Advertisement

விமலனிற்கு திருமணம் முடிந்து ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னே நடத்துவது யார் மருதாச்சலமூர்த்தி அல்லவா, ஆம் திருமணம் நீங்க செய்து கொள்ளுங்க ரிசப்ஷன் என் செலவு என்று விட்டான்
பின்னே மருது ஸ்டோர்ஸ் மேற்பார்வை விமலன் அவன் ஜெயந்தியின் அண்ணன் ஜெயந்தி இப்போது அடையாளம் காணப் பட்டது மருது ஸ்டோர்ஸின் முதலாளி யாகவே. அதுவுமல்லாமல் மருதுவின் மச்சானின் திருமணம் ஏரியா மக்களை அழைக்காவிட்டால் மருதுவின் கௌரவம் என்னாவது.
அப்போது விருந்து அமர்களப் படாவிட்டால் மருதுவிற்கு தானே இறக்கம்.
அப்போதும் ஸ்டோர்ஸ் லீவ் எல்லாம் இல்லை ஷிப்ட் முறையில் மாற்றி மாற்றி வந்து கலந்து கொண்டார்கள். மதியம் பன்னிரண்டு மணி போல ஆரம்பித்த விருந்து இப்போது மணி மூன்று இன்னும் ஜெகஜோதியாய் நடந்து கொண்டிருந்தது. 
விமலனிற்கும் பெண்ணை பிடித்திருக்க இதோ திருமணம் முடிந்து விட்டது. மருதாச்சலமூர்த்தி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை ஆனால் அவனின் கண்ணசைவில் எல்லாம் சிறப்பாய் நடந்து கொண்டிருக்க
ண்ணா வர்றண்ணா என்று அனைவரும் வந்து அவனிடம் சொல்லி சென்றனர், கூட ஜெயந்தியிடமும் வர்றண்ணி என்று அவளிடம் அவளையும் இருந்த இடத்தை விட்டு அசையவிடவில்லை
இதில் வயது முதிர்ந்த பெண்மணிகள் ராசவாட்டாம் பையனை பெத்து குடு எங்க மருது மாதிரியே என்று வாழ்த்தி சென்றனர்.
ஆம் இது ஒன்பதாம் மாதம் ஜெயந்திக்கு. வளைக்காப்பு பெரிதாய் செய்யவில்லை மிகவும் எளிமையாய் வீட்டோடு முடித்து விட்டான் மருது
அதுதான் இந்த விருந்தை அமர்க்களப் படுத்தினான், மச்சானின் திருமணத்தை கொண்டு மருதாச்சலமூர்தியின் விருந்து
என்னவோ அவனின் மனைவியின் அழகு கூடுவதாக தெரிய , அவர்களின் தொழில் வளர்ச்சியும் அமோகமாய் இருக்க அதையும் விட அவர்களின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாய் இருக்க வலைக்காப்பை சத்தமின்றி முடித்துக் கொண்டான்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது அல்லவா 
கலைச்செல்வி இவர்களை கவனிக்க வந்த போது நான் விருந்தினர் னா என்னை கவனிங்க இல்லைன்னா தேவையில்லை என்று மருது சொல்ல
கலைசெல்விக்கு சுத்தமாய் புரியவில்லை என்ன குறையோ என்று பதற
மா அவர் விருந்தாளி இல்லையாம் இந்த வீட்டு ஆளாம் அதை தான் அந்த லட்சணத்துல சொல்றாரு போங்க போய் பொண்ணு வீட்டுக்காரங்களை கவனிக்க சொல்றாரு என ‘
அதன் பிறகே கலைசெல்வியின் முகம் தெளிந்தது ஆனாலும் மருதுவின் முகம் முகம் பார்க்க
போங்க அக்கா போய் பொண்ணு வீட்டுக்காரங்களை கவனிங்க என்று சொன்ன பிறகே சென்றார் ‘
உங்களுக்கு ரொம்ப ஏத்தம் ஆகிப் போச்சு போய் எனக்கு ஒரு ஜூஸ் கொண்டு வாங்க யார் கிட்டயும் சொல்லக் கூடாது நீங்க போங்க என்று அவனை ஏற ‘
நேரமடி என்று சொன்ன போதும் உடனே எழுந்து சென்றான்
என்ன செய்ய முடியும் ஜெயந்தியால் அவளின் அருமை அப்பா தான் ஆனால் சரியோ தவறோ இப்போது அவள் மருது பக்கம் தான் கோபாலனுடன் கலைச்செல்வி விமலன் கமலன் என்று எல்லோரும் இருக்க மருதுவுடன் இவள் மட்டும் தானே
மருதுவின் முன் அளவாய் தான் பேசுவாள்
நீங்க ஏன் இன்னும் சாப்பிடலை என்று அவர் கேட்க
பா நம்ம விருந்து நாம முன்ன சாப்பிட முடியுமா அவர் என்னை சாப்பிட தான் சொல்றார் ஆனா அவரை விட்டு நான் மட்டும் எப்படி சாப்பிட நம்ம கல்யாணத்துல அதுவுமில்லாம எனக்கு பசியில்லை என்று சொல்ல
என்ன சொன்னார் உங்கப்பா என்று கேட்டுக் கொண்டே ஜூசை கையில் கொடுக்க
ம்ம் பிரசவத்துக்கு உங்க மாமனார் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடறார் என்று விளையாட்டுக்கு சொன்னது தான் போதும்
அப்படியே மருதுவின் முகம் மாறிவிட்டது என்ன என்று கோபமாய் கோபாலனை நோக்கி திரும்ப
அச்சோ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று ஜெயந்தி பதறி விட அதன் பிறகே கோபாலனிடம் இருந்து பார்வையை திருப்பியவன் ‘
அவர் சொல்லலை ஆனா நீ சொல்ற அப்போ உனக்கு போகணும்னு இருக்கு அப்படி தானே என
நொடியில் சூழல் மாறிவிட்டது

Advertisement