Advertisement

அவர்கள் சென்றதும் ஷக்தி ஷேஷாவுடன் அங்கேயே சிறிது நேரம் மகனை விளையாடவிட்டு அமர்ந்துகொண்டார்கள்.

“ஜீவா மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்கா. அவ முகமே தெளிவில்லை. இன்னும் என்ன நினைக்கிறாளோ?…” என ஷேஷாவிடம் சொல்ல,

“பாலா கேர் பண்ணிப்பான்…” என்றான் ஷேஷா.

“ப்ச், ஈசியா சொல்றீங்க? நீங்க ஏன் சொல்லமாட்டீங்க? உங்களுக்கு எல்லாம் எல்லாமே ஈஸி தான். இல்ல?…”  என அவனுக்கு அருகே குனிந்து கிசுகிசுப்பாய் கோபத்துடன் சொல்லியவளை புன்னகையுடன் பார்த்தவன்,

“எதுக்கு இப்போ இந்த ரகசிய கோபம்?…” என்றான் ஷேஷா.

“வெளில வச்சு ஆர்க்யூ பண்ணினா தான் உடனே மேல போன்னு  சொல்லுவீங்களே? அதான் மெதுவா சொன்னேன்…” என்றவளின் தோளை பிடித்து நேராய் அமர வைத்தான்.

“பேபி இருக்கு. இப்படி உட்கார்ந்திருக்க? வா லஞ்ச் சாப்பிடலாம்…” என்று அவளின் கையை பிடித்து எழுப்பியவன் மகனையும் தூக்கிக்கொண்டான்.

“நெக்ஸ்ட் மந்த் டெலிவரி. பட் ரொம்ப கேர்லஸ் உன்கிட்ட….” என்று அவளிடம் சொல்ல பதிலுக்கு ஆயிரம் வார்த்தைகள் பேசினாள் அவனிடத்தில்.

சிரிப்புடன் அதையும் கேட்டுக்கொண்டே சென்றான் அவன். முதல் பிரசவத்தை விட இரண்டாவது ஷக்தியை படுத்தி இருந்தது. அதனால் இந்த முறை அதிக கவனிப்புக்கும் ஆளாகி இருந்தாள் ஷக்தி.

——————————————————-

செல்லும் வழியெங்கும் கழுத்தில் உறவாடிய திருமாங்கல்யத்தை பார்த்துக்கொண்டே தான் சென்றாள் ஜீவா.

அனைத்தும் மிக வேகத்துடன் அதிவேகத்துடன் செல்வதாகவே தோன்றியது. இந்த வேகம் இன்னுமே பயத்தை தந்தது.

ஒரு வருடத்தின் முன்னால் இப்படி எல்லாம் தங்கள் வாழ்வில் நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை.

அதன் பின்னர் ஏனைய போராட்டங்களை கடந்து வந்து இதோ வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரம் சிறு மரத்துண்டு தப்பிப்பதற்கு கிடைத்துவிட்டதை போன்றதொரு ஆசுவாசம்.

ஆனால் முழுமையாக சந்தோஷிக்க முடியவில்லை. காலை நீதிமன்றத்திற்கு சென்ற அதே உடை தான்.

திருமணம் ஆகிவிட்டதன் அறிகுறியாய் சிறு மாற்றம் கழுத்தில் மஞ்சள் மணக்கும் மாங்கல்யம் மட்டுமே.

“அக்கா என்ன ரொம்ப யோசனையா வர?…” தென்றல் அவளிடம் கேட்க முன்னால் காரை செலுத்திக்கொண்டிருந்த பாலாவிற்கும் கேட்டது அது.

“ஹ்ம்ம் சும்மா தான் தென்றல்…”  

“பொய் சொல்ற நீ. என்னவோ நினைச்சு பயந்துட்டு இருக்க தானே?…”

“அப்படி இல்லடா…”

“அக்கா ஆனா எனக்கு எவ்வளோ சந்தோஷம் தெரியுமா? உன்னோட லைப் இப்படியே போய்டுமோன்னு பயந்தேன்…”

“தென்றல், நிஜமாவே உனக்கு சந்தோஷமா?…”

“இல்லையா பின்ன? எனக்கும் எல்லாம் தெரியும், வானதி அக்கா ஏற்கனவே சொல்லியிருக்காங்க. நீயா சொல்லட்டும்ன்னு இருந்தேன். நீ சொல்லவே இல்லை. எனக்கும் முதல்ல பயம் தான். ஆனா இப்ப இல்லை…”

“நீ ஓகே தானே?…”

“ஆமா க்கா. கோர்ட்ல இருந்து வெளில வர வரைக்கும் எனக்கு ஒரு மாதிரி தான் இருந்துச்சு. இப்போ நான் ரொம்பவே ஓகே. பாரேன் நாம கொலை பண்ணலை. நம்மளை யாரும் இனி பிடிக்க மாட்டாங்க. இனிமே வக்கீல் பார்த்துப்பார். இப்ப அவர் உன்னோட வீட்டுக்காரர் வேற?…” என்றால் தென்றல்.

இப்போது ஜீவாவிற்கு தென்றலை பார்க்க பார்க்க முன்பு பார்த்த தன் தங்க மீண்டுவிட்டதை போல அத்தனை சந்தோஷமாக இருந்தது.

அதே படபட பேச்சு. இதோ அவளின் கலக்கமற்ற புன்னகை. எத்தனை நாட்கள் ஆகிற்று இந்த சிரிப்பை பார்த்து.

“அக்கா…” என ஜீவாவின் கையை தென்றல் கிள்ளி வைக்க,

“ஓய்…” பாலா  முன்னால் இருந்து.

“உன்னை தான் என்னன்னு கேளு…” என்றாள் ஜீவா. தென்றலின் புன்னகை அவளையும் தொற்றியது.

“என்ன?…” என தென்றல்.

“என்னவா? நான் யாரு?…” என காரை மெதுவாய் செலுத்தியபடி கேட்க,

“வக்கீல். நீங்க லாயர் தானே? சரியா தானே சொல்றேன்….” என்ற தென்றல்,

“க்கா கரெக்ட் தானே?…” என்றாள் ஜீவாவிடமும்.

“ரொம்ப சரி…” என ஜீவாவும் தென்றலின் விளையாட்டில் பங்குகொள்ள,

“என்ன சரி, நான் யாருன்னு அவக்கிட்ட சொல்லமாட்டியா நீ?…” என்றான் ஜீவாவிடம்.

“இருங்க இருங்க. அவ ஏன் சொல்லனும்? அவ சொல்லியா நீங்க எல்லாம் பண்ணுனீங்க? அவ எதுவும் சொல்லமாட்டா. ஏன் நீங்க சொல்றது?…” என்ற தென்றல்,

“க்கா, இவருக்கு கோர்ட்ல மட்டும் தான் பேச வரும் போல?…” என்று வேறு கிசுகிசுக்க,

“அடிங்…” என்றான் முன்னிருந்தே.

“போதும், பேசாம இரு…” என ஜீவா சொல்ல,

“இப்போ என்ன என்னை எப்படி கூப்பிடனும்னு தானே? பாலான்னு கூப்பிடு…” என அவனே சொல்ல,

“என்ன?…” என்றனர் இருவரும் ஒரே சேர.

“என்ன என்ன? அதான் சொல்லிட்டேனே? எங்க கூப்பிடு பார்ப்போம். நீ தானே என்னை சொல்ல சொன்ன? கூப்பிட்டு…”  என்றான் சிரிப்புடன்.

“தென்றல்…” என ஜீவா மேலும் பேசும் முன்,

“அக்கா, ஹாஸ்பிட்டல் வந்தாச்சு. வானதி அக்காக்கிட்டகேட்பாங்க…” என்றதும் தான் ஜீவாவிற்கு ஞாபகம் வந்தது.

இந்த நேரம் எல்லாம் தெரிந்திருக்கும். அனைவருக்கும் தெரிந்திருக்கும் தன்னை குறித்தும், தென்றல் குறித்தும்.

ஒதுங்கி நின்ற பதற்றம் மனதில் வந்து ஒட்டிக்கொள்ள தென்றலை தான் பார்த்தாள்.

“என்னக்கா?…”

“வீட்டுக்கு போவோமா?…”  என தென்றலின் முகத்தை பார்த்து ஜீவா கேட்க,

“இறங்குங்க ரெண்டுபேரும். அப்படியே அத்தையையும் பார்த்துட்டு வரலாம்…” என்று பாலா அழைக்க,

“இல்லை இன்னொரு நாள் வரோமே?…” என்றாள் ஜீவா.

“என்ன? நீங்க வரலையா உள்ள?…” என்றான் பாலா அவர்கள் பக்கம் வந்து நின்று.

“நீங்க போய்ட்டு வாங்க. நாங்க வீட்டுக்கு போறோம்…”

“வாட்? வீட்டுக்கா?…” என்றான் பாலா அவள் பக்க கதவை திறந்துவிட்டபடி.

“நான் வரலை ப்ளீஸ்…”

“ஏன் எதுக்கு வரலை? அத்தையும் உன்னை பார்த்த மாதிரி இருக்கும். வா…” என்றவன்,

“தென்றல் இறங்கி வா…” என்றான்.

“அக்கா அதான் கூப்பிடறாங்க தானே? இறங்கு போகலாம்…”

“ம்ஹூம், நம்ம வீட்டுக்கு போவோம்…” என்றாள் பிடிவாதமாய்.

பாலாவிற்கு சட்டென கோபம் வேறு வந்துவிட அவளின் கையை பிடித்து வெளியே இறக்கிவிட்டான்.

“என்ன விளையாடுறியா? ஏன் இப்படி பிஹேவ் பன்ற ஜீவா? என்னாச்சு உனக்கு?…” என அவளிடம் நெருங்கி கேட்க அதற்குள் ஆங்காங்கே இவர்களை கண்டு நின்று பார்த்தவர்களை சுற்றிலும் மிரட்சியுடன் பார்த்தாள்.

இப்போது பாலாவிற்கு புரிந்துபோனது ஜீவாவின் இந்த பிடிவாதத்தின் காரணம் ஏன் என்று.

“ஜீவா…” அவளின் கையை பிடித்தவனை பார்த்தவள்,

“ப்ளீஸ் பாலா, நான் தாங்கிப்பேன். தென்றலை யாராச்சும் ஏதாவது பேசிட்டா…”

“என்ன பேசுவாங்க?…” என்றவன்,

“தென்றல் இங்க வா…” என அழைத்தான்.

“உனக்கு எதாச்சும் பயமா? இங்க உங்களை யாராச்சும் எதாச்சும் சொல்லுவாங்கன்னு…” என கேட்க,

“ம்ஹூம் இல்லை…” என்றாள் அவள்.

“இல்லை இவ பயப்படுவா. கண்டிப்பா. எனக்கு தெரியும். இந்த ஒரு வருஷமா நாங்க பேஸ் பண்ண பயந்தது…”

“ஐயோ அக்கா, நிஜமா என் பயமெல்லாம் உன்னை யாரும் எதுவும் செஞ்சிருவாங்களோ? இல்லை அரஸ்ட் பண்ணிருவாங்களோன்னு தான் பயந்தேன். இப்போ தான் நம்ம மேல எந்த தப்பும் இல்லையே?…” என்றாள் தெளிவாக.

பாலாவிற்குமே ஆச்சர்யம் தான். நீதிமன்றத்தில் அழுத அழுகையும் கதறலும் என்ன? இப்போது தென்றலின் முகத்தில் இருக்கும் தெளிவு என்ன? என வியப்புடன் தான் இருந்தான்.

தவறு தங்கள் மேல் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டதால் வந்த நிம்மதி இந்த தெளிவு என்பதை புரிந்துகொண்டான்.

“எனக்கு எதுவும் இல்லை. இனிமே பயப்பட மாட்டேன். யாரும் நம்மளை கவனிக்காங்களோன்னு பதற மாட்டேன். இனிமே நிம்மதியா இருக்கலாம் தானே?…” என்றவள்,

“ஆமா தானே? சரியா சொன்னேனா?…” என பாலாவிடம் கேட்க,

“ஹ்ம்ம், எஸ்…” என்றான் ஆமோதிப்பாய்.

“இதுக்கா இப்படி இருக்க? நம்ம எந்த தப்பும் பண்ணலையே? பாரு நான் நல்லா தான் இருக்கேன்…” என்றாள் தைரியமாக.

என்னதான் தென்றல் சொல்லிவிட்டாலும் ஜீவன்யாவின் மனதிற்குள் இன்னும் பயம் தான்.    

மனது குறுகுறுக்க தென்றலையே பார்த்துக்கொண்டிருந்தவளை அழுத்தமாய், யோசனையுடன் தான் பார்த்தான் பாலா.

“கல்யாணம் ஆகும் போது உன் முகத்தில இருந்த அந்த சந்தோஷம் எங்க ஜீவா?…” என்ற கேள்வியில் ஜீவன்யா திகைக்க,

“மாமா…” என்றாள் தென்றல்.

“பாலா இப்பவும் உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சொல்ல போன என்னளவு இங்க யாருமே சந்தோஷமா இருக்க மாட்டாங்க. ஆனா…” ஜீவாவின் பேச்சை இடையிட்டவன்,

“ஓகே ஜீவா, இப்ப இதை விடு. நாம தனியா பேசிப்போம். இப்போ உள்ள வா…” என்றதும் தலையசைத்து அவனுடன் செல்ல செல்லும் பொழுது தனது விரல்களை அவளின் விரல்களுடன் கோர்த்துக்கொண்டான்.

நிஜத்தில் அந்த இரு கொலைகளை செய்தது அவளாக இருக்கும் பட்சத்தில் அந்த உண்மை அவளுக்கு தெரிந்திருக்க என்னதான் தான் கொலை செய்யவில்லை என்று தனக்காக பாலா வாதாடி இருந்தாலும் உண்மை தெரிந்தவளுக்கு இன்னுமே நிம்மதியின்மை தான்.

தேடாமலே ஒரு சந்தோஷமான வாழ்க்கை தங்களுக்கு கிடைத்தும் முழுமையாய் அதனை அனுபவிக்க முடியாமல் தனக்குள் தள்ளாடிக்கொண்டு இருந்தாள்.

 

Advertisement