Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 9
“பா..ட்டி.. அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க வாங்க!” வீட்டை இரண்டாகிக் கொண்டிருந்தாள் சுதா.
காலை ஒன்பது மணி நேர்முகத் தேர்வுக்கு ஆறு மணிக்கே ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தாள். அவளால் முழு நாளும் வீட்டில் இருக்க முடியவில்லை. பொழுது போகவேண்டுமென்பதற்காகவே வேலை தேட ஆரம்பித்திருந்தாள். எம்.பி.எ-வில் கோள்ட் மெடலிஸ்ட்! மும்பையில் தலைச் சிறந்த பல்கலைக் கழகத்தில் படிப்பு.. அதன் பொருட்டு அவள் வேலைக்காக விண்ணப்பித்த மூன்று இடங்களிலுமிருந்து அழைப்பு வந்திருந்தது.
“சொல்லுங்க பாட்டி எதைப் போடட்டும்? சுடியா இல்ல ஜீன்ஸா?”
“என்ன கலர்? டார்க்கா? லைட்டா?”
“இதுவா அதுவா.. இப்படியா அப்படியா?” என்று எல்லாவற்றிற்கும் பாட்டியை நச்சரித்து அவரை  ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள்.
“முடிவு பண்ணிட்டு கேக்கரியா? முடிவு பண்ண கேக்கரியா? இப்போ இந்த வேலைக்கு போகவேண்டாம்னா அத கேக்காத! இருபது வயசாகுது..”
இடைமறித்து, “இருபத்தி ரெண்டு!” என
“சரி.. இருபத்தி ரெண்டு வயசாகுது… கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தவேண்டிய வயசில இப்போ எதுக்கு வேலைக்கு போகணும்? நீ சம்பளம் வாங்கி தான் நம்ம பொழப்பை ஓட்டனுமா கண்ணு.. சொன்ன பேச்ச கேளேன்..?”
“வேலைக்குப் போரது வெறும் சம்பளத்துக்கு இல்ல பாட்டி.. வீட்டுக்குள்ளையே அடஞ்சு கிடக்காம நாலு பேரோட பழகும்போது நமக்குள்ள நிறைய நல்ல மாறுதல் வரும், நல்ல ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க, உலகத்தைத் தனியா எதிர்கொள்ளத் தைரியம் வரும், தன்னம்பிக்கை வளரும்.. சாதிக்கெல்லாம் பாட்டி.. நம்மளையும் நாலு பேரு நல்லவிதமா திரும்பி பாப்பாங்க! இப்போவே கல்யாணம் பண்ணி தொரத்திவிடாலம்னு கனவு காணாதீங்க. இப்போதைக்கு உங்களை நிம்மதியா விடுரதா எனக்கு ப்ளான் இல்ல..”
“சரி சரி.. என் உயிர வாங்கிட்டே போ செல்லம்.. ஆனா சாப்பிட்டுட்டு கிளம்பு!”
எட்டு மணியளவில் கிளம்பி வந்து நின்று, “எனக்கு இன்னைக்கு ரொம்ப இம்பார்ட்டென்ட் டே பாட்டி.. தூங்காம நான் வர  வரைக்கும் இன்டெர்வியூ நல்லா செய்யணும்னு சாமிய வேண்டிகோங்க.. பாக்க ஓகேவா இருகேனா?” செல்லம் கொஞ்சி கேட்டுகொண்டிருந்தவளை,
“என் கண்ணே பட்டுடும் செல்லம்.. என்ன ஒரு அழகு..” என்று நெட்டி முறித்தார்.
ஸ்கூட்டி சாவியை விரலில் சுழற்றிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தவள், “பாய் பாட்டி.. பத்திரம்.. கதவ பூட்டிட்டு இருங்க.. டாடா..”என
“சரி நான் பத்திரமா இருக்கேன்.. நீ பார்த்து ஓட்டு. பொறுமையா போ கண்ணு..” கடைசி வார்த்தையில் அவள் மதில் சுவரைத் தாண்டியிருந்தாள்.
நாட்கள் நகரப் பாட்டிக்கும் பேத்தியோடு ஒத்துப் போக ஆரம்பிக்க, பாட்டிக்கும் பேத்திக்குமான உறவிற்கு நடுவே இருந்த மெல்லிய திரை கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்திருந்தது.
ஆளில்லா தெருவில் ஓட்டும் தைரியம் கூட்டத்தைப் பார்த்ததும் வர மறுத்தது. இதில் குருக்கே வரும் ஆட்டோக்கள் நிறையவே பயமுறுத்தியது. கொஞ்சம் இடம் கிடைத்தாலே ஆட்டோவின் மூக்கு உள்ளே நுழைந்து விடுகிறது, ரோட்டில் மற்ற வாகனத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படை உணர்வு கூட இருப்பதில்லை.
“இன்னாம்மா கலைலியே வந்து மனுஷன் கழுத்தருக்கர.. ஒன்னு சீக்கிரம் நகரு இல்லியா அன்னாண்ட ஓரமா போ..” என்று இதோடு நான்கு ஆட்டோ காரனிடம் திட்டு வாங்கியாயிற்று. இதற்கு மேல் எங்கே ஓரம் போவதென்று அவளுக்குத் தெரியவில்லை.
சிக்னலில் நிற்கும் போதும் பொறுமையற்ற ‘ஹார்னின் காங்க்’குகள் காதை பிளக்க,  வெயில் மண்டையைப் பிளக்க, பிரதான சாலைகளில் வெட்டப் பாட்ட குழிகளும் உடைந்த ரோடுமாய் எல்லாம் ஒன்று சேர்ந்து, ‘ஏன் தான் வண்டியில் வந்தேனோ’ என்று பத்தாவது நிமிடத்திலேயே உள்ளுக்குள் அழ வைத்துவிட்டது.
மக்கள் நெரிசலில், ஒரு சில மாசமாகவே ஓட்டி பழகிக் கொண்டிருந்த ஸ்கூட்டியை தன்னை தாண்டி செல்லும் சைக்கிளையும் பொருட்படுத்தாமல் மிதமான வேகத்தில் ஓட்டி(உருட்டி) கொண்டிருந்தவள், வழியில் ஒரு வாலிபன்  பேருந்தைப் பிடிக்க நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் மனம் உருக, அவனருகில் மெதுவாய் ஓட்டிக்கொண்டே, “ஹல்லோ தம்பி.. பஸ் மிஸ் பண்ணிட்டீயா” என கேட்கா, “அமாங்க..” என்று கூறிக் கொண்டே ஓடினான்.
“வா.. வண்டியில ஏரிக்கோ.. நான் அடுத்த ஸ்டாப்ல விடுறேன்”
அவன் தயங்கி நிற்க, “வா வா சீகரம் ஏறு” என் அவன் முன் வண்டியை நிருத்தினாள். அவனை அவள் ஏற்றி கொண்டு நகரவும், அவர்களை பார்த்துக்கொண்டே அஷோக்கின் ‘பென்ட்லி காண்டினென்டல் சூப்பர் ஸ்போர்ட்ஸ்’ கார் சென்றது. பின்புற கண்ணாடியில் சிறிது நேரம் அவளைப்  பார்த்தவன் எண்ணம் லேப்டாபை விட்டு வெளி வந்தது. ‘காலையில இந்த நெரிசல்ல எங்க போரா? இந்த ஸ்பீட்ல போனா.. இன்னைக்கு இவ போர இடம் போய் சேருவாளா?’. அவள் சென்று கொண்டிருந்த வேகம் அப்படி.
நடந்து செல்பவரைத் தவிர மற்ற அனைவரும் அவர்களைத் தாண்டி செல்ல, பின் அமர்ந்திருந்தவன் பொறுமை சோதிக்கபட, “கொஞ்சம் ஸ்பீடா போகளேன்..” என
வண்டியின் வேகத்தை அவள் அதிகரிக்க, ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வண்டி ஒரேயடியாய் நின்றே போனது.
தனக்கு உதவ நினைத்தவளை விட்டுவிட்டு போக மனமில்லாமல் வண்டியோடு சில நிமிடங்கள் போராடி கால் விலியோடு அதை ‘கிக் ஸ்டார்ட்’ செய்து, பேருந்து நிலயம் வரை அவனே ஓட்டி செல்வதாய் முடிவு எடுக்கப்பட்டு இருவரும் கிளம்பினர்.
ஸ்கூட்டி நான்கடி நகருவதற்குள் சாலை விளக்கு சிகப்பைப் போட நொந்தே போய்விட்டான் அவன்.
“ஓடி போயிருந்தா அப்போவே பஸ்சை பிடிச்சிருப்பேன்” என்று புலம்பியவனிடம், ‘ஓடியா போனான்? நொண்டிட்டு தானே போனான்?’ எண்ணினாலும் அவனை வெறுப்பேற்றாமல், “இரு இரு பிடிச்சிடலாம்” என்று ஆறுதல் படுத்தி ஒருவழியாய் மீண்டும் வண்டியைக் கிளப்பிச் செல்ல, அடுத்த நாலடியில் போக்குவரத்து காவலர் அவர்களை கையசைத்து, வண்டியை ஓரம் கட்ட சொல்ல, “இன்னும் இது ஒண்ணு தான் கொரச்சல்” என அவனும் வண்டியை ஓரம் செலுத்தினான்.
பீரிட்டு வந்த கோபத்தைப் பல்லைக் கடித்து விழுங்கிக் கொண்டே, “கேட்டேனா? கேட்டேனா லிஃப்ட்? நான் பாட்டுக்கு ஓடிப் போய் பஸ்ச பிடிச்சிருப்பேன். ஒம்பது மணிக்கு மீட்டிங். அதுவும் பாஸ் கூட.. ஒழுங்கா ஆட்டோல போயுருகணும்! ஆஆஆ….” அடிக்குரலில் சீர, ‘இதில் என் தவரெங்கே என பேந்த பேந்த’ விழித்து கொண்டிருந்தாள் அவள்.
பொறுமையிழந்தவன், “சார் ப்ளீஸ், நேரமாகுது.. கொஞ்சம் பார்த்திட்டு அனுபரீங்களா?” எனவும்
அருகில் வந்தவர் இதையெடு அதை எடு என்று கடுப்பை அதிகம் ஏத்தியே விட்டார்.
வண்டி சாவியை அவளிடம் நீட்டியவன், “தெய்வமே.. செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி… உன்னால எனக்கு செம லேட்..” எனவும்
வாயை வைத்துகொண்டு சும்மா இருக்காமல், “தம்பி… நான் வேணும்னா உன்னை டராப் பண்ணட்டுமா?” என்று அவன் எரிச்சலை கூட்ட
“கண்ணு தெரியுமா உனக்கு? தெரியும்னா.. கண்ணை நல்லா தொரந்து பாரு என்னை.. உங்க அம்மா என்னை தம்பினு கூப்பிடலாம்.. இத்தநோண்டு நண்டு கணக்கா இருக்க நீ எல்லாம் ‘தம்பி’னு கூப்பிட்டு மானத்தை வாங்காத!” என்று குனிந்து தலை மேல் கை கூப்பி கும்பிட்டுவிட்டே சென்றான்.
அவன் ஆட்டோவில் செல்வதைப் பார்த்து, “நல்லதுகெல்லாம் காலமில்ல!” முணுமுணுத்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்டாக மறுத்தது.
நேரத்தை பார்த்தவள் மனம் பதர ஆரம்பித்தது. ‘போச்சு.. எல்லம் போச்சு.. என் நேரமே சரி இல்ல.. இன்டெர்வியூக்கு லேட்! வேலை கிடைச்சமாதிரி தான்!’
வண்டியை தள்ளிக்கொண்டே ஒருவழியாய் மெக்கானிக் கடையை அடைந்தாள். வண்டியை ஆராய்ந்தவண்ணம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த வாலிபன் ஒருவன் தயக்கத்தோடு, “க்கா.. நீ கோவிந்தனுக்குப் பாடம் எடுப்பியே.. அந்த பெரியவீட்டாண்ட இருக்கியே.. அவங்க தானே” என கேட்க்க
கேள்வியோடு அவனை பார்த்தவள், “ம்ம்.. நீ?” எனவும்
“அவ(ன்) அண்ணன் கா.. வண்டில வேல இருக்கு கா.. ஆட்டோ பிடிச்சு தறேன் நீ கிளம்புகா.. உன் வீட்டுல வந்து விடுறேன்!”
“நான் ஒரு மணி நேரத்தில இங்க வந்தா வண்டி ரெடி ஆகிடுமா?”
“முடிச்சுடலாங்கா.. நீ போய் வா!”
“உன் பேரென்ன?”
“ராஜேந்திரன் கா..”
பார்க்க சிருவனை போல் இருக்கவும், “ஏன் நீ.. உன் தம்பி மாதிரி படிக்க போலியா?”
“மெக்கானிக்கல் இஞ்சினியரிங்-ல டிப்ளோமா முடிச்சுருகேன் கா.. வேல கிடைக்கரவரைக்கும் இங்க ஃப்ரெண்டு கடைல ஒத்தாசையா இருகேன்.. வருமானம் இருந்தா வீட்டு செலவுக்கு ஆச்சு.. அது தான்” என ஆட்டொவில் ஏற்றிவிட
ஒரு வழியாய் ஒன்பது மணி நேர்முகத் தேர்வுக்கு பத்து மணிக்கு வந்து சேர்ந்தாள்.
வாசலில் வந்து சேர்ந்தவள் கண்களில் தங்க நிறத்தில் பொரிக்கப்பெற்றிருந்த ‘எ.கெ.மில்ஸ் கார்ப்பரேட் பார்க்’ படவும், நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள். எட்டடுக்கு மாடி கட்டிடம்,  ஓங்கி உயர்ந்து அவள் முன் நின்றது. ஒவ்வொரு மாடியிலும் ஆங்காங்கே பால்கனி இழுத்து விட பட்டு, அதில் செடிகள் நிரம்பி வழிய, பார்பதற்கு செடிகளால் ஆன கோபுரம் போல் காட்சியளித்தது. ‘பன மரத்துகிட்ட ஒரு பில்டிங் டிசைன் பண்ணுனு சொன்னா.. கண்டிப்பா இப்படி தான் பூங்காவனம் மாதரி இருக்கும்..’ அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
நேர்முகத் தேர்வு நடப்பதற்கு முன்பே, வேலை கையை விட்டுப் போன வருத்தம். ‘இவ்வளவு தூரம் வந்தாச்சு.. என்னதான் ஆகுதுனு பார்த்திடுவோமே’ என்ற எண்ணம் மட்டுமே அவளை உள்ளே அழைத்து சென்றது
கால்பந்து மைதானத்திற்கு நிகரான மிக பெரிய வெள்ளை வரவேற்பறை, சுவரோடு சுவராய் இருந்த பெரிய மீன் தொட்டியில் பல வண்ண மீன் அதோடு அறையில் அங்காங்கே வைக்க பட்டிருந்த தாவரங்களுமாய் கண்ணை பறித்தது.
அறையின் அகலத்துக்கு ஈடு கொடுக்க, அது இரண்டாவது  தளம் வரை உயர்ந்திருந்து. இரண்டு மாடி உயரத்திற்கு தோங்கிக் கொண்டிருந்த சரவிளக்கு அதன் பிரம்மாண்டத்தை அதிகபடுத்த, மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு! வெளியே வருதெடுத்து கொண்டிருந்த சூரியன் சுவடு தெரியாமல் அந்த இடமே ‘குளு குளு’ என்றிருக்க, தன்னையும் மீறி, ‘ச்ச.. இந்த ஆப்பீஸ் இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா ஏழு மணிக்கே கிளம்பி வந்திருப்பேனே.. ஒரு பந்தாவிற்காவது இங்கு வேலை பார்த்திருக்கலாம்.’ மனம் அடித்துக் கொண்டது. ‘அந்த ஓட்ட வண்டியால வந்த வினை!’
அவள் எதிர்பார்த்தது போலவே வரவேற்பாளர் நேரம் கடந்துவிட்டது என நிராகரிக்க அடுத்து என்ன என்பது போல யோசனையில் நின்றுவிட்டாள்.
மின் தூக்கியிலிருந்து முதல் மாடி லாபிக்கு வெளி வந்த கதையின் நாயகன் முற்றிலுமாக வேறுபட்ட தோரணையில்.
அவனோடு வெளி வந்த இருவரும் பார்க்க வாட்ட சாட்டமாக அழகாய் இருந்தாலும் அவனுக்கு இணை அவனே என்பதை நன்கு உணர்த்தியது.
முதல் நாள் தோட்டத்தில் பார்த்தவன் இவன் தான் என்று சத்தியம்  செய்தாலும் நம்புவது கடினம். அதில் கம்பீரம் இருந்தது. ஒரு இளைஞனுக்கான துருதுருப்பிருந்தது. இன்று, பார்க்கவே ‘மில்லியன் டாலர் லுக்’ என்பார்களே அப்படி ஒரு தோற்றம். ஆள் பாதி ஆடை பாதி என்பது இது தான் போலும்! ஜெல் போட்டு அவன் பேச்சுக்குப் படிந்து நின்ற அலையலையான அடர் கேசம்.
ஆரடிக்கு மேல் உயரம். வேகமான நிமிர்ந்த நடை. அகலமாய் விரிந்த மார்பு. திண்ணமான தோள் அழகாய் அவனுக்கென்றே பிரத்தியேகமாய் தைக்கபெற்ற அந்த ‘அர்மானி’ கோட்டிற்குள் பொருந்தி இன்னுமே அவனைக் கம்பீரமாய் காட்டியது. ஒரு முறை பார்த்தால், கண்ணை அவனை விட்டு எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று.
பார்த்ததும் சடுதியில் ஒருவரும் நெருங்கிவிடத் தயங்கும் தோரணை.
அவன் இருக்குமிடத்தில் அவன் பார்வையிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்பதைப் போன்ற தீர்க்கமான பார்வை.
கைப்பேசியில் பேசிக்கொண்டே லாபியின் சென்றவன் பார்வை நாலாபுறமும் செல்ல, வரவேற்பறையில் அஷ்ட்ட கோணத்துக்கு உதடை சுளித்து சுளித்து யோசனையாய் நின்று கொண்டிருந்த சுதாவின் மேல் நிலைக்க, கடினமாய் பேசிக்கொண்டிருந்தவன் முகத்தில் மின்னலெனப் புன்னகை பூத்தது. அதற்கு மேல் கால் நகர மறுக்க, அணிந்திருந்த ‘புல்கரி’ கைகடிகாரத்தையும் அவளையும் பார்த்தவன் அருகில் பேசிகொண்டே சென்ற இருவரில் ஒருவனை வருமாறு கையசைத்து, வந்தவனிடம் அவளைக் காட்டி “டூ வாட் இஸ் நெசஸரி..” என்று பணித்துவிட்டு அருகிலிருந்த அறைக்குள் மறைந்தான்.
யாரையோ கைப்பேசியில் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த ‘பாஸ்’ முகத்தில் திடீரென ஏற்பட்ட புன்னகையும் கூடவே அவனுக்கு இட்ட கட்டளையும் கண்டவன், ‘யாரு டா அது?’ என்று ஆர்வமாய், கீழ்த் தளத்தில் நின்று கொண்டிருந்தவளை எட்டி பார்த்தவன் முகத்திலும் புன்னகை அரும்ப வாய் தானாய் “ஓட்ட ஸ்கூட்டி இங்க என்ன பண்ணுது” முணுமுணுத்தது.
கீழே இறங்கிச் சென்றவனுக்கு முதுகைக் காட்டி நின்றவளிடம், “இங்க பழைய ப்ளாஸ்டிக் சாமனுக்கு பேரிச்சம் பழம் குடுகரதில்லையே..” என காதில் கிசிகிசுக்க
‘எவன் அவன்?’ என திரும்பியவள் பார்வை அகலமாய் விரிந்து அவள் ஆச்சரியத்தைக் காட்டியது.
அழகான களையான முகம், வசிகர புன்னகை, ஆரடிக்கு கொஞ்சமே குரைவு,  அவன் கண்களோடு இதழும் சிரிக்க, ‘இவனையா தம்பி என்றேன்?’ அவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.
அவன், “என்ன இந்த பக்கம்? என்ன உங்க ஓட்டை ஸ்கூட்டிலவா இவ்வளவு தூரம் வந்தீங்க?”
ஆச்சரியம் கலந்த புன்னகையோடு புருவம் சுருக்கி கேள்வியாய், “நீங்க….எப்பிடி..?” என அவள் இழுக்க..
காலையில் நொண்டியவன் இப்பொழுது நன்றாய் நடப்பதைக் கேள்வியோடு பார்த்தவளை கண்டு புன்னகைத்தவாறே, “ஓ… அதுக்கு தான் ஹெல்ப் பண்ணினீங்களா? ஃபிரெண்டு பைக்கு வேணும்னு வாங்கிட்டு போய்டான்… பஸ் பிடிக்க ஓடி வர வேகத்துல கல்லு மேல இடிச்சுகிட்டேன்.. அவ்வளவு தான்.. இப்போ ஓ.கே! வாங்க.. முதல்ல வந்து உக்காருங்க” என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.
“ஐ ஆம் கார்த்திக், இங்க தான் வொர்க் பண்றேன். ரொம்ப சாரி காலைல நீங்க நல்ல மனசோட ஹெல்ப் பண்ணவந்தீங்க, நான் தான் டென்ஷன்ல ஏதேதோ பேசிட்டேன்..”
ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தனர். அவளுடைய வெகுளித் தனமான பேச்சும், காலையில் தரிசித்த உதவும் உள்ளமும் அவனைக் கவர, அவன் அழகிய சிரித்த முகமும் கண்ணியமான பேச்சும் அவளைக் கவர, எப்பொழுதும் போல் அவனுக்கும் நட்பு கரம் நீட்டினாள்.
பேசிக்கொண்டே அவளிடம் விஷயத்தைக் கேட்டு மீண்டுமாக நேர்முக தேர்வுக்கு ஏற்பாடு செய்தவன், “சுதா.. என்னால வெறும் இன்டெர்வியூ தான் ரெடி பண்ணித் தர முடியும்.. நீ தான் பார்த்து செய்யணும்.. இங்க ரெக்கமெண்டேஷன் எல்லாம் வேலைக்கு ஆகாது. ஆல் தி பெஸ்ட்..” என கூறி நேர்முகத் தேர்வு அறைக்குக் கூட்டிச் சென்றான்.
நான்கு சுற்று நேர்முகத் தேர்வு முடித்து அவள் கிளம்பும் முன் மீண்டும் வந்தவன், “சுதா.. நீ நல்லா செஞ்சதா சொல்றாங்க. கிடைக்க வாய்ப்பு அதிகம்.. பார்ப்போம். அப்புறம், பாஸ் நல்ல டைப் தான் ஆனாலும் லேட்டா வந்தா பிடிக்காது. அவர் நேரா பேச மாட்டார்.. ஆனா நம்ம தலை மூலமா கிடைக்க வேண்டியது கிடைச்சிடும்.
பாஸ் கொஞ்சம் ஸ்டிக்ட், ரொம்ப டிஸிளிபின் பார்ப்பார், நீட்னஸ் ரொம்ப முக்கியம் அவருக்கு.. அப்பரம் தனியா கூப்பிட்டு பேசர நிலமை வராம பார்த்துகணும்.. தட்டி கொடுத்தும் வேல வாங்குவார்.. கோபமும் படுவார் சிலர்ட்ட! கோபம் வந்தா கடிச்சு கொதரிடுவார். பாத்துக்கோ! அப்புறம் ரிசல்ட் தெரிஞ்சதும் எனக்கு ஒரு கால் போடு..”
சுதாவிடம் அவன் பாஸ் டோட்டல் சரண்டர் என்பதை அவன் அறிந்திருந்தால் எத்தனையோ வலிகளை தவிர்த்திருக்கலாம்..  
அவள் ட்ரேட்மார்க் மண்டை ஆட்டலைக் கச்சிதமாய் செய்து அவனிடம் விடைபெற்றாள்.
ஒரு வழியாய் வந்த வேலை முடிய.. மணி மத்தியம் மூன்றை தொட்டிருந்த்து. கான்டினில் அவனோடு குடித்த பழரசம் போதவில்லை. ‘சீன் காட்டாம  ஒரு சாண்ட்விச் சாப்பிட்டிருக்கலாம். ஒரு இன்டெர்வியூ தான்.. அதுக்கு என்னன்ன பாடுபட வேண்டி இருக்கு சுதா.. பாஸ் ஒரு அப்பாடக்கரா இருபான் போல.. கொஞ்சம் பார்த்து நடந்துகோ…’ மனம் சொல்லி முடிப்பதற்குள்.. அதே மனம், ‘நீ மொதல்ல அடங்குடி ஏதோ வேலையே கிடைச்ச மாதிரி’ என்றது.
சுதா தலை மறையும் வரை அவள் முதுகையே விழியெடுக்காமல் பார்த்துகொண்டிருந்தவனை திரும்பி பார்த்து புன்னகைத்து அவள் கையசைக்கவும்,  மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு தென்றலாய் எழ முகம் புன்னகையை தழுவிக்கொண்டது.
‘ஸ்வீட் ஏஞ்சல்’ எண்ணிய கார்த்திக்கின் கைப்பேசி சிணுங்க அவன் கவனம் கலைந்தது. அதை பார்த்தவன் யோசனையோடே, “மா.. எல்லாரும் நல்லா இருக்கீங்கல்ல?” எனவும்,
மருபக்கத்திலிருந்து, “நல்லா இருக்கோம்.. ஃபோன் போட்டா எதுக்கு டா பதருரா?”
“கண்ட நேரத்தில ‘காள்’ போட்டா என்ன நினைக்கரதாம்?”
“இந்த வாரம் வெள்ளிகிழமை ராணிய பொண்ணு பாக்க வராங்க, நீ இல்லாட்டி அவ வீட ரெண்டு பண்ணிடுவா.. ஒழுங்கு மரியாதையா இப்போவே லீவ் சொல்லீடு.”
“லீவ் வாங்கிட்டேன். பஸ் டிக்கட்டும் புக்பண்ணியாச்சு. வெள்ளி காலையில ஆறு மணிக்கு வீட்டுல இருப்பேன்.”
இன்னும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தவனுக்கு முடிக்க வேண்டிய வேலை வரிசையாய் வந்து நிற்க சுதாவின் நினைவு பின் சென்றது.

Advertisement