Advertisement

வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?… ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள்,
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல் அவனிடம் லட்டு டப்பாவை நீட்டிக் கொண்டே இளித்து வைத்தாள்.
“என்ன லஞ்சமா?”
“ம்ம்ம்… ம்ம்ஹூம்…” என்று ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையை உருட்டியவளிடம்
“இப்போ தானே அட்வைஸ் மழை எல்லாம் ஃப்ரீயா பொழிஞ்ச?.. அதுக்குள்ளவா? சரி, அப்போ ‘உன்’ பொடியனுக்கு?” என்று புருவம் உயர்த்திவனை
‘யாரவன்?’ என்பது போல் பார்த்துவைதாள்.
‘கேடி நீ’ என்று அவன் மறுபார்வை பார்க்க
‘பனை மரம் படுத்துதே..’ என்று மனதில் கருவியவள், சலிப்போடு
“அது அப்போ.. இது இப்போ. நடந்து எவ்வளவு நேராமாச்சு. அத எல்லாம் நீங்க இன்னுமா நினைச்சுட்டு இருக்கீங்க? ஐய்யோ.. ஐய்யோ..
எப்படியும் அவன் வீட்டுல இல்ல.. யோசித்துப் பார்த்தேன், சும்மா.. வேஸ்ட்டா வீட்டுக்கு தூக்கிட்டு போகரதுக்கு.. உங்களுக்குக் கொடுத்த புண்ணியம் கிடைக்கட்டும்னு..
நீங்க கவல படவேண்டாம். இத வாங்கரனால உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராம நான் பார்த்துகறேன். எதுனாலும் பழிய நானே ஏத்துகுறேன்.”
“ஓ.. அவ்வளவு பெருந்தன்மையா உனக்கு? ம்ம்.. அப்புறம் கண்ணனுக்கு?”
“அப்புறம் என்ன? அவனுக்கு கடையில இருந்து வாங்கி கொடுத்து நான் சமாளிச்சுக்கறேன்… நம்ம டீலிங்க் வெளியில தெரிய வேண்டாம்! சரியா? ஒரு கொய்யாவுக்கு இது போதும். இதுக்கமேல எதிர்பாக்காதீங்க” ஸ்ற்றிக்டாக முடித்தாள்.
“ம்ம்ம்.. மாஸ்டர் ப்ளானிங் எல்லாம் நல்லாதான் பண்ற! இப்போதைக்கு இது போதும்!”
‘ம்மா.. வாய் வாய்.. என்ன வாய்’ என்று தான் எண்ணினான்.
அழகாக இருந்தாள். சல சலக்கும் பேச்சு. கொஞ்சம் பயம் கூடவே அசட்டுத் தைரிய கலவை, அவளையே பார்க்கவைக்கும் கோலிகுண்டு விழிகள்..
‘அவள் முகத்தை பிடித்து நிருத்தி அந்த விழியில் என்ன தான் அப்படி ஒரு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்’
இவன் அவளை பற்றி யோசிக்க, அவள் யோசனை சின்ன கண்ணனை சுற்றி. ‘பாட்டி அவன் கிட்ட பேசிட்டு தானே என்னை அனுப்பினாங்க.. அப்போ இங்க தானே இருக்கணும். ஃப்ரெண்ட் வந்தா அவன் கூட இருபான்னு சொன்னாங்க… விளையாட இங்க எங்கே காலி இடம்?’
யோசனையோடு வீட்டைச் சுற்றி இருக்கும் நடைபாதையில் நடக்க ஆரம்பித்தவளைப் பார்த்துக்கொண்டே வாசல் தூணில் ஒரு காலை மடித்து வாகாய் சாய்ந்து நின்று கொண்டான்.
மதிலுக்கு அப்பால் பிள்ளைகள் அரவம் கேட்கவே, அவனைத் திரும்பிப் பார்த்தவள், “இந்த காம்பவுண்டுக்கு அந்த பக்கம் என்ன இருக்கு?”
“டென்னீஸ் கோர்ட்”
“ஓ.. அந்த மூடிவச்சிருக்க இடத்துல டென்னீஸ் கோர்ட் இருக்கா? ம்ம்ம்…” யோசனையாய் அந்த மதில் சுவரை பார்த்து நின்றாள்.
கண்ணில் மின்னல் அடிக்க, “ஆ..ஹா! இங்க தான் இருக்கியா..” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், அருகிலிருந்த குழாயின் அடியிலிருந்த வாளி கண்ணில் பட, அதை எடுத்துக்கொண்டு மதில் அருகில் தலை கீழ் போட்டவள், அதில் ஏறி ஒரே தாவில் மதில் சுவரை நோக்கிக் குதித்து, இரு கைகளையும் மடித்து சுவரைப் பிடித்துக்கொண்டு எக்கிக் மறுபுறம் எட்டிப் பார்த்தாள்.
இதைச் சற்றும் எதிர் பார்க்காதவன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான். ‘ஆ.. ஆண்டவா.. இவ சேட்டைக் கொஞ்சம் ஓவரா இருக்கும் போல… ஐய்யோ விழுந்திட போறாளே..’ என எண்ணியவன்
“ஏய்.. என்ன பண்ற? கிழ விழுந்திடப் போர…” சத்தமாய் கேட்டுக்கொண்டே அருகில் வந்தான்.
“எதுக்கு என்ன பார்த்து சத்தம் போடுரீங்க?”
“நீ எங்க வீட்டுல இருக்க.. என் பொறுப்பு.. நீ கீழ விழுந்து கை கால உடச்சுகிட்டா.. என்னைத் தானே உன் பாட்டி கேப்பாங்க?”
அவனை நோக்கி தலையை மட்டும் திருப்பியவள், “ஜீ.. எனக்கு மவுன்டெய்ன் கிளைம்பிங்க் வரைக்குமே தெரியும்.. இதெல்லாம் ஒன்னுமே இல்ல.. சொ, ரிலாக்ஸ் பாஸ்.. அப்படியே விழ போனா பயில்வான் மாதரி இருக்கீங்க.. பிடிக்க மாட்டீங்களா என்ன?” எனவும்
“நான் பயில்வானா? எல்லாம் என் நேரம்.. என்னாவோ செய்” என்று அவன் நகர்ந்துவிட்டான்.
மதிலின் மறுபுறம் நோக்கி, “ஹெய் குட்டீஸ்.. இங்க கண்ணனு யாரவது இருக்கீங்களா?”. சத்தம் கேட்டுத் திரும்பிய சிறுவர்கள் ‘இல்லை’ எனவும் இறங்க தயார் ஆனாள்.
அந்தோ பரிதாபம். அவள் தொங்கிக் கொண்டிருந்ததோ எட்டடி சுவர். தாவி குதித்த வேகத்தில் வாளியும் கீழே கவிழ்ந்ததை உணர்ந்தவள் என்ன செய்வதென்று விழித்தாள்.
‘பொட்டிருப்பதோ பாவாடை தாவணி! சருக்கி இறங்கினால், வயரிலும் கையிலும் சிராய்ப்பு ஏற்படும்.. அதையும் பொருட்படுத்தாது இறங்கினால், சரிந்த வாளி மேல் கால் பட்டுச் சருக்கி அருகிலிருக்கும் ரோஜாச் செடியின் முள்ளில் தஞ்சம் புகவேண்டியிருக்கும்.
தள்ளி குதிக்கலாமென்றால், ஏற்கனவே காற்றில் பறந்த பாவாடை ரோஜாச் செடி முள்ளில் மாட்டி இருந்தது. பத்து மீட்டர் சில்க் ஷிபானில் தானே தைத்த அழகிய பாவாடை!’ அவளின் பல மணி நேர உழைப்பு அது.. கிழிக்க மனமில்லை! என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவள் கை வலிக்க ஆரம்பித்தது.
தள்ளி இருந்த தென்னை மரத்தில் ஒற்றைக் காலை பதித்து, ஒய்யாரமாய் கைகளைக் கட்டி சாய்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு எரிச்சலாய் வந்தது.
‘நிற்கரத பாரு.. பனை மரம் தென்ன மரதுல சாஞ்சுகிட்டு’ முணுமுணுத்தவள், ‘ஆஹா.. ஆஹா.. இந்த ரணகளத்திலும் என்ன கவிதை.. என்ன கவிதை.. அசத்தர சுதா!’
இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதென்று, “பனை மரம்.. கொஞ்சம் ஹெல்ப் பண்றது..” என்று அவனை அழைத்தாள்.
“என்னது பனை மரமா? மரியாதை வானத்தை தொடுது?” குரல் அதிர்ச்சியை வெளிப் படுத்த
‘இவன் வேற நேரம் காலம் தெரியாம, எதுக்கு எடுத்தாலும் அதிர்சியாகிட்டு..’ எண்ணியவள், “மிஸ்ட்ர் பனை மரம் சார் ப்லீலீலீ..ஸ்.. சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!”
“இல்ல கொஞ்சம் நேரம் முன்னாடி யாரோ நான் அழகான பொண்ண தொடுர சான்ஸுகாகவே காத்திருக்கரதா சொல்லிடாங்க. அதுனால சாரி… என்னால முடியாது!”
‘ம்கும்… இவன் ஞாபக சக்தியில இடி விழ! சொன்ன எதுவும் கேட்காம கனவு கண்டுட்டு இத மட்டும் நல்லா கேட்டு வச்சிருகான்!’
“மிஸ்டர் பனைமரம்.. சார்.. கொஞ்சம் அந்த வாளியை ஒழுங்கா வையுங்க சார்.. நீங்க ரொம்ப நல்லவரு தான்! நான் தான் ஏதோ தெரியாம சொல்லிடேன்… கை வலிகுது சார்.. பிளிஸ்”
அவள் பொறுமையை அதற்கு மேல் சோதிக்காமல் வாளியைக் காலின் கீழ் பார்த்து வைக்க, அதில் மெதுவாக அவள் குதிக்க, வாளி மீண்டும் அந்த தண்ணீர் ஊற்றப் பட்டிருந்த செம்மண்ணில் புதைந்து சரிய, அதை எதிர்பார்த்தவன் அவள் விழாமல் கையை தாங்கி பிடித்தான்.
அவள் கைபிடித்து மெதுவாய் இறக்கி விட்டவன், அருகில் குனிந்து அவள் பாவாடையை, அது கிழிந்து விடாமல், பொறுமையாய் முள்ளிலிருந்து விடுவித்தும் விட்டான்.
“கால அங்க வாஷ் பண்ணிக்கோ” என்று தண்ணீர் குழாயை அவன் காட்ட, கண்களை குருக்கி, உதடு கடித்து அவனைத் தான் முறைத்து  நின்றாள்.
“இப்போ என்ன?” அவன் புருவம் உயர்த்த
“வேணும்னு தானே பக்கெட் விழர மாதரி வச்சிங்க? இந்த ஆக்ட் எல்லாம் என் கிட்ட வேண்டாம் சொல்லிட்டேன்”
“ஓய்.. நீ என்னை என்ன நினைச்ச? அப்படியே கீழ விழுனு விட்டிருக்கணும்.. போனா போகுதேனு இறங்க ஹெல்ப் பண்ணினது தப்பா போச்சு!” கொஞ்சம் கோபமாய் சத்தம் உயர்த்தவும்
கண்களை சுருக்கி அவனைக் கூர்ந்து பார்த்து, “ம்ம்.. உங்க கோபம் நியாயமானதா தெரியுது.. வாளி அதுவா தான் சரிஞ்சிருக்கு!” என்று வாய்தா வாங்கியவள்,
“வீட்டுக்கு வந்தவங்கள விழாம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடமையைச் செய்ததுக்குப் பாராட்டை எதிர் பார்க்கக் கூடாது சரியா.. அப்புறம் கண்ணன் வந்ததும், நான் வந்துட்டு போனதா சொல்லுங்க!”
ஏதோ அவன் இருப்பதே அவளுக்கு உழைக்கத் தான் என்பது போல அசால்டாய் சொல்லிவிட்டு, குழாயில் கால்களை கழுவி, வீட்டு வாயிலில் கழட்டி விட்டிருந்த செருப்பை அணிந்தவள்  நடை பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.
அவளையே புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் கேட்டின் அருகில் போகவும், “ஹலோ.. ஓய்… ஹேய்..” எல்லா விதத்திலும் கூப்பிட்டும் திரும்பாமல் போகவே, “ஹலோ…அறுந்த வாலு.. உன்னை தான்..” என்று குரலுயர்த்திக் கத்தினான்.
அவனை திரும்பிப் பார்த்தவளிடம் தன் கை உயர்த்தி, கையிலிருந்த டப்பாவை ஆட்டிக்கொண்டே “பேரென்ன?” என
டப்பாவைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ சிரித்துக்கொண்டே, “லட்டு!” என்று கத்திவிட்டு கேட்டின் பின் மறைந்தாள்.
இருவர் முகமும் புன்னகையைத் தழுவியிருந்தது.
‘லட்டா? ஆமா லட்டு மாதிரி தான் இருக்கா!’ மனம் ஆர்பரித்தது.
யாரிடமும் இது வரை ஏற்படாத ஒரு ஈர்ப்பு..  அவளோடு இருந்த நேரம் அவனுக்கு வினாடியாய் கரைந்தது.
சுசிலா கணவன் இல்லாத நிலையில் அவர் தாத்தாவின் நிழலில் வந்தபின், கணவன் இல்லாததினால் அவர் பெயர் கெட்டுவிட கூடாதென்பதால் பேச்சிலும் பழக்கத்திலும் கவனமாயிருந்தார்.
சின்ன வயதிலேயே தாத்தாவின் தொழிலை அவர் கையில் எடுத்தவர், அனைவரையும் தள்ளியே நிறுத்தினார்.
குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர யாரையும் வீட்டில் அனுமதிக்க மாட்டார்.
நூல் போல் சேலை. மகனும் அவ்வழியே பெண்களோடு அளவான பழக்கம். சிலரே நட்பு வரை வந்திருந்தனர். இவனோடு பழகும் அனைவருக்கும் இவனை யாரென்று தெரியும். இவன் பேச்சுக்கு மறுபேச்சென்பது இது வரை இல்லை.
இவன் கீழ் வேலை செய்யும் ஒருத்தியைத் தவிர இவனிடம் ஒருத்தரும் நெருங்கியது கூட கிடையாது.
இவன் கடைக் கண் பார்வை தன் மேல் விழாதா என்ற எதிர்பார்ப்போடு பார்க்கும் பெண்கள் அதிகம்.
அவர்கள் எல்லோரையும் விடச் சுதா தனியாகத் தெரிந்தாள். உருட்டி உருட்டி முறைத்த அந்த கண்கள் நினைக்க நினைக்க, முகம் புன்னகையைத் தழுவியது.
இவள் போல் அவனை உருட்டி மிரட்டி.. கூட-கூட பேசியவர்கள் என்று யோசித்தால் இவள் மட்டும் தான்! அவளை பாற்றி மீண்டும் மீண்டும் அவன் யோசிக்க அதுவே போதுமானதாய் இருந்தது.
“சேட்டைச் சிங்காரி!” புன்னகைத்துக் கொண்டான்.
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விடமாட்டேன்… (படத்தில் வரும் பாடல் வரிகள்)

Advertisement