Sunday, June 2, 2024

    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

    அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு செல்ல பார்க்க, “ஜீவா நில்லு, உன்கிட்ட பேசனும்...” என்றான் உடனே. செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் சரோஜாவை பார்த்துக்கொண்டே அவள் நிற்க, “என்ன மேம் எதுவும் சொல்லலை?...” பாலா மீண்டும் சரோஜாவிடம் கேட்க, “ஆமா ஸார். நேரம் ஆகிருச்சே. அதான் கிளம்பிட்டேன். நைட் ட்யூட்டிக்கு வருவேன்...” என தனது...
    அவசரப்பட்டு வழக்கம் போல யாருமற்றவர் என்று சாலாட்சியின் உயிரை எடுக்க முயல விளைவு தப்பித்தவர் சென்று சேர்ந்தது வானம் அறக்கட்டளையின் வாயிலில். இது ப்யூச்சர்ஸ் பில்டர்ஸும் எதிர்பார்க்கவில்லை. அரங்கநாதனும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் அனைத்துமே மாறி போனது. வெறும் காவல்நிலையத்துடன் பணப்பரிவர்த்தனையோடு முடிந்திருக்க வேண்டிய விஷயம் இத்தனை நெருக்கடிகளை கொண்டுவந்தது. போதாததிற்கு சாலாட்சி பாலாவின் சொந்த அத்தை. இது...
    “அக்கா யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?...” தென்றலில் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் வெடவெடத்து போனாள். “யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு கேட்டேன்? இல்லை பாட்டு எதுவும் கேட்கிறியோ? சத்தமே வரலை. வாய் மட்டும் அசையுது?...” என்று கேட்டுக்கொண்டே எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வந்து மீண்டும் படிக்க அமர்ந்தாள். தென்றல் மட்டும் தன்னை அழைத்திருக்காவிட்டால் நிச்சயம் மொத்தத்தையும் பாலாவிடம் ஒப்பித்திருப்பாள் ஜீவா. இன்னும்...
    பாலாவின் மௌனமே அவனின் எண்ணவோட்டத்தை படம்பிடித்து காண்பிக்க ஜீவாவின் இதழ்களில் குறுநகை. “தென்றலை காப்பாத்தனும்னு மட்டும் தான் அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சு. உண்மையா அந்த நிமிஷம் வேற எதுவும் நினைக்கலை பாலா. அப்போ உங்களவு எனக்கு உங்க மேல...” என்றவளை முறைத்தான். “இப்ப இந்த விளக்கம் தேவையா? சும்மா பேத்தல் இதெல்லாம்...” என்று அவளின் வாயில்...
    மின்னல் – 15             நள்ளிரவு கடந்தும் பாலா ஜீவன்யாவை தேடி வரவில்லை. வேலைகள் முடிந்து இரவு பணி ஆட்கள் மட்டும் அங்குமிங்குமாக தெரிய வர ஜீவாவிற்கு உறக்கம் வருவதை போலிருக்கவும் வானதியை பார்த்தாள். “என்ன, டீ வேணுமா?...” வானதி அவளின் பார்வையை கண்டு கேட்க, “ஹ்ம்ம், டீ சொல்லு. முகத்தை கழுவிட்டு வரேன். தூக்கம் வர மாதிரியே...
    “அவன் அந்தாள் மாட்டிக்கிட்டானா?...” ஜீவாவிற்கு தெரிந்துகொள்ளவேண்டும் என தோன்றியது. “ஆங் அதெல்லாம் புடிச்சுட்டாங்க, உள்ள வந்தவனால வெளில போக முடியுமா என்ன?...” வானதியின் இகழ்ச்சியான பேச்சில் நெஞ்சில் திக்கென்றிருந்தது. “புடிச்சுட்டாங்கன்னா, என்னாச்சு? எதுவும் சொன்னானா? எதுக்காக கொலை பண்ண வந்தானாம்?...”  படபடப்புடன் ஜீவா கேட்க, “நீ ரொம்ப எக்ஸைட் ஆகிட்ட போல?...” என்ற வானதி, “புடிச்சாங்கன்னு வரைக்கும் தான் தெரியும்....
    “ஆமான்னா என்ன செய்வீங்க?...” தென்றலுக்கு அவர் மீதான கோபம் ஆறவில்லை. சசிகரனை மயூரன் கொலை செய்ய முயன்ற பொழுது ஆளவந்தான் தான் ஜீவாவை கை காண்பித்தது என்று அவளுக்கு தெரிந்திருந்தது பத்ரியின் மூலம். அதை அத்தனை சுலபத்தில் மறக்கவில்லை தென்றல். அதனை கொண்டே ஆளவந்தானை பார்க்கும் நேரத்தில் எல்லாம் வெறுப்பேற்றினாள். ‘இவர் நல்லா இருக்கனும்னா யாரை வேணாலும் கீழே...
    “தென்றல்...” “ஓகே க்கா. குட்நைட்...” என சொல்லி போனை சோலையம்மாவிடம் தர, “என்னம்மா அது உறங்குமா?...” “சொல்லிருக்கேன் ம்மா...” சோர்ந்த குரலில் அவள் சொல்ல, “சரி நா பாத்துக்கிடுதேன். நீ உன் சோலியை பாரு. இங்கயே பேசினா அங்க பொழைப்பை யார் பாக்க?...” என்று சொல்லி வைத்துவிட்டார். மறுபக்கம் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் போனை வானதியிடம் ஜீவா நீட்ட, “இப்போ ஓகே வா?...
    “நான் சொன்னேன்ல சொந்த வீடுன்னு. அப்படின்னா பூர்வீக சொத்து. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சேர்த்து இருந்ததை அப்பா காலத்திலையே பிரிச்சு குடுத்துட்டாங்களாம். அப்ப அப்போ கட்டின வீடுதான் இது...” “ஓஹ், லீஸ்க்கு விட்டிருந்தேன்னு சொன்னீங்க? ஆனா எங்க தங்கியிருந்தீங்க நீங்க?...” என்றவளுக்கு கிடைத்த பதில் அவளே எதிர்பாராதது. “எனக்கு விவரம் தெரியும் போதே அப்பா உடம்பு சரியில்லாம தவறிட்டாங்க....
    “ப்ச், பார்த்தியா மறுபடியும் எமோஷனல் ஆகற. அதான் உன்னை கொஞ்சம் டைவர்ட் பண்ண பார்த்தேன். நீயானா திரும்ப அதே மூடுக்கு தான் போற...” என்றான். “தெரியலை. என்னவோ இதை எல்லாம் ஜீரணிக்க முடியலை. ஆனா என்னையும், என்னோட பேக்ரவுண்டையும் ஜீரணிக்க முடியலைன்னு சரோ மேம் சொல்றாங்க. அவங்கக்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை...” என்றவள் பேச்சுவாக்கில் அவனிடம்...
    “ஜீவாவையும், தென்றலையும் வீட்டுக்கு அனுப்பிறலாமே? நான் கூட்டிட்டு போய் விட்டு போகட்டுமா?...” என சசி கேட்க, “இல்லடா, இருக்கட்டும். பவன் இருக்கான். இன்னும் ரெண்டு செக்யூரிட்டி இருக்காங்க. இன்னைக்கு என்னவோ சரியில்லை. இந்த கேஸ் முடிஞ்சதும் கிளம்பிருவோம்...” என்றான் பாலா. சாப்பிட்டு முடிக்கவும் அந்த வாகனம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.  அதை பார்த்துக்கொண்டே பாலா கையை...
    “எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சுங்கயா, வெளில போனா என்னை இவங்க முடிச்சிடுவாங்க. அதான் என்னாலான உண்மைய சொல்லிட்டாச்சும் சாவோமேன்னு. இத்தன நாள் குறுகுறுப்பு. நீங்க நம்பாட்டியும் அதேன் நெசம்...”  “ஹ்ம்ம், நல்ல ஞானம் தான். அதிருக்கட்டும். எதுக்காக அந்தம்மாவை கொல்ல சொன்னாங்கன்னு தெரியுமா?...” “அது தெரியாதுங்க. ஆனா அவங்க இருந்தா இவங்களுக்கு பிரச்சனைன்னு சொன்னாங்க...” “ஓகே, நீங்க இப்படி உட்காருங்க. இன்னும்...
    “இல்லை இல்லை...” உடனே சுதாரித்தவளாக, “அதெல்லாம் இல்லை, நிஜமா...” என்று இருக்கையை விட்டு எழுந்து செல்ல கையை பிடித்து இழுத்து அமர்த்தினான் அதே இடத்தில். “பொய் சொன்னா கண்டுபிடிச்சிருவேன் நான்...” என்றதும் திக்கென்று அவனை திரும்பி பார்த்தாள். “இந்த முகம் முழுக்க பொய்யும், பதட்டமும் தான். என்னால உன்னை கவனிக்க முடியுது...” என்று கூற இன்னுமே பதறினாள். “இல்லை, நீங்க...
    “வருவேன்டா, உன்னை விட்டு எங்க போக போறேன். தென்றல் பயப்படாம இருக்கனும். நான் சொன்னா கேட்கனும். ஹ்ம்ம்...” “சரி...” “ஓகே, நீ டிவி பார்த்திட்டு இரு. வந்திடறேன்...” என சொல்லி போனை வைத்துவிட்டாள். “ஆட்டோவுக்கு சொல்லவா ஜீவா?...” பால கேட்க, “வேண்டாம், பக்கம் தானே போய்டலாம்...” என்று கையை ஊன்றி எழுந்துகொள்ள பார்க்க காயம் பட்ட உள்ளங்கை எரிந்தது மண்துகள்கள்...
    மின்னல் – 18              சசிகரன் உள்ளே நுழைந்ததும் மயூரன் அவனை பார்த்துவிட்டு அரங்கநாதனை ஆத்திரத்துடன் பார்த்தார். இப்படி எதுவும் என்றும் நடந்துவிட கூடாதென்று தானே இந்த கேஸ் முடியும்  முன் சம்பந்தம் பேசி அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இப்போது சசிகரன் எப்படி? கொஞ்சமும் அவன் மீது சந்தேகம் வரவில்லையே? என நினைத்து கொலைவெறி பொங்க அவனை...
    “தேங்க்ஸ் ஸார்...” என, “எதுக்கு?...” ஷேஷாவின் முகத்தில் எப்பொழுதும் போல் சிறு புன்னகை. “நான் உங்ககிட்ட ஒரு ஹெல்பா தான் கேட்டேன். நீங்க வீட்டுக்கே வர சொல்லுவீங்கன்னு நினைக்கலை...” “சோ வாட் மேன்?...” என்ற ஷேஷா, “கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாம்...” என்றதும் பாலாவிற்கு அந்த நிமிடத்தை எப்படி கையாள்வது என்று சற்றே தடுமாற்றமாக இருந்தது. இறைவனின் பாதத்தில் திருமாங்கல்யம் இருக்க அதனையே...
    சலிப்பாய் பதில் சொல்ல கம்மென்று வாயை மூடிக்கொண்டவள் கோபத்துடன் தென்றலுடன் இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். பாலாவிற்கு ஒரு போன் வர அதில் ஆழ்ந்துவிட்டவன், பத்ரிக்கும் அழைத்து அந்த வழக்கை பற்றி விவாதித்துவிட்டு வைத்தான். ஒருமணி நேரம் சென்ற பின்னர் தான் ஜீவா தன்னை தேடி வரவில்லை என்றே உணர்ந்தான் பாலா. டேபிள் விளக்கை அணைத்துவிட்டு சட்டப்புத்தகத்தின் நடுவே ஒரு...
    மின்னல் – 2            பாலா அரங்கநாதன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன் பத்ரியை அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு வானம் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான். ஆனால் மூளை மட்டும் அரங்கநாதன் அலுவலகத்தில் நடந்தவற்றையும், அவரின் பார்வையின் பின்னால் ஒளிந்திருந்த பாஷைகளை பற்றியுமே ஆராய்ந்துகொண்டு இருந்தது. ஓயாத பரீசீலனை மனதிற்குள். இதுவல்ல அது, அதுவல்லவென்றால் எது என அனுமானங்கள்...
    மின்னல் – 12           இன்னும் அவள் தன்னிலைக்கு மீளவில்லை. பாலாவின் அணைப்பில் சுருண்டிருந்தவள் கன்னத்தை தட்டியவன், “ஜீவா இங்க பார். எல்லாம் சரியாகிடும். நிமிர்ந்து பார், நான் தான் சொல்றேன்ல...” என தட்டி தட்டி நிமிர்ந்து பார்க்க வைத்தான். “நான் அன்னைக்கு வேணும்னு எதுவும் செய்யலை பாலா...” “ஹ்ம்ம் புரியுது...” “என்ன புரிஞ்சது உங்களுக்கு? முழுசா தெரிஞ்சா நீங்க கண்டிப்பா...
    மின்னல் – 20          நால்வரும் உள்ளே நுழைந்ததும் பகல் நேர பணியாளர்கள் அங்கே வரவேற்பில் நிற்க பாலாவை பார்த்ததும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஜீவாவையும், தென்றலையும் அவனுடன் பார்த்துவிட்டு அவளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தையும் கண்டு திகைப்பாய் நின்றனர். “வா ஜீவா...” என அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் பாலா. இரண்டாம் தளம் வந்ததுமே நேராக...
    error: Content is protected !!