Advertisement

மதிய உணவு இருவருமே உண்ணவில்லை, மருது மட்டுமே ஸ்டோர்ஸ் செல்ல ஜெயந்தி வீட்டிலேயே இருந்து கொண்டாள். என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் அவளுக்கு புரியவேயில்லை.
அப்படி ஒரு அழுகை பொங்கியது, ஒரு பாடு அழுது முடித்தால் , பசிப்பது போல தோன்ற நேரம் பார்த்தால் மருது சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருக்க அவனுமே உண்டிருக்க மாட்டான் என்று புரிந்து அவனை கைபேசியில் அழைத்தாள்,
அவன் எடுக்கவும் சாப்பிடவேயில்லை நீங்க சாப்பிட வாங்க என்று வீட்டிற்கு அழைக்க
இல்லை ஜெயந்தி வேண்டாம் பசியில்லை நீ சாப்பிடு என்றான்
எனக்கும் பசியில்லை என்று சொல்லி அவள் அலைபேசியை பட்டென்று அணைத்துவிட்டாள்.
வீட்டிற்கு போ என்று மனம் சொன்ன போதும் மருது அப்படியே தான் அமர்ந்திருந்தான். மனம் முழுவதும் யோசனை என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் என்று அவளை போலவே
==============================================
அப்புறம் வேற என்ன செய்யட்டும் நான் வந்து சமைச்சு தரட்டுமா என
வேண்டாம் நீங்க வர்றீங்களா நான் சமைக்கறேன் என்று சொல்லும் போதே அழுகை முட்டி குரல் கரகரத்து விட
அப்புறம் கூப்பிடறேன் என்று கம்மிய குரலில் சொல்லி வைத்து விட்டாள்
மருது விற்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை, வீட்டிற்க்கு கிளம்பிவிட்டான்.
சென்று பார்த்தால் வீட்டின் முன் புறம் விளக்கு எரிந்தது. அது அட்மேடிக் லாக் என்பதால் மருது கதவை மூடியிருக்க அது தானாக பூட்டியிருந்தது.
===========================================
உடலை குறுக்கி படுத்திருந்தாள். கையினால் அவளின் தோளை தொட, அப்படியே வீல் என்று ஒரு சத்தம் , என்ன என்ன என்று மருது பதற , அவன் சத்தம் கேட்கவும் தான் தெளிந்தவள், சத்தம் குடுக்க மாட்டீங்களா பயந்துட்டேன் என்று பதறி எழ
குனிந்திருந்தவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து எழ சென்றவளை எழ விடாமல் தடுத்து பிடித்துக் கொண்டான்
அப்போதும் அவள் பயத்தில் பட படத்து இருக்க, ஒன்னுமில்லை இவ்வளவு பயமா உனக்கு என்று தோளோடு அணைத்துக் கொள்ள
அமைதியாய் அவனின் தோள் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்
இவ்வளவு பயம் இருக்கிறவ எப்படி தனியா இருந்த என
அப்போல்லாம் பயமா இல்லை இப்போ தான் பயமா இருக்கு என்று சொல்லியபடி அவனின் அணைப்பில் இருந்து விலகி எழுந்து நிற்க,
====================================================
பேன்ட் சட்டை விட வேஷ்டி சட்டை தான் உங்களுக்கு நல்லா இருக்கு என்று என்றோ அவள் சொன்னதின் ஒரு எதிரொலிப்பு ஆனால் அதெல்லாம் அவளின் ஞாபகத்தில் இல்லை
ஆனாலும் கண்கள் மருதுவை அளவெடுத்து புதிதாய் முன்பு சொன்னதே ஞாபகத்தில் இல்லாமல் இவனுக்கு இது நல்லா இருக்கு என்று மனசுக்குள் தோன்றிய போதும் அது எங்கும் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்டாள் அவனையும் அதிகம் பார்க்கவில்லை
தன்னுடைய உடைக்கு ஏதாவது சொல்வாளா என்று பார்க்க
ம்கூம் அவளிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை
எங்க போகலாம் என்றான்
========================================================
எனக்கு தெரியாது நீதானே கார் ஒட்டுவ அப்போ நீதான் கூட்டிப் போகணும் நான் இன்னும் பெரிய ஸ்டார் ஹோட்டல் எதுவும் போனதில்லை கூட்டிட்டுப் போ என்றான்
ஏன் போனதில்லை என்று அவள் கேட்க
ஒரே ஒரு தடவை போனேன் அவனுங்க இங்கிலீஷ் லயே பெசினானுங்க எனக்கு தெரியாதுடா தமிழ் ல பேசுடா சொன்னா அந்த தமிழை பண்ணுனானுங்க பாரு ஒரு கொலை நம்ம சென்னை பாஷை தூள் மா ன்னு நாம சொல்லிக்கலாம்
ஆனா அதுக்காக எல்லாம் போகாம இருக்கலை, அந்த மெனு கார்ட் குடுப்பானுங்க அதை எனக்கு படிக்க தெரியாது என்று சொல்ல
இதுக்கா போகாம இருந்தீங்க அதான் அங்க பஃபே இருக்குமே, அதுக்கு போக வேண்டியது தானே என
அதையும் எழுதி தானே வெச்சிருப்பாங்க என
ம்ம் ஆமாமில்லை என்று அவள் அசடு வழிய , ஒரு இலகுவான சூழலை உருவாக்கினான் மருது

Advertisement