Advertisement

அவர்கள் வீடு திரும்பும் போது எட்டு மணியை நெருங்க பீச் போகலாமா என்றான் மருது
வேண்டாம் இன்னொரு நாள் போகலாம் எனக்கு ரொம்ப டயர்ட் டா இருக்கு என்று மறுத்து விட்டாள்
உண்மையில் என்னவோ உடல் சோர்வாய் உணர சொல்லிவிட்டால் அவனும் உடனே சரி என்று விட்டான்
 
==================================================
மருது வந்ததோ அவன் குளித்து உடை மாற்றி வந்து சிறிது நேரம் அவளை பார்த்திருந்ததோ பின்பு ஒரு பெரு மூச்சை வெளியேற்றி படுத்ததோ எதுவும் தெரியாது. பின்னே நைட் பேன்ட் ஷர்டில் உறங்குபவள் இன்று புடவையில் உறங்கினாள். அவளுக்கு தான் உறங்கும் போது உடை நிற்காதே அது தாறு மாறாய் கலைந்து கிடக்க அதனை களையும் எண்ணம் அவனுள் தாறு மாறாய் வர, முயன்று மனதை ஒரு நிலைப் படுத்தி படுத்துக் கொண்டான் ஆனால் உறக்கம் வருவேனா என்றது.  
இன்னும் தனி தனி கட்டில் தானே. அணைத்து படுக்க கூட வழியில்லையே. புரண்டு புரண்டு தான் படுத்துக் கொண்டிருந்தான். 

=============================================

மருது வந்து தண்ணீர் கொடுக்க அதனை வாங்கி பருகியவளுக்கு நன்கு தூக்கம் தெளிந்தது. மருதுவின் படுக்கை என்று தெரிந்தும் அவள் அங்கேயே திரும்ப படுத்துக் கொள்ள, அவள் தூக்கத்தில் செய்ததாய் நினைத்துக் கொண்டு   

 ஜெயந்தி எழுந்து உன் படுக்கையில படு என்று சொல்ல

நேராய் படுத்திருந்தவள் கண் திறந்து அவனை பார்க்க அந்த கண்களில் தூக்கம் இல்லை என்று புரிந்த மருதுவின் மனம் உல்லாச நிலைக்கு மாற, அதற்குள் ஜெயந்தி பேசியிருந்தால், பரவாயில்லை பக்கத்துல படுங்க உங்க கற்புக்கு நான் கியாரண்டி ஒன்னும் பண்ண மாட்டேன் ஆனா ஒரு சின்ன ஆலோசனை அதாவது இப்படி இருந்தா மூணு குழந்தையில்லை ஒரு குழந்தை கூட பிறக்காது என்று சொல்ல 

ஒய் என்னடி திமிரா என்றான் உல்லாச மனநிலையில்

நீங்க தேறாத கேஸ் என்று சலித்துக் கொண்டே அவள் எழ,

========================================

அதெல்லாம் விட முடியாது அப்போ இருந்து தாறுமாறா உன் டிரஸ் கலைஞ்சிருக்கு இப்போ எனக்கு அதை களைச்சே ஆகணும் என்று சரசமாய் பேச

தோடா டைலாக் செமையா இருக்கு

பின்ன எழுத படிக்க தான் தெரியாது பேச நல்லா வரும் ஆனா பேச ஆள் தான் இதுவரை இல்லை இனி உன்னை விடறதா இல்லை என்றான்

விடுங்க விடுங்க திட்டிடப் போறேன் என அவள் மீண்டும் திமிற

திட்டேன் கேட்கறேன் என்றான் அதற்கும்

மூடிட்டு போடா ன்னு சொல்லிடுவேன் எனக்கு தெரிஞ்ச பெரிய கெட்ட வார்த்தை அது என

என்ன சொல்ல எல்லோர் முன்னமும் கொஞ்சமும் தயக்கம் இல்லாம கால் பிடிக்கறீங்க வீட்டுக்கு வந்தா யாரோ மாதிரி தள்ளி நிக்கறீங்க , பயந்து கத்தினா கட்டி பிடிக்காம தோள் பிடிக்கறீங்க என அவன் செய்த குற்றங்களை அடுக்க

சத்தமாய் சிரித்தான் மூடிட்டு போடா ன்னாலும் போடா மூடிட்டுனாலும் ஒன்னு தான் ஆனா நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது வேணும்னா வாய் மூடி பேசவும்னு சொல்லேன் என

பின்ன தள்ளி நிக்காம என்ன பண்ணுவேனாம் என்ற மருதுவின் குரல் ஏகத்திற்கும் இளகி இருந்தது

ஜெயந்தி என்ன என்பது போல பார்க்க அடிச்சு விரட்டி இருக்கேன் அது எதுவுமே இல்லாம நீ வீட்டுக்கு வரவும் அப்படியே உன்னை எடுத்துக்குவேனா தப்பில்லையா என

அட போடா நீயும் உன் ரூல்ஸ் சும் பேசாம என்னை விட்டுட்டு போய் தூங்குங்க என் பெட்ல என் தலையணையை பிடிச்சிகிட்டு

==================================================

Advertisement