Advertisement

 
கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன செய்து விட்டேன் நான்? ஏன் இந்த கோபம்?” என்ற எண்ணம் தான் அவளிடம்..  
அவனை தெரியவில்லை என்று தான் தோன்றியது அவனின் கடந்த காலம் அவனின் சிறு வயது அவன் செய்த வேலைகள் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்று தோன்றவில்லை..

நான்கைந்து நாட்களாக அம்மாவை கூட்டி கொண்டு பர்ச்சேஸ்.. மருது ஸ்டோர்ஸில் எல்லாம் இருக்க அவள் அங்கே செல்ல வில்லை.. டீ நகர் தான் சென்றாள்.. வீடிற்கு சில பொருட்கள்.. அப்பாவிற்கு அண்ணன் தம்பிக்கு உடை என்று முதல் நாட்களில் இருக்க..  இதில் ஒரு வரனும் விமலநிர்க்கு வந்திருக்க அதை பற்றிய பேச்சும் ஓடிக் கொண்டிருக்க  
அன்று அம்மாவிற்கு சேலைகள் கைக்கு தங்கத்தில் வளையல் கழுத்திற்கு நெக்லசும் அல்லாது ஆரமும் அல்லாது நடுவில் ஒன்று வாங்கியிருன்தவள்,,

 
ஆயிற்று ஜெயந்தி வந்து ஒரு வாரம் மேல் ஆகிற்று மருதுவிற்கு அன்று காலையில் இருந்தே ஏனோ கோபமாக இருந்தது நான் பேசவில்லை என்றால் இவளும் பெசமாட்டலாமா இவள் பேசி நான் பதில் சொல்லாமலா இருக்கிறேன் என்று இவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மதியம் அவன் உண்டு முடித்ததும் நான் அம்மா வீட்டிக்கு போறேன் என்று அவனுக்கு முன் அவள் கிளம்பிவிட, அவள் உண்டு முடித்ததும் அவளுடன் வார்தையாட காத்திருந்தான்.
அவளோ சொல்லிவிட்டு கிளம்பிவிட அப்படி சுர்ரென்று ஒரு கோபம் ஏறியது.

 
“இவளுக்கு தான் அறிவில்லை…. இவளின் அம்மாவிற்குமா உங்க கடை இருக்கும் போது வேற கடைக்கு போனா நல்லா இருக்காது சொல்ல மாட்டாங்களா? எரியாக்காரன் எவனாவது இவங்களை வேற கடையில பார்த்தா என்ன சொல்லுவான் இவங்களே இவங்க கடையில வாங்கறதில்லை சொல்ல மாட்டான்” அப்படி ஒரு ஆத்திரம் கிளம்பியது.  

“எங்கம்மாவை வாங்கன்னு கூட உங்கள்ளால? சொல்ல முடியாதா சரி சொல்ல வேண்டாம் அவங்க சொல்லுபோது தலை கூட அசைக்க முடியாதா?” என கோபமாக பேச
“சொல்ல முடியாது… என்ன பண்ணுவ?” என்றான் இருந்த ஆத்திரத்தில்..  
 

Advertisement