Sunday, July 19, 2026

    Engaeyo Paartha Ngabagam

    அத்தியாயம் 29 சோலைவனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த சக்தீஸ்வரனின் மார்பில் சாய்ந்து அவனிடையை அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் இளவஞ்சி. முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாய் சக்தீஸ்வரன் தியானத்தில் கண்டிருந்ததையும் இளவஞ்சி கனவினில் கண்டிருந்ததையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தனர். படபடவெனத் துடிக்கும் சக்தியின் இதயத்துடிப்பை கேட்டவாறு சாய்ந்திருந்தவளின் இதயமும் வேகமாக துடித்திருந்தது. இருவருக்கும் இன்னுமே அக்காட்சிகளின்...
    அத்தியாயம் 28 சமய பேதமின்றி ஆத்மநல்லூரின் மாந்தர்கள் அனைவரும் அனுதினமும் சிவஞான சந்திரரை ஆலயத்திற்குச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர். "முதலை விழுங்கி உயிர் இழந்த சிறுவனைப் பற்றி ஒரு வருடம் கழித்து அச்சிறுவனின் பெற்றோர்கள் மூலம் கேள்வியுற்ற சந்திரர், ஈசனை வணங்கி துதித்துப் பதிகம் பாடி அச்சிறுவனின் உயிரை மீட்டெடுத்துத் தந்தாராம்" "யாம்‌ உன்னைத்‌ தடுத்து ஆட்கொண்ட...
    அத்தியாயம் 27 தனது அன்றாட வழமைப் போல் அதிகாலை ஆலயத்திற்குச் சென்று மாதவப் பெருமாளுக்கு மாலை அளித்து விட்டு சிவலிங்கத்தின் முன் வந்தமர்ந்த முத்தரசி தியானத்தில் அமர முற்பட்ட வேளையில், "யாரது முத்தரசியா?" என்றவாறு அவளருகில் வந்தமர்ந்தார் மூதாட்டி ஒருவர். அவளது வசிப்பிடம் இருக்கும் வீதியினில் வசிக்கும் மூதாட்டியெனத் தெரியுமாதலால் அவரிடம் இயல்பாக நலம் விசாரித்துப் பேசினாள்...
    அத்தியாயம் 26 "முத்தரசி! முத்தரசி" என்றவாறு முத்தரசியின் வீட்டிற்குள் நுழைந்தாள் நிறைமதி.  நிறைமதியைக் கண்டதும் கண்கள் பொலிவுற, "மதி! புகுந்த வீட்டிலிருந்து எப்பொழுது வந்தாயடி?" எனக் கேட்டாள் முத்தரசி.  "இன்று தான் என்னவருடன் வந்து சேர்ந்தேனடி" என்றவள், "நீ ஏனடி இப்படி கருத்து இளைத்து வதங்கிய கொடியாய் வாடியிருக்கிறாய்?" எனக் கேட்டாள் நிறைமதி.  மென்னகையுடன் தோழியைப் பார்த்த முத்தரசி, "ஏன்...
    அத்தியாயம் 25 அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு! கண்ட நொடியினிலேயே அவளின் மனதை ஈர்த்திருந்தான் அவன்! அவனது பக்தியும் இறைத்தொண்டும் அவன் மீதான மரியாதையையும் பேரன்பையும் அவளுள் உருவாக்கியிருந்தன! ஆகையால் தான் பெருமாள் அசரீரியாக உரைத்ததைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்தது அவளுக்கு. தன்னால் சிவநேசரைக் காக்க இயலும் என்ற எண்ணமே தித்திப்பை அளித்தது‌ அவளுக்கு‌. சிவநேசனை மணமுடித்து இனிய...
    அத்தியாயம் 24 எங்கிலும் பனிப்புகையாகச் சூழ்ந்திருக்க, புகை விலகி வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் சிவநேசனும் முத்தரசியும் இணைந்து நின்று சிரித்துப் பேசியவாறு மலர்களைப் பறிக்கும் காட்சி அவனது மனக்கண்ணில் ஊர்வலமாகப் போக, சட்டெனத் தியானத்தில் இருந்து விழித்தவனின் முன்பு அமர்ந்திருந்த முத்தரசியைக் கண்டு அதிர்ந்து போனான் சிவநேசன்‌‌. 'இக்காட்சியின் மூலம் ஈசன் குறிப்புணர்த்தும் செய்தி யாது?'...
    அத்தியாயம் 23 "கோப முகம் காட்டிய போதும் சாதுவான சிவனடியாரென நினைத்திருந்தேனே முத்தரசி! இவர் முரடனான சிவனடியாராக இருக்கிறாரே" உடை வாளோடு ஒருவரைத் துரத்திக் கொண்டிருந்த சிவநேசனைப் பார்த்தவாறு தாடையில் கை வைத்தவளாய் நிறைமதி கூற, "முரட்டுத்தனம் அல்ல! அதை வீரம் எனவும் கூறலாம் மதி" ஓடும் சிவநேசனைப் பார்த்தவாறே உரைத்த முத்தரசியைச் சட்டெனப் பார்த்த நிறைமதி,...
    அத்தியாயம் 22 முன்னொரு காலத்தில்! உலகெங்கிலும் ஆங்காங்கே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பூமியில் உதித்துத் தங்களது இறைவனின் புகழையும் பக்தி நெறியையும் மக்களுக்குப் பரப்பிய காலமது‌. சைவர்களும் வைணவர்களும் நட்புறவாய் உறவாடி ஒன்றாக ஒரே வீதியில் வசித்திருந்த காலமது‌‌. சிவவைகுண்டபுரம்! குறிஞ்சி தேசத்தினுள் மேற்கு மலைத்தொடரையொட்டி இருக்கும் வளமான நாடு. அந்நாட்டில் தோரணகிரி மலையடிவாரத்தில் கோதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகான சிற்றூர் ஆத்மநல்லூர்‌. குறிஞ்சி தேசத்தினை...
    அத்தியாயம் 21 சோலவனத்தில் அவர்களது அறையில் இருந்தனர் இருவரும். அறைக்குள்ளே நடந்தவாறே, "ராஜா கண்டிப்பாக கேஸ் போட்டே ஆகனும். நான் அதுல உறுதியாக இருக்கேன். எப்ப.. எப்படி போடலாம்? அதுக்கு நான் என்ன செய்யனும்னு விசாரிச்சிட்டு சொல்லுங்க" கைப்பேசியில் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்‌. அந்தக் கோவிலில் இருந்து கிளம்பிய பொழுதிலிருந்து, தொடர்ந்து கைபேசியில் யாரிடமாவது பேசியபடியே இருந்தான்...
    அத்தியாயம் 20 இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும், "சக்தி நாம முக்கியமான ஒரு இடத்துக்கு இப்ப போகப் போறோம்" என்றவள் ஓட்டுனரிடம் தான் கூறும் பாதையில் வண்டியைச் செலுத்துமாறு உரைத்தாள். "எதுவும் சர்ப்ரைஸ்ஸா பொண்டாட்டி?" என்று வழமைப் போல் கேட்டவனை, 'அய்யோ எங்க போறோம்னு தெரிஞ்சா திட்டுவாரோ' என்ற பாவனையுடன் பார்த்தவள், "அதெல்லாம்...
    அத்தியாயம் 19 விடியற்காலை மூன்று மணியளவில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த பலகையில் இருந்த பெயரைப் பார்த்தவன், "சோலைவனம்" எனப் படித்தவாறு நெற்றியைச் சுருக்கினான். குளிர் உடலுக்குள் ஊடுருவி கை கால்களை நடுங்கச் செய்தது. உறக்கத்தில் மலை மீதான பயணத்தைக் கவனியாது வந்தவன், இறங்கியதும் தான் தாங்கள் பல அடி தூர உயரமான மலை கிராமத்தில்...
    அத்தியாயம் 18 பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும். இளவஞ்சியின் வலது முன்னங்கையை தனது இரு கரங்களினாலும் இறுக்கமாய் பற்றி அவளின் தோளில் தலையைச் சாய்த்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன். கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்திருந்தவளின் மூளை பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது. அன்று ஆத்மநல்லூருக்கு தேனிலவு செல்லும் எண்ணம் உருவானதும், அதனை செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்கினாள் இளவஞ்சி. அன்றிரவே அவனிடம், "ஏங்க...
    மறுநாள் காலை கணவனின் செய்கையை எண்ணி சிவந்த கன்னங்களும் மின்னிய கண்களுமாய் கிளம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பின்னோடு அணைத்த சக்தி, "கண்டிப்பா காலேஜூக்கு போகனுமா?" எனக் கேட்டவாறு அவளின் பின்னங்கழுத்தில் இதழால் வருடினான். அவனின் செயலில் ஹ்ம்ம்ம் என்றவளின் குரல் ஹஸ்கியாய் வெளி வர, அவனை நோக்கி திரும்பியவள் அவன் மார்பில் கை வைத்து தள்ளி...
    அத்தியாயம் 17 கத்தியை எடுத்த பள்ளி மாணவன் தன்னுடன் சண்டையிட்டிருந்த மாணவனைக் குத்துவதற்காக நீட்ட, இடைபுகுந்த சக்தியின் வயிற்றுப் பக்கமிருந்த சட்டைத்துணியை லேசாய் உரசிக் கிழித்திருந்தது அந்தக் கத்தி. அந்த மாணவனின் கையைப் பிடித்து பின்னோக்கித் திருகி கத்தியை கீழே போட வைத்த சக்தி, அவனின் கையை பின்னாலே முறுக்கிப் பிடித்து தோளில் ஒரு கராத்தே அடியும்...
    அத்தியாயம் 16 மறுநாள் காலை இளவஞ்சி தனது அத்தை மகேஸ்வரியுடன் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வந்த மங்கை, "சாரிடா நேத்தே வந்து பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா வர முடியலை. கல்யாணம்லாம் எப்படி நடந்துச்சு?" எனக் கேட்டாள். தங்கைக்கான அன்பும் மகிழ்வும் கூடவே உடன் இருக்க முடியாமல் போன குற்றவுணர்வும் என கலவையான உணர்வுகளுடன் தங்கையை...
    அத்தியாயம் 15 அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி. இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது. இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு நிலையிலேயே அடுத்தடுத்த சடங்குகள் நடந்திருந்தன. இப்பொழுது எண்ணிப் பார்க்கையில் அனைத்தும் துரிதகதியில் நடந்து முடிந்ததற்கு அவளுக்கு வந்த கனவுகளே காரணமாய் இருந்திருக்கிறது...
    அத்தியாயம் 14 இன்று தான் முதல் முறையாக சக்தீஸ்வரனின் அறையில் இருக்கும் அந்தக் கண்ணாடி ஜன்னலைக் காண்கிறாள். அதனைப் பார்வையிட்டவளுக்கு எப்படி அன்று சக்தி தான் நிற்பதை அறிந்து பாடலின் ஓசையை அதிகரித்தான் எனப் புரிந்தது.  அந்த ஜன்னலின் கண்ணாடியில் அறையிலிருந்து பார்த்தால் மறுபக்கமுள்ளவர்கள் தெரிவார்கள் ஆனால் வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் அவர்களின் முகம் தான் தெரியும். வீட்டினுள்ளே இருப்பவர்கள்...
    அத்தியாயம் 13 சக்தீஸ்வரனின் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி. மதிய வேளை என்பதால் வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வசிக்கும் வீடு அது. தந்தையின் நினைவுகளைச் சுமந்திருக்கும் வீடு இன்று தன்னை அந்நியமாக நிறுத்தி வைத்திருப்பதை எண்ணிக் கலங்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் இளவஞ்சி. "எந்த மாதிரியான வாழ்க்கையை...
    அத்தியாயம் 12 "இந்தா இந்தப் புடவையை சீக்கிரமா கட்டிட்டு வா! வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்காம நில்லு" என்று பட்டுப் புடவையை அவளின் கையினில் திணிக்க, அதிர்ச்சியும் கோபமுமாய் கண்களில் நீருடன் தாயைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி. "என்ன பார்க்கிற? சீக்கிரம் மாத்திட்டு வா! இன்னிக்கு பூ வைக்கிற மாதிரி ஒப்பு தாம்பூலம் தான் மாத்துறாங்க. நிச்சயதார்த்தம்...
    "மாத்த கூடிய இல்ல அட்ஜஸ் செஞ்சிக்க கூடிய விஷயமா இருந்தா ஓகே ஜானு! ஆனா ஆளே தவறானவரா இருந்தா பிடிச்சவராவே இருந்தாலும் அந்தக் கல்யாண வாழ்க்கை நரகம் தானே ஜானு. அதுக்கு கல்யாணமே செஞ்சிக்காம இருந்துக்கலாமே! சந்தோஷமா வாழுறதுக்குத் தானே வாழ்க்கை ஜானு" என்றவளைத் தழுவிக் கொண்டாள் ஜானகி. "எல்லாம் வல்ல ஈசன் உனக்கு எல்லாமே...
    error: Content is protected !!