Advertisement

நாட்கள் வேகமாய் செல்ல, மீண்டும் அவர்கள் வாழ ஆரம்பித்து இதோ அதோ என்பதற்குள் மூன்று மாதம் கடந்திருந்தது.
ஜெயந்தி மருதுவிற்கு வெகுவாய் பழகியிருந்தாள், அப்படியும் சொல்லலாம் பழக்கப் படுத்திக் கொண்டாள் அப்படியும் சொல்லலாம். ஆம் மனதிற்குள் அவனை பற்றிய அத்துனை ஆராய்ச்சிகள் இருந்த போதும் வெளியில் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. என்ன பெரிய ஆராய்ச்சி அவனின் கடந்த காலம் தான்.
அவளாய் வாய்விட்டு மூன்று நான்கு முறை கேட்கவும் செய்து விட்டாள் சொல்றேன் உன்னை தவிர வேற யார் கிட்ட சொல்ல போறேன் என்று விடுவான்
அவனின் சொத்து மதிப்புகள் ஹம்மா என்பதாக தான் இருந்தது. எப்படி வந்தது என்று இன்னும் தெரியாது ஆனால் எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தான் படிப்பறிவு இல்லாமலேயே எப்படி இவ்வளவு ஞாபகம் அறிவு என்று வியந்து கொள்வாள்
பின்னே படித்தவர்கள் கணக்குகளை அதற்குள் இதற்குள் என்று நுழைத்து ஒரு கணிப்பொறி குள் நுழைத்து வைக்க, அதெல்லாம் மற்றவர்கள் மூலம் நடந்து இருந்தாலும் எல்லாம் அவனின் மனக் கணக்கே
ம்ம்ம் செம நீங்க என்பாள் பல சமயம்
ஜெயந்தி மாற்றிய மற்றொன்று வீட்டில் எந்த பஞ்சாயத்தும் கிடையவே கிடையாது கடையிலும் கிடையாது வேண்டுமென்றால் வேம்புலியம்மன் கோவில் சென்று விடுங்க அவ்வளவே ‘
இதையும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக
மருது மறுத்து எதுவும் பேசவில்லை சொல்வதை கேட்டுக் கொண்டான். ஆம் தன்னுடைய மனைவி என்று தெரிந்தும் அந்த ஜெயராஜ் ஜெயந்தியை அடித்தது அவனுக்கு ஆறாத வடு
அவனுக்கு ஏதேனும் வந்தால் ஊதி தள்ளி விடுவான் இனி குடும்பஸ்தன் கவனமாய் தானே இருக்க வேண்டும்.
முடிந்த வரை எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவை ஜெயந்தி சொல்லும் முன்னமே எடுத்து விட இப்பொது ஜெயந்தி ஒன்று சொல்லும் போது அதை கடை பிடிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை.
மனது எவ்வளவு சந்தோஷமாய் இருந்தாலும் ஒரு பயம் ஜெயந்தியிடம் அவனின் கடல் கடந்த வாணிபத்தை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என
பைக்கள லாங் டிரைவ் னா போகலாமா வருவியா என்
ம்கூம் முடியாது எனக்கு பீரியட்ஸ் ஆகா இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு இப்போ போய் ரிஸ்க் எடுக்க முடியாது ஒரு வேளை பேபி பார்ம் ஆகற ஸ்டேஜ் ல இருந்தா என,
மருதுவின் முகம் வெகுவாக கனிந்து விட்டது.
அப்போ எங்க போகலாம் என ‘
இங்க பக்கத்துல எங்கேயாவது
எங்கேயும் வேண்டாம் வீட்ல இருப்போம் சாயந்தரம் எங்கேயாவது வெளில மட்டும் போவோம் என்று முடித்து விட்டான்
இருவருமே குழந்தைக்கான அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இவன்  யாருக்கோ அலைபேசியில் அழைத்து போட் வேணும் பெர்மிட் டீசல் எல்லாம் இருக்கான்னு பார்த்து சொல்ல்லுடா என
அந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்தி நாம போட் ல போகப் போறோமா என்று அவனின் கையை பிடித்துக் கொண்டாள் என்னவோ அந்த தனிமை பயம் கொடுத்தது
ஆமாம் என்பது போல தலையசைதவன் உட்காரலாமா என்று அமர அவனை மிக நெருங்கி அமர்ந்தவள் அவனின் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டாள்
ஒரு பயமும் கிடையாது என்று அவன் சொல்லும் போதே ஒரு நண்டு அவர்களை நோக்கி வேகமாய் வர
அதனை அசால்ட்டு போல தூக்கி தூர போட்டான் ‘
அம்மாடி என்று அவள் பார்க்க
அதோ அந்த இடத்துல தான் அப்படியே மண்ணோட மண்ணா அப்படியே படுத்திருப்பேன் ஒரு ரெண்டு மூணு மணி நேரம். இந்த மாதிரி பலத்தையும் தூக்கி போடுவேன், சில சமயம் அது கடிக்க கூட செய்யும். ஒரு எண்ணெய் இருக்கு அதை தடவிட்டம்னா அதோட வாசனைக்கு நம்மை நெருங்காது ஆனாலும் சில சமயம் ஏதாவது நடக்கும். ஆனா பெருசா ஒன்னும் நடந்தது இல்லை என்று கதை சொல்ல
என்ன சொல்கிறான் இவன் என்று ஆ என்று ஜெயந்தி பார்க்க
திறந்திருந்த அவளின் வாயினை அவனின் விரல் கொண்டு மூடி விட்டான்
அவள் பார்த்திருந்த விதமே இவன் என்ன பேசுகிறான் என்று அதிர்ந்து பார்த்து இருந்தது.  

Advertisement