Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 10
 
நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க
“ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா இன்டெர்வியூக்கு போயிருக்கணும்?” பாட்டி கேள்வியோடு பதிலை முடிக்க
“பா..ட்டி!! தப்பு தப்பா சொல்லாதீங்க! மத்தவங்களுக்கு நாம உதவினா.. கடவுள் நமக்கு உதவுவார்!!”
“நீ நேரத்துக்கு போயிருந்தா இன்டெர்வியூ தான் அதுவே நடந்திருக்குமே.. நீ சொன்னதை வச்சு பார்த்தாலுமே அந்த பையனுக்கு நீ எங்க உதவின? உபத்திரவம் தான் செஞ்ச!”
அவர் சொல்வது சரி என தோணவே, “போங்க பாட்டி.. நீங்க ரொம்ப பேசரீங்க”, பொய்யான சிடுசிடுப்போடு தன் அறைகுள் செல்ல இருந்தவளைப் பாட்டியின் சத்தம் தடுத்தது.
“சுதாமா.. இங்க வா. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இது நீ பிறந்து வளர்ந்த இடம் மாதரி இல்ல. நீ வளர்ந்த கலாச்சாரம் எனக்கு தெரியாது.. அந்த ஆட்களையும் தெரியாது. ஆனா இது சென்னை. எல்லா தரப்பட்ட மக்களும் வாழர இடம். இங்க நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு பார்த்து தெரிஞ்சுக்க முடியாது. ரோட்டில போன ஒருத்தனுக்கு என்ன தைரியத்துல உன் வண்டியில இடம் கொடுத்த?
உக்காந்தவன் நல்லவனா போனதால பரவால.. அதுவே கேடுகெட்டவனா இருந்திருந்தா? அவன் கைய்ய வச்சிட்டு சும்மா இருந்திருபான்னு நினைக்கரியா? நான் அந்த காலத்து ஆள் தான்.. இந்த காலத்து பிள்ளைங்க எனக்குத் தெரியாது! ஆனா எந்த காலத்திலையும் நல்லவங்க நடுவில கெட்டவங்க இருக்க தான் செய்யராங்க. பாக்கரவங்க எல்லாம் நல்லவங்கனு நினைச்சு பழகர உன் வெகுளித்தனம் இங்க சரிபடாது மா.. சுலபமா ஏமாத்திடுவாங்க! இனி மேல் இந்த மாதரி தெரியாதவங்களோட பேச்சு.. பழக்கம் வச்சுக்கக் கூடாது.. சரியா? வெளுத்தது எல்லாம் பால் இல்லடா கண்ணு!”
‘பாட்டியின் வார்த்தையில் எத்தனை உண்மை! ஆழம் தெரியாமல் கால் விட்டு, இன்று இங்கே! தலை மறைவாய்.. இன்னும் வாய் அடங்கவில்லையே? தாயும் தகப்பனுமாய் இருந்த அத்தையையும் மாமாவையும் விட்டு ஒளிந்து வாழ வேண்டிய அவலம் எதனால்? வாய்.. அடக்கத் தெரியாத நாவினால் தானே? பாட்டி சொல்லுவது முற்றிலும் சரியே.. இனி பார்த்துப் பழக வேண்டும்.. எந்த புற்றில் எந்த பாம்போ?’ மனம் பழையதை அசை போட, அமைதியாய் அவள் அறையின் புகுந்தாள்.
மாலை வரை அவள் வைராக்கியம் இருக்க, அமைதியாய் அறையினில் அடைந்து கிடந்தாள். சூரியன் கடலுக்குள் மூழ்க ஆரம்பிக்கும் நேராம் மாடியில் நின்று கொண்டிருந்தவள் கண்களும் இதயமும் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டின் தோட்டத்தில் தஞ்சம் புக, சிந்தனைகள் சிதற ஆரம்பித்தது. ருசி கண்ட பூனையாய்.. மலரின் தேனைப் பருகிய வண்டாய்.. மனம் அவளை பாடுபடுத்த ஆரம்பித்தது.
நேரத்தைப் பார்த்தாள், அவளைத் தேடி சிறுவர்கள் வர நேரம் இருக்க வேக வேகமாய் கிளம்பி பாட்டியிடம் வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு தன் சிறகை விரித்தாள்.
கேட்டில் இருந்த காவலாளியிடம் சில நிமிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்தவள் கண்கள் தானாய் அங்கிருந்த நெல்லி மரத்தில் நிலைக்க, ஒரு கொத்து நெல்லிக் கனியோடு வீட்டை நோக்கி நடந்தாள். நடையில் தயக்கமில்லை. அன்று போல் படபடப்பில்லை.
கண்கள் நாலாபுறமும் வலை வீச அவனைக் காணும் தாகம் மட்டுமே. வறண்ட நாவு கார்மேகத்திலிருந்து வரப் போகும் ஒரு சொட்டுக்காக தவமிருக்க.. கண்கள் காட்டும் தாகம்!
மொட்டை மாடியிலிருந்த உடற்பயிற்சி அறையிலிருந்து பயிற்சி முடித்துக் குளித்து வந்தவன் பார்வை சரியாய் அவள் மேல் விழ, அஷோக்கும் யோசிக்கவில்லை. மனதோடு குரலிலும் ஒரு துள்ளல்.
“ஹேய்.. லட்டு! இங்க மேல பாரு!”
‘ஹெய்.. லட்டு’-டிற்கு சுற்றும் முற்றும் பார்த்தவள், அவனுடைய, ‘மேல பாரு’வில் தலையைத் தூக்கி மேல் நோக்க, அந்த நாளின் பிறப்பின் பயனாய் அவன்!
தங்க தாமரையாய் முகம் மலர, “அங்கையே இருங்க.. மேல வறேன்..”. அவனைப் பார்த்தபின் நடப்பதா? சிறகு இல்லையே என்ற வருத்தம் தீரக் கால் வேகமெடுத்தது.
மேலும் கீழும் மூச்சிரைக்க அவன் முன் நின்றவளைக் காணக் காண அவனுக்குள் பித்தமா, போதையா? எதுவோ.. அது தலைக்கேறியது!
அங்கிருந்த நீளமான சுமைத் தாங்கியைக் காட்டி, “உக்காரு.. பொறுமையா வரவேண்டியது தானே..” செல்லமாய் தான் கடிய முடிந்தது.
அவனைப் பார்த்துச் சிரித்தவள், கொறித்துக் கொண்டிருந்த நெல்லி தொண்டையை அடைக்க அவன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலுக்காய் கை நீட்டவும், “உள்ள இருந்து வேற எடுத்து தரேன் இரு.. இது நான் வாய் வச்சி குடிச்சேன்..”
அஷோக் சொல்லி முடிக்குமுன் சுதா அதைத் தொண்டையில் இறக்கியிருந்தாள். நெல்லியாலோ அவன் சுவைத்த மீதி என்பதாலோ தண்ணீர் நாவில் தேனாய் இனித்தது.
அவள் இதழோரம் வழிந்த அந்த இரண்டு சொட்டுக்காய் அவன் நா வரண்ட மாயமென்ன? அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மாயை அது! அவனுக்கோ.. அனுபவிக்க துடிக்கும் மாயை!
பாட்டிலை அருகில் வைத்துவிட்டு, அங்கிருந்த செடிகளை பார்வையிட்டுக்கொண்டே, “ஒரு இடத்தை வேஸ்ட் பண்றது இல்ல..”
வாய்க்குள்ளே முனகிக்கொண்டே அவள் தலையாய கடமையாய் அடுத்த நெல்லியைக் கடிக்க, அது தந்த புளிப்பில் கண் தானாய் சுருங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்..”என்று வாயில் சுரந்த உமிழ்நீரை உள்ளிழுத்தாள்.
சுதாவை பார்த்தாலே கிரங்கிபோபவன் நிலை தான் பாரிதாபமாய் போனது. நாள் முழுவதும் இமைக்காமல் பார்க்கத் தூண்டும் அவன் அழகிய முகபாவம்.
புளிப்பில் சுருங்கிய அவள் மாய கருநீலக் கண்கள் அவனை வேரோடு சாய்த்ததென்றால், எச்சில் ஈரத்தில் மேருகேரியிருந்த அவள் உதடு நெல்லிக்கனியோடு அவனையும் உள்ளிழுக்கவே செய்தது.
அவனையறியாமலே அவன் கண்கள் அவளை மேலிருந்து கீழ் நோக்க, கண்கள் ஒவ்வொரு இடத்திலும் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. அவளைப் பிடித்ததால் அவள் எல்லாம் பிடித்ததோ இல்லை அவள் எல்லாம் பிடித்தால் அவளைப் பிடித்ததோ அவன் அறியவில்லை. மொத்தத்தில் அவளைக் கண்டால் அவன் வசம் அவனில்லை.
ஒருமுறை அவள் சிலிர்த்துவிட்டு.. ஒன்றை அவனிடம் நீட்டி,”டேஸ்ட் வேணும்?” கேள்வியாய் தலையை மேலும் கீழும் அட்ட, “அம்மா தாயே ஆள விடு… அத நீயே சாப்பிடு.. நீ சாப்பிடுரதை பார்த்தாலே எனக்குப் பல் கூசுது!”
அவளிடமிருந்து பார்வையை வலுக்கட்டாயமாய் பிரித்து, பேசிக்கொண்டே அங்கிருந்த மல்லி கொடியில் காய்ந்த சுள்ளிகளை ஒடிக்க ஆரம்பித்தான்.
“அழகா கிளம்பி வந்திருக்க, வெளில போறியா?” எனவும்
“இம்ம்.. இந்த வாண்டுங்கள கூட்டிட்டு மாள் போறேன்.. ‘ஹாகின் டாஸ்’ ஐஸ் க்ரீம் சாப்பிட! ஒழுங்கா படிச்சா வாங்கி தறேன்னு சொல்லியிருந்தேன்”
“ஓ.. வந்து நாள் ஆச்சே.. ஊர் சுத்தி பாத்தியா? பிடிச்சிருக்கா ஊர்?”
“தனியா போய் என்னத்த பாக்கனு எங்கையும் அவ்வளவா போகலை… நீங்க ஃப்ரீயா இருக்கும் போது சொல்லுங்க எங்கையாவது போகலாம். பின்னாடி இருக்க பீச்சுக்கு பொடுசுங்களோட போனேன். அவ்வளவு தான்! ஸோ..ஊர பத்தி தெரியல.. ஆனா எனக்கு இங்க ரொம்ப பிடிச்சிருக்கு… ஆயுசுக்கும் இங்கே இருந்திடலாம் போல இருக்கு.”
‘என்னோடு வருவாளா?’ கண்களில் நட்சத்திரங்களோடு அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ வாயை அரைத்துக்கொண்டே அங்கிருந்த மலர்களை முகர்ந்த வண்ணம் பேசிக்கொண்டிருந்தாள்.
“கிரைண்டரா நீ,.. நான் பாக்கும் போதெல்லாம் ஏதாது அரைச்சுகிட்டே இருக்க? இப்பிடி கண்டதையும் சாப்பிட்டா வயறு என்னத்துக்கு ஆகும்?”
கண் சுருக்கி அவனை பார்த்து முறைத்துக் கொண்டே, “சாப்பிடுர பிள்ளையை பார்த்துக் கண்ணு வைக்காதீங்க!” என்று சிணுங்கியவளிடம் அதற்குமேல் என்ன சொல்ல..
சிரித்துக்கொண்டே, “சரி, எப்பிடி பொழுது போகுது? வீட்டில ஃப்ரீயா இருக்க நேரம் என்ன பண்ணுரதா பிளான்?”, அன்று காலை நேர்முக தேர்வுக்கு வந்ததைக் கூருவாள் என அவன் எதிர்பார்த்து ஆரம்பிக்க, அவள் பேச்சோ அவனைத் திசைமாற்றியது.
“எனக்கு இங்க நிரைய ஃபிரண்ட்ஸ்.. அவங்களுக்கு இப்போ ஸ்கூள் லீவ்.. ஸோ எனக்கு டைம் தான் பத்தமாடேங்குது!”
“இங்க சுத்திட்டு இருக்க வானரங்க உன்னோடைய ஃபிரண்ட்ஸா?”
“என்னோடைய ஃபிரண்ட்ஸ் பத்தி தப்பா பேசாதீங்க!” அவள் முகம் சுழிக்க
“சரி பேசலை! நீ பயமுறுத்தாத! இதுங்க பின்னாடி சுத்தரத விட்டுட்டு ஏதாவது உருப்படியா பண்ணினா என்ன?”
மற்றவர் கண்களுக்கு வெட்டியாய் விளையாடுவது போல் தெரிந்தாலும், அந்த பிள்ளைகளுக்கு விளையாட்டோடு அவர்கள் திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
கோபம் எட்டிப் பார்க்க, “நான் ஒன்னும் சும்மா சுத்தல.. அவங்களோட பேசி பாருங்க அவங்கட்ட இருக்க ச்சேஞ்சஸ் தெரியும்..”
உடனே இறங்கி வந்தவன், “அச்சோ.. கொவிசுகிட்டியா? நான் தான் கேட்டேன்னா.. அதை பெருசா எடுத்துப்பியா?”
“நீங்க சொல்லறத மட்டும் தான் பெருசா எடுத்துப்பேன்” அவன் கண்ணைப் பார்த்துச் சொல்லவும் அவன் வாயடைத்துப் போனான்.
உள்ளுக்குள் ஒரே குஷியாகிப் போக முகத்தில் அதைக் காட்டாமல் அங்கிருந்த மீதி தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான்.
“அது நான் குடிச்சது.. என் எச்சில் பட்டது..” அவனுக்கும் அது கேட்கவில்லை போலும், ரசித்து குடித்துக் கொண்டிருந்தவனிடம்,
“சுசிலா அக்கா, உங்களுக்கு..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க
’அம்மா இவளுக்கு அக்காவா?’. அவனுக்குப் புரையேறி விட்டது. குடித்த தண்ணீர் மூக்கின் வழி வந்துவிட, இருமலும் நிற்காமல் வரவும் அவள் பயந்து போனாள்.
கண், மூக்கு நுனி, காது மடல் என்று சகலமும் கோவை பழமாய் மாறிவிட அவன் முதுகைத் தான் அவளால் தட்டி விட முடிந்தது.
இருமல் நிற்கவும் அவனையே கலவர முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “அம்மாவ அக்கானு கூப்பிடாத” என்றான்.
அவனை எதிர்த்து ஒன்றும் கேட்கவில்லை. அவன் பளீர் நிறத்திற்குச் சிகப்பு கொஞ்சம் அதிகமாகவே தெரிய, அவன் முகத்தையே பார்த்து நின்றாள். அவன் சொல்லிவிட்டான் அவ்வளவு தான்.. என்பது போல் அவன் சிவத்த விழியைப் பார்த்துக்கொண்டே, “ம்ம் சரி.. சொல்ல!” என்றாள்.
கொஞ்சம் குழம்பி விட்டான். அம்மாவ எதுக்கு ‘அக்கா’ சொல்ரா? என்ன பாக்கர பார்வைக்கும் அம்மாவ, அக்கானு கூப்பிடுரதுக்கும் சம்பந்தமே இல்லியே.. மனதில் தோன்றியதைக் கேட்டும் விட்டான்.
“நான் யாருனு தெரியும் தானே?”
“ஓ.. தெரியுமே..” என்று கெம்பீரமாய் ஆரம்பித்தவள், திக்கித் திக்கி “தோட்..ட..காரர்?” என்று கேள்வியாய் பார்க்க
“இன்னும் இத விடலியா?” தலையில் கை வைத்துவிட்டான்.
‘இங்க வந்து இத்தனை நாள் ஆச்சு.. இன்னும் நான் யார்னு தெரியல..’ என்ன நினைப்பதென்றே தெரியவில்லை. தன்னை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லையோ.. எதுவும் வேண்டாம்.. பெயர் மட்டுமாவது கேட்டிருக்கலாமே.. மனம் வாடியது.
அவனுக்கு மட்டும் அவளைப் பற்றி என்ன தெரியும்? மீனாட்சியம்மாளின் பேத்தி என்பதைத் தவிர! ஏன் மீனாட்சியம்மாளுக்கே அவளைப் பற்றி எதுவும் தெரியாதே.
அவனுக்கென்ன தெரியும் அவன் பெயர் தெரிந்து கொள்ள அவள் படும் பாடு. அவன் முன் வரும் வரை ஆயிரம் கேள்விகள் உள்ளுக்குள், வந்த பின்..  அவனை பார்த்த பின்.. ஏதோ சிந்தனையோடு சமைக்கும் தருணம் குளிர்சாதனப் பெட்டியை திறந்து வைத்து கொண்டு, ‘என்ன எடுக்க வந்தோம்?’ என்று முழிக்கும் அதே நிலை தான் அவளுக்கும்!
‘உங்கள எனக்கு பிடிச்சிருக்கு.. உங்கள பத்தி சொல்றீங்களானு கேக்கவா முடியும்? எனக்குத் தான் தெரியலையே.. கொஞ்சம் வாயத் திறந்து எதையாவது சொன்னா என்ன? இதுல கப்பல் கவுந்த எபக்ட் வேற.. ஹப்பா.. கண்ண கட்டுதே இவன பத்தி எப்படி தான் தெரிஞ்சுகரதோ? வெக்கத்தை விட்டு இவன்டையே கேட்டா என்ன?’
நேரம் கரைய மீனாட்சியம்மாளிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க பாட்டி..”
“..”  “இல்ல பாட்டி இன்னும் கண்ணனை பாக்கல.. இருந்தா கூட்டிட்டு வறேன்.”
“..”   “ஏதுகெடுத்தாலும் குருக்கு கேள்வி கேட்டா எப்படி… இங்க தான் இவ்வளவு நேரம் இருந்தேன். தோட்டத்தை பார்த்திட்டு!” அவனை பார்த்துக்கொண்டே பதில் கூறியவள், “சரி சரி வரேன்… அங்கையே விளையாடிட்டு இருக்க சொல்லுங்க.. வரேன். பாய்! வைக்கறேன்!” என்று அதை அணைத்துவிட்டு அவனைப் பார்க்க, புன்னகை முகமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் பாய்ந்தாள்.

“எல்லாம் உங்களால தான்! ஏதேதோ பேசி டைம் ஆக்கிட்டீங்க! இப்போவாது நான் இங்க வந்த காரணத்தை கேக்க போறீங்களா இல்லியா?”
“ஓ.. காரணம் இருக்கா? சும்மா என்னைப் பாக்க வந்தனு நினைச்சேன். ம்ம்.. சரி, சொல்லு! என்ன விஷயமா வந்திருக்க? அதுக்கு முன்னாடி… ஏதோ கண்ணன்-னு பேசிட்டு இருந்தியே..”
“அவனை கூட்டிட்டு வரதா சொல்லிட்டு தான் இங்க வந்தேன். பாட்டி தான் சும்மா அவனையே கட்டிகிட்டு அழராங்க.. நான் வந்ததில இருந்து வரதில்லனு! விட்டா என்னை தொரத்திட்டு அவனைக் கூப்பிட்டு வச்சுப்பாங்க போல இருக்கு! அதுக்குத்தான் அவனைப் பாக்க நினைச்சேன். எனக்குப் பணக்கார பையனுங்கனாலே பிடிக்காது… எல்லாம் இந்த பாட்டியல அவன தேடி அலைய வேண்டி இருக்கு!
இப்போ அவனை பார்த்தா கூட்டீட்டு போகணும்.. அங்க என் கூட விளையாட வந்த பசங்களோடெல்லாம் இவன் விளையாடுவானோ என்னமோ.. எதுக்கும் அவனை அப்புறம் பார்த்துகறேன்!”
“அப்போ நான் வசதியானவனா இருந்தா என்னையும் பிடிக்காதா?” அவள் முகத்தை உற்று நோக்க,
“பச்… நீங்களும் மத்தவங்களும் ஒன்னா?”
உள்ளுக்குள் குதுகலம் எழும்ப, “ஓ.. அது ஏன்?”
“ஏன்னா.. அது அப்பிடி தான்.. சும்மா, பாட்டி மாதரி குருக்கு கேள்வி எல்லாம் கேக்க கூடாது!” கூறிவிட்டு அவளோ முகத்தைத் திருப்பிக் கொள்ள
“கண்ணன் உன் குட்டி ஃப்ரெண்ட்ஸ் கூட கண்டிப்பா விளையாட மாட்டான் தான்… இருந்தாலும் அவன் மோசம் எல்லாம் இல்ல.. கொஞ்சம் நல்லவன் தான். உனக்கு நிஜமாவே கண்ணனைப் பாக்க வேண்டாமா?”
“ம்ம்ம்… ஹும்ம்… இப்போ வேண்டாம்..”
“எனக்கென்னமோ உனக்குக் கண்ணனை பிடிக்கும்னு தோணுது.. ஒருதரம் பார்த்துட்டு போயேன்” அவன் தான் கண்ணன் என்று அவளுக்குத் தெரியும் பொழுது அவள் முகத்தில் ஏற்படும் உணர்வுகளை அவனுக்குப் பார்க்க வேண்டும் போலிருக்க,
அவளோ, “அவன் இருக்கட்டும்… எங்க போகபோரான்? இங்க தானே இருப்பான்.. அப்புறம் பாத்துகறேன்! உங்கள பத்தி சொல்லுங்க.. உங்க பேர்? ஊர்? இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க இவங்க சொந்தமா? ஏதாது சொல்லுங்க..”
ஹப்பாடா.. தன்னை பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் காட்டுகிறாள். அவனுக்கு அதுவே போதுமானதாய் இருந்தது. அவன் அவளைப் பற்றி இன்னும் தெரிந்துக் கொள்ளவில்லையே.. கேட்டிருக்க வேண்டுமோ?
மீண்டும் கைப்பேசி சிணுங்க, அதை அணைத்துவிட்டு, “நிம்மதியா நாலு வார்த்தை பேச விடுரது இல்ல.. சரி நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு போறேன்.
என் ஃபிரெண்ட் இன்னைக்கு என் கிட்டப் பேசினான். மும்பைல மாடலிங் ஏஜென்சி வச்சிருக்கான். வெரும் லக்ஷுரி பிராண்ட்ஸ் மட்டும் தான் டீல் பண்றான். அவன் புது ஃபேஸ், அதாவது புது மாடல், வேணும்னு சொல்லிட்டு இருந்தான்.. எனக்கு உங்க நினைப்பு தான் வந்துச்சு!”
“நானா? ஏன்?”
“ஏன்னா? நீங்க பாக்க ரொம்ப ஸ்மார்ட்டா.. ஹயிட்டா.. ஹாலிவுட் ஹீரோ மாதரி அநியாயத்துக்கு ஹான்சம்மா இருக்கீங்களா..” அவள் கண்கள் ஒரு மயக்கத்தில் மிதக்க.. அவன் குறும்பாய் அவளைப் பார்க்கவும், ‘ஜொள்ள ரொம்ப பப்ளிக்கா விட்டுடேனோ?’ வெட்கம் அவளை பிடுங்கித் தின்ன அடுத்து அவள் விஷயத்தைக் கூறுவதற்குள் அவனோ, “ஓஹ்.. அப்போ நீ என்னை ஸயிட் அடிகர!”
‘இப்பிடி இருக்க உன்னை சைட் அடிகாட்டி.. என் கண்ணுல கோளாறு!!’ உள்ளுக்குள்ளே முணுமுணுத்தவள்
“சொல்ல வந்ததைச் சொல்ல விடுங்களேன்.. பாக்க வாட்டம் சாட்டமா இருக்க நீங்க எதுக்கு இங்க வெயில்ல கஷ்ட பட்டுகிட்டு.. நீங்க விருப்பட்டீங்கனா.. அவன் கிட்ட சொல்றேன்..” முடிக்காமல் அவன் முகம் பார்க்க, அவனோ வந்த சிரிப்பை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க எதுக்கு சிரிக்கரீங்க?”
அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆசை எழும்ப, அடக்கிய புன்னகையுடன், “அப்போ நீ என்னை நெஜமாவே லுக் விட்டுட்டு இருக்க… அப்படி தானே..”
‘இவன் ஒருத்தன் மானத்தை வாங்கமா விட மாட்டான்..’
“எதோ.. பாவம் கஷ்ட்ட படுரீங்களேனு உதவ வந்தா.. ரொம்ப தான் பண்றீங்க! இப்போ எதுக்கு சிரிப்பு?”
கடந்த இரண்டு வருடமாக இவன் முகம் வராத பிஸினஸ் மெகஸின் இல்லை! ‘மோஸ்ட் அவைலபில் பேசிலர்’, ‘டாப் த்ரீ யங் சக்ஸஸ்ஃபுள் பிஸினஸ் மேன்!’ என்று இந்த மாதம் கூட இரண்டு ஆங்கில பத்திரிக்கைக் கவர் பேஜில் சிரித்துகொண்டு, பலர் கனவில் வலம் வருபவனை அவள் தோட்டகாரனாய் மாற்றியதோடு நில்லாமல், புது வேலைக்கு வழி செய்து கொண்டிருப்பது அவனுக்கு முகத்தில் புன்னகையை அரும்ப செய்தது.
“சாரி.. சிரிக்கல!”
“நீங்க குட் லுக்கிங்-னு பெரும பட்டதே இல்லாத மாதிரி ரொம்ப ஆக்ட் விடாதீங்க.. எனக்கு முன்னாடி யாருமே சொன்னதில்லாத மாதிரி என்னை பாக்கதீங்க!”
“சொல்லி இருக்காங்க.. ஆனா நீ சொல்லும் போது கிடைச்ச கிக் அதுல இருந்தது இல்ல.. சரி, நீ சொல்லிட்டு இருந்ததை சொல்லு!”
“நான் என்ன கதையா சொல்லுறேன்… நீங்க தான் சொல்லணும், எனக்கு உங்கள பத்தி இன்னும் ஒண்ணுமே தெரியலையே.. உங்க பேரு என்ன? எந்த ஊர்? இந்த மாடலிங் ஆஃப்பர் பிடிச்சிருக்கா? அவன் கிட்டச் பேசி பாக்கரீங்களா? எது எப்பிடியோ.. பெரியாள் ஆனதும் என்னை மறந்திடக் கூடாது..சரியா?”
அவள் அவனையே பார்க்க அவன், “மறக்க மாட்டேன்!”
அவனே, “ஆமா உனக்கு எப்படி இப்படி ஒரு ஃப்ரெண்ட்?”
“என் கூட படிச்ச மீரா-வோட ஹப்பி தான் ராகுல். இப்போ.. கொஞ்சம் மாசம் முன்ன தான் ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆச்சு! அவ மூலமா ஃப்ரெண்ட் ஆனாலும் அவள விட அவன் தான் எனக்கு க்லோஸ்! எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்.. அத பத்தி பேசினப்ப தான் மீரா, அவ ஃப்ரெண்டுனு ராகுல் கிட்ட இன்றோ குடுத்தா! ரெண்டு வருஷ ஃப்ரெண்ஷிப்.. எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான்.. அவ்வளவு க்லோஸ்!”
“ஊரெல்லாம் ஃப்ரெண்ஸ்-னு சொல்லு!”
“ம்ம்.. ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்.. சொந்தம்னு கொண்டாட யாரும் இல்ல தானே அதனால அத சரி கட்ட கடவுள் பாவம் பார்த்து கொடுக்கரார் போல!”
அந்த புன்னகையில் ஒரு சோகம் எட்டிப் பார்க்க, ‘நான் இருக்கேன்’ என்று சொல்லத் தான் அவனுக்கு ஆசை.. ஆனால் அதற்கு இன்னும் சந்தர்ப்பம் வரவில்லையோ.. அவள் யார் அவனுக்கு? தோழியா? காதலியா? யார்? பெருமூச்சு மட்டுமே..
அவளைப் பார்த்ததும் ஒரு கிரக்கம். மயக்கம்! ஏதேதோ வயதிற்குறிய உணர்வுகளும் எண்ணங்களும். இது தான் முதல் முறை ஒரு பெண்ணை இப்படி பார்ப்பதும் நினைப்பதும்! அவளைப் பிடித்திருக்கிறது, அதில் சந்தேகமில்லை. பிடித்தமும் காதலும் ஒன்றா? இல்லை.. ஆனால் இவள் மேல் பிடித்தம் மட்டும் இல்லையே.. காதல் தானோ? ஆம் காதலே தான் மனம் சொன்னது!
ஒருவரை பற்றி ஒன்று தெரியாமல் காதல் வருமா என்ன? ஏன் வராது? வரும்! காதலுக்கு தான் கண், காது, மூக்கு, மூளை என்று எதுவும் இல்லையே.. இதயமும் அதில் வரும் உணர்வு மட்டும் தானே.. அதனால் தான் கண்டதும் பலருக்கு காதல் மலர்கிறது.  
மீண்டும் அழைப்பு வர, அடக்கப்பட்ட எரிச்சலுடன், “பாட்டி! அது தான் வரேனு சொன்னேனே..”
“..”
“நீயா… இரு டா வரேன்… சரி நீ அவன அடிக்காத! வந்துட்டே இருக்கேன்… சின்ன பைய்யனோட சண்ட போடாத..”
அஷோக்கை பாவமாய் பார்த்தவள், “அங்க பசங்க சண்ட போடுராங்க.. நான் கிளம்பணும்..?”
கிளம்ப மனமே இல்லாமல் தொங்கி போன முகத்தோடு, “கிளம்பட்டா? உங்கள பத்தி கேட்டா.. என்னை பத்தி கேட்டுட்டு இருக்கீங்க..”
இப்பொழுது தான் அவனைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் விசாரிக்க ஆரம்பித்தாள். அதற்குள்ளா.. இன்னும் கொஞ்ச நேரம் கிடைக்காதா என்றிருந்தது.
சுதாவின் ஏக்கத்தை அதிகப் படுத்த, “உன் கூட சுத்திட்டு இருக்க உன் குட்டி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டிருந்தா கூட என்னைப் பத்தி சொல்லி இருப்பாங்க! ஆனா உனக்கு இன்னும் என்னை பத்தி எதுவுமே தேரிய!”
“ஏன்னு கேக்காம கண்ண மூடுங்க!”
கண்ணை மூடியவனிடம், “உங்கள பத்தி எனக்கு யாரும் சொல்ல வேண்டாம். நானா தெரிஞ்சுகறேன்.. நேரம் வரும்போது. சரி, எனக்குத் தான் தெரியல… உங்களுக்கு நேர்ல பாக்கிர என்னை தெரியுதானு பாக்கறேன். என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேன்?”
தவரான கேள்வி! அவன் தான் அவள் வந்ததும் முதல் வேலையாய் அவளை தலை முதல் கால் வரை பார்த்து கண்களாலே விழுங்கிவிட்டானே..
“மிட்-நைட் ப்ளூ மாட்(matte) ஃபினிஷ் சாட்டின் டிரெஸ். முட்டி வரைக்கும் முன்னாடி, தரை தழைய பின்னாடி..”
அவனுக்காக உடுத்தி வந்திருந்தாலும் அவன் கவனிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. வாயெல்லாம் பல் என்பது போல் ஒரு விரிந்த புன்னகை அவளிடம்! வேறு யாராவது இதே கேள்வியை அவனிடம் கேட்டிருந்தால் அவனுக்குத் தெரிந்திருக்காதோ..
“சரி.. என்னுடைய கண், என்ன கலர்?” சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“தெரியல..”
புன்னகை வந்த இடம் தெரியாமல் போனது.
“உன் கண் தினமும் ஒரு கலர்.. இன்னைக்கு அந்த கருவிழியில ஒரு கருநீலம். லாஸ்ட் டைம் பார்த்தப்போ… தேன் கலந்த மாதரி இருந்தது. முதல் தரம் பர்புள் கலந்திருந்தது.. பார்த்ததும் துணியோட ரிஃப்லெக்ஷன் மாதிரி ரொம்ப கொஞ்சமா தெரியும்… அத கவனிச்சு பார்த்தா தான் அதோட கலர்னு தெரியும்!” கண்ணை திறந்து அவளை பார்த்து, “உன் நிஜமான கருவிழிய இன்னுமே பாக்கல.. நீ கலர் காண்டாக்ட் லென்ஸ் யூஸ் பண்ற!” கூற,
இதழ் துடிக்க, அவளுக்கு கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்து விட்டது.
“ஏய் லட்டு.. என்ன ஆச்சு?” அஷோக் அருகில் வரவும்
‘ஒன்னும் இல்ல..’ என்பது போல் தலையசைத்து விட்டு, “நான் கிளம்பட்டா?” என்றவளிடம்
“ம்ம்” அவன் தலை அசைக்கவும், “பாய்..” என்று ஓட அரம்பித்தாள். சுதா மனம் முழுவதும் அவன். அவன் மட்டும் தான். அவன் பெயரும் தெரியவேண்டாம்.. ஊரும் தெரியவேண்டாம்..  அவனை பற்றி எதுவும் தெரிய வேண்டாம்!
“என் பேர் அஷோக். அப்படி தான் எல்லோரும் கூப்பிடுவாங்க! ஆனா நீ அப்படி கூப்பிடாத.. என் அம்மா வேற பேர்ல கூப்பிடுவாங்க.. அப்படி தான் நீயும் கூப்பிடனும்! அடுத்து பாக்கும் போது சொல்றேன்.. என்னைப் பத்தி எல்லாம்!”
மாடியிலிருந்து படியை எட்டிப் பார்த்து கொண்டே அவளிடம் கத்த, தலையைத் தூக்கி, “இல்ல வேண்டாம்.. எதுவும் தெரிய வேண்டாம்.. தேவை படும்போது தெரிஞ்சுகறேன்.. நீங்க சொல்லவே வேண்டாம்.. இந்த பேரு எனக்கு வேண்டாம்… நீங்க பன மரம் தான் எனக்கு! என்னைக்கும்!” என்று சிரித்துக் கொண்டே பதிலை உறக்க உரைத்துச் சென்றாள்.
“லட்டு பார்த்து போ.. ஓடாத!” அவன் யாருக்கோ கத்துவது போல் அவள் ஓட.. மாடியிலிருந்து அவள் கீழே சென்று, கேட்டின் பின் அவள் தலை மறையும் வரை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டே நின்றான்.
இதனால் தான் அவளைப் பிடித்ததோ.. அவனைப் பற்றி எதுவும் தெரியாமல்.. அவன் உயரம் தெரியாமல் அவனோடு அவள் பழகுவது அவனுக்குப் பிடித்தே இருக்க, அவளுக்கு தெரியும் போது தெரியட்டும். தன்னை பற்றிச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அதனால் தானோ அவன் நிறுவனத்தில் அவள் வேலையில் அமரப்போவதைச் சொல்லாமல் விட்டுவிட போகிறான்? அது அவளுக்காய் தெரியும் தருணம் அவள் விரும்பதக்கதாய் இருக்குமா? கண்டிப்பாய் இல்லை! அவள் உணர்வுகள் காயபடுமென்று தெரிந்திருந்தால் கண்டிப்பாய் சொல்லியிருப்பான்.
அவள் ஓட காற்றில் பறந்த அந்த பெரிய பாவாடை, அதனோடு போட்டி இட்டு பறந்த அவள் இடை வரை நீண்ட அடர் கூந்தல்.. ஆண் மயிலின் தோகையைத்  தான் பெண் மயிலான இவளுக்குக் கொடுத்துவிட்டதோ… அவளைப் பார்த்து ஆசை தீராது.. அவளோடு அவன் மனமும் சேர்ந்தே ஓடியது.

l

Advertisement