Monday, May 20, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் எட்டு : அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு...
    அத்தியாயம் ஏழு : அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் “அண்ணா” என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ “ஐயோ” என்று இருந்தது இதை கேட்டதும்......
    அத்தியாயம் ஆறு : வலது கால் வைக்க வில்லை! இடது கால் தான் வைத்தாள்! எந்த கால் வைத்தால் என்ன? எல்லாம் அவள் கால் தானே! வீடு வந்தால் போதும் என்று தோன்றியது.. “நீ எதுக்கு வந்த?” என்று மகளின் அருகில் சென்றதும் கோபாலன் கடிந்து கொள்ள... “அப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி டென்ஷன் படுறீங்க எங்களையும்...
    அத்தியாயம் ஐந்து : பத்து மணி வரையிலும் அவர்கள் சொன்ன ஐயா அதாகப் பட்டது அசிஸ்டன்ட் கமிஷனர் வரவில்லை... “என்ன சார் போயிட்டு நாளைக்கு வரலாமா?” என்றான் மருது. “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு...
    அத்தியாயம் மூன்று : திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்... என்ன செய்வது என்றும் தெரியாமல்... யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான். ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால்...
    மருது, கமலன் தன் காலில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பதறி அவனை மிரட்டியது அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது.. அண்ணன் பிழைப்பானா என்ற பயம், அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம், கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம், எல்லாம் ஜெயந்தியின் மனதிற்கு அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தது.   எல்லாம்...
    அத்தியாயம் நான்கு : ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்... “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக... “ஏன் அண்ணா கோபப்படறீங்க?”   “ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட... நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா... அந்த பொண்ணு கிட்ட நீங்க...
    செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா .... ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா ... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின் கண்கள் விழித்துக் கொண்டது, கண்கள் மட்டுமல்ல புலன்களும், நேரத்தை பார்த்தால் காலை ஐந்து மணி. “எப்படி தான் இப்படி வைப்பாங்களோ தெரியலை? மனுஷங்களை...
    அவர்கள் வீடு திரும்பும் போது எட்டு மணியை நெருங்க பீச் போகலாமா என்றான் மருது வேண்டாம் இன்னொரு நாள் போகலாம் எனக்கு ரொம்ப டயர்ட் டா இருக்கு என்று மறுத்து விட்டாள் உண்மையில் என்னவோ உடல் சோர்வாய் உணர சொல்லிவிட்டால் அவனும் உடனே சரி என்று விட்டான்   ================================================== மருது வந்ததோ அவன் குளித்து உடை மாற்றி வந்து சிறிது...
    ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்... “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக... “ஏன் அண்ணா கோபப்படறீங்க?”   “ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட... நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா... அந்த பொண்ணு கிட்ட நீங்க வரலைன்னா பிரச்சனை...
    அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அவன் உடனே அனிச்சையாய் செய்தது சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள். நான் எட்டி ஒரு உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா கதவு என்ன...
    நாட்கள் வேகமாய் செல்ல, மீண்டும் அவர்கள் வாழ ஆரம்பித்து இதோ அதோ என்பதற்குள் மூன்று மாதம் கடந்திருந்தது. ஜெயந்தி மருதுவிற்கு வெகுவாய் பழகியிருந்தாள், அப்படியும் சொல்லலாம் பழக்கப் படுத்திக் கொண்டாள் அப்படியும் சொல்லலாம். ஆம் மனதிற்குள் அவனை பற்றிய அத்துனை ஆராய்ச்சிகள் இருந்த போதும் வெளியில் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. என்ன பெரிய ஆராய்ச்சி அவனின்...
    விமலனிற்கு திருமணம் முடிந்து ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னே நடத்துவது யார் மருதாச்சலமூர்த்தி அல்லவா, ஆம் திருமணம் நீங்க செய்து கொள்ளுங்க ரிசப்ஷன் என் செலவு என்று விட்டான் பின்னே மருது ஸ்டோர்ஸ் மேற்பார்வை விமலன் அவன் ஜெயந்தியின் அண்ணன் ஜெயந்தி இப்போது அடையாளம் காணப் பட்டது மருது ஸ்டோர்ஸின் முதலாளி யாகவே. அதுவுமல்லாமல்...
    மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில் பாட்டி இறந்துவிட...
    “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் போனான். “சார் அனுப்பிருவோம். சேனல் காரனா நம்மை கவனிப்பான், என்ன சார் நீங்க” என்று ஏட்டு குறைபட்டார். “நீ என்னையா? அசிஸ்டன்ட் கமிஷனர் கேட்டா என்ன...
    ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துகாலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதடில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான் கூட பயந்தும் போனான் . அவளின் முகம் ஒரு...
    மதிய உணவு இருவருமே உண்ணவில்லை, மருது மட்டுமே ஸ்டோர்ஸ் செல்ல ஜெயந்தி வீட்டிலேயே இருந்து கொண்டாள். என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் அவளுக்கு புரியவேயில்லை. அப்படி ஒரு அழுகை பொங்கியது, ஒரு பாடு அழுது முடித்தால் , பசிப்பது போல தோன்ற நேரம் பார்த்தால் மருது சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருக்க...
      கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன...
    அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம் குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக அவளின் முக வீக்கத்தை தன் கட்டு போடாத கையினால் தொட்டு பார்த்தான். ஷ் என்று தூக்கத்திலேயே தலையை...
    கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும்… முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. அவளின் அப்பாவை நோக்கி திரும்பியவன்.. “உங்க பொண்ணை நான் அடிச்சதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இந்த ரவுடி பய, யாருமில்லாத பய அவ்வளவு ஏன் அனாதை பய அப்படியும்...
    error: Content is protected !!