப்போதோ மனதால் சோர்ந்திருக்க, தட்டுத்தடுமாறி குழந்தையை கீழே...
    “அங்கேயும் போய் இப்போ பேசின மாதிரி மாப்பிள்ளைகிட்ட அவங்க சொந்தங்கள் முன்னாடி பேசி வச்சிடாத. மாப்பிள்ளை வேண்டுமென்றால் நீ பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவங்க வீட்டில் அதே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க. பிடிக்குதோ பிடிக்கலையோ இது தான் இனி உன் வாழ்க்கை. இதை வெளிச்சமாக்கிக் கொள்வதும் இருளை இழுத்து விட்டுக்கொள்வதும் உன் கையில்...
    “ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார். “யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த பையனை பிடிச்சிருக்க மாதிரி தான் தெரியுது.” என்று நந்தன் அசலாய் தனக்குத் தோன்றியதை சொன்னாலும், அவசரம் அவசரமென்று குந்தவை திருமணத்தை...
    திருமணத்தன்று எப்படி இருந்தானோ அதேப்போல கால் மேல் கால்போட்டு காலை ஆட்டிக்கொண்டு மேல்சட்டையின்றி மெத்தையில் படுத்திருந்தான் தச்சன். சிந்தனையுடன் வந்தவள் கருத்தில் அதெல்லாம் பதியாமல் போக, தேமேவென அலைபேசியில் அலார்ம் வைத்தபின், விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் அவனைத் தாண்டி சுவரோரம் படுத்துக்கொண்டாள். தன்னை கவனிப்பாளா என்று பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அவளிடமிருந்து அசைவில்லை என்றவுடன்...

    Thatchanin Thirumagal 25 4

    “என்னடா காத்து இந்த பக்கம் வீசுது… வெளிய துரத்தி விட்டுட்டாங்களா?” அறிவழகியை தூக்கி வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்த தச்சன், ராஜனைக் கண்டதும் விஷமமாய் சிரித்தான். “அப்பாடா வந்துட்டீங்களா! நீங்களே வந்து உங்க பசங்களையும் தம்பியையும் மேயுங்க அத்தான்… நான் கிளம்புறேன்.” களைப்பாய் தென்பட்ட குந்தவை ராஜனைக் கண்டதும் களிப்பாகி அவனிடமே உணவுத் தட்டை நீட்டிட்ட,...
    “உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது....
    *6* மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி...
    *4* பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு...
    *8* மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?” “இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது. “எப்படி வந்த...
    “எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.” விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டிவிட அவள் பின்னாலே சென்றான் கதிரவனும். “என்னடா பேசி வச்ச அவங்ககிட்ட? அண்ணி எப்படா இங்கிருந்து ஓடலாம்னு தவிச்சிக்கிட்டு நின்னாங்க? அண்ணன்...
    “இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?” “ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே... உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்? உன்னோட போட்டோ, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ், கல்யாண பத்திரிக்கை, கோவிலில் உங்க திருமணத்தை பதிந்ததற்கான சான்றும் கொடுத்தாங்க. அதையும் விண்ணப்பத்தோடு...

    Thatchanin Thirumagal 19 2

    *19.2*  “நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து கூட்டமெல்லாம் குறைந்தவுடன் வெளியே உலாத்திக் கொண்டிருக்க, கொடியில் காய்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் துணியை எடுக்க வந்த வானதியை பிடித்துக் கொண்டான். “இல்......
    “சித்தி மாதிரியே முழிக்குறதை பாரு… அடுத்த குந்தவையாக வர இப்போவே இந்த ராட்சசி ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டா போலிருக்கு...” என்று இதழ்களுக்குள் முணுமுணுக்கொண்டவன் அவளுக்கு வாங்கி வந்த பொம்மையை எடுத்து நீட்ட, ஓரிரு நொடி யோசித்த பின்னேதான் அவனை நெருங்கி அந்த பொம்மையை வாங்கிக்கொண்டாள் அறிவழகி. அவளின் கன்னம் தட்டியவன், குந்தவையிடம் பார்வையை திருப்பி, “கிளம்பலாமா...
    *7* “அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?” ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை...
    Epilogue “இப்போ இருக்குற மாதிரி பெரிய பெரிய மெஷின் எல்லாம் இல்லாத அந்த காலத்துல அவ்வளவு எடையுள்ள விமானத்தை கோவில் மேல எப்படி ஏத்துனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் உலகமே வியந்து பார்த்துட்டு இருக்கு…” அன்பரசன் தன் பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொண்டு தான் வியந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்த மூவரில் ஒருவன் மட்டும்...
    *11* “உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…”  “இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை.  திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி...
    *10* “என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான்.  புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு...
    “சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான். “வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய ஆள்தான். ஆனா பெரிய ஆள்னாலே போட்டிக்குன்னு ஒருத்தன் இருப்பானே… அவனை நான் கவனிச்சிடுறேன். மீதி செய்ய வேண்டியதை அவனே நமக்கு...
    error: Content is protected !!