Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 14
சென்னை. மாலை சூரியன் அஸ்தமிக்க வானம் மிக அழகான இளஞ்சிவப்பும் மென்-செவ்வூதா நிறமுமாக மனதை பறித்தது. தன்னுடைய ஸ்கூட்டியில் கடற்கரை பிரதான சாலையிலிருந்து சுதா அவள் வீடிருக்கும் அந்த கிளை சாலைக்குள் நுழைய, சாலையில் ஓரமாய் ஸ்கூட்டியில் வலம் வந்து கொண்டிருந்தவள் கண்கள், வானத்திலிருந்து கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்த சூரியனில் நிலைக்க, ஓட்டிக் கொண்டிருந்த வண்டி கல்லின் மேல் ஏறி இறங்க, அவள் நிலை தடுமாற, பார்வையைக் கீழ் இறக்க, அவள் முன், மிக அருகில் ஒருவன் ஓடிக் கொண்டிருப்பதை கண்டவள் கை தானாய் பிரேக்கை அழுத்திப் பிடிக்க, “க்ரீரீரீச்ச்..” என்ற சத்தத்தோடு வண்டி நின்று கவிழ்ந்தது.
சத்தம் கேட்டுத் திரும்பியவனைப் பார்த்தவள் முகம் புன்னகை பூக்க, வாய்த் தானாய், ‘பனை மரமா?’ என முணுமுணுத்தது.
“என்னைப் பார்த்தா பனை மரம் மாதரியா இருக்கு?” அவன் கேட்டுக் கொண்டே அவள் எழும்ப உதவியவன், அடி எதுவும் பட்டுவிட்டதாவென்று பார்த்துவிட்டு அவள் வண்டியை தூக்கி நிருத்தியிருந்தான்.
“ம்ம்.. பின்ன இல்லையா? என்னுடைய அம்மா நான் பத்து வயசிலேயே ரொம்ப ஹயிட்டா இருந்தேன்னு  அப்போவே என்னை நெட்டை பனைனு கூப்பிடுவாங்க..”
அவளை ஏற இறங்கப் பார்த்து, “நீயா? நீ ஹயிட்டா?” என்றவனிடம்
“பச்.. அது அப்போ.. பதினஞ்சு வயசுகப்புறம் ரொம்ப எல்லாம் வளரலை.. இருந்தாலும் அஞ்சரை அடி எல்லாம் ஒரு பொண்ணுக்கு கம்மி இல்ல.. நீங்க உங்கள வச்சு எல்லாரையும் எடை போட கூடாது. நீங்க என்ன ஆரடியா?”
“6.2”
அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய.. என்ன செய்தும் அதுவோ நகர மறுக்க, அதை உருட்டிக் கொண்டே, “ரோடு நல்லா தானே இருக்கு.. எப்படி விழுந்த? புதுசா ஓட்டுரீயா? விழுந்ததுல எதோ பிரச்சனை ஆகிடுச்சு போல.. ஸ்டார்ட் ஆகலை!”
“ம்கும்.. அது ஸ்டார்ட் ஆகிட்டாலும்! இராஜேந்தரன வந்து பாக்க சொல்லணும். நான் நல்லா தான் ஓட்டுறேன்.. இது தான் சரி இல்ல… எப்போ பாரு நடு ரோட்டுல நின்னுடுது.. இப்போ தான் சர்வீஸ் அனுப்பினேன்.. என்ன ப்ரயோஜனம்? அன்னைக்கும் இப்பிடி தான் எனக்கு இன்டெர்வியூ இருந்துதா..”
ஆரம்பித்தவள் அன்று காலை முதல் நேர்முகத் தேர்வு முடிந்து வீடு வந்து சேரும் வரை நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
கூடுதல் தகவலாக “அங்க இருக்க பாஸ் ஒரு நொச்சு பேர்வழியாம்.. அந்த இம்சைக்கு லேட்டா போனா பிடிக்காதாம்.. வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானாம்.. ”
“இது வேரையா!” அலுத்தவன், “அப்பிடி யாரு சொன்னது?” ஆர்வமாய் கேட்ட்வனிடம், அசராமல் கார்த்திக்கை ‘போட்டு கொடுத்தாள்’.
“அன்னைக்கு காலைல லிஃப்ட்டு கொடுத்தேனே.. கார்த்திக், அவன் என் ஃபிர்ண்டாகிட்டான், அவன் தான் சொன்னான்.”
“இன்னும் போய் ஜாயின் கூட பண்ணலை, அதுகுள்ள அங்க ஃபிரண்டா? நீயா பார்க்காம யாரோ சொல்லுரத நம்பலாமா?”
“அவன் யாரோ இல்ல… என்னுடைய ஃபிரண்ட்! ஃபிரண்டு சொன்னா கண்ண மூடிட்டு நம்பலாம்!”
‘விளங்கிடும்!’ வாய்க்குள் முணுமுணுத்தவன் கண்ணுக்கு அவள் விளையாட்டு பிள்ளையாகவே தெரிந்தாள்.
பேசினாள், பேசினாள்.. வீடு வந்து சேரும் வரை பேசிக்கொண்டே இருந்தாள். அனைத்தும் அவள் சாதனைகளும் அவள் தோழர்கள் கூட்டம் பற்றியும்.
அவனும் அவனையறியாமலே பேசிக்கொண்டே வந்தான். பேசினார்கள், சிரித்தார்கள், நேரம் இனிமையாகவே சென்றது.. வீட்டின் அருகில் வரவும் இருவருக்கும் ‘அய்யோ..’ என்றிருந்தது.
“இந்தா வண்டி.. பார்த்து ஓட்டு.. இத நீ ஓட்டாம இருந்தா இன்னும் நிம்மதி!” வண்டியை அவளிடம் கொடுக்க, அவளோ, “உள்ள வரது! வாசலையே போரது என்ன பழக்கம்.. வாங்க!” என உள்ளே கூட்டிச் செல்ல, “அக்கா.. வந்துடீங்களா..” என்று அவள் குட்டி நண்பர் கூட்டம் அவளைச் சூழ்ந்துகொண்டது.
அங்கு ஒருவன் நிற்பது அவர்கள் கண்ணில் பட்டால்தானே? சிறு பிள்ளைகளிடம் கள்ளம் கபடமிருப்பதில்லை. தன்னை நேசிப்பவர்கள் அவர்கள் உலகமாகிவிடுகிறார்கள். பணம், பகட்டு, ஜாதி, மதம் அந்த தூய்மையான அன்பில் இருப்பதிலை.  முந்தினவை மனதில் பதிய ஆரம்பிக்க அன்பும் அதன் தூய்மையும் காணாமலே போய்விடுகிறது. அவன் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான்.
“டேய்.. எப்போ டா வந்தீங்க? கதவு பூட்டி இருக்கு? பாட்டி எங்க?”
“பாட்டி.. ‘வெள்ளி கிழமை கோவிலுக்கு போறேன்.. சுதா அக்கா வந்ததும் இந்த சாவிய குடுத்திடுனு’ சொனாங்க.. ஏன் கா செல் எடுத்துட்டு போகலை..?”
“மறந்துடேண்டா… உங்களுக்கு சாக்களேட் வாங்க தான் போனேன்..  சரவணா வண்டி சீட்டுகடில இருந்து எடுத்துட்டு வா டா அதை.. நீங்க எல்லாம் போய் அங்க வராண்டால உக்காருங்க..”
அருகில் அமைதியாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி, “கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியுமா? இத கொடுத்து அனுப்பிடுறேன்.. ஃபிளீஸ்..”
“பிரச்சினை இல்ல… நீ பொருமையாவே கொடு நான் உட்காந்திருகேன்” என்றவன் வராண்டாவில் இருந்த மூங்கில் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.
அவள் திண்ணையில் அமர, இது தினமும் நடக்கும் வழக்கம் போல் மூன்று வயது முருகன் அவள் மடியில் போய் அமர்ந்துகொள்ள, “நேத்து நீ தானே அக்கா கிட்ட உக்காந்த.. இன்னைக்கு நான் தான் உக்காருவேன்” அடி தடி சண்டையுடன் ஒரு வழியாய் அனைவரும் அவளைச் சுற்றி அமர, பிள்ளைகளோடு பிள்ளையாய் அவளும் அவர்களோடு சேர்ந்து வழிய வழிய சாக்களேட்டும் ஐஸ் க்றீமும் சாப்பிட அவளையே கண்கொட்டாமல் அவன் பார்க்க, “வேணுமா?” என்ற கேள்வி வேறு!
நடப்பதை ஏதோ படம் பார்ப்பது போல் பார்த்து அமர்ந்திருந்தான். “அக்கா முருகன் உங்க சல்வார் மேல கொட்டிட்டே ஐஸ் சாப்பிடுராங்கா..” ஒருவன் கூற, அதை அவள் பெரிதாய் எடுத்தால் தானே, “அவன் கொழந்த டா..” என்று அவள் வேலையைச்  சரிவரச் செய்து கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து ஒழுகின பனிக் கூழோ, அது அவள் துணியில் வடிய அதை மீண்டும் எடுத்து அவள் நக்கியதோ.. முதன் முறையாய் அவனுக்கு புரட்டிக்கொண்டு வரவில்லை.
டப்பாவில் பனிகூழ் தீர்ந்தபின் அதை விராலால் வழித்து நக்குவதைப் பார்த்தவனுக்கு மீண்டும் அவள் வளர்ந்த குழந்தையாகவே தோன்றியது. தூய்மையான அன்போடு.. கள்ளம் கபடமில்லாதா வளர்ந்த குழந்தையாய்!
ஒருவழியாய் அனைவரும் சாப்பிட்டு முடிய எல்லோரும் வெளியே இருந்த தண்ணீர் குழாயில் அவர்கள் சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் ஓட, வேகமாய் ஓடி வந்த கோவிந்தன் காலிடறி கீழே விழுந்து அழவும், அவர்கள் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவள் செய்வதை விட்டுவிட்டு அவனை அள்ளி வாரி அணைத்திருந்தாள். அவனை ஆருதல் படுத்தி, சிறிதாய் ஏற்பட்டிருந்த சிராய்ப்புக்கு மருந்திட்டு, அவனோடு பேசி சிரிக்க வைத்து மீண்டும் அவனே ஓடி வீட்டிற்குள் செல்ல ஊக்குவித்தாள்.
அவனிடம் வந்தவள், “உள்ள வாங்க.. காபி கலந்து தாரேன்”
“இருக்கட்டும் அடுத்த தரம் வரும்போது பார்த்துகலாம்.. நான் கிளம்பறேன். நீ போய் பசங்களை பாரு.. சண்டபோட்டுக்க போராங்க!”
“டீ.வி. முன்னாடி இருந்தா பக்கத்தில இருக்கவங்கள தெரியாது.. அப்புறம் தானே சண்ட.. இப்போ எல்லாம் இங்கிளிஷ் கார்ட்டூன் தான் பார்க்கரது.. கவனிச்சா தான் புரியும் அவங்களுக்கு.. சோ சண்டை போடமாட்டாங்க.
முருகனுக்குத் தான் காது ஒழுங்கா கேட்க மாட்டேங்குது. அதனால அவன் மட்டும் அமைதியா உக்கார மாட்டான். மூனு வயசாகியும் ஒழுங்கா பேச மாடேங்கரானேனு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனா.. அவர் ஸ்பெஷலிஸ்ட காதை பாக்க சொல்லிட்டார்.. அடுத்த வாரம் போகணும்.
கோவிந்தன் நல்லா படிக்கிறான்.. வெரி ஸ்மார்ட். அதனால அடுத்த ஸ்கூல் இயர் வேற ஸ்சூல் மாத்தலாம்னு அவன் அம்மாட்ட பேசி வச்சிருகேன். ட்யூஷன் ஏற்பாடு பண்ணியாச்சு. மீனா நல்லா பாடுரா, நம்ம தெருவில இருக்க வேணி பாட்டு டீச்சர் கிட்ட சேத்து விட்டிருக்கேன்.. சரவணனும், அனுவும்..” என ஒவ்வொருவரைப் பற்றியும் உரைத்தாள். மலைத்து நின்றுவிட்டான்.
ஆச்சரியமாய் பார்த்தான். அவன் கவனிக்கவும் செய்தான், அவர்கள் பேச்சு, நடை, உடை எல்லாம் மாறியிருந்ததை. இவர்களில் பலரும் இவன் வீட்டில் வேலை செய்பவர் பிள்ளைகள். அவர்களுக்காக வீட்டு வசதி, பொருளாதார வசதியை அவர்கள் ஃபௌன்டேஷன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தான், இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனி ஆர்வமெல்லாம் எடுத்தது இல்லை.
குழந்தையாய் தெரிந்தவள் இவளா? வெட்டியாய் பிள்ளைகளோடு பொழுதைக் கழிப்பதாய் நினைத்தவனுக்கு இன்ப அதிர்ச்சியே.
அவளைப் பார்க்கப் பார்க்க பிடித்தது. பழக இனிமையாய் இருந்தாள். அவள் விருப்பப்பட்டால் அவளிடம் இருக்கும் நேரத்தை எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்திருக்கலாம். ஆனால் அவள் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஏழை  சிறுவர்களுக்குக்காய் நேரம் செலவழித்தாள்.
நாம் மட்டும் நன்றாய் இருந்தால் போதுமா? நமக்குக் கொடுக்கும் சமுதாயத்திற்கும் ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டாமா? இருந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பது ஒரு வாழ்வா? ஒருவர் வாழ்வையாவது நாம் சீர்படுத்த வேண்டாமா? இருந்தது.. இந்த சிறந்த எண்ணங்கள் அவளிடம் இருந்தது. ஒருவரைப் பார்த்ததும் பிடித்துப்போவது மிகவும் சுலபம். ஆனால் பழகப் பழக இன்னும் அதிகமாய் அவர் வசம் மனம் சாய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அவனுக்கு அவளிடம் பழகப் பிடித்தது. இன்னும் இன்னும் அதிகமாய்.
வீட்டுக்குச் சென்றவன் ஒரு முடிவோடே சென்றான். அவன் வாரிசின் தாயை! காதலையும் அவளிடம் உறைக்கவில்லை. திருமணம் பற்றியும் சிந்திக்கவில்லை. பிறக்காத குழந்தைக்குத் தாயைக் கண்டுபிடித்த மனநிறைவோடே வீடு திரும்பினான்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.  (திருக்குறள்)
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறும் அன்பின் நிமித்தம் செய்யப்படும் உதவி கடலை விடப் பெரிது.

Advertisement