Advertisement

கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும்… முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்..
அவளின் அப்பாவை நோக்கி திரும்பியவன்.. “உங்க பொண்ணை நான் அடிச்சதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இந்த ரவுடி பய, யாருமில்லாத பய அவ்வளவு ஏன் அனாதை பய அப்படியும் சொல்லலாம்… அவனோட உங்க பொண்ணு இருக்கணும்னு எந்த அவசியமுமில்லை..
நீங்க கூட்டிட்டு போங்க.. “

============================================================

 
பக்கம் வந்து விடாதே என்று கை நீட்டி தடுத்தவன்,  எல்லோர் முன்னையும் என்னை பேசும் முன்ன யோசிச்சிருக்கணும்.. என்னை பத்தி நீயோ உன் குடும்பமோ நினைக்க போறதில்லை அது எனக்கு தேவையுமில்லை 
ஆனா நீ…நீ என்னை பத்தி நினைக்கவேயில்லை பார்த்தியா மனசை நான் எவ்வளவு சமன் செய்தாலும் முடியலை நான் செய்யறது ரொம்ப அதிகமா தெரியலாம் சுயநலமா தெரியலாம்… கண்டிப்பா அதிகம் தான் சுயநலம் தான் 
ஏன்னா எனக்கு யாரும் கிடையாது அப்போ என்னை பத்தி நான் தானே யோசிக்கணும்… நான் சுயநலவதி அப்படி தான் இனிமேயும் இருப்பேன் 
வேண்டாம்… நமக்குள்ள சரிவராது நீ கிளம்பிடு” என்று நிதானமாகவே ஜெயந்தியை பார்த்து சொன்னான் 

–===============================================

பிறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்து பத்து வயதில் இருந்த ஒரு சொந்தமான பாட்டியும் இல்லாது போய் நடுத்தெருவில் நின்று அதன் பின் ஒற்றையாய் போராடி வாழ்வில் எல்லாம் செய்து கொண்டிருக்க.. என்னவோ வாழ்வில் மோசமாய் தோற்றுவிட்ட ஒரு உணர்வு.
கூடவே ஒன்றுமில்லாததற்கு தான் அதிகப் படியாய் நடக்கிறோமோ என்ற உணர்வு…
தாள முடியாத மன அழுத்தம்.

==================================================

அப்பாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. வெளியில் விரைந்தவள் வீடு செல்லும் வழிக்கு எதிர்புறம் நடந்தாள்.. 
என்னை வெளியில் போ என்று சொல்லிவிட்டானா அதுவும் அடித்து விட்டு பின்பும் தாளவே முடியவில்லை அவளாலும்.. இப்படியா என் வாழ்க்கை இருக்க வேண்டும்..
அவனை பற்றி ஜெயந்திக்கும் தெரியவில்லை ஜெயந்தியை பற்றி அவனுக்கும் தெரியவில்லை..

=================================================

 
“எங்க போனாலும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்.. பொண்ணை அடிச்சிட்டார்னு கோபம் இருந்தா சண்டை போடலாம் …தப்பில்லை… ஆனா எல்லோர் முன்னையும் மரியாதை குறைவு எதுக்கு செஞ்சீங்க? அவரை நான் இருக்கும் போது யாருமில்லாதவன்னு எதுக்கு சொன்னீங்க?
அதை கூட விடுண்ணா… அவர் இல்லைன்னா நீ இன்னைக்கு எங்களோட இருந்திருப்பியான்னு கூட தெரியாது.. அந்த நன்றி கூட வேண்டாமா?  
எனக்கு புரியவேயில்லை… இந்த அப்பா யாரோட இப்படி சண்டை போட்டிருக்கார்னு?
 ஏற்கனவே என் மேல அவர் கோபத்துல இருந்தார்… எங்களுக்குள என்னவோ பிரச்சனை… நான் தீர்துக்கரேன் உங்களை நான் கூபிடேனா அவருக்கு ரொம்ப கோபம் வரும் தெரிஞ்சது தானே என்று பொரிய 

===================================================

கல்யாணம் செஞ்சு குடுத்துடீங்கல்ல… எனக்கு என்னவோ நான் பார்த்துக்கறேன் வீட்டுக்கு வரமாட்டேன் 
என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்”
 என்றவள் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏற…

==================================================

அந்த ஆட்டோத்காரர் “எங்கம்மா?” என 
“ம்ம்…. எதிர்ல இருக்குற சுவர்ல போய் முட்டுங்க” என்று அதட்டினாள், அதுவரை எப்படியோ அந்த நிமிடம் மருதுவின் மனைவியாய் மாறினாள்.
மருதுவின் மனைவி என்று தெரியும் அதனால் அந்த அட்டோக்கார் வாய் மூட 
“முதல்ல இடத்தை விட்டு கிளம்புங்க” என 
அவளின் மொத்த குடும்பமும் பார்க்க ஆட்டோ அவர்களுக்கு எதிர்ப்புறமாய் சென்றது.  



Advertisement