Advertisement

ஸ்மிரிதியின் மனு – 44_1
மாறன் பொறுக்கியா? என்று அதிர்ந்த ஸ்மிரிதி,”என்ன ஆச்சு?”
“கண்டபடி பேசறான்.”
“என்ன பேசினான்.”
“கபீரோட, தல்ஜித்தோட டான்ஸ் ஆடினதைப் பற்றி அசிங்கமா பேசறான்.” என்றாள்.
“ஏன்?”
“அவனோட ஆடமாட்டேன்னு சொல்லிட்டு அவங்களோட ஆடினேன் அதனாலே.”
“எப்ப நடந்திச்சு இதெல்லாம்?” என்று கேட்ட ஸ்மிரிதிக்கு நிஜமாகவே தெரியவில்லை அவள் ரிசெப்ஷனில் நடந்த சம்பவம்.
“உன் ரிசெப்ஷன்லேதான்..அவன் எல்லாரோடையும் ஆடி முடிச்சிட்டு என்கிட்ட வந்து நீ இருக்கறதை மறந்துட்டேன் இப்பதான் நியாபகம் வந்திச்சு..வா டான்ஸ் ஆடலாம்னு கூப்பிட்டான்..என்னை மறந்து போனவனோட நான் ஏன் ஆடணும்? அதான் அவனை மறுத்திட்டு தல்ஜித்தோடேயும், கபீரோடேயும் ஆடினேன்.”
“அந்த விஷயத்தை எதுக்கு இப்ப எடுத்தான்?”
“அந்தப் ப்ரொடியுஸர் மிரட்டினவுடனே நான் வாங்கின அட்வான்ஸைத் திரும்பி கொடுக்க சொன்னான்..பணத்தை திருப்பி கொடுக்கற நிலைமைலேயா நான் இருக்கேன்? அதனாலே கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்..அதுக்கு நான் பணத்துக்காக தல்ஜித்தோட, கபீரோட டான்ஸ் ஆடினேன்னு சொல்றான்.”
மெஹக்கின் விளக்கத்தைக் கேட்டு ஆசுவாசமடைந்த ஸ்மிரிதி அவசரமாக செயல்பட எதுவுமில்லை மாறனை நிதானமாக விசாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவள்,“விடு மெஹக்..அவனும் குழப்பத்திலே இருக்கான் அதனாலே யோசிக்காம கோபத்திலே பேசியிருப்பான்.” என்றாள்.
மாறன் குழுப்பதிலிருக்கிறான் என்ற செய்தியில் சலனமடைந்த மெஹக்,”அவனுக்கு என்ன குழப்பம்?”
“அவனுக்கு ஏதோ பிரச்சனை..இங்கே செய்துகிட்டிருந்த வேலையை விட்டிட்டான்..இப்பெல்லாம் கோயமுத்தூர்லே தான் இருக்கான்.. அங்கே வீட்டுலே நடக்கற வேலையை மேற்பார்வை செய்யறான்..ஆன் ட்டியும், அங்கிளும் அங்கே ஷிஃப்டாகப் போறாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“இன்னைக்கு அவனை எப்படி ஹோட்டல் உள்ள விட்டாங்கன்னு தெரியலே..கலைஞ்ச தலை, கசங்கின டீ ஷர்ட், அன்ஷேவன்….மேற்பார்வை செய்யறவன் மாதிரி இல்லை..வேலை செய்யறவன் மாதிரி இருந்தான்…. என்ன பிரச்சனை அவனுக்கு? ஏன் இங்கே தனியா இருக்கான்? ஹெல்த் பிராப்ளமா?” என்று ஸ்மிரிதியை சரமாரியாக கேள்வி கேட்டாள் மெஹக்.
இவ என்னடா இப்படி கேள்வி கேட்கறா என்று எண்ணிய ஸ்மிரிதி,”அவனை யாரும் தனியா விடலே..எல்லாம் அவன் விருப்பம் போல தான் நடக்குது..அவன் அந்த மாதிரி புறப்பட்டு வந்ததுக்கு காரணம் நீதான்..உனக்குத் தேவைன்னுதான் அவனை அர்ஜெண்ட்டா கிளம்ப சொன்னேன்.” என்று பேசிக் கொண்டிருந்த ஸ்மிரிதியை இடைமறித்து,
“அவன் விருப்பம் என்ன? என்ற மிக முக்கியமான கேள்வியை அவர்கள் யாரும் இதுவரை மாறனிடம் கேட்காத கேள்வியைக் கேட்டாள் மெஹக்.
“எனக்குத் தெரியாது..அவனுக்கேத் தெரியுமான்னு தெரியலே..அதைதான் தனிமைலே உட்கார்ந்து கண்டு பிடிச்சுகிட்டு இருக்கான்னு நினைக்கறேன்….இருபத்தி ஐந்து வயசுவரை முட்டாளா இருந்திட்டு..இப்பதான் அவனுக்கு அறிவு வந்திருக்கு.” என்று மாறனை மட்டம் தட்டினாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி, எல்லாரையும் உன்னைப் போலே நினைக்காதே..என்னைப் போலே அவனுக்கும் இப்பவாவது அறிவு வந்திச்சேன்னு நான் சந்தோஷப்படறேன்.” என்று மாறனிற்கு ஸப்போர்ட் செய்து வார்த்தையை விட்டாள் மெஹக்.
இவளைப் போல அவனா அதனால் இவளுக்கு சந்தோஷமா என்று யோசனையான ஸ்மிரிதி,”நான் சந்தோஷப்பட்டா அர்த்தமிருக்கு..அவன் எனக்கு தேவர்….நீ எதுக்கு மா சந்தோஷப்படற?” என்று கிண்டலாக விஷயத்தைக் கிண்டினாள்.
அதற்கு மெஹக்கிடமிருந்து பல நொடிகளுக்குப் பதிலில்லை. மௌனமாக அவள் மனது வாசித்து கொண்டிருந்த தாளத்தை தப்பாமல்  படித்து கொண்டிருந்தவளுக்காகப் பொறுமையாகக் காத்திருந்தவளிடம்,”எனக்கு அவன் மேலே அக்கறை இருக்கு.” என்றாள்.
அதைக் கேட்டு ஸ்மிரிதியினுள் ஆலார்ம், அலர்ட் எல்லாம் ஒருசேர பேரொலி எழுப்பின.  அந்த ஓசையின் பின்னனியில் இருந்த செய்தியில் ஸ்தம்பித்து போய்,“பொறுக்கி மேலேயா?” என்று அழுத்திக் கேட்டாள் ஸ்மிரிதி.
“ஆமாம்.” என்று ஒப்புக்கொண்டாள் மெஹக்.
மெஹக்கின் ஒப்புதலை அவள் மனதில் பிராஸஸ் செய்த ஸ்மிரிதி,”அன்பு இருந்தாதான் அக்கறை வரும் மெஹக்.” என்று மெஹக்கின் மேலிருந்த அக்கறையில் அவள் மனதை அவளுக்கே எடுத்துரைத்தாள்.
அதைக் கேட்டு அவள் மனதிலிருந்த அக்கறையை ஆராய்வது மெஹக்கின் முறையானது. “இந்த மாதிரி யாரைப் பற்றியும் இதுவரை தோணலே..அவன் என்னைப் பற்றி தப்பா நினைக்கறது என்னை காயப்படுத்துது.” என்று அவள் மனதில் இருந்ததை வெளியிட்டாள்.
மெஹக்கின் மனவோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட ஸ்மிரிதியின் மனம் பாரமாகிப் போனது. சினேகிதியின் குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்பட்டிருந்த ஏமாற்றம், ஏக்கம் அவளை குழப்புகிறதோ என்று நினைத்த ஸ்மிரிதி,”மெஹக்..அவன் உன்னைப் பற்றி தப்பா நினைக்கறத்துக்குக் காரணம் இருக்கு..நீ வேற..அவன் வேற..உன்னோட எதிர்பார்ப்பு எதுலேயும் அவன் பொருந்த மாட்டான்..தோற்றத்திலே..குணத்திலே..பணத்திலே.” என்று அவள் ஆசை நிராசையாகதான் போகும் என்று புரிய வைக்க முயன்றாள் ஸ்மிரிதி.
“புரியுது ஸ்மிரிதி….அவன் பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கலே ஆனாலும் அவன் பின்னாடி தான் மனசு சுத்துது..என்ன செய்ய?” என்றாள் அவள் பின்னே பல பேரை சுற்ற வைத்த, வைத்து கொண்டிருக்கும் மெஹக்.
மெஹக்கின் தெளிவான பதிலில் தெளிவடைந்த ஸ்மிரிதியும்,“உனக்கு அவன் தான், அவனுக்கு நீ தான்னா…உனக்கு தோணறது போலே அவனுக்கும் தோணனும்….அவன் மனசும் உன் பின்னாடி சுத்தணும்…அந்த மாதிரி அன்பு மட்டும்தான் அஸ்திவாரமாக முடியும்..ஆயுசுக்கும் இருக்கும்.” என்று சொன்ன ஸ்மிரிதியும் அதைக் கேட்டு கொண்டிருந்த மெஹக்கும் அறிந்திருக்கவில்லை மெஹக்கை பிடித்திருந்ததால்தான் அவளை இழிவாக பேசியதை, நடத்தியதை பொறுத்து கொள்ளமுடியாமல் மாறன் பொங்கினானென்று.
“அவனுக்கு என்னைப் போல தோணுமா?” என்று சந்தேகமாக மெஹக் கேட்டவுடன்,
“அவனுக்கு என்ன தோணுது, என்ன நினைக்கறான்னு எனக்குத் தெரியலே…அவன் இப்ப யாரும் வேணாம்னு தூர இருக்கான்..இந்த மன நிலைலே அவன் உன்னை பற்றி என்ன நினைக்கறான்னு எப்படி கண்டுபிடிக்க முடியும்”” என்றாள் ஸ்மிரிதி இயலாமையுடன்.
அவள் பதிலில் கலவரமடையாமல்,”சரி..நான் பார்த்துக்கறேன்.அவன் நம்பரை என்னோட ஷேர் செய்.” என்றாள் ஒரு முடிவுக்கு வந்திருந்த மெஹக்.
“அடிப்பாவி இப்பதான் அஞ்சு நிமிஷம் முன்னாடி என்கிட்ட அழுத்துகிட்டு இருந்தே.. இப்ப என்னையே வேணாம்னு துரத்தறே.”
“உன்னைத் தூரத்தலே…அவன் ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ்..அதான் நானே அவனைத் தூரத்திப் பிடிச்சுக்கறேன்னு சொல்றேன்..நீ நகர்ந்து நில்லு.”
மாறனின் குணத்தை ஒரளவு கரெக்ட்டாக எடைப் போட்டிருந்ததைக்  கேட்டு,“மெஹக்,  அவன் F அண்ட் F ந்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்டாள் மாறனின் கடுங்கோபத்தை நேரடியாக கண்டவள்.
“இன்னைக்கு அவன் வேகம், கோபம் இரண்டு தான்..வந்தான், பேசினான், கத்தினான், கிளம்பி போயிட்டான்…இவன் ஸாரியெல்லாம் கேட்கற ஆளில்லை..அவனுக்கு சரின்னு தோணும்போது அவனே திரும்ப வந்து என்கிட்ட பேசுவான் அதுதான் அவனோட ஸாரி..அதுவரைக்கும் எனக்குப் பொறுமை இல்லை..அதுக்குள்ள ஏதாவது செய்யணும்.”
“மெஹக், நீயும், அவனும் என் வாழ்க்கைலே எப்பவும் இருக்க போறீங்க..இது ஏதாவது தப்பாயிடுச்சுன்னா நான் யார் மேலேயும் தப்பு சொல்லமுடியாது.”
“நானும் யாரையும் காரணமாக்க மாட்டேன், தப்பும் சொல்ல மாட்டேன்..நீ கவலைப்படாதே.” என்றாள் சொந்த குடும்பத்தின் நன்றிகெட்ட செயல்களைக் கடந்து வந்திருந்த மெஹக். 
வாழ்க்கையின் யதார்த்தை ஏற்று கொள்ளும் அவளின் மன நிலையை ஏற்று கொள்ள முடியாமல் திண்டாடிய ஸ்மிரிதி, “தள்ளி இரு” என்ற மெஹக்கின் எச்சரிக்கையை தகர்த்து எறிய முடிவு செய்தாள். ஸ்மிரிதி மௌனத்தைக் கலைத்து,”இனி இங்கே வேலை இல்லை..என் ஸ்டைலிஸ்டை வர வேணாம்னு சொல்லிடறேன்.. நானும் நாளைக்கு கிளம்பறேன்.” என்று அவள் திட்டத்தை மெஹக் வெளியிட,
“அவசரப்படாதே…இவனுங்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அவமானப்பட மாட்டாங்க..நாளைக்கு எல்லாம் வேலையும் எப்பவும் போலே நடக்கும்..அவங்களோட இரண்டு படத்திலேயும் நீதான் நடிப்பே..உன்னை மரியாதையா நடத்தி அவங்க மரியாதையைக் காப்பாத்திபாங்க.” என்று அந்த ஆட்களைச் சரியாக கணித்திருந்தாள் ஸ்மிரிதி.
“ஒகே..அப்ப நான் தூங்க போறேன்..நாளைலேர்ந்து பிஸி.” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள் மெஹக்.
அவள் ஃபோனை யோசனையுடன் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதி மாறனின் மனதை அறியும் வேலையில் உடனே இறங்கினாள்.
.
மாறன் வீடு போய் சேருவதற்குள் ஸ்மிரிதி அவனுக்குத் தொடர்ந்து ஃபோன் செய்ய, அவனோ வீடு சேர்ந்த பின் அழைப்பது அவள்தான் என்று தெரிந்தவுடன் நிதானமாக அவன் வேலைகளை முடித்து கொண்டு கடைசியாக அவளுக்குப் ஃபோன் செய்தான்.
“அங்கே போய் என்ன டா செய்த? உன்னை சும்மா துணைக்குதானே அனுப்பிச்சேன்.” என்று எடுத்தவுடனையே எகிறினாள் ஸ்மிரிதி.
“அப்ப ஒரு நாயை அனுப்பியிருக்கணும்..என்னை மாதிரி ஆளை அனுப்பியிருக்ககூடாது.” என்றான் மாறன்.
“வித்தியாசமில்லை டா..நீயும் நாயைப் போலதான் மெஹக்கைக் கடிச்சு, குதறியிருக்க…”
“அவளுக்காகப் பேசி நாந்தானே அவமானப்பட்டேன்….என் தப்புதான்..பணம் மட்டும் பார்க்கறவகிட்ட பண்பு எதிர்பார்திருகக்ககூடாது.”
“மாறன்..விஷயம் புரியாமப் பேசாத..இப்ப அவளுக்கு பணம் முக்கியம்.” என்றாள் ஸ்மிரிதி.
“இப்ப மட்டுமில்லை எப்பவும் அதுதான் முக்கியம்.. உன் ரிசெப்ஷன் அன்னைக்கே தெரிஞ்சிடுச்சே..பணக்காரங்களோடதானே டான்ஸ் ஆடினா.” என்று மெஹக்கின் நடத்தையை ஸ்மிரிதியிடமே விமர்சித்தான்.
“நீ இப்ப என் எதிர்லே இருந்த உன் பல்லு மொத்தம் வெளிய வந்திருக்கும்.” என்று அவள் கோபத்தின் அளவை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
“உனக்கு எப்படி இப்படியொரு பிரண்ட்?..பணத்துக்கு இப்படி அலையறா..இரண்டு படத்துக்கு வாங்கின பணத்தைத் திருப்பி தரமுடியாதுன்னு அடம்பிடிக்கறா.” என்று ஸ்மிரிதியை மேலும் கோபப்படுத்தினான் மாறன்.
“ஷட் அப்..அவ நிலைமைத் தெரியாம பேசாத..அவளைப் பற்றி உனக்கு என்ன டா தெரியும்..பத்து வயசிலேர்ந்து நான் அவளைப் பார்த்துகிட்டு வரேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“இன்னக்கு அவ பக்கத்திலே இருந்து தெரிஞ்சுகிட்டேன்..ஒரு பாட்டுக்கு ஆட வைப்பேன்னு ஒருத்தன் மிரட்டறான்..இவ கேட்டுகிட்டு பேசாம இருக்க..அதான் அவனை வெளிலே போடான்னு சொன்னேன்.” என்றான் மாறன்.
“மாறன்..ஸ்ட்டுபிட்..ஒரு வரிக்கு ஆட சொல்றது..ஒரு பாட்டுக்கு ஆட சொல்றது….பாதி பாட்டுக்கு ஆட சொல்றது..அரைகுறையா ஆட சொல்றது.. இதெல்லாம் அவ ஸ்கூல் டேஸ்லேர்ந்து சமாளிச்சுகிட்டு வரா..
கடந்த அஞ்சு வருஷமா சினிமாவுலே இருக்கா..அவ நடிச்சு அவ குடும்பத்தை காபாத்திகிட்டு வந்தா..இப்ப எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்திட்டு அனாதையா இருக்கா..அவளுக்கு பணம் தான் டா துணை..அதை சம்பாதிக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு உனக்கு என்ன தெரியும்..நீ சம்பாதிச்சு ஒரு குடும்பத்தைக் காப்பாத்தறேயா?..நான் சொன்ன ஒரு வேலையை உன்னாலே ஒழுங்கா செய்ய முடியலே..சொதிப்பிட்டு வந்திருக்க..முட்டாள்தனமா நடந்துகிட்டிருக்க.”
“முட்டாள்தனம் தான்..அவதான் முக்கியம்னு நினைக்கற நான் முட்டாள் தான் .” என்று அவன் முட்டாள் மனதை வெளிப்படுத்தினான் மாறன்.
அதைக் கேட்டு “அப்பா டா” என்று ஆசுவாசமடைந்த ஸ்மிரிதி,”“என்ன டா சொல்ற?” என்று அமைதியாக கேட்க,
ஸ்மிரிதியிடமிருந்து ஆத்திரம், அதிர்ச்சியை எதிர்பார்த்த மாறனிற்கு அவளின் அமைதியான கேள்வி, அவன் மன அமைதியைக் கலைத்து கடந்து சில மாதங்களாக அவன் மனதை ஆட்டி படைத்து கொண்டிருந்தவளின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த ஆர்வத்தை வெளியிட தூண்டியது.
“என்ன சொல்ல.. ..நான் அவளுக்கு எதுலேயும் பொருத்தமில்லைன்னு தெரிஞ்சும் என்னை அவளோட பொருத்தி பார்க்கறேன்..எனக்கே வேடிக்கையா இருக்கு.” என்று வேதனையுடன் மாறன் சொல்ல,
என்ன இவன் அதுக்குள்ள தேவதாஸ் மாதிரி பேசறான் என்று நினைத்தவள்,“டேய்..தெளிவா இருக்கியா? இல்லை தண்ணி போட்டிருக்கியா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் ஸ்மிரிதி.
“தெளிவாதான் இருக்கேன்.” 
“ஒகே..அப்ப முக்கியமான விஷயம் பேசலாமா உன்கிட்ட.”
“முக்கியமான விஷயமா? என்னது?”
“என்ன டா இப்படி கேட்கற..உன் விஷயம் தான் டா..இப்ப சொன்ன விஷயம் தான் டா..எத்தனை நாளா  டா?” என்று விசாரணையை ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“உங்க கல்யாண ரிசெப்ஷன்லேர்ந்து…அன்னைக்கு அவ என்கூட மட்டும் டான்ஸ் ஆட மாட்டேன்னு சொன்னா..அப்பவே முடிவு செய்திட்டேன்..என் தாளத்துக்கு அவளை ஆட வைக்கணும்னு.” என்றான் மாறன்.
“மாறன்..அன்னைக்கு நீங்க எல்லாரும் தண்ணிலே இருந்தீங்க…” என்று இழுத்தாள் ஸ்மிரிதி.
“யெஸ்..ஆனா அவ என்கூட ஆட மாட்டேன்னு சொல்லிட்டு என்னை வெறுப்பேத்த தான் கபீர், தல்ஜித்தோட ஆடினா..நாங்க இரண்டு பேரும் தண்ணிலே இருந்தோம் ஆனா தெளிவா இருந்தோம்.” என்றான் மாறன்.
அதை மெஹக்கும் ஒப்புக்கொண்டதை வெளியிடாமல்,“மாறன்..அவ தொழிலே நடிக்கறது, டான்ஸ் ஆடறது..இன்னொருத்தரோட டான்ஸ் ஆடினதையும் உன்கூட டான்ஸ் ஆட மாட்டேன்னு சொன்னதையும் வைச்சு உன் வாழ்க்கையை முடிவு செய்திடுவியா?” என்று அவன் அன்பின் ஆழத்தை அளக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“உனக்கும், மனுவுக்கும் பத்து வருஷமா தோணாதது பத்து நிமிஷத்தில தோணலேயா?” என்று மாறன் பதில் கேள்வி கேட்க,
“எங்க விஷயம் வேற டா..நான் எப்படின்னு அவனுக்குத் தெரியும்..அதனாலே நான் எப்படி இருந்தாலும், எது எப்படி நடந்தாலும் அவன் என்கூடவே இருப்பான்..
நீ எப்ப டா முதல் முதல்லே ஃபென்னி (fenny) குடிச்ச?” என்று சம்மந்தமில்லாமல் ஸ்மிரிதி கேட்க,
அதற்கு தயக்கமேயில்லாமல்,”ஸிக்ஸ்த் ட்ர்ம் லீவுலே..பிரண்ட்ஸோட கோவா போன போது.” பதில் சொன்னான் மாறன்.

Advertisement