Monday, April 29, 2024

    Nin Mel Kaathalaagi Nindraen

    விதியின் மாய சூழல் – 19 "அம்மா…என்னமா சொல்லுறீங்க? மாப்பிள்ளை மாறன் இல்லையா ? கதிரவ மாமாவா ? நீங்க போன்ல கதிர் மாமாதா மாப்பிளைனு சொல்லவே இல்லையேமா. அவரதா காதலிக்கிரியானும் கேட்கவே இல்லையே..." என அதிர்ச்சியுடன் ஏறக்குறைய கோபத்தின் உச்சியிலும் அச்சத்தின் விளிம்பிலும் நின்றிருந்தபடி ஏமாற்றம் அடைந்ததனாலோ ஏமாற்றப்பட்டதாலோ அதிகமான உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்த...
    தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18 பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார். "அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?" "ஆமா அண்ணி" "சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு...
    சாந்தினியின் சம்மதம் - 17 அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார். மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்....
    அன்பும் ஆஸ்தியும் - 16 ஒருவித இருக்கத்துடனும், இதற்குப் பின்னால் இருக்கும் சதியை தேடும் முடிவோடும் கதிரவன் நெய்தல் இறால் பண்ணையை அடைந்திருக்க, வாசலில் சக்கரையும் பாண்டியும் கையில் ஒரு பொட்டலத்துடன் (பார்ஸல்) நின்றிருந்தனர். "வா மச்சான்.... பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனச் சிரிப்புடன் இருவரும் கூற, "என்னடா? புதுசா ? ஏதோ பார்ஸலாம் ? கிப்ட் கொடுத்துதான்...
    "அவரு இங்கையா? இருக்கவே இருக்காது. ஒரு நிமிஷம் இங்க இருக்காரோன்னு யோசுச்சிட்டேன்..." என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், "தாத்தா...என்ன ஆச்சு ?'' எனக் கேட்க, "தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட...
    ஓடமும் உப்பு காற்றும் - 15 "அட ரெண்டு பேரு ஜோடி போட்டு எங்க போயிட்டு இருக்கீங்க?" என அவர்களின் வழியை அடைத்தபடி வந்து நின்றவர் ரோசா. "அது ஒன்னு இல்ல ரோசா அக்கா. இன்னு ஆறு மாசதான இருக்குப் படிப்பு முடிக்க. கடைசி வருஷம் ப்ராஜெக்ட் பண்ணுற விஷயமா விசாரிக்க அவசரமா போறோம். வந்து பேசுறோம்" "ஏண்டி...
    காணுமிடமெல்லாம் நீ - 14 தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை மீட்டியது. அன்னையிடம் கிடைக்கவேண்டிய செய்தி கிடைத்தாயிற்று, இனி தமையனை சீண்ட போக, அவனோ முதன் முதலாக வெக்கப்பட்டான். "அட அண்ணா, உனக்கு...
    பாசமும் காதலும் – 13 அன்றைய விடியல் கதிரவனுக்குப் பரபரப்பாக இருந்தது. நீலக்கடலை ஒட்டி அமைந்திருந்த தோப்பு வீட்டில் வான் கதிரவன் கண்விழிக்கும் முன்னே விழித்துவிட்டிருந்தான் நம் கதிரவன். வேகமாகக் குளித்து எப்போதும் போல ஒரு உடை அணிந்தவன் தன் பாட்டன் படத்தின் முன்பாக நின்று ஆசீர்வாதம் வேண்டுபவனைப் போல கண்களை மூடியபடி இதழை முணுமுணுத்துக்கொண்டிருந்தான். "நீ...
    அன்பு பரிசு -12 "அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்" எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், "இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு தெரியுமா மாப்பு?" எனக் கேட்க, கொஞ்சம் யோசித்தவன், "தெரியலையே! ஏண்டா மாப்பு?" எனக் கேட்க, "எல்லாம் புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்ட...
    சாந்தினி - 11 அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது சதவீத நிறைவு பெற்றிருந்தது. இப்படியே நாட்கள் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்க, கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து...
    நண்பனோ அன்பனோ – 10 "ஐயோ என்ன இவரு அநியாயத்துக்கு அமைதியா இருக்காரு. எதாவது பேசுங்க" என மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தவள் கனல்விழியே. ஒரு சாரார் கதிரவன் ஆரம்பிக்கவிருக்கும் இறால் பண்ணைக்கு எதிராகக் குரல் கொடுக்க, முருகேசனும் அவன் ஜனகட்டிற்கு ஜாடை காட்ட, எதிர்ப்பவர்களை எதிர்க்க ஒரு கூட்டம் தயார் நிலையில் இருந்தது. "இப்படி ஆளாளுக்குப் பேசாம,...
    ஊர் பஞ்சாயத்து– 9 கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்" என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு....
    கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8 "நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி" எனப் பாண்டி கேட்க, சக்கரையும் அதையே ஆமோதித்தான். "இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க, "பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர...
    நினைவெல்லாம் கதிரவன் - 7 "என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு" என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி. "ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள். "ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி...
    தொட்டால் பூ மலரும் – 6 பார்பவர்களைத் தன்னிலை மறக்க செய்யும் கலைநயத்துடன் அமைக்கப்பெற்றிருந்த வேடுவெச்சி எனப்படும் மலை குறத்தியின் சிலையொன்று பனை கூடையை கையிலேந்தியபடி ஆவுடையார் கோவிலில் ஸ்தாபிக்கபட்டிருக்க, எல்லாரையும் போல் கனல்விழியும் கொடியுடன் சேர்ந்து அந்தச் சிலையின் அழகை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்க்க பார்க்க அதன் அழகில் மூழ்கி சிலாகித்துத்...
    மகனோ தந்தையோ -5 "அய்யா கதிரு... என்னய்யா நடக்குது இங்க? நீ எதுக்குயா ஊரவிட்டு போவணு ?"  எனக் கேட்க, "அம்மா நீ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வந்த? உன்னோட தலகட்டு தலைவர பாரு...பாத்தே உன்ன பஸ்பமாக்கிடுவாரு போல. மொத கிளம்பு. மிச்சத்தை நாளைக்குத் தோப்பு வீட்ல பேசிகலாம்" என  தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி அவரை அங்கிருந்து...
    யாரிவனோ- 4 என் மரியாதை நிலைக்க உன் சுயமிழந்து செல்கிறாயே நீ சுயமிழந்தாலும் சுயம்பாய் மாறினாய் என்னுள் உன் நினைவுகளை என் நினைவில் விட்டுச் செல்கிறாய் இனி என்றும் பாதுகாப்பாக உன் செயல் என் இருதயத்தில் நன்றியுடன் ---------- கதிரவனைக் கண்ட கனல்விழி வீட்டிற்கு வந்த கனல்விழியினுள் கனலை போலவே கோபம் தகித்துக்கொண்டிருந்தது. "எவ்ளோ தைரியமிருந்திருந்தா லவ் பன்றேன்னு சொல்ல சொல்லிருப்பான். பொம்பள பிள்ளைங்கனா அம்புட்டு லேசா போய்டுச்சா. அவன…. இன்னு நாலு...
    பூக்கரமோ பூகம்பமோ – 3 வளைக்கரத்தில் வன்மையா ? மைவிழியில் எரிமலையா ? பெண்ணவள் சீற்றம்கொள்ள ஆழ்கடலும் அடக்கம் கொள்ளும் "டேய் பாண்டி, ஏண்டா அவரோட வம்பு வளக்குற" எனக் கேட்டபடி வந்தான் கதிரவன். "என்ன நடந்துச்சுனு தெரியாம அட்வைஸ அள்ளி விடாத. கொஞ்சமாச்சு மிச்ச வையேன் மாப்பு. நாளைக்குப் புள்ளகுட்டி பொறந்தா அதுகளுக்கு மிச்ச மீதி...
    யாரிவளோ-2 கண்ணீராலே பூக்கின்றவள் தான் பெண்ணென்ற எண்ணத்தை கையோடு கொய்து செல்கிறாள் பெண்ணவளின் தைரியத்தாலே - கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன். அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள் கூட்டத்தை அரும்பு மீசை கொண்ட காளை கூட்டங்கள் அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வ பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மரப்பலகை...
    நின்மேல் காதலாகி நின்றேன்!...   கதிரவனும் கனல்விழியும் - 1 பன்னிரண்டு வருடங்களுக்கு முன்...... தனித்திருக்கும் நிலவும் தாகம் தனிக்காத கடலும் வான் நிறைந்த காற்றும் சலசலக்கும் தென்னங்கீற்றுகளும் என் தனிமையை விரட்டுவதால் என்னுடைய சொந்தங்களாயினவோ ?   இரண்டு தென்னம் பாலைகளுக்கு நடுவே, நிலவின் ஒளி ஊடுருவி கதிரவன் அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் வெளிச்சத்தைத் தெளித்திருந்தது. அனைத்தும் இருந்தும் இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். அருகிலே சிறு ஓட்டுவீடு. நீளமான ஒரே...
    error: Content is protected !!