Advertisement

ஸ்மிரிதியின் மனு – 49_2
“மாறன்….ஆன்ட்டிகிட்ட உங்களைப் பற்றி நான் பேச போகறதில்லே..மனுவும் பேச மாட்டான்..உன் விஷயத்தை நீயும், அவளும் தான் பார்த்துக்கணும்….இனிமேதான் உங்க இரண்டு பேரோட மன உறுதி, மனோபலம், அன்போட ஆழம் எல்லாம் தெளிவாகும்.. இந்த விஷயத்திலே நாங்க யாரும் தலையிடக்கூடாது, தலையிட மாட்டோம்..வீட்டுக்கு வா..அங்கிள், ஆன்ட்டிகிட்ட நீயே உன் வாயாலே சொல்லு.” என்றாள் கண்டிப்புடன் ஸ்மிரிதி.
“அதானாலதான் அவ உன்கிட்ட சொன்னதை நீ என்கிட்ட சொல்லலேயா?” என்று மாறன் கேட்க அதேபோல் மெஹக்கும்,”அதான் அவன் ஃபோன் நம்பரை நீ என்னோட ஷேர் செய்யலையா?” என்று கேட்க,
“அப்ப நீங்க இரண்டு பேரும் இருந்த மன நிலைலே நான் ஃபோன் நம்பர் கொடுத்திருந்தா இப்படி பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி செய்திருக்க மாட்டீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அதெல்லாம் இல்லை..உன்னை நம்பி இவ்வளவு நாள் வேஸ்டாயிடுச்சு.” என்று சிறிது ஏமாற்றத்துடன் பேசினாள் மெஹக்.
“மை டியர்ஸ்..உங்க இரண்டுபேருக்கும் நான் தான் இந்த வாய்ப்பு அமைச்சு கொடுத்திருக்கேன்…அந்த ப்ரொடியூஸரை நான் வழிக்கு கொண்டு வந்ததுனாலதான் மெஹக் மறுபடியும் கோயமுத்தூருக்கு வந்திருக்கா..அன்னைக்கு அவன்கிட்ட நஷ்ட ஈடு மட்டும் கேட்டிருந்தா அவன் நாம கேட்டதுக்கு மேலே நமக்குத் தூக்கி கொடுத்திட்டு வேற ஆளை வைச்சு படத்தை முடிச்சிருப்பான்..பணம் மட்டும் போதாது பொதுமன்னிப்பும் கேட்கணும்னு சொன்னவுடனே பின் வாங்கிட்டான்..பணம் போயிடுச்சுன்னா புரட்டிக்கலாம்… கைமாத்து வாங்கலாம்..மதிப்பு, மரியாதையெல்லாம்  கடைலே கிடைக்காது, கடனாவும் கிடைக்காதுன்னு அந்தப் புத்திசாலி புரிஞ்சுகிட்டான்.” என்றாள் ஸ்மிரிதி.
அவள் விளக்கத்தைக் கேட்ட மாறன்,”ஸ்மிரிதி..வாவ்..ராஜதந்திரம்…ஸ்டேட்கிராஃப்ட்” என்றான்.
“நோ.ஸ்மிரிதிகிராஃப்ட்.” என்று சொல்லி சிரித்த ஸ்மிரிதி மெஹக்கைப் பார்த்து,
“அன்னைக்கு நான் மாறனோட ஃபோன் நம்பரைக் கொடுத்திருந்தா நீயும், அவனும்  என்ன செய்திருப்பீங்கன்னு நான் சொல்லவா? அது கரெக்ட்டா இருந்திச்சுன்னா நீ எப்படி ப்ர்போஸ் பண்ணினேன்னு எனக்கு சொல்லணும்.” என்றாள்.
“ஹாங்..அது பிரைவெட்..சொல்ல மாட்டேன்.” என்றாள் மெஹக்.
“நான் சொல்றேன்..அவளுக்கு நான் எப்படி ப்ர்போஸ் செய்தேண்ணு..ஆனா நீ தப்பா சொன்னா மனுவும், நீயும் எப்படி பர்போஸ் செய்தீங்கண்ணு எங்களுக்கு சொல்லணும்.” என்று மாறன் கவுண்டர் கண்டிஷன் போட்டான்.
“அது ஈஸி..மனு எங்க ப்ரோபோஸ் செய்தான்? நான் தான் அவனுக்குப் ப்ர்போஸ் செய்தேன்..எப்படின்னு உன்கிட்ட தோற்ற பிறகு சொல்றேன்.” என்றவள்,
“மெஹக் கேட்டவுடனேயே உன் ஃபோன் நம்பரை நான் அவளுக்குக் கொடுத்திருந்தா அவ உன்கிட்ட பேசி நம்ம வீட்டு அட் ரெஸை வாங்கியிருப்பா..” என்று வாக்கியத்தை முடிக்குமுன்,
“அட் ரெஸ் வாங்கிட்டு என்னைப் பார்க்க உடனே கிளம்பி வந்திருப்பா.” என்று மாறன் அவள் வாக்கியத்தை முடித்தான்.  ஆனால் மெஹக்கிடம் அவன் பேச்சிற்கு ஆதரவில்லை.
மெஹக்கின் மௌனத்தைப்  பார்த்து,“என்ன? உடனே என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டியா?” என்று மாறன் கேட்க,
“டேய்..அவளை ஏன் டா கேட்கறா,,என்னைக் கேளுடா…நீங்க இரண்டு பேரும் என்ன செய்திருப்பீங்கன்னு நான் சொல்றேன்..அவ வந்திருக்க மாட்டா..
அவ ஹேர் ஸ்டைலிஸ்டை அனுப்பி உனக்கு முடிவெட்ட ஏற்பாடு செய்திருப்பா.. நீ அந்த ஸ்டைலிட்கிட்டயே மொத்தமா தலையை மொட்டையடிச்சுகிட்டு மெஹக் முன்னாலே போய் நின்னுயிருப்ப.” என்று சரியாக கணித்து, அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருந்த ஸ்மிரிதியை மாறன், மெஹக் இருவரும் முறைத்து கொண்டிருக்க, மனைவி சொன்னதைக் கேட்டு அவளோடு சேர்ந்து சிரித்து கொண்டிருந்தான் மனு.
“மனு உன் பொண்டாட்டியை நீ அடக்க மாட்டியா? ஒவரா பேசறா.” என்றான் தோல்வியை தழுவியிருந்த  மாறன்.
“எல்லாம் குடும்ப விஷயம் தான் டா..அவளைத் தடுக்க முடியாது.” என்று சிரித்து கொண்டே பதில் சொன்னான் மனு.
“சொல்லுடா..எப்படி ப்ரபோஸ் பண்ணினே.” என்று தோற்றவனைக் கேட்டாள் ஸ்மிரிதி.
அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான் மாறன். 
“டேய் நிஜமாவே எனக்கு ஆர்வமா இருக்கு..அதிரடி அக்‌ஷனா?” என்று ஸ்மிரிதி கிளற,  உடனே,
“ஸ்மிரிதி ஸ்டாப்..அவங்க இரண்டு பேரும் அடல்ட்ஸ்..டோண்ட் டூ திஸ்.” என்று கணவனாக மனைவியை அதட்டி, அண்ணனாகத் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டினான்.
“ஹாங்..அடல்டா இருந்தா சின்ன பையனாட்டாம் என்கிட்ட அவன் பெட் கட்டியிருக்ககூடாது….நான் தோற்று போயிருந்தா உனக்கு எப்படி ப்ரோபோஸ் பண்ணினேன் சொல்லியிருக்கணும்..நான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்..நீ இதுலே தலையிடாத..நீ சொல்லு டா.” என்று மனு, மாறன் இருவரையும் அதட்டினாள் ஸ்மிரிதி.
மாறனோ தயக்கத்துடன் மெஹக்கைப் பார்க்க அவளோ ஸ்மிரிதியைப் பார்த்தபடி,
“நான் முற்றுபுள்ளின்னு நினைக்கற இடம், என்னோட தர்டியத் பர்த் டேலேர்ந்து எங்க வாழக்கையை ஆரம்பிக்க விரும்பறான்.” என்று மாறனின் சார்பாகப் பதில் சொன்னவளின் குரலில் லேசாக ஈரம் எட்டி பார்த்தது.
மாறனிடம் மெஹக்கைப் பற்றி அவள் பகிர்ந்து கொண்டதை அவன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று தெளிவடைந்த ஸ்மிரிதி,”டேய் உனக்கும், எனக்கும்கூட அப்பதான் டா முப்பது வயசாகும்..நாம மூணு பேரும் சேர்ந்து ஏதாவது பிளான் செய்யலா மா?” என்று அந்தக் கணமான சூழ் நிலையை இலகுவாக்க முயன்றாள். அதைப் புரிந்து கொண்ட மாறனும்,
“அதை எங்கண்ணன்கிட்ட சொல்லு….என் பிளான் ஜஸ்ட் ஃபார் டூ..மை வைஃப் அண்ட் மைஸெல்ஃப்.” என்று மெஹக்கின் தோளை அணைத்தபடி பதில் சொன்னான்.
“துரோகி.” என்று அவனுக்குப் பெயர் சூட்டினாள் ஸ்மிரிதி.
“தாங்க்ஸ்.” என்றான் மாறன்.
“நீ கவலைப்படாத..உனக்காக நான் ஸ்பெஷல் பிளான் வைச்சிருக்கேன்.” என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான் மனு.
“நிஜமாவா..என்ன பிளான்? சொல்லு..சொல்லு.” என்று ஆர்வத்துடன் ஸ்மிரிதி கேட்க, அவளை இடைமறித்து,
“உங்க பிளானை அப்பறம் டிஸ்கஸ் பண்ணிக்கோங்க..மனு உன்கிட்ட இப்பவே எனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.” என்றான் மாறன்.
“என்ன டா?” என்று ஸீரியஸானான் மனு.
“இந்த வீட்லே இந்த ரூமை நான் விலைக்கு வாங்க விருப்பப்படறேன்..நீ வக்கீல்தானே அதுக்கு ஏதாவது ப்ரொவிஷன் இருக்கான்னு கண்டுபிடி…என் கல்யாணம் வரை உனக்கு டயம்..அதுக்கு அப்பறம் எனக்கு சொந்தமாகுதோ இல்லையோ இந்த அறையை காலி செய்து எனக்குக் கொடுத்திடணும்..என் பொண்டாட்டிக்கு இந்த ரூம் ரொம்ப பிடிச்சிடுச்சு..இதுதான் எங்க பெட் ரூம்.” என்று மாறன் பேசி முடித்தவுடன் அதைக் கேட்டு உரக்க சிரிக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி. 
தம்பி சொன்னதைக் கேட்டு அவனை அதட்டக்கூடாது என்று நினைத்த அண்ணன்காரனே,”வைடா ஃபோனை.” என்று அதட்டி அழைப்பைத் துண்டிக்க முனைந்தபோது மனுவின் கையிலிருந்து ஃபோனைப் பறித்த ஸ்மிரிதி சில நொடிகள் வீடியோவை வெறித்து பார்த்தபடி,”மெஹக்….முன்னாடி, பின்னாடி மாற்றி டாப் போட்டுகிட்டு இருக்க…புது ஸ்டைலா?” என்று சிரிக்காமல் ஸீரியஸாக சந்தேகம் எழுப்ப, அந்த க்ஷணத்தில், அவசரத்தில் அவள் அணிந்த மேலாடையை குனிந்துப் பார்த்து அந்தச் சந்தேகத்திற்கு மறைமுகமாக மெஹக் அங்கீகாரம் அளிக்க, அதைக் கண்டுகொண்ட அண்ணனோ  திடுக்கிட்டு தம்பியைப் நோக்க, தம்பியோ அவன் அதிர்வை மறைத்து அசால்ட்டாக அண்ணன் பார்வையை எதிர்நோக்க, அந்தச் சங்கடமான சந்தேகத்தை எழுப்பியவளோ,
“டியர் அடல்ஸ்..ஸ்ட் ரிக்ட்லி நோ அடல்ஸ் ஒன்லி…ஓகே.” என்று எதிர்பாராத எச்சரிக்கை விடுக்க, அதற்கு பதில் சொல்ல தெரியாமல் அடல்ஸ் இருவரும் சங்கோஜப்பட, அதைக் கேட்ட அண்ணனோ,”மாறன்..பை” என்று தம்பியை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க, அத்தனைக்கும் காரணமானவளோ அடங்கா சிரிப்பலையில் அமிழ்ந்து கொண்டிருக்க, அதில் எரிச்சலடைந்தவனோ,
“எதுக்கு இவ்வளவு சிரிப்பு?” என்று கடுப்பாக கேட்டான்.
“கடைசிலே அவங்க இரண்டு பேர் முகத்தையும் ஃபோட்டோ பிடிச்சு வைச்சிருக்கணும் மனு பேபி..மிஸ் பண்ணிட்டேன்..அண்டர்ஏஜ்ட் அடல்ஸ்.” என்று அவர்கள் மன நிலையை விவரித்த ஸ்மிரிதி மறுபடியும் சிரிக்க ஆரம்பித்த அடுத்த நொடி அவளை இறுக அணைத்து,
“நான் அவளைப் பற்றி சொன்னேனில்லே..பக்கத்திலே இருக்கற மாதிரி பேசுவான்னு..பேச்சு மட்டும் போதாதன்னு நீயே வீடியோ கால் போட்டு அவளுக்கு வசதி பண்ணி கொடுத்த..அவளும் கவனமா கவனிச்சிருக்கா….நான் எப்பவும் என் டிரெஸ்லே ரொம்ப கவனமா இருப்பேன்..இன்னைக்கு எல்லாம் உன்னாலேதான்.” என்று மாறன் அருகில் அமர்ந்து கத்தி கொண்டிருந்தாள் மெஹக்.
அவளை இழுத்து அவனருகில் படுக்க வைத்து,”வீடியோ கால் நம்ம விஷயத்தை தெளிவாத் தெரியப்படுத்திடிச்சு..வார்த்தைகள் தேவையில்லாம போயிடுச்சு..மனுவுக்கும். ஸ்மிரிதிக்கு நம்ம உறவைப் புரிய வைக்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைசிருக்காது…
உனக்காகதான் ஃபோனை ஒரே ஆங்கில்லே பிடிச்சுகிட்டிருந்தேன்..பாட்டம் போர்ஷன்லே நான் கவனமா இருந்ததாலே டாப் போர்ஷனைக்  கோட்டை விட்டுடேன்..” என்றவனை இடைமறித்து,
“நான் என்ன நீ படிச்சுகிட்டு இருக்கற புஸ்தகமா? இல்லை எழுத போற பரீட்சையா? போர்ஷன்னு என்னை வர்ணிக்கற? ஒமிட் செய்திட்டேன்னு ஈஸியா சொல்ற” என்று டென்ஷனானாள் மெஹக்.
“ஸ்மார்ட் மெஹக்..உன்னைப் புத்தகமா படிச்சு பரீட்சை எழுத கமிட் ஆன பிறகு எந்த போர்ஷனையும் ஒமிட் செய்ய மாட்டேன்.” என்று இனிமையாக, இனிப்பாக உறுதி அளித்தான் மாறன்.
“ஹாங்..ஸ்வீட்டா பேசினா இது சரியாகிடுமா?..நீதானே டாப் மட்டும் போட்டுகிட்டா போதும்னு சொன்னே..உன்னாலேதான்.” என்று விடாப்பிடியாக சண்டைப் பிடித்துக் கொண்டிருந்தாள் மெஹக்.
அவளை ஏமாற்றாமல்,
“நீதான் அதை சரியா போட்டுக்கலே.” என்று அதை செல்ல சண்டையாக மாற்ற ஆரம்பித்தான் மாறன்.
“நீதானே அதை சரியா பார்க்கலே..உன்னாலேதான் எனக்கு ஸ்மிரிதி முன்னாடி எம்பரெஸ்மெண்ட்.” என்று சின்ன குழந்தைப் போல் சத்தம் போட்டு கொண்டிருந்த மெஹக்கை அருகே இழுத்து, இறுக அணைத்து,
சிரித்து கொண்டிருந்தவளையும், சத்தம் போட்டு கொண்டிருந்தவளையும் சகோதரர்கள் இருவரும் ஒரே ஸ்டைலில் சரசமும், சமாதானமும் செய்தனர்.
சில நொடிகள் கழித்து, மூச்சு முட்டிய ஸ்மிரிதி,”மனு..மூவ்.” என்று அவனைத் தள்ளி விட்டு,”நான் சிரிக்கக்கூடாதா?” என்று கேட்டாள்.
“இன்னைக்கு நீ ரொம்ப ஜாஸ்தியா பேசின, சிரிச்ச..மாறன் எப்படி ப்ர்போஸ் செய்தா உனக்கு என்ன? நீதான் முதல்லே ப்ர்போஸ் செய்தேண்ணு அவன்கிட்ட  சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அந்த வார்னிங் ரொம்ப தேவையா? நீயும் அண்டர்ஏஜ்ட் அடல்ட்தான்.. அவங்க இரண்டு பேர் பிளான்லே வெட்கமில்லாம உன்னை சேர்த்துக்க சொல்ற.” என்று கோபித்து கொண்டவனைப் பார்த்து,
“சரி..அப்ப இப்பவே சொல்லு..என்னோட முப்பதாவது பர்த் டேக்கு நம்ம இரண்டு பேருக்கும் என்ன ஸ்பெஷலா பிளான் பண்ணியிருக்க?
அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளருகே முகத்தை கொண்டு வந்தவனிடம்,”பிளான் சொல்றத்துக்குப் இவ்வளவு பக்கத்திலே வர வேணாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“உன் பக்கத்திலே வந்தாதான் பிளான் ஸக்ஸஸாகும்..அடல்ஸ் பேபி பிளான்.” என்று ஆக்ஸிமோரான் (oxymoron) வார்த்தையில் வாரிசை உருவாக்கும் வேலையை விளக்கியவன் உடனே அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.
ஆனால் வாரிசைப் பற்றி திட்டமிட்ட வக்கீல் அறிந்திருக்கவில்லை விதியால் அவர்களின் மூத்த வாரிசாகப் போகும் விதிஷா, அவர்கள் வீட்டு வாரிசான ரணதீரன் இருவரோடு சேர்ந்து ஸ்மிரிதியின்  முப்பதாவது பிறந்த நாளை நால்வராக அவர்கள் இருவரும் கொண்டாடப் போகிறார்களென்று.
“மாறன்..கிவ் மீ மோர்” என்று அவளை விட்டு விலகிய மாறனை அருகே இழுத்தாள் மெஹக். 
“நோ மோர்.” என்று அவள் அருகேப் படுத்து கொண்டவனை,”நீ மாறனில்லே..மோரான் (moron).” என்று திட்டினாள் மெஹக்.
”எங்கம்மா கேட்டா அவ்வளவு தான்..அவங்க ஆசையா வைச்ச பெயரை இப்படி அசிங்கப்படுத்திட்ட.” என்றவனைக் கோபமாக உறுத்துப் பார்த்து கொண்டிருந்தவளிடம்,
“ஐ வாண்ட் டு நோ (know) மோர்..ஆயுசுக்கும் யார்கிட்ட கடன்பட்டிருக்க? கார்மேகம் அங்கிள் எப்ப உன் அப்பாவானாரு?” என்று கேள்விகள் கேட்டு அவளை முழுவதுமாக அறிந்து கொள்ள தயாரானவனிடம்,
அவளுக்காகப் பணத்தை மழையாகப் பொழிந்து அவளைக் காக்கும் வளையமாக, பாதுகாக்கும் குடையாக மாறிய கார்மேகத்தின் செய்கையை மெஹக் பகிர்ந்து கொண்ட போது அதுவரை அவன் மனதிலிருந்த கார்மேகம் என்ற பிம்பம் மறைந்து அபயக்கரம் நீட்டும் கார்மேக கண்ணனாக மாறன் மனதில் அவர் பதிந்து போனார். 
ஆனால் மாறன் அறிந்திருவில்லை மெஹக்கைக் காப்பாறிய அந்தக் கார்மேக கண்ணனின் செல்வன், மனிஷ் கார்மேத்திற்கு அவன் அபயக்கரம் நீட்டி அடைக்கலம் அளிக்கப் போகிறானென்று.

Advertisement