Wednesday, April 24, 2024

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 59

    ஸ்மிரிதியின் மனு - 59 மாமாஜி சென்றவுடன்,”பணம் ரெடியாயிருக்கு இல்லே..அதைக்  கொடுத்து விகாஸ்கிட்டேயிருந்து விவரத்தை வாங்கினா என்ன தப்பு? நம்மகிட்ட இப்ப தீவிரமா விசாரிக்க, விசாரணை செய்ய எங்கே நேரமிருக்கு?” என்று ஸ்மிரிதியைக் கோபமாகக் கேட்டான் மனு. “நீ சொன்ன மாதிரி நம்ம பணத்தை வாங்கிகிட்டு அவன் கொடுக்கற தகவல் தப்பாயிருந்திச்சுண்ணா?” “இப்ப அந்த ரிஸ்க் எடுத்துகிட்டுதான் ஆகணும்.” “ஏற்கனவே...

    Smrithiyin Manu 58

    ஸ்மிரிதியின் மனு - 58 மாமாஜி வந்து சேருவதற்கு முன் விரேந்தர் வந்து சேர்ந்தான்.  வரவேற்பறையிலிருந்த மனுவிடம், “நம்ம வீட்லேயே ஸாபுக்கு இந்த மாதிரி ஆகும்ணு நான் நினைக்கவேயில்லை..அவரு ஆஸ்பத்திரின்னு சொன்னவுடனையே நான் அழைச்சுகிட்டு போயிட்டேன்..நான் அவர்கூடவே இருந்தும் இப்படி ஆயிடுச்சு.” என்று மனம் வருந்தினான். “விரேந்தர்..இந்த மாதிரி நடக்கும்ணு அங்கிளே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..நான் ஆஸ்பத்திருக்கு போயிட்டுதான் இங்கே...

    Smrithiyin Manu 57

    ஸ்மிரிதியின் மனு - 57 “சோனு..இவனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செய்..இன்னைக்கு வெளிலேர்ந்து வேலைக்கு வந்திருக்கற அத்தனை பேரையும் எப்பவும் போலே சாயந்திரமா வீட்டுக்கு அனுப்பிடு..நாளைலேர்ந்து அவங்கள்ள கொஞ்சம் பேர் மட்டும் வேலைக்கு வரட்டும்...நம்ம குவாடர்ஸ்லே இருக்கறவங்களை வைச்சு மற்ற வேலைகளை மனேஜ் பண்ணு.. வண்டியை எங்கே நிறுத்தி வைச்சிருக்க?” என்று ஸ்மிரிதி கேட்க, ஸர்வெண்ட் குவார்டர்ஸுக்கு...

    Smrithiyin Manu 56

    ஸ்மிரிதியின் மனு - 56 ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம், “கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள்.  அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர். “என்ன...

    Smrithiyin Manu 55 2

    ஸ்மிரிதியின் மனு - 55_2 மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள்.  அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள்.  அந்தப் பரபரப்பான சாலையில், இடைவெளி இல்லாத வாகன நெரிசலில், இடைவிடாது ஒலித்து கொண்டிருந்த இரைச்சலில் சிந்தனையை சிதறவிடாமல் அடுத்து செய்ய வேண்டிய...

    Smrithiyin Manu 55 1

    ஸ்மிரிதியின் மனு - 55_1 விடியற்காலையின் மெலிதான, இதமான குளிரை அனுபவித்து கொண்டிருந்தனர் தில்லிவாசிகள்.  அந்த சோம்பேறித்தனமான காலை பொழுதில் திரேன் கொடுத்த டீயை அருந்தியபடி நாதனும், மனுவும்  தினசரியைப் புரட்டி கொண்டிருந்தனர். “மாறன் இங்கே வந்து மூணு நாளாயிடுச்சு..உங்கம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..ஸ்மிரிதி என்ன சொல்றா?” என்று அவர்கள் கோவைக்குக் குடிபெயரும் பேச்சை ஆரம்பித்தார் நாதன். சிவகாமி...

    Smrithiyin Manu 53

    ஸ்மிரிதியின் மனு - 53 மெஹக் கிளம்பி சென்ற சில மணி நேரத்தில் சிவகாமியின் அறையில் பரபரப்புடன் மனு நுழைய, அவனைத் தொடர்ந்து  மூன்று பைகளுடன் நுழைந்தாள் ஸ்மிரிதி. “என்ன மா ஆச்சு? ஏன் மயக்கம் போட்டீங்க? ஏன் எனக்கு உடனே ஃபோன் செய்யலே? மஞ்சு நாத்கிட்ட பேசின பிறகுதான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சுது.” என்று மனு...

    Smrithiyin Manu 52

    ஸ்மிரிதியின் மனு - 52 சிவகாமி கண் விழித்த போது அவரெதிரே டாக்டர் நேத்ராவதி இருந்தார்.   “என்ன நீங்க இப்படி பயமுறுத்திடீங்க?” என்று அவர் கேட்க, “என்னவோ தெரியலே..திடீர்னு ஒரு மாதிரி இருந்திச்சு..என்ன ஆச்சு எனக்கு?’ “அதிர்ச்சிலே மயக்கமாயிட்டீங்க..எதுக்கும் எல்லாம் டெஸ்டும் செய்ய சொல்றேன்..அந்த ரிஸல்ட்ஸ் வந்த பிறகு  மறுபடியும் உங்களை வந்து பார்க்கறேன்.” என்று சொல்லி விடைபெற்று கொண்டார். அவர்...

    Smrithiyin Manu 51

    ஸ்மிரிதியின் மனு - 51 ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மனுவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் ஏழ அதே சமயம் ஸ்மிரிதியின் உணர்ச்சியற்ற முகம் அவனுக்குக் கவலையை அளித்தது. அவள் தாயின் இழப்பை அவனோடு பகிர்ந்து கொண்ட அவன் மனைவி இன்னும் அதை முழுமையாக உணரவில்லை என்ற அவன் எண்ணத்தை அவளின் அடுத்த செய்கை உறுதிப்படுத்தியது. அவன்...

    Smrithiyin Manu 50 2

    ஸ்மிரிதியின் மனு - 50_2 “ஆஸ்பத்திரிக்குப் போன பிறகு சொல்றேன்.” என்றார் சிவகாமி.  அதற்குள் அவர்களுக்கான டாக்ஸி வந்து சேர அதில் ஏறி மூவரும் ஆஸ்பத்திரிக்குப் பயணப்பட்டனர். அவர்கள் வருவதை மனுவிற்கு தெரியப்படுத்தியவுடன் அவர்களுக்காக வாசலில் காத்திருப்பதாக பதில் அனுப்பினான் மனு.  ஆஸ்பத்திரி வாயில் நின்று கொண்டிருந்த மனுவைப் பார்த்தவுடன், “எங்க டா இருக்கா பிரேமா?” என்று சிவகாமி கேட்க, “ஐ...

    Smrithiyin Manu 50 1

    ஸ்மிரிதியின் மனு - 50_1 அடுத்த வந்த வாரங்களில் கோவையில் வீட்டு வேலைகள் முடிவை நெருங்கி கொண்டிருக்க, தில்லியை விட்டு புறப்படும் வேலையில் பிஸியானார் சிவகாமி.  எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று காலம்காலமாய் சேர்த்து வைத்திருந்த சாமான்களை இரக வாரியாகப் பிரித்து, தில்லி, கோவை என்று தனி தனியாகப் பாக் செய்தார். அப்படி செய்யும் போது...

    Smrithiyin Manu 49 1

    ஸ்மிரிதியின் மனு - 49_1 அவருடைய இளைய மகனின் அடுத்த காண்டத்தைக் கேட்டு தில்லை நாதனின் எதிர்வினை என்னவாக இருக்குமென்ற யோசனையில் மனு மௌனமாக, அவன் மௌனத்தில் அவனுடைய விசாரணை முடிந்து விட்டது என்று நினைத்து கண்களை மூடிக் கொண்ட ஸ்மிரிதியை திடீரென்று இறுக அணைத்து அவள் மேல் படுத்தவனிடம்,”இன்னும் என்ன கேட்கணும் உனக்கு?” என்று...

    Smrithiyin Manu 49 2

    ஸ்மிரிதியின் மனு - 49_2 “மாறன்....ஆன்ட்டிகிட்ட உங்களைப் பற்றி நான் பேச போகறதில்லே..மனுவும் பேச மாட்டான்..உன் விஷயத்தை நீயும், அவளும் தான் பார்த்துக்கணும்....இனிமேதான் உங்க இரண்டு பேரோட மன உறுதி, மனோபலம், அன்போட ஆழம் எல்லாம் தெளிவாகும்.. இந்த விஷயத்திலே நாங்க யாரும் தலையிடக்கூடாது, தலையிட மாட்டோம்..வீட்டுக்கு வா..அங்கிள், ஆன்ட்டிகிட்ட நீயே உன் வாயாலே சொல்லு.”...

    Smrithiyin Manu 48

    ஸ்மிரிதியின் மனு - 48 சற்றுமுன் கேள்விபட்ட சிக்கலான விஷயத்தின் பாதிப்பு எதுவுமில்லாமல் ஸ்மிரிதிக்குப் பதிலும் சொல்லாமல் அவன் ஃபோனைப் படுக்கை மீது விட்டெறிந்து விட்டு பாத் ரூமிற்கு சென்றான் மனு. “எப்ப சொன்ன? வீட்டுக்குள்ள வந்தவுடனே கதவு இல்லையான்னு கேட்ட.. ரூமுக்குள்ள வந்தவுடனே பாத் ரூமுக்கும் கதவு இல்லையான்னு அதிர்ச்சியான..அதுக்கு அப்பறம் நீ..” என்று யோசித்தவனின்...

    Smrithiyin Manu 47

    ஸ்மிரிதியின் மனு - 47 அவனுடைய சாவியை போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்த மனுவின் கண்களில் பட்டார் டைனிங் டேபிளில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்த சிவகாமி. அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் ஷுவை கழட்டிவிட்டு, வாஷ் பேஸினில் கை கழுவும் போது விழித்துக் கொண்டவர், “என்ன டா இன்னைக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?” என்றார். “அரைமணி நேரம் லேட்..ஸ்மிரிதி...
    ஸ்மிரிதியின் மனு - 46_2 மாறனுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த மெஹக், தானாகவே அமைந்த அவர்களின் இந்த சந்திப்பில் சந்தோஷமடைந்தவள் அவனைப் பற்றி உணர்ந்த பின் ஏற்படும் இந்த முதல் சந்திப்பைச் சரியாக கையாள வேண்டுமென்று சஞ்சலமுமடைந்தாள்.  சந்தோஷம், சஞ்சலம், பரிதவிப்பு என்று அவளுக்குள் ஏற்பட்டு கொண்டிருந்த அதுவரை அவள் உணர்ந்திராத உணர்வுகளை ஆராய்ச்சி...
    ஸ்மிரிதியின் மனு - 46 “ஸாரி..லேட்டாயிடுச்சு.” என்று சொன்ன மெஹக், முகத்தை சுற்றியிருந்த ஸ்டோலை விலக்கி அதை கழுத்தை சுற்றி போட்டு கொண்டாள்.  அதை சரி படுத்தி கொண்டிருந்த மெஹக்கின் கண்களில் பட்டான் மாறன்.  இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடி நேரடியாக பார்த்து கொண்டனர்.  அந்த ஒரு நொடியில் அவளெதிரே டி ஷர்ட், ஜீன்ஸ், காடு...
    ஸ்மிரிதியின் மனு - 45_2 “ஆனா என்ன டி?” “மனிஷ் வீட்டுக்கு வரான் டி..கல்யாணத்துக்குப் பிறகு ஸ்மிரிதி வீட்லே இருந்தாலும், இல்லாட்டாலும் அவன் சனி, ஞாயிறு வந்துகிட்டிருந்தான்..இப்பதான் மாறன் ஊருக்கு போன பிறகு,  நான் பாக்கிங் ஆரம்பிச்ச பிறகு அவன் வர்றது குறைஞ்சிருக்கு..நாங்க ஷிஃப்ட் ஆன பிறகு அவன் திரும்ப சனி, ஞாயிறு வரலாம்..ஸ்மிரிதியும், அவனும் ரொம்ப...
    ஸ்மிரிதியின் மனு - 45_1 அடுத்த வந்த நாட்களில் மாறன், மெஹக் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க அவர்கள் இருவரையும் பற்றி மும்முரமாக யோசித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அன்று காலையில் உதய்பூரிலிலிருந்து திரும்பியவளிடம், “இன்னைக்கு வீட்டுக்கு கேட் வைக்க போறாங்க..பில்டர் போட்டதை எடுத்திட்டு பெரிசா வைக்கறாங்க.” என்று தகவல் கொடுத்தார் சிவகாமி. அதை மௌனமாக கேட்டபடி அவன்...
    ஸ்மிரிதியின் மனு - 44_1 மாறன் பொறுக்கியா? என்று அதிர்ந்த ஸ்மிரிதி,”என்ன ஆச்சு?” “கண்டபடி பேசறான்.” “என்ன பேசினான்.” “கபீரோட, தல்ஜித்தோட டான்ஸ் ஆடினதைப் பற்றி அசிங்கமா பேசறான்.” என்றாள். “ஏன்?” “அவனோட ஆடமாட்டேன்னு சொல்லிட்டு அவங்களோட ஆடினேன் அதனாலே.” “எப்ப நடந்திச்சு இதெல்லாம்?” என்று கேட்ட ஸ்மிரிதிக்கு நிஜமாகவே தெரியவில்லை அவள் ரிசெப்ஷனில் நடந்த சம்பவம். “உன் ரிசெப்ஷன்லேதான்..அவன் எல்லாரோடையும் ஆடி முடிச்சிட்டு என்கிட்ட...
    error: Content is protected !!