Advertisement

பின்பு சில நொடி தன்னை சமன் செய்து, “ஒரு மாசம் என்னை அப்படி வெச்சிருந்தீங்க, இப்போ என் பக்கத்துல கூட வரலை. அப்படி என்ன உங்களுக்கு நான் செஞ்சிட்டேன். என்னை கட்டிபிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்ற ஆசை உங்களுக்கு இல்லவே இல்லை தானே. இப்படி இருக்குற உங்களை என்னால பிடிச்சு வைக்க முடியாது”
“சோ, நான் வந்தாலும் என்னோட தேவை உங்களுக்கு எதுக்கும் வேணாம். அதனால் கொஞ்சம் நாள் நல்லா இருந்தாலும் திரும்ப நீங்க என்னை துரத்தி விட வாய்ப்பு நிறைய இருக்கு.. அதுக்கு இப்படியே இருந்துடறேன்”
அவளின் குற்றச்சாட்டில் அசந்து நின்று விட்டான்.
“என்ன பேசற நீ?” என்று அவளின் கைகளை பிடிக்க வர,
“என்னை தொடாதீங்க, நான் சொன்னதுக்கபுறம் என் பக்கத்துல வந்து என்னை கேவலப்படுத்தாதீங்க.. என்னை போன்னு சொன்ன பிறகு என்னோட முடிவு எதையும் நீங்க எடுக்க முடியாது, நீங்க கிளம்புங்க” என்றாள் ஸ்திரமாக.
அவளின் குரல் நீங்க கிளம்புங்க என்று அவள் சொன்ன விதம் போடி என்று சொல்லி போகத் தூண்டியது.. மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் எப்போது என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாதே. 
“அதான் நடந்துடுச்சு விட்டுடுவோம்னு சொல்றேன்ல” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து…… 
“அதெல்லாம் விட முடியாது, நான் பண்ணினது தப்பா இருந்தாலும், நீங்க அடிச்சது, போன்னு சொன்னது எல்லாம் ஓவர்”
எழுந்து நின்றவன் “சொல்லிட்டேன், இப்போ என்ன அதுக்கு? வர முடியுமா? முடியாதா?” என
“முடியாது, வர மாட்டேன், இங்க வந்ததுமே என் ஃபோன்ல இருந்து மெயில் அனுப்பிட்டேன் ஜெர்மனிக்கு, லீவ்ல தான் வந்திருக்கேன். இங்க இருந்து தான் ரிசைன் பண்ணலாம்னு இருந்தேன். ஒரு மாசம் லீவ் முடிஞ்சு ஜாயின் பண்றேன்னு இப்போ சொல்லிட்டேன்.
“இது வேறா” என்று மருது பார்த்து நிற்க..
“இப்போ கூட நான் தனியா இருக்கேன்னு தானே வந்தீங்க. எங்கம்மா வீட்ல நான் இருந்திருந்தா வந்திருக்க மாட்டீங்க தானே”
“அச்சோ” என்று தான் நின்றான் மருது..
“சொல்லுங்க வந்திருக்க மாட்டீங்க தானே. அப்புறம் என்ன வந்து இப்போ சீன போடறீங்க”  
“ஏய், சீன கீன் ன்னு சொன்ன நிஜமாவே அடுத்த கன்னமும் பழுத்துடும்.. கண்டிப்பா இன்னைக்கு உங்கம்மா வீட்ல இருந்திருந்தா வந்திருக்க மாட்டேன், ஆனா எப்பவும் வந்திருக்க மாட்டேன்னு நீ நினைக்கிறியா”  
“சும்மா அதையும் இதையும் பேச வேண்டாம், நீங்க வெளில போங்க, எனக்கு உங்களை பார்க்க பிடிக்கலை”  
“சும்மா நீ என்னடி சீன போடற? பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோ, நான் வெளில போக மாட்டேன். உன்னால ஆனதை பார்த்துக்கோ.. இங்க தான் இருப்பேன்” என்று சட்டமாய் அமர்ந்து கொண்டான் சோஃபாவில்.
“சொன்னா கேளுங்க ஒழுங்கா வெளில போயிடுங்க.. இல்லை நான் போவேன்” என அவள் வேகமாய் எழுந்து நடக்க.. ஒரே எட்டில் அவனும் எழுந்து அவளை அணுகியவன்..
அவளின் முன் நின்று “போடி உள்ள.. இல்லை காலை முறிச்சு நகர முடியாதபடி பண்ணிடுவேன்”
“உங்கம்மா வீட்டுக்கு போக சொன்னா, தனியா வந்து உட்கார்ந்து கலாட்டா பண்ணுவியா? ஏன் பார்க்கறவன் இன்னும் என்னை அசிங்கமா நினைக்கவா? ஒன்னு உங்கம்மா வீடு, இல்லை நம்ம வீடு, இல்லை நீ எங்க இருப்பியோ அங்க நானும் இருப்பேன்.. போடி உள்ள” என்று முறைத்து நின்றான்.
இயலாமை ஆத்திரம் கோபம் என கிளம்ப
“வழியை விடுங்க” என்று ஜெயந்தி ஆத்திரமாய் சீற..
“ஜெர்மனி போறயா நீ.. முடிஞ்சா இந்த கதவை திறந்து வெளில போயிடு பார்ப்போம்” என்றான் அசையாமல்.
“நான் கத்துவேன்..” என ஜெயந்தி சீற
“கத்துடி பார்ப்போம்” என ஜெயந்தியை நொடியில் அருகில் இழுத்து அவன் கட்டுப் போட்டிருந்த கையால் அவளின் இடையை இறுக்கி பிடித்து தன்னோடு ஓட்ட வைத்து கொண்டவன், மறுகையால் அவளின் முக தாடையை இறுக்கி பிடித்தவன் “கத்துடி பார்ப்போம்” என்றான் மறுபடியும்.
அவன் முகத்தை அழுத்தி பிடிக்கவும் அவனின் நீளமான விரல்கள் கிழிந்த உதடுகளின் நுனியை தொட.. வலியில் கண்களில் நீர் நிறைந்தது.
“நீ, நீ என்னை கொடுமை பண்ற?” என்று கண்களில் நீரோடு பேச
“அப்படி தான் பண்ணுவேன்” என்றான் ஆவேசம் சிறிதும் குறையாதவனாக..   
“அப்புறமா பண்ணிக்கோ இப்போ முகத்துல இருந்து கையை எடு, வலிக்குது” என்று பேச
வேகமாய் கையை எடுத்தான்.. முகத்தில் இருந்த கையை மட்டும் தான்.. ஆனால் உடலை இன்னும் அவனோடு ஒட்டி இருக்க..
“ப்ளீஸ் என்னை விடு, இடுப்பும் வலிக்குது, அங்கயும் தானே அடி” என்றாள். என்ன முயன்றும் கண்ணீர் வழிந்து அழுகை வந்து ஒரு கேவல் வெடிக்க..
இறுக்கம் தளர்த்தி ஒரு கையை அவளின் பின் தலையில் கொடுத்து அவளின் முகத்தை தன தோளில் சாய்த்து கொண்டான்
“ரொம்ப கொடுமை தான் பண்றேன், ஆனா என்ன பண்ணணு எனக்கும் தெரியலை” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவன் தான் தலையை சாய்த்து வைத்திருந்தான்.. ஜெயந்தி தலை சாய்க்கவில்லை.. அவன் தான் உடலை அழுத்தி தன மேல் பிடித்திருந்தான் அவள் உடலை தளர்ததவேயில்லை,
அவளின் குரல் மெதுவாக கேட்டது
“எனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்கு, என்னை விடுங்க ப்ளீஸ்” என,
“ஒன்னு என் கூட வீட்டுக்கு வா, இல்லை என்னை இங்க இருக்க விடு.. ஏதாவது ஒன்னு சொல்லு அப்போ தான் விடுவேன்” என்றான்.
“இருந்துக்கோங்க” என ஒரு இயலாமையில் சொல்ல, அதன் பிறகே அவளை விட்டான்..
விட்டதும் அங்கிருந்த ஒரு ரூம் நோக்கி செல்ல ..
“நான் உள்ள வரமாட்டேன், கதவை தாள் பாள் போடாதே” என்று அதிகாரமாய் சொன்னான்.
“நான் இங்க போறேன்” என்று ஒற்றை விரல் காட்டி சொல்ல,
“போ” என்று ஆசுவாசாமை சொன்னவன்… விஷாலை கைபேசியில் அழைத்து பேசினான்.  
களைத்து அந்த சோபாவில் படுத்துக் கொண்டான்…
கிட்ட தட்ட அரை மணி நேரம் கழித்து ஜெயந்தி வெளியே எட்டி பார்க்க.. அங்கே அவள் கண்டது உறங்கும் மருதுவை தான்..
அப்படியே எதையாவது தூக்கி உறங்கும் அவன் மேல் வீசினால் என்ன என்று ஒரு பக்கம் தோன்ற.. மறு பக்கம் இப்போ நான் வெளில போனா என்ன பண்ணுவான் என்று யோசிக்க..
வேகமாய் சென்று கதவை திறக்க முயன்றால் அது பூட்டி இருக்க.. சாவிக்காக கண்கள் தேட அதை காணோம் .. 
நேரம் பார்த்தால் ஒன்பதரை.. இப்போது போனால் அவன் சொன்ன மாதிரி அம்மா வீட்டிற்கு தானே போக வேண்டும்.. இந்த நேரம் வேறு எங்கே போக முடியும் என்ற தோன்ற.. அவளின் ஃபோன் தேட அதையும் காணோம்.
உறங்கும் அவனை நன்றாய் பார்க்க அவளின் மொபைல் அவனின் கையினில்..
“என்ன வீசலாம் அவன் மேல்” என்று பார்வையை ஓட்டினாள்.. அதற்குள் அவனின் அழைபேசி அழைக்க விழித்து விட்டான், விழித்ததும் பார்த்தது அவனை பார்த்தபடி நின்ற ஜெயந்தியை தான்
அவள் நின்ற விதத்தை பார்த்து “என் மேல என்ன தூக்கி வீசலாம் பார்க்கறியா” என
“ஆம்” என்பது போல தலையசைத்தாள்.
“தோ, அங்க அலங்காரத்துக்கு பூஜாடி இருக்குது பாரு” என்று அவன் பேசும் போதும் விடாமல் கைபேசி அடிக்க..
எடுத்தவனிடம் கதவுக்கு வெளில பையன் நிக்கறான் என்ற விஷாலின் குரல்..
மருது கதவை திறக்க.. அங்கே இரு பையன்கள் பொருட்களோடு நின்றார்கள்.
நன்றாய் மருது கதவு திறக்கவும் அவர்கள் உள்ளே வைக்க..
அங்கிருந்த பெரிய ஹாலில் பாதி நிறைந்தது, எல்லாம் சாப்பிடும் பொருட்கள். இப்போதைக்கு சாப்பிட டிஃபன் பின் பால் பழம் சமைக்க மளிகை சாமான் இப்படி.
“என்னடா நடக்குது?” என்பது போல ஜெயந்தி பார்க்க,
கதவை பூட்டி சாவியை ஜோபில் போட்டுக் கொண்டவன்..
“சாப்பிட எதாவது கொடு ஜெயந்தி காலையில குடிச்ச டீ தான்” என்று ஃசோபாவில் அமர..
“இவனை என்ன செய்யலாம்?” என்ற பார்வை பார்த்தாள்.
“என்ன விஷம் குடுக்கலாமான்னு யோசிக்கறியா?”  
“இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லை. இப்போ நீங்க சொல்றதால யோசிக்கறேன்” என்றாள் சற்று திமிராகவே..  
ஹ ஹ என்று வாய் விட்டு சிரித்தவன், “விஷம் குடுக்க யோசிக்கறவ அப்படியே என்னோட வந்து இருக்கவும் யோசியேன்” என்றான் அந்த பாவனையை கண்டு கொள்ளாதவனாக..   
அவனை முறைத்து பார்த்து “விஷம் குடுக்க மட்டும் தான் யோசிப்பேன்” என்றாள் பிடிவாதமாக.
“சரி, ஏதோ ஒன்னு சீக்கிரம் கொடு” என்று அவன் அசால்டாய் சொல்லி கண்களை மூட,,
அவனை த்வம்சம் செய்யும் ஆத்திரம் கிளம்பியது அவளுள்..  
      

Advertisement