Advertisement

அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்..
நேற்றை போல தான் இருந்தது வீக்கம் குறைந்தது போல தெரியவில்லை… முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக அவளின் முக வீக்கத்தை தன் கட்டு போடாத கையினால் தொட்டு பார்த்தான். ஷ் என்று தூக்கத்திலேயே தலையை அசைதவள் அப்போதும் தூக்கத்தை தொடர
ஒரு அறை தானே விட்டேன் அதுக்கு இப்படி ஆகுமா என்று யோசனை செய்து கொண்டே இவளை பார்த்தவன்.. சுற்றியும் பார்க்க பக்கத்தில் கட்டடங்கள் இருந்தாலும் இவர்கள் படுத்திருந்த இடம் அப்படி ஒன்றும் எல்லோர் பார்வைக்கும் வராது.. இருந்த போதும் அவளை ஜெயந்தி என்று எழுப்பினான்

========================================================

ஆரோக்யமான பெண் ஜெயந்தி அதிகம் வலிகளை பார்த்ததில்லை தலைவலி உடல்வலி வயிற்று வலி என்று எதுவுமே அவளின் உடல் வாகிற்கு இருந்ததில்லை..
அதனால் சிறு வலி கூட தாங்க மாட்டாள்.. இப்போது மாத்திரைகளின் தாக்கம் கூடவே மாதந்திர தொந்தரவு… விழுந்தத்தில்ளும் இடுப்பில் வலி மாத்திரைகள் இருந்தாலும் அதையும் மீறி முகத்தில் வலி..
பயமாய் இருந்தது அவனை பற்றி ஒன்றும் தெரியாது.. நீ கேட்கவில்லை என்று அவன் சண்டையும் போட்டு அடித்தும் விட்டான்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.. புரியாமல் புரியாத பார்வை பார்த்தாள்..
இப்போது உங்களை பற்றி சொல்லுங்கள் என்பது நன்றாய் இருக்காது.. உண்மையில் அப்போது கூட அவனை தெரிந்து கொள்ள ஆர்வம் தான் ஆனால் அவனின் கடந்த காலம் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை
நல்ல நிலையில் இருக்கும் போதே இல்லை
இப்போது வலி வேறு

======================================================

மருதுவிற்கு தன்னை பிடிக்கும் என்று தெரியும்.. இத்தனை எதிர்பார்ப்பு தெரியவில்லை.. எல்லாம் சரியாக வேண்டும்.. அவனுக்கு பிடித்த மாதிரி நானும் நடக்க வேண்டும்.. அவனின் எதிர்பார்ப்புகளை அவன் சொல்லாமலேயே நானே கண்டு கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் அதனையும் விட முதலில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.. குடும்பம் விரிவானால் மனகசப்புகள் இருந்ததோ இருகின்றதோ குறையும்
என்னெனவோ தோன்ற
இந்த முறை அவள் எதுவுமே சொல்லாதது மருதுவிற்கு தான் டீ மாஸ்டர் என்று சொன்னதால் அதனை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்
மனம் சில சமயம் மாயையில் சிக்கி விட்டால் இல்லாதது இருப்பது போல தோன்றும் இருப்பது இல்லாதது போல தோன்றும்..
அவள் வந்தால் உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது அதனால் வரவில்லை என்று சொன்னதேல்லாம் ஞாபகத்திற்கு வரவில்லை..
=======================================================
ஐஸ் எப்படி அவளுக்கு சிரமம் கொடுக்காமல் வைப்பது என்று யோசித்து பின் அவனின் மடியை காண்பித்தான்..
ஜெயந்தி மறுக்கவோ தயங்கவோ இல்லை வாகாய் அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்..
அவன் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருக்க.. அவனின் மடியில் வீக்கம் இருந்த பக்கம் முகம் தெரியுமாறு தலை வைத்து படுத்து இருந்தவள்.. அவனின் இடுப்பை சுற்றி கை போட்டு கொண்டாள், உதறிவிடுவானோ என்ற பயத்தோடே.. அதனை தாங்கும் சக்தியெல்லாம் கிடையாது   
எதையும் கவனிக்காமல் அவளுக்கு ஐஸ் வைப்பதை மட்டுமே கருத்தாய் செய்து கொண்டிருந்தான்
அணைத்து கூட பிடிக்க மாட்டானா என்னை என்று தோன்றியது
உடலின் வலியோ மனதின் வலியோ அவனின் அணைப்பிற்கு ஏங்கியது..
கூடவே எப்படி இப்படி உன்னை அடித்திருக்கிறான் பதிலுக்கு நீ அவனை அடிக்கா விட்டாள் போகிறது அவனை தேட வேறு செய்வாயா நீ என்று மனம் திட்டியது..
 

Advertisement