Friday, May 17, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 21 யாருமில்லாமல் அனாதையாய் நின்ற தன் சகோதரன் மகளை தன்னோடு அழைத்துக்கொண்டார் நீலாவதி, சுதாவின் அத்தை. தங்களுக்கு ஒரு மகள் வேண்டும் என்று எவ்வளவு விரும்பியும்    நீலாவதி – சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன் மட்டுமே.  சுதாவின் இனிமையான குணம் நீலாவதி, சதீஷை கவர மருமகள் மகளாகவே மாறிப்போனாள். சுதா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 20 சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை. துண்டை ஈரபடுத்தி முகத்திலும் மார்பிலுமாக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்வாய் படுத்துக் கொண்டாள். என்ன அடக்கியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இப்படி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 19 கத்தி நெஞ்சில் இல்லை முதுகில்  குத்த பட்டுவிட்டதா? ஏமார்ந்துவிட்டேனா.. ஏமாற்றபட்டுவிட்டேனா? என் புரிதலில் தவறிவிட்டேனா? சுதா என்னைக் காதலிக்கவே இல்லையா? காலையில் கூட என் அருகாமையில் அவள் இதுபோல தானே நின்றாள்? எல்லாம் போய் தானோ?  ஏதேதோ தோன்ற அங்கேயே.. அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான். எண்ண எண்ண ஏமாற்றத்தின்  வலி...
    அவள் அவன் நட்பு வட்டாரத்தோடு இயல்பாய் பொருந்தியது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் மறு பக்கம் கொஞ்சம் நெருடலும். இந்த வகை பார்ட்டி அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குத் திண்ணம். சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்தவள், “எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். பொய்ட்டு வந்திடுறேன். மணி ஆச்சு.. பாட்டி இப்போ காள் போடுவாங்க. என்னால...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 18 தான் கிளம்பி வருவதாக அஷோக்கிடம் சொல்லிச் சென்ற சுதா வரவை எதிர் பார்த்திருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையே. அவள் வரும் வரை நேரத்தைத் தள்ள வேண்டுமே என இங்கும் அங்கும் நடந்தான். தன்னை அமைதிப் படுத்த பிடித்த புத்தகமொன்றை கையிலெடுத்தவனுக்குக் கவனம் அதில் பதியவில்லை. இருப்புக் கொள்ளாமல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 17 நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது. சிரித்த முகமாய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இனத்தை சேர்ந்தவன், இப்பொழுது இன்னும் இனிமையாய் பழகினான். வாரம் முழுவதும் தொழிலுக்காய் நேரம் ஒதுக்குபவன், வார...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 16 எதிர்பாரா சமையம், எதிர்பாரா இன்ப அலை தாக்கல் அஷோக்கிற்கும் சுதாவிற்கும். நிமிடங்கள் நொடிகளாய் தெரிந்த இன்ப தருணம்.. மூளை முற்றிலும் அதன் செயல்பாட்டை நிருத்துமுன் இருவரும் ஒரு வழியாய் விலகினர். உடல் விலகியது ஆனால் மனம்? நகமும் சதையுமாய் ஒட்டிகொண்டது. கன்னத்தின் ஈரம் அவளை இம்சிக்க, கைவிரல்கள் தானாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 15 காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து அவள் கனவை ஆரம்பித்தாள்.  முன் தினம் அவன் உயரத்திற்கு அவள் ஸ்கூடியை அஷோக் தள்ளிக் கொண்டு வந்த அழகை எண்ணிச்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 14 சென்னை. மாலை சூரியன் அஸ்தமிக்க வானம் மிக அழகான இளஞ்சிவப்பும் மென்-செவ்வூதா நிறமுமாக மனதை பறித்தது. தன்னுடைய ஸ்கூட்டியில் கடற்கரை பிரதான சாலையிலிருந்து சுதா அவள் வீடிருக்கும் அந்த கிளை சாலைக்குள் நுழைய, சாலையில் ஓரமாய் ஸ்கூட்டியில் வலம் வந்து கொண்டிருந்தவள் கண்கள், வானத்திலிருந்து கடலுக்குள் இறங்கிக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 13 ஒரு வருடமாய் வரன்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அது ஜான்சி வரை வந்ததில்லை. அம்மா, அப்பா பின் அண்ணன் என ஏகப்பட்ட வடிகட்டல்கள். இப்பொழுது வந்த வரன் அம்மா, அப்பா ஏன் அண்ணனுக்கே டேனியைப் பிடித்து விட்டது. அப்பாவின் தோழர் மூலமாய் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் கேட்டிருந்தனர். இது ஆரம்பித்து...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 12 “டி ராணி இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பராங்களாம். பத்து நிமிஷத்தில வந்திடுவாங்க. போ போ.. போய் எடுத்து வச்சிகிருக்கத உடுத்து” அம்மா காட்டு கத்தல் கத்தினாலும் அவள் காதில் விழுந்தால் தானே? அவள் அசையாது இருக்கவும், “கார்த்தி.. டேய் அவளைக் கவனி”...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 11 காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது ஆரல்வாய்மொழி,  காற்றாலை மின்சாரத்திற்கு தமிழகத்தில் பெயர்பெற்ற இடம். கார்த்திக் சென்று கொண்டிருந்த பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை எட்டியிருந்தது சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைக் கவரும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 10   நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள். ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க “ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 9 “பா..ட்டி.. அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க வாங்க!” வீட்டை இரண்டாகிக் கொண்டிருந்தாள் சுதா. காலை ஒன்பது மணி நேர்முகத் தேர்வுக்கு ஆறு மணிக்கே ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தாள். அவளால் முழு நாளும் வீட்டில் இருக்க முடியவில்லை. பொழுது போகவேண்டுமென்பதற்காகவே வேலை தேட ஆரம்பித்திருந்தாள். எம்.பி.எ-வில் கோள்ட் மெடலிஸ்ட்! மும்பையில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 8 மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது. அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை இட்ட மருண்ட மான் விழி; மீண்டு வெளி வர முடியாதபடி அதன் சுழலுக்குள் அவனை இழுக்க, அது தெரிந்தே அவனை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 7 நாட்கள் சுதாவிற்கு நகர மருத்தது. அஷோக்கை என்ன தான் மறக்க நினைத்தாலும், எவ்வளவு வேலைகளை இழுத்து வைத்து கொண்டாலும், எல்லா வேலைகளின் நடுவிலும் ‘அவள் பனை மரம்’ அவள் மனதை அரித்துக்கொண்டே இருந்தான். நினைக்கக் கூடாதென்று நினைக்க நினைக்க அவன் நினைவில் மூழ்கினாள். அதுவே பெரிய அவஸ்தையாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 6 காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது. “டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 5 “பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே . கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓடவில்லை” தன் படுக்கையில் பாடிக்கொண்டே குப்புறப் படுத்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்த சுதாவின் நினைவலைகள் மீண்டும் மீண்டும் அஷோக்கை...
    வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 4 அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன? வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல் உள்ளத்தைக் கிளர, குளிரும் உஷ்ணமும் ஒன்றாய் தாக்க.. இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமோ? ஆனால் இதில் எதுவுமே அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது...
    error: Content is protected !!